இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அருள் நிறை மந்திரத்தின் மீதும் ஜெபமாலை மீதும் இன்பமாகன்ல நல்ல பக்தி கொண்டிருத்தல்

249. இப் பக்தி முயற்சியைக் கைக்கொள்ளுகிறவர்கள் சம்மனசின் மங்களமாகிய அருள் நிறை மந்திரத்தின் மீது அதிக பக்தி கொண்டிருக்க வேண்டும். கிறீஸ்தவர்கள் எவ் வளவு விளக்கம் பெற்றவர்களாயிருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே அதன் மதிப்பையும் பலனையும் உயர்வையும் அவசியத்தையும் உணர்ந்துள்ளார்கள். பெரிய விளக்கம் பெற்ற அர்ச்சிஷ்டவர்களான சாமிதாதர், கபிஸ்திரான் அரு ளப்பர். முத். ஆலன் போன்றோருக்கு இச் செபத்தின் விலை மதிப்பை உணர்த்தும் படி நம் தேவ அன்னையே பல சந்தர்ப்பங்களில் தோன்ற வேண்டியதிருந்தது. ஆன்மாக் களை மனந்திருப்ப இச் செபத்திற்குள்ள வலிமையை விளக் கவும் அதனால் நிகழ்ந்த ஆச்சரியங்களை எடுத்துச் சொல் லவும் இவர்கள் புத்தகம் புத்தகமாக எழுதினார்கள். உலக இரட்சண்யமே அருள் நிறை மந்திரத்தை வைத்து ஆரம் பிக்கப்பட்டது. அதுபோல் ஒவ்வொரு ஆன்மாவின் இரட் சிப்பும் இம்மந்திரத்துடனேயே இணைக்கப்பட்டுள்ளது என்று இவர்கள் பகிரங்கமாக உரத்த குரலில் பறைசாற்றினார்கள். இச் செபம், வறண்டு வளமற்றுக் கிடந்த உலகத்தில் சீவி யக் கனியைக் கொண்டு வந்தது என்று எடுத்துக் கூறி னார்கள். இச் செபம் நன்றாகச் சொல்லப்பட்டால் நம் உள்ளத்தில் தேவ வார்த்தையை முளைப்பித்து சீவியக் கனி யாகிய சேசு கிறீஸ்துவைக் கொடுக்கும் என்று உரைத் தார்கள். நமதான்மா என்னும் நிலம் தக்க காலத்தில் தன் பலனைத் தருமாறு அதை நனைக்கும் பரலோக பனியாக இவ்வருள் நிறை மந்திரம் உள்ளது என்றும், இப்பரலோக பனியால் நனைக்கப்படாத ஆன்மா ஒரு பலனையும் தராது, மாறாக முட்களையும் புதர்களையும் பிறப்பித்து - கடவுளின் சாபத்துக்குத் தான் தகுதியாயிருக்கும் (எபி. 6, 8) என்றும் அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

250. “ஜெபமாலையின் மகிமை” என்ற தம் நூலில் முத். ஆலன் என்பவர் தமக்குத் தேவ அன்னை வெளிப் படுத்தியதாகக் கூறியுள்ளது வருமாறு- இது கார்த்தஜெனோ என்பவராலும் குறிப்பிடப்பட்டுள்ளது:- "மகனே, உலகம் முழுவதும் மீட்கப் பயன்பட்ட சம்மனசின் மங்கள வார்த் தையைச் சொல்வதில் வெறுப்பும் அசமந்தமும் அலட்சி யமும் கொண்டிருப்பது நித்திய தண்டனையடைவதின் ஏறக்குறைய நிச்சயமான கடைசி அடையாளம் என்பதை நீயும் அறிந்து கொள். மற்ற எல்லாருக்கும் அறி விக்கவும் செய்வாயாக'' (Lib. de dignit. Ros. 11). இவ் வார்த்தைகள் பயங்கரமானவை. அதே சமயம் மிக ஆறு தலானவை. இந்தப் புனிதரின் சாட்சியமும், அவருக்கு முந்தி அர்ச் சாமிநாதருடையவும் அதன் பின் பல பெரி யோருடைவும் சாட்சியமும் பல நூற்றாண்டுகளாக இவ் வார்த்தைகளின் உண்மை பற்றிய அனுபவமும் இல்லா திருக்குமானால் அவற்றை நம்புவது நமக்குக் கடினமாகவே இருக்கும். ஏனென்றால் தண்டனைத் தீர்ப்பின் அடையா ளத்தைத் தரித்துள்ள எல்லா பதிதரும், கடவுளற்றவர்களும், ஆங்காரிகளும், உலகை நேசிப்பவர்களுமான மனிதர்கள் அருள் நிறை மந்திரத்தையும் ஜெப மாலையையும் பகைத்துப் புறக்கணித்து வருகிறார்கள் என்பது ஒரு குறிப்பிடக்கூடிய உண்மையாக உள்ளது. பதிதர்கள் பாலோக மந்திரத்தைக் கற்றுக் கொண்டு அதைச் சொல்வார்கள். ஆனால் அருள் நிறை மந்திரத்தை அவர்கள் வெறுப்புக் குரியதாய்க் கொள் கிறார்கள். ஒரு பாம்பைத் தூக்கிச் சென்றாலும் செல்வார் களே தவிர ஒரு ஜெபமாலையைத் தங்களுடன் கொண்டு செல்ல மாட்டார்கள்.

கத்தோலிக்கருக்குள்ளும் ஆங்காரிகளாயிருப்பவர்கள் அருள் நிறை மந்திரத்தை புறக்கணித்தோ அலட்சியப் படுத்தியோதான் வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் தந்தையான லூஸிபேரின் நாட்டங்களையே தாங் களும் கொண்டார்கள். அவர்கள், ஜெபமாலை என்பது கிழவிகளின் பக்தி முயற்சி, அறிவற்ற கல்வியற்றவர்களுக் குத்தான் அது சரியானது என்று கருதுகிறார்கள். ஆனால் அனுபவம் என்ன காட்டுகிறது? முன் குறிக்கப்பட்டிருத் தலின் தெளிவான அடையாளத்தைக் கொண்டிருக்கிறவர் கள் அருள் நிறை மந்திரத்தை நேசித்து மதிக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் அதைச் சொல்லி வருகிறார்கள். எவ்வளவுக் குக் கடவுளுடன் நெருக்கமாயிருக்கிறார்களோ அவ்வள வுக்கு இச் செபத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இதனை யும் நம் தேவ அன்னையே முத். ஆலனிடம் கூறியுள்ளார்கள்.

251. ஏன் என்றும் தெரியாது, இது எப்படியென்றும் என்னால் சொல்ல முடியாது-ஆயினும் மிகவும் உண்மையான ஒன்று என்னவென்றால், ஒருவன் கடவுளுக்குச் சொந்தமாயிருக்கிறானா என்று அறிய, அவன் அருள் நிறை மந்திரத்தைச் சொல்லவும் ஜெபமாலை செபிக்கவும் விரும் புகிறானா இல்லையா என்பதைத் தவிர வேறு சிறந்த இர கசியம் எதுவும் இல்லை. அவன் "விரும்புகிறானா இல்லையா" என்கிறேன். ஏனென்றால் சிலர் சுபாவ இயல்பான காரணத்தினால் அல்லது சுபாவத்துக்கு மேற்பட்ட ஒரு காரணத்தினால் அதைச் சொல்ல முடியாமல் இருக்கக் கூடும். ஆயினும் அவன் அதை எப்போதும் விரும்புவான். மற் றவர்கள் அதைச் சொல்லும்படி தூண்டுதலாயிருப்பான்.

252. முன் குறிக்கப்பட்ட ஆன்மாக்களே! மரியாயிடம் சேசுவுக்கு அடிமையாயிருப்பவர்களே! பரலோக மந்திரத் திற்குப் பிறகு செபங்களிலெல்லாம் அழகிய செபம் அருள் நிறை மந்திரமே என அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் மாதாவுக்குச் செலுத்தக் கூடிய மிகச் சிறந்த வாழ்த்துரை அதுவே. ஏனென்றால் ஒரு அதி தூதன் வழியாக மாதா வின் இருதயத்தைத் தன் வசமாக்க சர்வேசுரன் அவர் களுக்குக் கூறிய வாழ்த்து மொழி அதுவேயாம்! மரியா யின் இருதயத்தில் அது விளைவித்த பலன் எவ்வளவு பெரி தென்றால் அதில் நிரம்பியிருக்கும் இரகசிய மதுரங்களி னால், மாதா தன் ஆழ்ந்த தாழ்ச்சியையும் தாண்டி கட வுளின் மனிதாவதாரத்திற்குத் தன் சம்மதத்தை அளித் தார்கள். அது சொல்லப்பட வேண்டிய முறையில் நீ அதைச் சொல்வாயானால் அது மாதாவின் இருதயத்தைத் தப்பாமல் உன் வசப்படுத்தும்.

253. அருள் நிறை மந்திரம் நன்றாகச் சொல்லப்படும் போது, அதாவது, கவனத்துடனும் பக்தியுடனும் மரி யாதையுடனும் சொல்லப்படும் போது, அது பசாசை விரட்டி ஓட்டும் எதிரிப்படையாகவும், அதை அடித்து நொறுக்கும் சம்மட்டியாகவும், ஆன்மாவின் அர்ச்சிப்பா கவும், சம்மனசுக்களின் மகிழ்ச்சியாகவும், முன் குறிக்கப் பட்டோரின் புகழ்ப் பாட்டாகவும், புதிய ஏற்பாட்டின் கீதமாகவும், மரியாயின் மனமகிழ்ச்சியாகவும். மிகப் பரி சுத்த தமதிரித்துவத்தின் மகிமையாகவும் உள்ளது என்பது அர்ச்சிஷ்டவர்களின் கருத்தாகும். ஆன்மாவிற்கு வளமையைக் கொண்டு வரும் பரலோகத் தண்பனிதான் அருள் நிறை மந்திரம். மாதாவுக்கு நாமளிக்கும் புனித அன்பின் முத் தம் அருள் நிறை மந்திரம். நாம் மாதாவுக்கு கொடுக்கும் சிவந்த ரோஜா மலர், விலை மதிப்புள்ள முத்து, தேவா மிர்த பானம், தெய்வீக நறுந்தேன் அதுவாகும் இவ்வாறு அர்ச்சிஷ்டவர்கள் உபமானங்களைக் கூறியுள்ளார்கள்.

254. ஆதலால், நீங்கள் மரியாயின் சிறு செபக் கிரீ டத்தை மட்டும் சொல்வதில் திருப்தியடைந்து விடாமல் ஒரு செபமாலையும், நேரமிருந்தால், 15 தேவ இரகசியங் கொண்ட ஒரு முழு ஜெபமாலையும் தினமும் சொல்லி வரவேண்டுமென்று சேசு மரியாயிடம் உங்கள் மீது நான் கொண்டுள்ள அன்பினால் மிகவும் ஆர்வமுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த என் வார்த்தைக்குச் செவி கொடுத்த நாளையும் நேரத்தையும் உங்கள் மரண நேரத்தில் நீங்கள் வாழ்த்துவீர்கள். சேசு மரியாயின் ஆசீர்வாதங்களில் விதைத்த பின் நித்திய ஆசீர்வாதங்களை நீங்கள் அறுவடை செய்வீர்கள். "பெருக விதைப்பவன் பெருக அறுப்பான்" (II கொரி 9, 6).