யேசுவுக்கு சட்டை

ஆண்டுதோறும் நாம் கொண்டாடும் திரு நாட்களில் மிக்க அழகு வாய்ந்தது கர்த்தர் பிறந்த திருநாள். அதற்குத் தயாரிக்கும் காலம் ஆகமன காலம். நான்கு வாரங்களாக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துநாதருடைய வருகைக்கு தங்களை தயாரிக்கின்றனர். இரட்சகரது வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் காலம் ஆகமனகாலம்.

ரோஸி அக்கா, ஹரி அவளுடைய தம்பி. ஆகமன காலம் தொடங்கியதிலிருந்து அவர்களிடம் ஒரு மாற் றம் ஏற்பட்டது. காலையும் மாலையும் ஜெபத்தில் அதிக நேரம் செலவழித்தார்கள். முன்போல் அதிக மாய்ப் பேசுவதில்லை; சத்தம் போட்டு சிரித்து விளை யாடுவதை விட்டு விட்டார்கள்; அடிக்கடி ஒரு மூலை யில் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு தடவை சுவாமியார் எட்டிப் பார்த்தார், அவர்கள் அங்கு என்ன செய்கி றார்கள் என்று அறிய. ரோஸி வேதாகம சரித்திரப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்; ஹாரி கத்தோலிக்க பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண் டிருந்தான்.

இதன் மர்மம் குருவானவருக்கு ஒன்றும் விளங்க வில்லை. ஒரு நாள் பள்ளிக் கூடத்திற்குப் போயிருக் கையில் அவர் சகோதரியை அழைத்து தாம் கண்ட தைச் சொல்லி, விசாரித்தார். ''சுவாமி, எனக்கே அதிசயமாயிருக்கிறது. எல்லாம் மர்மமாய்த் தோன்றுகிறது. பள்ளிக்கூடத்தில் இருவரும் உத்தம மாணவர்களே. அதிலும் இப்பொழுது சில நாட்க ளாக ஒவ்வொரு நாளும் காலையிலும் மத்தியானமும் மாலை நேரத்திலும் கோவிலுக்குப் போய் வெகு பக்தி உருக்கத்துடன் ஜெபிக்கிறார்கள். ஒரு முறை நான் சத்தம் செய்யாமல் கோவிலினுள் நுழைந்தேன் ரோஸி பரலோக மந்திரத்தைச் சத்தமாய் பக்தியுடன் ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் யேசுவுடன் தனியே இருப்பதாக நினைத்தாள் போலும். இந்த இரு சிறுவர்களும் ஏதோ ஒரு காரி யத்தின் மேல் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள் என நினைக்கிறேன்'' என்று சகோதரி பதிலளித்தார் கள்.

அன்றே சுவாமியார் ரோஸி, ஹாரி இருவரை யும் சந்தித்தார். குருவானவருடன் அவர்கள் உற் சாகத்துடன் பேசினார்கள். பிரிகையில் சுவாமியார், "இந்த ஆண்டு ஆகமன காலத்தில் நீங்கள் இருவரும் வெகு அலுவலாயிருப்பதாகத் தெரிகிறதே; என்ன காரணம்?" என்றார். இருவரும் சற்றுநேரம் பேசா திருந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். பின் ரோஸி சுவாமியாரை நோக்கி, "யேசுவுக்கு ஒரு சட்டை தைத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றாள்.

"ஓ அப்படியா?" என சுவாமியார் சொல்லிச் சென்றார். பின் அவர் சகோதரியிடம் அதைப் பற்றிச் சொன்னார். “அவர்கள் தைப்பதை நாம் ஒருபோதும் பார்க்கவில்லையே" என்று அவர்கள் கூறி ஆச்சரியப் பட்டார்கள்.

அன்று கர்த்தர் பிறந்த திருநாளுக்கு முந்தின நாள். ரோஸியும் ஹாரியும் மடத்துக்குப் போய் வாசல் மணியை அடித்து தங்களுக்குக் கல்வி கற்பிக்கும் சகோதரியைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நடுச்சாமம் தொடங்க இருந்த திருநாளுக்காக தயாரித்துக் களைத்திருந்த சகோதரி வந்தார்கள். கர்த்தர் கொண்டு வர இருந்த அமைதியும் ஆனந்தமும் அவர் கள் முகத்தில் ஏற்கனவே காணப்பட்டன. ஹாரி அவர்களை நோக்கி, "சகோதரி, சின்ன யேசுவுக்கு நாங்கள் சட்டை தைத்தாகி விட்டது. நீங்கள் எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். குடிலிலே மாதாவின் அருகில் இதை வையுங்கள். யாரும் சொல்லாமலே மாதா இதைப் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்து விடுங்கள். அப்படியானால் தான் சின்ன யேசு குளிரால் வருந்தாதபடி இந்தச் சட்டையைப் போடுவார்கள்'' என்று சொல்லி ஒரு உறையைச் சகோதரி கையில் கொடுத்தான். பின் சிறுவர் இரு வரும் சகோதரிக்கு வந்தனம் கூறிப் போனார்கள்.

உறையைச் சகோதரி திறந்தார்கள். அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில்...

“நேச மிகு சின்ன யேசுவே,

இதோ உமக்கு ஒரு காணிக்கையை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். எண்ணூறு முறை பரலோக மந் திரங்களை உமக்குத் தருகிறோம். அது நீரே எங்களுக்குக் கற்பித்த அழகிய ஜெபம். அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனத்துடனும் பத்தியுடனும் சொல்லி, உமக்கு ஒரு சட்டை தயாரித்திருக்கிறோம். நீர் பிறந்த நாளன்று இந்தச் சட்டையைத் தரித்துக் கொள்ளும். குளிரால் நீர் வாட மாட்டீர்.

இப்படிக்கு உமது பிரிய பிள்ளைகள்

ரோஸி, ஹாரி.'' 


கர்த்தர் பிறந்த நாட் காலையில் சிறுவர் இருவரும் சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். "சகோதரி, அது கடினமல்ல. நாங்கள் ஒவ்வொருவரும் நாள் தோறும் பத்து முறை பரலோக மந்திரத்தை ஜெபித்தோம். காலை ஜெப நேரத்தில் இரண்டு, மாலை ஜெப நேரத்தில் இரண்டு, மற்ற ஆறும் திவ்விய நற்கருணை சந்திக்கையில்'' என ரோஸி எடுத்துரைத்தாள்.

“ஆம் சகோதரி, அது கடினமல்ல. சின்ன யேசுவுக்கு சட்டை தைத்துக் கொடுக்க நான் ரோஸிக்கு உதவி செய்தது எனக்கு எவ்வளவோ இன்பத்தைத் தருகிறது” என ஹாரி மொழிந்தான்.