இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா மீது உண்மையான பக்தி முயற்சிகள் - முக்கியமான உள்ளரங்க வெளியரங்க பக்தி முயற்சிகள்

115. கன்னிமாமரிக்கு உள்ளரங்க பக்தி முயற்சிகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமானவை சுருக்கமாக இவையாகும் :

(1) கடவுளின் தகுதி பெற்ற அன்னை என்பதற்காக மாதாவுக்கு அர்ச்சிஷ்டவர்களுக்குள் மேலான வணக்கம் செலுத்துவது அதாவது, அவாகளை எலலா அர்ச்சிஷ்ட வர்களுக்கும் மேலாக, வரப்பிரசாதத்தின் தனிச் சிறந்த படைப்பாகவும், உண்மையான கடவுளும் உணமையான மனிதனுமாகிய சேசு கிறிஸ்துவுக்குப் பின மாதா முதலடம் வகிப்பதாகவும் மதித்து மகிமைப்படுத்துதல். .

(2) மரியாயின் புண்ணியங்களையும் உரிமை, சலுகை களையும் செயல்களையும் சிந்தனை செய்தல.

(3) மரியாயின் உயர்வை ஆழ்ந்து தியானித்தல்.

(4) மாதாவுக்கு அன்பு வாழ்த்து நன்றி முயற்சிகள் செய்தல்.

(5) நம் முழு இருதயத்தோடும் மாதாவிடம் மன்றாடுதல்.

(6) நம்மை மாதாவுக்கு அர்ப்பணம் செய்து அவர்களு டன் நம்மை இணைத்துக் கொள்ளுதல்.

(7) மரியாயை மகிழ்விக்கும் கருத்தோடு நம் எல்லாச் செயல்களையும் செய்தல்,

(8) நம் இறுதிக் கதியாயிருப்பவரான சேசு கிறீஸ்து வழியாகவும் சேசு கிறீஸ்துவிலும் சேசு கிறீஸ்துவுடனும் சேசு கிறீஸ்துவுக்காகவும் நம் எல்லாச் செயல்களையும் செய்வதற்கேதுவாக, அவற்றை மாதா வழியாகவும், மாதா விலும், மாதாவுடனும், மாதாவுக்காகவும் செய்ய ஆரம் பித்து, தொடர்ந்து நடத்தி முடித்தல். இந்த இறுதிப் பக்தி முயற்சியை பின்னால் விவரித்துக கூறுவோம்.

116. மரியாயின் மீது உண்மையான பக்தியின் வெளி யரங்க முயற்சிகள் பல உள்ளன. அவற்றுள் முக்கிய மானவை:

(1) மாதாவின் ஊழியர் குழுக்களில் பெயர்ப் பதிவு செய்து கொள்ளுதல், மாதா சபைகளில் சேர்தல.

(2) அன்னையின் மகிமைக்காக நிறுவப்பட்ட துறவற சபைகளில் உறுப்பினராதல்.

(3) தேவ அன்னையின் பெருமைகளை அறிககையிடல்,

(4) தான தர்மம் செய்தல், உபவாசம், உள், வெளிப் பரித்தியாகங்களை அன்னையின் மகிமைக்காகச் செய்தல்,

(5) ஜெபமாலை, உத்தரியம், சிறிய முட்சங்கிலி போன்ற கன்னித்தாயின் அடையாளங்களைத தரித்துக் கொள்ளுதல்.

(6) சேசு கிறீஸ்துவின் 15 திரு நிகழ்ச்சிகளின் மகிமைக் காக 15 பத்து அருள் நிறை மந்திரம் கொண்ட முழு ஜெபமாலையை கவனத்தோடும் பக்தியோடும் சிந்தனை யோடும் சொல்லுதல், அல்லது

15 தேவ இரகசியம் கொண்ட முழுச் செபமாலை யின் மூன்றில் ஒரு பாகத்தைச் சொல்லுதல். அது ஐந்து சந்தோஷ திரு நிகழ்ச்சிகளின் மகிமைக்காக சொல்லப்பட லாம். அவை: மங்கள வார்த்தை , மினவுதல், சேசுவின் பிறப்பு, காணிக்கையாக்குதல், கண்டடைதல் என்பவைகளாம். அல்லது ஐந்து துக்கத் திரு நிகழ்ச்சிகளின் மகிமைக்காகச் சொல்லப்படலாம். அவை: இரத்த வியர்வை, கட்டியடித்தல், முள் முடி சூட்டல், சிலுவை சுமத்தல், சிலுவையில் அறையப் படல் என்பவைகளாகும். அல்லது ஐந்து மகிமைத் திருநிகழ்ச்சிகளின் மகிமைக்காகச் சொல்லப்படலாம். அவை: உயிர்ப்பு, ஆரோகணம் பரிசுத்த ஆவியின் வருகை, அன்னையின் மோட்சாரோ பணம், தமதிருத்துவத் தால் அன்னை முடி சூட்டப்படல் என்பவைகளாகும். மேலும் நமது தேவ அன்னை இவ்வுலகில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளின் மகிமைக்காக ஆறு அல்லது ஏழு பத்து மணி கொண்ட செபத்தைச் சொல்லலாம். அல்லது 3 பரலோக மந்திரங் களும் 12 அருள் நிறை மந்திரங்களும் கொண்ட மரியாயின் சிறிய மலர்க்கிரீடத்தைச் செபிக்கலாம். மாதாவின் பன்னிரு விண்மீன்களின் மகிமைக்கென அதாவது, அன்னையின் பன்னிரு வரப்பிரசாத சலுகைகளுக்கு மகிமையாக இது சொல்லப்படும். அல்லது திருச்சபையெங்கும் இத்தனை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சொல்லப்பட்டு வரும் மரியாயின் சிறிய மந்திரமாலையைச்சொல்லலாம். அல்லது, மரியாயின் மகிமைக்காக அர்ச். பொனவெந்தூர் என்பவர் இயற்றிய சிறிய மந்திரமாலையைச் சொல்லலாம். இது எவ் வளவு கனிவும் பக்தியும் உடையதென்றால், உள்ளம் உருகாமல் அதைச் சொல்லமுடியாது. அல்லது, தேவதாயின் பதினான்கு மகிழ்ச்சிகளை மகிமைப்படுத்துவதற்காக பதினான்கு பரலோக, அருள் நிறை மந்திரங்களைச் சொல்ல லாம். அல்லது, வேறு சில செபங்கள், பாடல்கள், திருச்சபையின் கீதங்களைச் சொல்லலாம். உதாரணமாக, கிருபை தயாபத்து மந்திரம் (Salve Regina). மீட்பரின் அன்னையே (Alma), வானுலகுக்கு அரசியே வாழ்க (Ave Regina Coelorum), பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களி கூரும் (Regina Coeli) முதலியவற்றை திருவழிபாட்டின் காலங்களுக்கேற்ப உபயோகிக்கலாம். அல்லது, சமுத்தி ரத்தின் நட்சத்திரமே (Ave Maria Stella), என் ஆண்ட வளே (0 gloriosa Domina), மரியாயின் கீதம் (Magntficat) அல்லது எல்லா செய்ப் புத்தகங்களிலும் காணப்படும் பக்தியுள்ள மற்ற செபங்களைச் சொல்லலாம்.

அல்லது

(7) நம் தாயின் மகிமைக்காக பாடல்கள் பாடலாம் அல்லது பாடச் செய்யலாம்.

(8) குறிப்பிட்ட எண்ணிக்கையான முழந்தாளிடுதல் அல்லது வணக்கங்கள் செய்தல் : இவ்வாறு, காலையில் அறு பது அல்லது நூறு விசை "விசுவாசியான கன்னிகையே மரியாயே வாழ்க'' என்று சொல்லி அந்த நாள் முழுவதும் கடவுளின் வரப்பிரசாதங்களுக்குப் பிரமாணிக்கமாயிருக்க உதவியை அன்னையின் வேண்டுதலால் அவரிடம் கேட்க லாம். மாலையில் "இரக்கத்தின் தாயே மரியாயே வாழ்க'' என்று சொல்லி பகலில் செய்த பாவங்களுக்கு மாதாவின் வழியாக கடவுளின் மன்னிப்பைக் கேட்கலாம்.

(9) மாதாவின் ஊழியர் சபைகளைப் பொறுப்பேற்று நடத்தலாம். அவர்கள் பீடங்களை அலங்கரித்து, தேவ தாயின் திரு உருவங்களுக்கு முடி சூட்டி அணி செய்ய லாம்.

(10) கன்னி மரியாயின் திருச் சுரூபங்களைச் சுமந்து செல்லுதல் அல்லது அவை பவனியாகக் கொண்டு வரப் பட ஏற்பாடு செய்தல். பசாசிடமிருந்து நம்மை வலிமை யுடன் பாதுகாக்கும் - காப்பாக மாதாவின் சு ரூபத்தை அணிந்திருத்தல்.

(11) கோவில்களில் அல்லது வீடுகளில் அல்லது ஊர்களின் நுழைவில் - அல்லது, பட்டணங்களின் வாசல்களிலும் கோவில் கதவுகளிலும், வீட்டுத் தலைவாசலிலும் தேவ தாயின் சுரூபங்களை ஸ்தாபித்தல் அல்லது அவர்கள் பெயரை எழுதி வைக்க ஏற்பாடு செய்தல்.

(12) தன்னையே ஒரு பொறுப்புள்ள முறையில் மரியாயிக்கு அர்ப்பணித்துக் கொள்ளுதல்,

117. புனித ஆன்மாக்களுக்கு பரிசுத்த ஆவியால் உணர்த்தப்பட்ட மரியாயின் உண்மைப் பகதிக்கு ஏதுவா னதும் அர்ச்சிப்பனவுமாகிய முயற்சிகள் பல உள்ளன இவற்றை சேசு சபை சங். பார்ரி என்பவர் எழுதியுள்ள "பிலாஜிக்குப் பரலோகம் திறக்கப்பட்டது'' என்ற நூலில் விரிவாகக் காணலாம். மரியாயின் மகிமைக்காக அர்ச்சிஷ்ட வர்கள் கைக்கொண்ட பெருந் தொகையான பகதி முயற்சி களை அதில் அவர் தொகுத்துக் கூறியுள்ளார். ஆன்ம அர்ச்சிப்புக்கு ஆச்சரியமான உதவிகளை இவை கொடுக் கின்றன. இம்முயற்சிகளைச் சரியான வகையில் செய்ய வேண்டும். அதாவது :

(1) கடவுளுக்கு மட்டுமே பிரியப்படவேண்டும். நம் இறுதிக் கதியான சேசு கிறீஸ்துவுடன் தன்னை ஒன்றுபடுத்த வேண்டும். நம் அயலாருக்கு நன்மாதிரிகையாயிருக்க வேண்டும் என்ற சுத்த கருத்துடன் அவை செய்யப்பட வேண்டும்.

(2) மனம் பொருந்திய பராக்குகளை விலக்கி, கவனத் துடன் செய்யப்பட வேண்டும்.

{3) பக்தியுடன் அவசரப்படாமலும் கவலையற்றதனம் ஏற்படாமலும் செய்யப்பட வேண்டும்.

(4) மரியாதையும் அடக்கமும் நன்மாதிரிகைக்குமுரிய அங்கநிலையோடும் செய்யப்பட வேண்டும்.