முகவுரை

தமது தேவ இரட்சகரான சேசுநாதர் சுவாமி படிப்பித்த சத்திய வேதத்தை அனுசரித்து நடக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நாம் வாழும் இந்த செந்தமிழ் நாட்டில் அநேகம் பேர்கள் இருக் இநஈந்தள். கிறீஸ்தவர்களின் சபையும் தேவ உதவியால் காலப் பாத்தில் பல இடங்களில் வளர்ச்சி பெற்று உறுதியடைந்து செழித்து இருவதை நாம் எல்லோரும் சந்தோஷத்தோடு பார்த்து வருகிறோம்.

கிறிஸ்துவ ஜனங்களைச் சத்திய வேத அநுசரிப்பு முறைமைகளில் உறுதிப்படுத்தி அவர்கள் நல்லொழுக்கத்திலிருந்து தவறிப் பிசகி விழாதபடி அவர்களைக் காப்பாற்ற உதவியாயிருக்கும் பல அற்புத 6 நாள் வழிகளில், சேசுசபையை ஏற்படுத்திய அர்ச். இஞ்ஞாசியார் எழுதித் தந்த ஞான முயற்சிகள் ஒரு மகா முக்கிய சாதனம் என்பதை சசில் நம் மனதாய் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

இதின் காரணமாக மேற்கத்திய கிறீஸ்துவ நாடுகளில் நடப்பது போல், நமது நாட்டிலும் இரட்சணிய பயனுள்ள ஞான முயற்சி களைப் பல இடங்களில் இந்தக் காலத்தில் பிரசங்கித்து வருகிறார்கள். இந்த அற்புத ஞான முயற்சிகளைக் கிறீஸ்தவர்கள் செய்யும் காலத் தி' தனியேயாவது எல்லாருக்கும் பொதுவிலாவது வாசிக்கும்படி யாய் ஏற்ற புத்தகங்கள் தமிழில் இருக்கின்றன. இவைகளில் அர்ச். இராசியார் எழுதிய ஞான முயற்சிகளை, அவர் கருத்துக்கு உகந்த வண்ணம், சாதாரண மக்களும் எளிதில் அறிந்து மனதில் நன்கு உணரும்படியான வகையில், விரிவாயும் இனிய தமிழ் மொழி யிலும் விவரிக்கும் புத்தகங்கள் இருக்கலாம். ஆனால் நான் அறிந்த பாட்டும் இவ்வித புத்தகங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை.

இந்தக் காரணத்தாலோ வேறு எது காரணத்தை முன்னிட்டோ , இறந்து போன சபை அதிபர் லேயோ பார்பியே சுவாமியார், ஞான முயற்சிகளைக் கிறீஸ்துவ ஜனங்களுக்கு விரிவாயும், பயனும் இன்பமுங் கலந்த வகையிலும், விவரித்து விளக்கும் ஓர் புத்தகத்தை எழுதும்படியாய் என்னை கேட்டார். அவர் சொல்லை ஓர் கட்டளை யாக நான் மதித்து இந்தப் புத்தகத்தை எழுதத் துவக்கினேன்.

பல வேலையாலும் பல காரணங்களாலும் துவக்கின் வேலையைத் தொடர்ந்து செய்து முடிக்கும்படிக்கான சாவகாசமும், சந்தர்ப்பமும், நேரமும் இல்லாததால் இவ்வளவு தாமதம் சென்றது.

இப்போது பிரசுரமாய் வெளிவரும் இந்தப் புத்தகத்தில் எட்டு நாள் அளவும் ஞான முயற்சிகளைச் செய்ய ஏதுவான தியானங்களும், ஞான போதகங்களும் இவைகளைச் சேர்ந்த ஒழுங்குகளும் விவரங் களும் அடங்கியிருக்கின்றன. சர்வேசுரனுடைய விசேஷகருணை யால், சேசு சபையின் பிள்ளையாய் நான் நாற்பது வருஷங்களுக்கு அதிகமாயிருந்த பாக்கியமான அதிர்ஷ்ட காலத்தில், வருஷந்தோறும் ஞான முயற்சிகளைத் தேவ ஞான அறிவில் தேர்ந்த குருக்களின் வாயிலிருந்து படித்தும், நானே பல இடங்களில் போய் பல சபை யோருக்கு இந்த ஞான முயற்சிகளைப் பிரசங்கித்தும் வந்ததால், இதில் கொஞ்சம் அனுபவமும் அறிவும் எனக்கு இருக்கக் கூடுமென்று நான் சொன்னால், இப்படிச் சொல்வதற்குத் தகுந்த ஆதாரம் இருக் கிறதென்று புத்தி உள்ளவர்களுக்குச் சொல்லாமலே விளங்கும்.

இவ்வளவு அநுபவம் எனக்கிருந்தும் இந்தப் புத்தகத்தில் பல குறைகள் இருப்பதாக பல பேர்கள் காண்பார்கள். நானும் இதில் பல குறைகள் இருக்கிறதென்று மனப்பூர்வமாய் அங்கிகரிக்கிறேன். சிலர் இதிலுள்ள தியானங்கள் வெகு விரிவாய் அகன்று விரிந்திருக் கிறது என்பார்கள். சிலர் இதில் தேவையற்ற காரியங்களைச் சேர்த் திருக்கிறது என்று சொல்லுவார்கள். வேறு சிலருக்கு வசன நடையும் வார்த்தைகளும் வெகு விநோதமாயும் விகாரமாயும் இருப்பதாகத் தோன்றும். இப்படியாய்ப் பல பேர்கள் பல வகையாய் தங்கள் அறிவுக்கும் படிப்புக்கும் தகுந்தாற்போல் பல குறைகளை எடுத்துக் குறைகூறுவார்கள்.

எல்லாருக்கும் பரிபூரண திருப்தி உண்டாகும்படியாய் புத்தகம் - எழுதுவது இந்த உலகத்தில் எவராலும் கூடுமான காரியமல்ல. அதிலும் அர்ச். இஞ்ஞாசியார் எழுதிய ஞான முயற்சிகளை அவர் கருத்துக்கு இசைந்த வண்ணம் விவரிப்பது அவர் காலத்திலேயே கஷ்டமான காரியமாயிருந்ததாக அவர் சரித்திரத்திலிருப்பதை வாசிக் கலாம். சர்வேசுரனுடைய அதி உத்தம மகிமையையும் பிறருடைய ஆத்தும் இரட்சணியத்தையும் முக்கிய நோக்கமாய் என் கண் முன் வைத்து, உடலில் உயிர் தங்கும் நாள் மட்டும் என்னால் செய்ய முடிந்தது எதுவோ, அது எவ்வளவு கொஞ்சமாயினும், அதை மூத்தோர் சொல்லுக்கிணங்கிச் செய்து கடைசியில் சாவது என் பெரிய பாக்கியமாக நான் என்றும் மனதில் எண்ணி வந்திருப்பதால், இந்த ஞான முயற்சிகளின் விளக்கத்தை எழுதுவதில் பலவகையில் வந்த சிரமங்களைக் கவனியாமல், சந்தோஷமும் உற்சாகமும் உள்ள மனதோடு இதை எழுதி முடித்தேன். இதனால் சர்வசுரனுக்கு மகிமையும் ஸ்துதியும் உண்டானால் அதுவே போதும்.

அர்ச் இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டிலுள்ள மன்ரேசா என்னும் கெபியில் ஜெபமும் தவமும் செய்து வரும் போது தேவ ஏவுதலாலும் தேவதாயின் விசேஷ உதவியாலும் இந்த ஞான முயற்சிகளை எழுதினார். இதின் காரணமாக நான் எழுதிய ஞான முயற்சிகளின் விளக்கத்திற்கு மன்ரேசா என்ற சிறப்புப் பெயர் கொடுத்து இந்தப் புத்தகத்தை, என் ஞானத் தந்தையான அர்ச். இஞ்ஞாசியார் பாதத்தில், ஒரு காணிக்கையாக நேர்ந்து வைக்கின்றேன்.

சேசுசபை, J. சந்தியாகப்பர்.