இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இன்னும் பல சிறுவர்கள் வந்து விழுகிறார்கள்!

எப்போதையும் விட அதிகமாக அஞ்சி நடுங்கியவனாக, நான் என் வழிகாட்டியிடம், “சிறுவர்கள் கதவுகளில் மோதியபடி இந்தக் குகைக்குள் வரும்போது, தாங்கள் போவது எங்கே என்பது அவர்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.

“நன்றாகத் தெரியும். இது பற்றி அவர்கள் ஓராயிரம் தடவை எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் இந்த நெருப்புக்குள் இப்படி தலைதெறிக்க வந்து விழுவதை அவர்கள் தெரிந்து கொள் கிறார்கள். ஏனெனில் பாவத்தை அவர்கள் வெறுத்துத் தள்ளுவ தில்லை, அதை விட்டு விலகுவதில் சோம்பலாக இருக்கிறார்கள். 

மேலும், அவர்கள் தவம் செய்யும்படி கடவுள் அழைக்கிற இடை விடாத, இரக்கமுள்ள அழைத்தல்களை வெறுத்துத் தள்ளி விடுகிறார்கள். இவ்வாறு அவர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட தேவ நீதி இப்போது அவர்களைச் சூறையாடுகிறது, அவர்களை வேட்டையாடுகிறது, தாற்றுக்கோலால் குத்தி, அலறியோடச் செய் கிறது. இதன் காரணமாக, இந்த இடத்தை வந்து சேரும் வரையிலும் அவர்களால் எங்கும் நிற்க முடியாமல் போகிறது.”

“ஓ, இந்தச் சிறுவர்கள் தங்களுக்கு இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று அறியும்போது, தங்களை எவ்வளவு நிர்ப்பாக்கிய முள்ளவர்களாக உணர்வார்கள்!”

“அவர்களுடைய மிக உள்ளரங்கமான வெறியையும், கடுஞ் சினத்தையும் நீர் உண்மையாகவே காண விரும்பினால், இன்னும் சற்று அருகில் சென்று பாரும்” என்று என் வழிகாட்டி கூறினார்.

நான் ஒரு சில அடிகள் முன்னே சென்ற போது, இந்தப் பரிதாபத்திற்குரிய ஈனப்பிறவிகள் காட்டுமிராண்டித்தனமாக ஒருவரை ஒருவர் வெறிநாய்களைப் போலத் தாக்குவதைக் கண்டேன். மற்றவர்கள் தங்கள் முகங்களையும் கைகளையும் பிறாண்டினார்கள். தங்கள் சொந்த தசையையே பிய்த்தெடுத்து, தங்களைச் சுற்றிலும் வெறுப்போடு வீசினார்கள். சரியாக இச்சமயத்தில் அந்தக் குகையின் கூரை முழுவதும் படிகத்தைப் போல, ஊடுருவிக் காணக்கூடியதாக மாறி, மோட்சத்திலுள்ள ஒரு பகுதியையும், இந்தப் பரிதாபத்திற் குரிய சிறுவர்களின் தோழர்கள் நித்தியத்திற்கும் அங்கே ஒளிவீசித் துலங்குவதையும் இவர்களுக்கு வெளிப்படுத்தியது.