இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சிறு இரும்புச் சங்கிலி அணிதல்

236. இவ்விதமாக மரியாயிடமாய் சேசு கிறீஸ்துவின் அடிமையானவர்கள் இவ்வன்பின் அடிமைத்தனத்தின் அடையாளமாக, இதற்கென மந்திரிக்கப் பெற்ற சிறு சங்கிலியை அணிந்து கொள்வது மிக புகழுக்குரியதும் மதிப்பும் பயனும் உடையதுமாகும். இத்தகைய வெளி அடையாளங்கள் அத்தியாவசியமில்லை என்பது உண் மையே. இந்தப் பக்தி முயற்சியைக் கைக்கொண்ட ஒரு வன் அது இல்லாமலும் இருக்கலாம். ஆயினும் ஜென்மப் பாவமும், ஒரு வேளை கர்மப் பாவமும் தங்களைக் கட்டி யிருந்த பசாசின் வெட்கத்துக்குரிய அடிமைத் தனத்தை உதறிவிட்டு, தங்கள் சுதந்திர சுயாதீனமாய் சேசு கிறீஸ் துவின் மகிமையுள்ள இவ்வடிமைத்தனத்தைத் தாங்கள் மீது ஏற்றுக் கொண்டு அர்ச். சின்னப்பருடன் தாங்கள் அணிந்துள்ள சங்கிலியைப் (எபே. 3, 1; பிலி. 9) பற்றி மகிமை பாராட்டுகிறவர்களை நானும் ஆர்வமுடன் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை. இந்தச் சங் கிலி துருப்பிடித்த இரும்புச் சங்கிலியாயிருப்பினும் சக்கர வர்த்திகளின் எல்லா தங்கச் சங்கிலிகளையும் விட அதிக மகிமையும் மதிப்பும் உடையதாகும்.

237. ஒரு காலத்தில் சிலுவையைப் போல் அவமான முடையது வேறு இல்லாமலிருந்தது. ஆனால் இப்போது அக்கழுமரம் கிறீஸ்தவ உலகின் மிகப் பெரும் புகழ்ச்சியுள்ள பெருமையாக உள்ளது. இவ்வடிமைத்தனத்தின் சங்கிலியைப் பற்றியும் இவ்வாறு நாம் கூறலாம். முற் காலத்தவரிடையே சங்கிலியைப் போல் அவமானமுள்ளது இல்லை. புற இனத்தாரிடையிலும் இன்று வரை அதைப் போல் வெட்கத்துக்குரியது வேறு இல்லை. ஆனால் கிறீஸ் தவர்களிடையே சேசு கிறீஸ்துவின் சங்கிலியைப் போல் அதிக மகிமையுள்ளது வேறு எதுவுமில்லை. ஏனென்றால் அது நம்மை வெட்கத்துக்குரிய பாவத்தளையினின்றும் பசாசின் கட்டுகளிலிருந்தும் மீட்டுப் பாதுகாக்கிறது. அது நம்மை விடுவித்து சேசுவுடனும் மரியாயுடனும் இணைத்துக் கட்டுகிறது. கப்பல் அடிமைகளைப் போல் கட்டாயத்திற்காகவோ பலவந்தத்தினாலோ அல்ல ஆனால் குழந்தைகளைப் போல் சிநேகத்தாலும் அன்பாலும் அவ் வாறு கட்டுகிறது "பரிவு என்னும் கயிற்றால் அவர்களைப் பிணைத்து அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வந்தோம்'' (ஓசே. 11, 4) அவர்களை அன்புச் சங்கிலியால் கட்டி என் னிடம் இழுப்பேன்' என்று தீர்க்கதரிசி வாயிலாக சர்வே சுரன் கூறுகிறார். இதனால் இச் சங்கிலி மரணத்தைப் போல் வலிமையுடையதாகிறது. ஏன், இந்த மகிமையுள்ள அடையாளத்தை மரணம் வரை பிரமாணிக்கமாய் அணி கிறவர்களுக்கு அது மரணத்தையும் விட அதிக வலிமையுள்ள தாகிறது. ஏனென்றால் மரணம் அவர்களுடைய உடலை அழித்து தூசியாக்கிவிட்டாலும் இவ்வடிமைச் சங்கிலி இரும் பால் செய்யப்பட்டுள்ளதால் எளிதில் அழியாது. ஆகையால் இதை மரணம் அழிக்காது. மேலும் ஒருவேளை உயிர்த்தெ ழும் நாளில், கடைசித் தீர்ப்பில் அவர்களுடைய எலும்பில் தொங்கும் இச்சங்கிலி அவர்களுடைய மகிமையின் ஒரு பாகமாக இருக்கக்கூடும். ஒளியும் சிறப்பலங்கார முமுள்ள சங்கிலியாக மாறக்கூடும். எனவே தங்கள் சங் கிலியைக் கல்லறை வரைக்கும் கொண்டு செல்லும் இந்த புகழ்ச்சிக்குரிய சேசு மரியாயின் அடிமைகள் ஆயிரந் தடவை பாக்கிய சாலிகள்!

238. இச்சிறிய சங்கிலிகளை அணியக் காரணங்கள் இதோ: [1] ஞானஸ்நானத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் அவற்றை இப்பக்தி முயற்சியால் முழுப் புதுப்பித்தல் செய்துள்ளதையும், இவ்வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ள வனாக இருக்க கிறீஸ்தவன் ஒருவனுக்குள்ள கண்டிப் பான கடமையையும் இந்தச் சங்கிலிகள் நினைவூட்டுகின் றன. மனிதன் சுத்தமான விசுவாசத்தைக் கொண்டு நடப்பதை விட தன புலன்களைக் கொண்டே அதிகமாக செயல்படுகிறான். இதனால் அவனை ஞாபகப் படுத்தக் கூடிய வெளி அடையாளங்கள் இல்லா விட்டால் கடவுள் மீதுள்ள தன் கடமைகளை எளிதாக மறந்து விடுகிறான். இந்தச் சிறு சங்கிலிகள் அவன் ஞானஸ்நானத்தால் விடுதலையடைந் துள்ள பசாசின் அடிமைத்தனத்தையும் பாவத்தின் கட் டுகளையும் ஆச்சரியமாக ஞாபகப் படுத்துகின்றன. அதே சமயத்தில் அவன் சேசுவிடம் சார்ந்திருப்பதையும் ஞானஸ் நானத்தில் வாக்குறுதி கொடுத்து அதைப் புதுப்பித்தலால் இவ்வாக்குறுதிகள் உறுதிப் பட்டுள்ளதையும் நினைவுப் படுத்துகின்றன. அநேக கிறீஸ்தவர்கள் தங்கள் ஞானஸ் நான வாக்குறுதிகளை நினையாமல் புற இனத்தாரைப் போலவே கட்டுப் பாடற்ற முறையில் வாழ்ந்து கடவு ளுக்கு அவர்கள் எந்த வித வாக்குறுதியும் கொடாதது போல வாழ்ந்து வருவதற்கு ஒரு காரணம் இவ்வாக் குறுதிகளை அவர்களுக்கு ஞாபகப் படுத்தக்கூடிய எந்த வெளி அடையாளத்தையும் அவர்கள் அணியாதிருப்ப தாகும்.

239. (2) நாம் சேசு கிறீஸ்துவுக்கு அடிமைகளாய் அடங்கியிருப்பதைப் பற்றி வெட்கப்படுவதில்லை என்று காட்டவும், உலகம் பசாசு சரீரம் என்ற கேடுற்ற அடிமைத் தனங்களை நாம் விட்டு விடுகிறோம் என்பதைக் காட்டவும் சங்கிலிகளை அணிகிறோம்.
(3) நம்மை பாவத்தினுடையவும் பசாசினுடையவும் அடிமைத்தளையிலிருந்து பாதுகாத்து நிலை நிறுத்தவும் இச் சிறு சங்கிலிகளை அணிந்து கொள்கிறோம். ஏனென்றால், ஒன்றில் நாம் பாவத்தின் சங்கிலிகளை அணிய வேண்டும், அல்லது அன்பினுடையவும் இரட்சண்யத்தினுடையவும் சங்கிலிகளை அணிய வேண்டும். பாவத்தளை அல்லது அன்புத் தளை.

240. அன்புள்ள சகோதரா, நாம் பாவத்தினுடைய வும் பாவிகளுடையவும் சங்கிலிகளையும், உலகத்தினுடையவும் உலகத்தாருடையவும் சங்கிலிகளையும், பசாசுடைய வும் பசாசின் தூதருடையவும் சங்கிலிகளையும் உடைத் தெறிவோம். அவர்களுடைய மரணத்துக்கேதுவான நுகத்தை நம்மிடமிருந்து அகற்றி விடுவோம். "அவர்கள் இட்ட தளைகளை இனி தகர்த்தெறிவோம்; அவர்கள் வைத்த கண்ணிகளை உதறிவிடுவோம்'' (சங் 2, 3) பரிசுத்த ஆவியின் வாக்குப்படி: "அதன் விலங்குகளில் உன் கால் களையும் அதன் சங்கிலிகளில் உன் கழுத்தையும் மாட் டிக் கொள்.” (சர்வ, 6, 5). நாம் நம் தோள்களைத் தாழ்த்தி அவற்றில் சேசு கிறீஸ்துவாகிய ஞானத்தைச் சுமந்து கொள்வோம் அவருடைய கட்டுகளால் நாம் துயரமடைய மாட்டோம். "தோள் குனிந்து அதைச சுமந்து கொள் அதன் கட்டுகளால் நீ சலிப்புக் கொள்ளாதே'' (சர்வ. 6, 26)

இவ் வார்த்தைகளைக் கூறுமுன்னால் ஆன்மா (அதை ஏற்கும் படி) பரிசுத்த ஆவி எப்படி அதைத் தயாரிக்கிறார் என்று பார்: “மகனே கேள்! புத்தியுள்ள ஆலோசனையை ஏற்றுக் கொள். என் யோசனையைத் தள்ளி விடாதே'' (சர்வ. 6. 24). ஆன்மா அவருடைய முக்கியமான இவ் வாலோசனையைத் தள்ளி விடாதபடி இவ்வாறு அதைத் தயாரிக்கிறார்.

241. என் அன்புள்ள சகோதரா, பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து இதே ஆலோசனையை உனக்குக் கூற எனக்கு . அனுமதி கொடு. " அதன் விலங்குகள் குணப்படுத்தும் கட்டுகளாம்" (சர்வ. 6. 31). சேசு கிறீஸ்து சிலுவையில் எல்லா மனிதரையும் தம் பக்கமாய் இழுக்க வேண்டும்அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் அவர்களை இழுக்கிறார். அதே போல் தீர்ப்பிடப்பட்டவர் களை அவர்களுடைய பாவச் சங்கிலியால் இழுப்பார். கப்பல் அடிமைகளைப் போலும் பசாசுக்களைப் போலும் தம் நித்திய கோபத்திற்கும் பழி வாங்கும் நீதிக்கும் - இழுப்பார். ஆனால் முன் குறிக்கப்பட்டவர்களையும் இழுப் பார்.- குறிப்பாக இந்தப் பிந்திய காலங்களில் - அன்பெனும் சங்கிலியால் தம்மிடம் இழுப்பார். ''நாம் அவர்களை அன்புக் கயிற்றால் கட்டி இழுத்தோம்''. (ஓசே. 11, 4).

242. இந்த அன்பின் அடிமைகள் அல்லது கிறீஸ்துவுக் காகக் கட்டுண்டவர்கள் (எபே. 3, 1) தங்கள் சங்கிலியை தங்கள் கழுத்தைச் சுற்றியோ, கரத்தைச் சுற்றியோ, இடை யைச் சுற்றியோ அல்லது காலிலோ அணிந்து கொள்ளலாம். 1643ல் புனித மணம் கமழ இறந்த சேசு சபையின் 7-வது தலைவராயிருந்த சங். வின்சென்ட் கராபா என்ற குரு, தன் அடிமைத்தனத்தின் அடையாளமாக தன் காலில் ஒரு இரும்பு வளையத்தை அணிந்திருந்தார். தாம் ஒரு இரும்புச் சங்கிலியை பகிரங்கமாக காலில் இழுத்துச் செல்ல முடிய வில்லையே என்று மிகவும் வருந்துவதாக அவர் அடிக்கடி கூறுவார்.

சேசுவின் ஆக்னஸ் தாயார் என்ற கன்னிகை (இவர் களைப் பற்றி முன்பே கூறியுள்ளோம்- எண் 170 காண்க) இடுப்பில் ஒரு இரும்புச் சங்கிலியை அணிந்திருந்தாள். வேறு சிலர் தாங்கள் உலகத்திலிருக்கையில் முத்துக் கழுத்தணி களை அணிந்ததற்கு ஒரு பரிகாரமாக இந்த இரும்புச் சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்டார்கள். மேலும் சிலர் உழைக்கும் போது தாங்கள் கிறீஸ்துவின் அடிமை கள் என்று ஞாபகமூட்டிக் கொள்வதற்காக தங்கள் கரத் தில் இந்தச் சங்கிலியை அணிந்திருந்தார்கள்.