இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புண்ணியத்தில் வளர

புனித ஜாண் பாப்டிஸ்ட் வியான்னியைப் பற்றி நீங்கள் யாவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். “சிறிய தாழ்ச்சியுள்ள, எளிய, சாதாரண, ஆனால் ஆர்ஸ் நகரத்தின் மகிமை பொருந்திய, பங்குக் குரு " என அவரைப் பற்றி ஒரு முறை பதினோராம் பத்திநாத பாப்பரசர் கூறினார். அவர் பிரான்ஸ் நாட்டில் 1786-ம் ஆண்டில் பிறந்து 1859-ல் இறந்தார். அவருக்கு அர்ச் சியசிஷ்டபட்டம் 1925-ம் ஆண்டு மே 31-ம் நாளன்று கொடுக்கப்பட்டது.

திவ்விய நற்கருணை மேல் மிகத் திடமான விசுவாசம் அவரிடம் இருந்தது. அநேகமாய் ஒவ்வொரு நாளும் பூசையில் அவர் ஆண்டவரைப் பார்த்ததாகக் கருதப்படுகிறது. ஒரு நாள் அவர் மிகு கவலையுடனி ருந்தார். “அநேக நாட்களாக நான் ஆண்டவரைப் பார்க்கவில்லை'' என அவர் அப்பொழுது சொன்னார். “நல்ல கடவுளை நான் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பார்க்கவில்லையே'' என இன்னொரு முறை அவர் பெருமூச்சுடன் மொழிந்தார். "அப்படியானால் நீங்கள் அவரைப் பார்க்கிறீர்களா? என அவரிடம் கேட்ட பொழுது அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

திவ்விய நற்கருணையில் இருக்கும் யேசுவை அவர் உருக்கமாக நேசித்தார். அந்த தேவதிரவிய அனு மானத்தில் யேசுவுக்கு வருவிக்கப்படும் நிந்தை அவ மானங்களுக்கு அவர் பரிகாரம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் சில சிறுவர்களைச் சந்தித்தார். திவ் விய நற்கருணைச் சுற்றுப்பிரகாரத்துக்கென அவர்கள் பூத்தெளித்துப் பழகிக் கொண்டிருந்தனர். அதை அவர் கண்டதும் நின்று, ''சிறுவர்களே, திவ்விய நற்கருணைக்கு முன் நீங்கள் பூத்தெளிக்கையில், உங் கள் இதயங்களை பூக்கூடைகளில் ஒளித்து வைத்து, பூக்களோடு சேர்த்து அவற்றை யேசுவிடம் அனுப் புங்கள்'' என்றார்.

“நாம் ஆண்டவரை நேசித்தால், அவர் வசிக்கும் திருப்பேழை- நல்ல கடவுளின் அந்த வீடு- எப்பொ முதும் நம் மனக் கண் முன் இருக்க வேண்டும். வழி யில் ஒரு கோபுரத்தைப் பார்க்கும்போது அதே போல் நம் இருதயத்தை மோட்சத்துக்கு எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நேசர் அந்த கோபுரத்து டனிருக்கும் கோவிலில் வசிக்கிறார்'' என அவர் ஒரு முறை சொன்னார். திவ்விய நன்மை வாங்குவதை அவர் “சிநேக ஸ்நானம்'' என்பார்.

அவரிடம் ஆலோசனை கேட்கும்படி ஒரு நாள் பெண் ஒருத்தி வந்தாள். அவள் வாலிபப் பெண், நல்லவள். பக்தியுள்ளவளாயிருக்க விரும்பினாள். ஆனால் அபூர்வமாகவே திவ்விய நற்கருணை உட் கொள்வாள். பரிசுத்தவதியாயிருக்க அவளுக்கு ஆசை இருந்தது. எனினும் சர்வ பரிசுத்தனத்தின் ஊற்றினின்று தொலைவில் இருக்க ஆசித்தாள்; அதை அணுக அவள் விரும்பவில்லை. “இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது திவ்விய நன்மை உட் கொள்'' என அவர் அவளிடம் கூறினார்.

"சுவாமி, நான் இருக்கிற ஊரில் இது வழக்க மில்லையே! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என அவள் சொன்னதும், சுவாமியார், "நீ இவ்விதம் நன்மை வாங்கத் தொடங்கியபின் இது வழக்கமாகி விடும். போய் நான் சொல்கிற பிரகாரம் செய்” என்று சொல்லிவிட்டார்.

சில காலத்துக்குப் பின் அவள் அவரைப் பார்க் கும்படி திரும்பி வந்தாள். ஒரு வாரத்துக்கு ஒருமுறை திவ்விய நன்மை வாங்கும்படி அந்தப் பரிசுத்த குரு அவளுக்குப் புத்தி சொன்னார்.

அவள் “சுவாமி, எங்கள் ஊரில் நான் ஒருத்தி மாத்திரமே இரண்டு வாரத்துக்கு ஒருமுறை நன்மை வாங்குகிறவள். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் நான் நன்மை வாங்குகிறதாயிருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்றதும், குருவானவர், “உனக்குப் பல சிநேகிதர்கள் இருக்கின்றனர். அவர்களில் புண்ணியவதிகளான சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களும் உன்னைப் போல் வாரந் தோறும் நன்மை வாங்கச் செய். அப்படியானால் நீ தனியே இருக்க மாட்டாய், பின் அவர்களை என்னிடம் அழைத்து வா'' என்றார்.

அந்தப் பெண் உண்மையாகவே பரிசுத்த தனத் தில் வளர விரும்பியமையால் ஞாயிறு தோறும் நன்மை வாங்கத் தொடங்கினாள். அவளைக் கண்டு பாவிக்கத் தீர்மானித்த இரு பெண்களுடன் அவள் வியான்னி சுவாமியிடம் வந்தாள்.

அவர் வெகுவாக மகிழ்ந்தார். “பிள்ளைகளே, நீங் கள் திவ்விய நற்கருணையின் அப்போஸ்தலர்களாக வேண்டும். உங்கள் சொற்களாலும் சாதனையாலும் அந்த நல்ல வழக்கத்தை மற்றவர்களிடை பரப்புங் கள். ஆறு மாதத்திற்குப்பின் நீங்கள் என்னிடம் வாருங்கள். வரும்போது உங்களில் ஒவ்வொருவரும் உங்களைப்போல் வாரந்தோறும் நன்மை வாங்கத் தீர் மானித்துள்ள இரண்டு மூன்று பேர்களையாவது உங் களுடன் அழைத்துவர வேண்டும்'' என்றார்.

அவ்விதமே செய்வதாக அவர்கள் வாக்களித்தார் கள். ஆறு மாதத்திற்குப் பின் அவர்கள் திரும்பிவந்து சுவாமியார் முன் முழந்தாளிட்டார்கள். ஏற்கனவே பன்னிரண்டு பேர் அவர்களைப் போல் அடிக்கடி நன்மை வாங்கி வந்தனர்.

அதிலிருந்து அந்த ஊரில் கத்தோலிக்கரது வாழ்க்கையில் அதிசயத்துக்குரிய மாற்றம் ஏற்பட் டது. விசுவாசிகள் சிநேக தேவதிரவிய அனுமா னத்தை அடிக்கடி நாடினர். யேசுவை அவர்கள் அதி கமதிகமாக நேசிக்கத் தொடங்கினார்கள். யேசுவை நேசிக்க நேசிக்க மற்ற புண்ணியங்களும் அவர்களிடம் அதிகரித்தன.