பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்குள் ஒருவரும், அப்போஸ்தலரான அர்ச். யூதாவுக்குச் சகோதரரும், ஜெருசலேம் பட்டணத்துக்கு முதல் மேற்றிராணியாருமான அர்ச். சின்ன இயாகப்பர் இந்த நிருபத்தைக் கர்த்தர் அவதாரமான ஏறக்குறைய 61-ம் வருஷத்தில் எழுதினார்.
விசுவாசத்துக்கும் நன்னடக்கைக்கும் உரிய அநேக சுகிர்த புத்திமதிகள் இதில் அடங்கியிருக்கின்றன.
இது எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் பொதுவாக எழுதப்பட்டதினால் பொது நிருபமென்று சொல்லப்படுகிறது.