உலகம் உயர்வடைய

உலகின் சீர்கேடான நிலை திருந்தும்படி கத்தோ லிக்கர் யாவரும் அக்டோபர் மாதம் முழுவதும் தேவ தாயை விசேஷ விதமாக பிரார்த்திக்கும்படி செப்டம்பர் 15-ம் நாளன்று நம் பரிசுத்த தந்தை கேட்டுக் கொண்டார். அக்டோபர் மாதத்தின் வழக்கமான பக்தி முயற்சிகளை இவ்வாண்டு அதிக உருக்கத்துடன் செய்ய வேண்டும் என மேற்றிராணிமாருக்கு பாப்பரசர் நிருபம் அனுப்பியிருக்கிறார். ஜெபமாலையை நாம் யாவரும் உள்ளப் பக்தியுடன் சொல்லி வரவேண்டும் என நம் பிதா நம்மை மன்றாடுகிறார்.

கடன் வாங்கியும் பட்டினி என்றாப்போல் அநே கர் ஜெபமாலை சொல்லியும் திருந்துவதில்லை. ஜெப மாலையின் தேவ இரகசியங்களைப்பற்றி நன்கு சிந்தியா ததே அதன் காரணம். தேவ இரகசியத்தைச் சொன் னதும் சில வினாடிகளாவது தாமதித்து, இதில் தேவ தாய் எவ்விதம் நடந்துகொள்கிறாள்? யேசு எவ்விதம் நடந்து கொள்கிறார்? நானும் அவர்களைப்போல் ஒழுகு கிறேனா? என சிந்தித்துப்பார்த்தல் தகுதி. குறிப்பிட்ட தேவ இரகசியத்தைச் சொன்னதும், பின்வரும் பத்து முறை அருள் நிறைந்த மன்றாட்டைச் சொல்கையில் ஒரு விசேஷ வரத்தைக் கேட்டு மாதாவை பிரார்த்திக் கும் நல்வழக்கம் சில இடங்களிலிருக்கின்றது. “முதல் தேவ இரகசியம்: கபிரியேல் சம்மனசு தேவதாய்க்கு மங்கள வார்த்தை சொன்னதைத் தியானிப்போமாக. இந்தப் பத்து மணி ஜெபத்தின் போது தாழ்ச்சி என் னும் புண்ணியத்தைக் கேட்டு தேவதாயைப் பிரார்த் திப்போமாக'' என்கிறார்கள். 

இவ்விதமே ஒவ்வொரு தேவ இரகசியத்தைச் சொன்ன பின்னரும். 2-ம் தேவ இரகசியத்தில் கேட்கும் வரம்: பிறசிநேகம். 3. மனத் தரித்திரம். 4. கீழ்ப்படிதல் 5. யேசுவை இழக்காதிருக் கும் வரம். 6. பாவத்துக்காக துக்கிக்கும் வரம். 7. பரித் தியாகத்தின் மீது ஆசை என்னும் வரம். 8. சுயபட்ச பரித்தியாக வரம். 9. ஜீவியத்தின் துன்பங்களை பொ றுமையாய் சகிக்கும் வரம். 10. யேசுவையும் அவரு டைய திருமாதாவையும் நேசிக்கும் வரம். 11. பரலோ கத்தை நோக்கி மனதைஎழுப்பும் வரம். 12. பரலோக ஆசை என்னும் வரம். 13. சகலத்தையும் சர்வேசுர னுக்காக செய்தலாகிய சுத்தக் கருத்து என்னும் வரம். 14. நல்ல மரணம் என்னும் வரம். 15. பரலோக இன்பங்களை எதிர்நோக்கி வாழும் வரம்.

இந்தப் பதினைந்தையும் மனப்பாடம் செய்வது சிரமமல்ல. உருக்கமாக ஜெபிக்க இவை அநேகருக்கு பெரும் உதவியாயிருக்கும்.