ஜெபமாலை

பாத்திமாவில் தேவதாய் உலகுக்குத் திரும்பக் கொடுத்த இரு பெரும் திரவியங்கள் ஜெபமாலையும் உத்தரீயமுமாகும். முதலாவதாக பதின்மூன்றாவது நூற்றாண்டில் அவற்றை அவள் இரு பெரிய அர்ச்சிய சிஷ்டர்களுக்கு அறிவித்தாள். ஜெபமாலையை புனித சுவாமி நாதருக்கு 1206-ம் ஆண்டிலும் உத்தரீயத்தை புனித சீமோனுக்கு 1251-ம் ஆண்டிலும் அளித்தாள். அநேகமாய் அதே நிபந்தனைகளுடன் இரண்டு அர்ச் சியசிஷ்டர்களும் அன்னையிடமிருந்து இரு மிகப் பெரும் திரவியங்களைப் பெற்றுக் கொண்டனர். 

அந்த நூற்றாண்டு திருச்சபைக்கு ஓயாத் தொல்லைகள் நிறைந்த காலமாயிருந்தது. தப்பறைக் கொள்கைக வால் திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலம். கிறிஸ்தவ மறையானது உள்ளும் புறமும் உபத்திர உப்பட்டு வந்தது. திருச்சபையில் இலட்சக்கணக் கான மக்கள் நமது திரு மறையின் பரம இரகசியங் களையும் மறந்து வந்தமையால் அதன் விளைவாக எங் கும் அசதி காணப்பட்டது. ஆல்பிஜென்ஸ் என்னும் பதிதக் கொள்கை தோன்றி பிரான்ஸ் நாட்டில் விசு வாசத்தை அழிக்கப் போவதாக பயமுறுத்தியது. 

“கம்யூனிஸ்ட்களும் சோஷலிஸ்ட்களும் நம் காலத்தில் விளைவிக்கும் நாசத்தைப் போலவே புனித சுவாமிநாதரது காலத்தில் தப்பறைக் கொள்கைகள் விளைவித்து வந்தன. ஆல்பிஜென்ஸ் பதிதர்கள் கோவில்களைக் கொள்ளையடித்து, மடங்களைத் தரை மட்டமாக்கி, கடவுளது திருஸ்தலங்களைச் சேதப் படுத்தி, குருக்களைக் கொன்றதுடன், அதிகாரத் தையே எதிர்த்து நின்றார்கள். இன்னொசென்ட் என்னும் பாப்பானவர் வேத போதகர்களை அவர் களிடையே அனுப்பினார். ஒரு விசேஷ பிரதிநிதி பதி தர்கள் கையால் வேத சாட்சி முடி பெற்றார்'' என அந்தக் காலத்தைப் பற்றி புனித சுவாமிநாதர் சபைக் குரு ஒருவர் எழுதி வைத்திருக்கிறார்.

சுவாமிநாதர் இளம் பருவத்திலேயே தம் விரத் தத்துவத்தை மாசற்ற மரியாயிக்கு ஒப்புக் கொடுத் திருந்தார். அதில் பிரமாணிக்கமாயிருந்ததாக மரணப்படுக்கையில் அவர் உறுதி கூறினார். அக்கிர மிகளிடை வேதத்தைப் போதிக்க வேண்டுமென் னும் ஆவலால் அவர் பற்றி எரிந்தார். கன்னெஞ்ச ரான பாவிகள் மனந்திரும்ப அவர் பெரும் தவ முயற்சிகள் செய்தார். நாற்பத்தைந்து ஆண்டுகளுக் குப்பின் புனித சீமோன் ஸ்தோக் என்பவர் செய்தது போல், தாம் பாவிகளை மனந்திருப்ப முடியவில்லையே என்று மனங்கசந்து சுவாமிநாதர் அழுது, தன் வேலைக்குப் பலனளிக்கும்படி பரலோக இராக்கினி யைக் கெஞ்சி மன்றாடி, ஒரு நேர்ச்சையும் செய்தார். “அப்பொழுது பரலோகம் திறந்தது. தேவதாய், தன் ஊழியனுக்குக் காட்சியளித்தாள். அவள் கை யில் ஜெபமாலை இருந்தது. சொல்ல முடியாத அழ குடன் அவள் காணப்பட்டாள். 'மகனே, தைரிய மாயிரு, உன் உழைப்புக்கு ஏராளமான பலன் கிடைக்கும். உலகில் இருக்கும் தீமைகளைப் பற்றி நீ அழுது பிரலாபிக்கிறாய். அவற்றைக் குணப்படுத்தக் கூடிய மருந்து ஒன்று உண்டு. என் மகனின் வாழ்க்கை , இறப்பு, மகிமை இவற்றைப் பற்றி தியா னித்து, இரட்சிப்பின் இரகசியம் உலகுக்கு அறிவிக் கப்பட்ட போது சம்மனசு சொன்ன மங்கள வார்த் தைகளை அந்தத் தியானத்துடன் இணைப்பதே அந்த மருந்து, என தேவதாய் புனித சுவாமிநாதரிடம் கூறினாள். ''

இவ்விதம் ஜெபமாலையை சுவாமிநாதருக்குக் கற் பித்து பரலோக அன்னை மேலும் சொன்னதாவது: ' இந்தப் பரலோக பனியினால் நீரளிக்கப்படும் வரை இப் பூமியானது பலன் கொடாதிருக்கும். நீ உன் பிரசங்கங்களினால் மக்களிடை பரப்ப இருக்கும் பக்தி முயற்சி என் மகனுக்கும் மிகப் பிரிமானது, தப்பறைகளை அழிக்கவும், தீமைகளை ஒழிக்கவும், புண்ணியத்தைப் பரப்பவும், தேவ இரக்கத்தைக் கேட்டு மன்றாடவும், எனது பாதுகாப்பைப் பெற வும், இதுவே மிகச் சிறந்த வழி. நீ மாத்திரமல்ல, உன் சபையைச் சேரும் எல்லோரும் இந்தப் பக்தி முயற்சியை நித்தியத்துக்கும் பரப்ப வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தப் பக்தி முயற்சியால் விசுவாசிகள் கணக்கிட முடியாத அனுகூலங்களைப் பெறுவர். அவர்களது தேவைகளில் உதவி செய்ய நான் எப்பொழுதும் தயாராயிருப்பேன். உனக்கும் உன் மக்களுக்கும் நான் விட்டுச் செல்லும் விலையே றப் பெற்ற கொடை இதுவே.''

தொடக்கத்தில் தன் வார்த்தைகள் பயனளிக்க வில்லை என சுவாமிநாதர் கண்டார். பின்னர் புது மைகள் நடக்கத் தொடங்கின. மிகக் கன்னெஞ்ச ரான பாவிகளும் திரும்பினார்கள். புதுமைகளைப் பார்த்ததும் மக்கள் சுவாமிநாதர் முன் முழந்தா ளிட்டு, கடவுளுடைய மாதா படிப்பித்த புதுப் பக்தி முயற்சியைத் தங்களுக்குக் கற்பிக்கும்படி அவரை மன்றாடினார்கள். ஜெபமாலைப் பக்தி பரவ ஆரம்பித்ததும் பிரான்ஸிலும், ஸ்பெயினிலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பிரிவினைக்காரர்கள் மனந்திரும்பினார்கள். கிறிஸ்தவ விசுவாசம் முன் போல் தளிர்க்கத் தொடங்கியது. “இந்தப் பக்தி முயற்சி பிரசங்கிக்கப்பட்ட இடங்களிலெல்லாம், இந்த மகத்துவம் பொருந்திய பக்தி முயற்சியில் பங்குபற்றும்படி மக்கள் திரண்டு சென்றனர். பாப்புமாரும் மேற்றிராணிமாரும் அதைப் பரப்ப பெரும் பிரயாசைப்பட்டனர். பிரபுக்கள் தங்கள் அதிகாரத்திலிருந்தவர்களுக்கு அதைக் கற்பித்தார்கள். எதிரிகளைத் தாக்கு முன் ஒவ்வொரு முறையும் வீரர்கள் ஜெபமாலை ஜெபிக்கும்படி சீமோன் தெமோன் போர் செய்தார். இந்தப் பக்தி முயற்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விசுவாசமும் பக்தியும் தளிர்த்தோங்கின'' என அந் தக் காலத்தைப் பற்றி ஒருவர் எழுதி வைத்திருக் கிறார்