உண்மையான ஞானத்தைத் தேர்ந்துகொள்ளுதல்!

74. கடவுள்தாமே தமது ஞானத்தை நாம் ஒரு மாபெரும் பொக்கிஷமாக நேசித்துத் தேட வேண்டிய ஒரே உண்மையான ஞானத்தைக் கொண்டிருக்கிறார். 

கெட்டுப்போன உலகமும் தனது ஞானத்தைக் கொண்டுள்ளது. அந்த ஞானமோ, தண்டிக்கப்பட வேண்டியதாகவும், அருவருக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. 

ஏனெனில் அது தீமையானது, நாசம் விளைவிப்பது. தத்துவவாதிகளும் தங்கள் ஞானத்தைக் கொண்டுள்ளனர். அது பயனற்றதென வெறுத்துத் தள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. 

ஏனெனில் அது பெரும்பாலும் நம் ஆத்தும இரட்சணியத்திற்குப் பேராபத்தாக இருக்கக் கூடும்.

இது வரை, அப்போஸ்தலர் குறிப்பிடுவது போல (காண்க: 1கொரி. 2:6), ஆன்ம ரீதியாக முதிர்ச்சியடைந்தவர்களிடம், கடவுளின் ஞானத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். 

ஆனால் உலக ஞானத்தின் போலியான பளபளப்பினால் அவர்கள் ஏய்க்கப்படாதவாறு, நாம் அதன் வெளிவேடம், கெடுமதி ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போமாக.