183. தேவ அன்னையைப் பற்றியும் அவர்களுடைய பிள்ளைகள், ஊழியர்களைப் பற்றியும் நான் எழுதியுள்ள உண்மைகளின் ஓர் அழகிய உருவகத்தை பரிசுத்த ஆவி யானவர் வேதாகமத்தில் நமக்குக் கொடுத்துள்ளார். (ஆதி. 27) யாக்கோபு என்பவர், ரபேக்காள் என்னும் தன் தாயின் கரிசனையாலும் மதியூகத்தாலும் தன் தந்தை யான ஈசாக்கின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட வரலாறு தான் அது.
பரிசுத்த ஆவி உரைத்தபடியே அந்த வரலாற்றை இங்கு காணலாம். இதன் விளக்கத்தை பின்னால் கூறுவேன்.
1 ரபேக்காளும் யாக்கோபும்
[1] யாக்கோபின் வரலாறு :
184. ஏசா தன் பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்று விட்டான். இப்பிறப்புரிமையின் பலனை பல வரு டங்களுக்குப் பின் யாக்கோபுக்கு அடைந்து கொடுத்தாள் அவன் தாய் ரபேக்காள். மதியூகமுடையதும் மிகவும் புனிதம் வாய்ந்ததும் மறைபொருள் நிறைந்ததுமான செயல் ஒன்றால் அவ்வாறு செய்தாள். அவனை அவள் கனிந்த அன்புடன் நேசித்தாள். ஈசாக் தனது வயோதி பத்தை உணர்ந்தவராய், தான் இறக்கு முன் தன் பிள்ளை களை ஆசீர்வதிக்க விரும்பி, தான் நேசித்த ஏசாவைக் கூப்பிட்டு வேட்டையாடி உணவு கொண்டு வரச்சொன் னார். அதன்பின் அவனை ஆசீர்வதிக்க விரும்பினார். ரபேக்காள் உடனே யாக்கோபிடம் நடந்தவற்றைக் கூறி மந்தையிலிருந்து இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வரும்படி ஏவினாள், அவன் அவற்றைக் கொண்டு வந்ததும் அவள், ஈசாக் என்ன மாதிரி விரும்புவாரென்று அறிந்திருந்தாளோ அந்தப் பாகமாய்ச் சமைத்தாள். தன் பொறுப்பில் இருந்த ஏசாவின் ஆடைகளை யாக்கோபுக்கு உடுத்தினாள். ஆட்டுக் குட்டிகளின் தோலினால் அவன் கரங்களையும் கழுத்தையும் மூடினாள். கண்பார்வையில்லா திருந்த அவன் தந்தை, யாக்கோபின் குரலைக் கேட்டா லும் அவன் கரங்கலிருந்த ஆட்டுத் தோலைக் கொண்டு அவனை ஏசா என்றே நினைத்துக் கொள்ளுமாறு அப்படிச் செய்தாள். அதன் படியே ஈசாக், குரல் யாக்கோபின் குரலாக இருப்பதைக் கேட்டு வியந்து அவனைக் கிட்டே வரும்படி அழைத்தார். பின் யாக்கோபின் கரங்களை மூடியிருந்த ரோமம் உள்ள தோல்களைத் தொட்டுப் பார்த்து, குரலோ யாக்கோபின் குரல் தான், ஆனால் கரங் களோ ஏசாவின் கரங்களாயிருக்கின்றன என்றார். சாப் பிட்ட பின் யாக்கோபை ஈசாக் முத்தமிட்ட போது அவ னுடைய ஆடையின் மணத்தை முகர்ந்து அவனை ஆசீர் வதித்தார். வானத்தின் பனியையும் பூமியின் கொழுமை யையும் அவன் மீது இறங்கும் படி அழைத்தார். அவனு டைய சகோதரர் மீது அவனை அதிபதியாக்கி பின்வரும் வார்த்தைகளைக் கூறி ஆசீர்வாதத்தை முடித்தார். "உன்னை சபிக்கிற எவனும் சபிக்கப்பட்டவனாயிருப்பானாக. உன்னை ஆசீர்வதிக்கிறவன் ஆசீரால் நிரம்பிருப்பானாக.''
ஈசாக் இந்த வார்த்தைகளைச் சொல்லி முடியவும் ஏசா, தான் வேட்டையில் பிடித்த உணவை தன் தந்தை உண்டு பின் தன்னை ஆசீர்வதிக்கும்படி உள்ளே நுழைந் தான். என்ன நடந்தது என்பதை பிதாப் பிதாவான ஈசாக் அறிந்த போது நம்ப முடியாத ஆச்சரியமடைந்தார். ஆனால் அவர் தான் செய்ததை மாற்றிக் கொள்ளவில்லை, மாறாக அதை உறுதிப்படுத்தினார். கடவுளின் கரத்தின் செயலை அவர் இதிலே தெளிவாகக் கண்டார். வேதாக மம் கூறுகிறபடி, ஏசா கோபமாய்க் கூச்சலிட்டான். தன் சகோதரன் தன்னை வஞ்சித்து விட்டதாக உரக்க குற்றஞ்சாட்டினான். தன் தந்தையிடம் வேறு ஆசீர்வாதம் இல்லையா என்று கேட்டான். இதிலே அவன். வேத பிதாக்கள் சுட்டிக் காட்டுவது போல் கடவுளையும் உல கத்தையும் ஒன்றாகப் பார்க்கிறவர்களைப் போல், உலக ஆறுதல்களையும் பரலோக ஆறுதல்களையும் ஒருங்கே பெற விரும்பினான். ஏசாவின் அழுகையைக் கண்டு இரங்கிய ஈசாக் இறுதியில் அவனை ஆசீர்வதித்தார் - ஆனால் உல கத்துக்குரிய ஆசீரையே அளித்தார். அவனை அவன் தம்பிக்குக் கீழ்ப்படுத்தி ஆசீர்வதித்தார். இதனால் ஏசா யாக்கோபின் மீது எவ்வளவு விஷம் நிறைந்த பகை கொண்டானென்றால் அவனைக் கொல்வதற்குத் தன் தந்தை மரிக்கட்டும் என்றே காத்திருந்தான். யாக்கோபின் அன் புள்ள தாய் ரபேக்காள் தன் முயற்சிகளாலும் நல்ல அறிவுரையாலும் அதிலிருந்து அவனைக் காப்பாற்றியிரா விட்டால் அவன் மரணத்துக்குத் தப்பியிருக்க மாட்டான். அவள் கூறியதை யாக்கோபு கேட்டு நடந்தான்.