கண்டேன்

ஜேம்ஸ் டார்னெல் மூன்று வயதிலேயே அகதி யாக விடப்பட்டான். அவன் பிறந்து சில நாட்களுக் குப் பின் தாயை இழந்தான். தந்தை அவனுக்கு ஏராளமான பணத்தை விட்டுச் சென்றார். இளம் வயதிலிருந்தே அவன் கல்வி கற்று, சித்திரம் வரைவ தில் கைதேர்ந்தவன் எனப் புகழ் பெற்றான். இயற் கைக் காட்சிகளையே அவன் இதுவரை வரைந்து வந் தான். ஒரு குழந்தையை என்றாவது ஒருநாள் வரைய வேண்டும் என்னும் ஆசை நெடுநாள் அவனது உள் ளத்தில் இருந்தது.

மேற்றி ராசனக் கோவிலின் பங்குக் குரு ஒருநாள் அவனுக்கு ஆளனுப்பினார். புதுப்பிக்கப்பட்ட கோவிற் சுவர்களை யெல்லாம் அலங்கரிக்க அவர் விரும்பினார். 'மாதா பீடத்தினருகில் குழந்தை யேசுவுக்கென ஒரு பீடம் கட்டப்போகிறேன். குழந்தை யேசுவை அழகாக வரைவது உங்கள் வேலை. அவர் ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தையா யிருக்க வேண்டும்'' என சுவாமியார் கூறினார்.

தன் ஆசையை நிறைவேற்ற தனக்கு வாய்ப்பு கிடைத்ததுபற்றி அவன் மகிழ்ந்தான். எனினும் அவன் கத்தோலிக்கனல்ல. எந்த வேதத்திலுமே அவனுக்கு நம்பிக்கையில்லை. கடவுள் ஒருவர் உண்டு; அதற்குமேல் அவன் எதையும் விசுவசித்ததில்லை. குழந்தை யேசுவை அவன் எப்படி சித்தரிக்க முடி யும்? அவரில் அவனுக்கு விசுவாசமில்லையே. "சுவாமி, உங்கள் வேதத்தைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரி யாது. நீங்கள் விரும்புவது போல நான் வரைய முடியுமா என்பதே என் பிரச்சினை. குழந்தையின் மிகச் சிறந்த படம் ஒன்றை வரைய வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆவல். என்னாலான முயற்சிசெய்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்று வேன். நல்ல 'மாதிரி' ஒன்றைத் தேடிப் பார்க்க வேண்டும்' என ஜேம்ஸ் மொழிந்தான்.

"மாதிரியா வேண்டும்? இதில் நான் உங்களுக்கு உதவி செய்யக் கூடும் என நினைக்கிறேன். சார்ளியை நான் தருவிக்கிறேன்'' என குருவானவர் கூறியதும், “சார்ளி என்ன அவ்வளவு அபூர்வ அழகு வாய்ந்த வனா?" என ஜேம்ஸ் வினவினான்: “நீங்களே பார்த் துத் தீர்மானியுங்கள்; கோவிலையடுத்து ஒரு பெரிய கட்டடம் இருக்கிறதல்லவா? அது தான் அனாதைச் சிறுவர் விடுதி. சார்ளி அங்கு வசிக்கிறான். வயது சுமார் எட்டு இருக்கும்' எனக் குரு உரைத்தார்.

சார்ளியைப் பார்த்ததும் அவன் அபூர்வ அழகு வாய்ந்தவன் என ஜேம்ஸ் அறிந்தான். 'சார்ளி, இவர் தான் நம் மேற்றிராசனக் கோவிலை அலங்கரிக் கப்போகிறவர். இவரைப் பற்றி முன்னர் நான் உன் னிடம் சொல்லியிருக்கிறேன்'' என பங்கு சுவாமியார் சொல்லி, சிறுவனிடம் கடிதமும் எழுதுகோலும் கொடுத்து, அவன் கண்டுள்ள இயற்கைக் காட்சி ஒன்றை வரையும்படி கூறினார். சிறுவனது திறமை யைக் கண்ட ஜேம்ஸ், “சார்ளி, இனி நாம் இருவரும் நண்பர். நீயே எனக்கு மாதிரியும் தூண்டு கோலும் " என்றான்.

ஏறக்குறைய ஓராண்டு கடந்தது. ஜேம்ஸ் சார்ளி இவர்களிடையே அதிசயத்துக்குரிய நட்பு ஏற்பட் டது. கோவில் வேலை நன்றாக இருக்க வேண்டும் என பங்குசுவாமி, ஜேம்ஸ், சார்ளி மூவரும் மிக விரும்பி னார்கள். ஜேம்ஸ் சாரத்தில் நின்று வேலை செய்கை யில் சார்ளி முழந்தாளிட்டு இமை கொட்டாமல் பீடத்தின் மத்தியையே பார்த்துக்கொண்டிருப்பான். ஜேம்ஸ் வேலை செய்வதை ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.

ஒருநாள் தானும் சித்திரக்காரன் எனப்பேர் பெற விரும்புவதாக சார்ளி தெரிவித்ததும், “அப்படி யானால் நான் கோவிலில் வேலை செய்கையில் நீ ஏன் என்னைக் கவனிப்பதில்லை?" என ஜேம்ஸ் கேட்டான்.

'ஐயா, நீங்கள் வேலை செய்வதைப் பார்க்க எனக்கு நேரமில்லை; ஏனெனில் உங்களைப் பற்றி கடவுளுடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்'' என சிறுவன் மொழிந்தான்.

"என்னைப்பற்றி ஏன் கடவுளிடம் பேசுகிறாய்?" என ஜேம்ஸ் ஆச்சரியத்துடன் வினவினான்.

''நாம் இருவரும் செய்யும் வேலையில் என் பகுதி அதுவே. ஐயா, நீங்கள் தேவதாயை நேசிக்கிறீர் களா ?''

"சார்ளி, அதைப்பற்றி நான் நினைக்கவே இல்லை. அவளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இதற்கும் கடவுளுடன் என்னைப் பற்றிப் பேசுவதற் கும் என்ன சம்பந்தம்?"

“பங்குசுவாமி செய்வது போல், நீங்களும் கடவுளையும் அவருடைய திருத்தாயாரையும் அறிய வேண்டும், நேசிக்க வேண்டும் என்பதே என் ஆசை. தேவதாயை இவ்வளவு அழகாக வரைந்திருக்கும் நீங்கள் அவளை நேசியாதிருப்பது எவ்விதம்?''

நீ கடவுளிடம் எனக்காகக் கேட்டு மன்றாடு வதையெல்லாம் ஒருவேளை பின்னர் நான் செய்யலாம். குழந்தை யேசுவை நான் வரைவதற்கு மாதிரியாக அழகான ஒரு சிறுவன் வேண்டும். அவன் அகப் படும்படி நீ ஏன் ஜெபிக்கக்கூடாது?''

சார்ளி சிறிது நேரம் யோசித்தபின், பீடப்பரிசா கரச் சிறுவர்களில் சிலர் அழகுள்ளவர்கள். கர்த்தர் பிறந்த நாளன்று நடுச்சாமப் பூசை நேரத்தில் அவர் கள் யாவரும் பீடத்தில் இருப்பார்கள். சின்ன யேசுவை உங்களுக்கு நினைப்பூட்டக்கூடிய சிறுவன் அங்கு அகப்படலாம். நீங்களே வந்து பாருங்கள்'' என்றான்.

“சார்ளி, நீயும் அங்கு இருப்பாயா?" "ஆம்.''

“நல்லது சார்ளி, நாம் இருவரும் விழித்திருந்து கவனிப்போம். சின்னயேசுவை நினைப்பூட்டக்கூடிய சிறுவன் உன் கண்ணிற்படுவானானால், அவனை நீ எனக்குக் காண்பிக்கவேண்டும்'' என ஜேம்ஸ் கூறினான்.

''குழந்தை யேசுவை அவருக்குக் காண்பிக்க, இறைவா, எனக்கு உதவி செய்யும் " என அன்றி லிருந்து அவன் ஓயாது பிரார்த்தித்து வந்தான். யேசு பிறந்தநாள் வெகுமதியாக அந்த வரத்தைத் தனக்குத் தருவார் என அவன் உறுதியாக நம்பினான் பா

நடுச்சாமப் பூசை தொடங்க இன்னும் சொற்ப நேரமே இருந்தது. ஜேம்ஸ் டார்னெல் முதல் வரிசை யில் உட்கார்ந்திருந்தான். அந்தப் பரிசுத்த ஸ்தலத் தில் அவன் இருக்கையில் தன் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைபட்டிருப்பதாக உணர்ந்தான்.

பதினொன்றே முக்கால் மணிக்கு பீடப் பரிசாரர் களும், பாடகரும், குருக்களும் கோவிலை நோக்கி சுற்றுப்பிரகாரமாய்ப் புறப்பட்டனர். தூரத்தில் கேட்ட பாடல் வரவர சமீபித்தது. பரலோக கீதம் போல் இருந்தது. நேர்த்தியான குரலும் மாசற்ற முகங்களும் கொண்ட சிறுவர்கள் பீடத்தில் நுழைந் தார்கள். சார்ளியும் அங்கு வந்தான். முற்றிலும் வேற் றாளாய் அவன் காணப்பட்டான். கண்களைத் தாழ்த்தி கரங்களைக் குவித்திருந்தான். முகத்தில் இனிய அமைதி. குழந்தை யேசுவுக்கு மாதிரியைத் தேடி வந் தவன், மற்றெல்லோரையும் மறந்து சார்ளியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

பூசை நேரம் முழுவதும், முக்கியமாக பங்கு சுவாமியார் திரு அப்பத்தை உயரத் தூக்கிக் காண் பித்து குழந்தை யேசுவையே பிடத்தில் இறங்கி வரச் செய்தபோதும், “நேச ஆண்டவரே, ஜேம்ஸ் உம்மை கண்டறியும்படிச் செய்யும்'' என சார்ளி மன்றாடி னான். தேவ குழந்தையை திவ்விய நற்கருணை வழியாக உட்கொள்ள பீடப் பரிசாரகர் தயாராகையிலும் “நேச ஆண்டவரே, ஜேம்ஸ் உம்மைக் கண்டறியும் படிச் செய்யும்'' என உருக்கமாகப் பிரார்த்தித்தான். சார்ளி திவ்விய நன்மை வாங்கவேண்டிய நேரம் வந் தது. அவனை ஜேம்ஸ் இமைகொட்டாமல் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்தான். குருவானவர் முன் அவன் முழந்தாளிட்டு திரு அப்பத்தை நோக்கின பார்வையானது, "நானும் அவனைப் போல் இவ்வித இன்பத்தை அடையலாமா?” என ஜேம்ஸ் ஏங்கும் படிச் செய்தது. பின் சார்ளி எழுந்து தன் இடத்தை நோக்கிச் செல்வதையும் ஜேம்ஸ் கவனித்தான்.

அதன்பின் அவன் கண்டது அவனைத் திடுக்கிடச் செய்தது. தான் காண்பது கனவா அல்லது உண் மையா என அறியும்படி கண்களை மூடிப் பின் திறந் தான். சார்ளி மறைந்துவிட்டான். அவனது இடத் தில் ஓர் அழகான பரலோக இனிமை பொருந்திய சிறுவன் நேராக நடந்து சென்று பீடப் பரிசாரக ரிடையை முழந்தாளிடுவதைப் பார்த்தான். புதிய சிறுவன் அணிந்திருந்த வெள்ளை உடை செருப்புப் போட்டிருந்த பாதங்கள் வரை தொடங்கிற்று. சார் ளியின் உயரம், ஆனால் வயதில் சார்ளியைவிடக் குறைந்தவன். இது நிச்சயம்; அழகிய தலையில் சுருட்டை மயிர்; அது தோளைத்தொட்டது. பிரகாச மான கண்கள், ஒவ்வொரு உறுப்பும் அபூர்வ அழகு பொருந்தியிருந்தது. சிறுவனைக் கவனித்துக் கொண் டிருந்த ஜேம்ஸ் கண்களை மூடவில்லை; மூச்சு விடவும் அஞ்சினாற்போல் இருந்தான்.

பூசை முடிந்தது, பீடப் பரிசாரகர்கள் புறப்பட் டார்கள். ஜேம்ஸ் டார்னெலின் உள்ளத்தில் ஓர் ஏக்கம். அந்தச்சிறுவன் ஒரு முறை திரும்பி என்னைப் பார்க்க மாட்டானா? அந்த ஏக்கம் எவ்வளவு வலிமை பெற்றதென்றால், அதனால் ஏற்பட்ட வேதனையை அவனால் தாளமுடியவில்லை. திடீரென சிறுவன் ஜேம்ஸ் பக்கமாய்த் திரும்பினான். நெடுநேரம் நேசத் துடன் சித்திரக்காரனின் கண்களை நோக்கி புன்னகை புரிந்தான்.

விசுவாசிகள் யாவரும் போய் விட்டார்கள். மேற் றிராசனக் கோவிலில் இருள் பரவியிருந்தது. குடிலி லும் பீடத்திலும் மாத்திரமே வெளிச்சம் இருந்தது'. நேரம் போவதை ஜேம்ஸ் அறியவில்லை. அவனது நினைவெல்லாம் திடீரென பீடத்தில் காணப்பட்ட சிறுவனைப்பற்றியே. சிறுவனது அழகை நினைத்து நினைத்து ஜேம்ஸ் இன்புற்றிருந்தான்.

சார்ளி வந்து அவன் மேல் கைவைத்து அந்த இன்ப நினைவைக் கலைத்தான். “நான் இன்று உங்களு டன் போகவேண்டுமென பங்குசுவாமி சொன்னார் " என சிறுவன் சொன்னான். "சார்ளி, நீ நன்மை வாங்கி விட்டு படியிலிறங்கி உன் இடத்துக்குச் செல் கையில் எங்கு போனாய்?” என அவன் கேட்டான்.

"நான் எங்கும் செல்லவில்லையே. நேரே என் இடத்துக்குப் போய் நீங்கள் யேசுவைக் கண்டறியச் செய்யும்படி உருக்கமாக அவரைப் பிரார்த்தித்தேன். உண்மையாகவே அப்பொழுது அவர் என் உள்ளத் தில் இருந்தார். அச்சமயம் நான் கேட்டதை இல்லை என்று சொல்லமாட்டார். ஏன் நான் போனதை நீங் கள் பார்க்கவில்லையா?'' என்று சிறுவன் கூற, ஜேம்ஸ், “இல்லை, நீ நன்மை வாங்கியதிலிருந்து பூசை முடியுமட்டும் உன் இடத்திலிருந்த அந்த அழகான, பரலோக அழகு கொண்டிருந்த, அந்த இனிய சிறுவன் யார், சொல்" என்றேன்.

"ஐயா, பூசை முடியுமட்டும் நான் என் இடத்தி லேயே இருந்தேன். நான் சறறேனும் அழகான வனல்ல'' என சிறுவன் சிரித்துக் கொண்டு கூறி னான். ஆனால் ஜேம்ஸ் அவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. அவன் கண்ட அழகிய சிறுவனை யும், சார்ளியின் ஜெபத்தையும், அந்த அனாதைச் சிறுவனின் விசுவாசத்தையும், அந்த விசுவாசத்துக் குக் கைமாறு கிடைத்ததையும், பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாக ஆசாரத்துடன் சிறுவனைத் தன் பக்கமாக இழுத்து, “சார்ளி, நாம் இருவரும் இன்று பெரும் பாக்கியசாலிகள். நீ குழந்தை யேசுவை உட்கொண்டாய், நான் அவரைக் கண்டேன்'' என்றான்.

சார்ளி பதில் சொல்லவில்லை; ஆச்சரியம் கொள் ளவுமில்லை. ஆனால் அவனது உள்ளத்திலிருந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் அவனது கண்கள் தெரிவித்தன.