நன்மை வாங்க ஆயத்தம்

இதோ உன் இராசா கோளிகைக் கழுதையின்மேலும் நுகத்தடியிற் பூட்டப்பட்ட அதின் மறியாகிய குட்டியின் மேலும் ஏறிச் சாந்தமுள்ளவராய் உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள். (மத். 21; 5)

இன்று காலை, எங்கள் ஆண்டவர் தம்முடைய தேவ இராச மகிமைக்கு உரிய வைபவங்களோடு ஒட்டோ லக்கமாய் எருசலேம் பட்டின த்திற்குள் பிரவேசித்த மங்களத்தைக் கொண்டாடினோம். நமக்காகக் கொல்லப்பட மா னு ட வேஷம் பூண்டு வந்த தேவ செம்மறிப்புருவையானவர், தாம் மகா குரூரமான வே தனை க ளோடும் அவமானங்களோடும் கொலை யுண் ணுவதற்கு ஆறு தினங்களின் முன் தம்மை மரணத்துக்குள்ளாக்கும்படி குரவையிடப்போகிற அந்தச் சனங்க ளாலேதானே ஸ்தோத்திர கானங்கள் பாடி வாழ்த்த வும், மேலான வெகுமான ஆசார உபசாரங்களோடு வரவேற்கவும்படச் சித்தமானார். அந்தச் சந்தோஷகரமான ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்டவர்: இதோ உன் இராசா கோளிகைக் கழுதையின் மேலும், நு கத் தடி யிற் பூட்டப்பட்ட அதின் மறியாகிய குட்டி யின் மேலும் ஏறிச் சாந்தகுணமுள்ளவராய் வருகிறாரென் று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்பதா கத் திரு வேத புத்தகத்திலே எழுதப்பட்டபடியே, தமது சீஷர் - ஓர் கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து விட, அதின் மேல் எழுந்தருளிப் பட்டி னத்தை நோக்கிப் போகலானார். போகிற சமயத்திலே பிதாவாகிய சருவேசுரன் தமது திருச்சு தனை இன்று சகல சனங்கள் முன்னும் மகிமைப்படுத்திக்காட்டத் திருவுளமானதினால், ஸ்பிரீத்து சாந்துவின் ஏவுதலினா லே, யூத சனங்களு டைய உள்ளங்கள் அருண்டு, சரீ ரங்கள் புளகாங்கிதமாகி, சொல்லமுடியாத மகிழ்ச்சி யால் நிறைந் து சமாதான பிரபுவாக எழுந்தருளிவரு கிற எங்கள் ஆண்டவரை எதிர்கொண்டு, தாங்கள் அணிந்திருந்த உத்தரியங்களைக் கழற்றி அவருக்கு நிலபாவாடையாய் விரிப்போரும், குருத்துக்களையும் தளிர்களையும் வெட்டி, வழி யிற் பரப்புவோரும், தேவ னே இராயனே என்று வாழ்த்துவோரும், ஓசன்னா ஓசன்னா என்று ஆர்ப்பரிப்போருமாய் பின்னும் முன் னும் புடைசூழ்ந்து நடந்து செய்மங்கள் கொண்டா ட்டம் பண்ணினார்கள். எங்கள் இரக்கமுள் ள யேசு நாதரோ பட்டினத்தை முடுகி வரும்போது அதைப் பார்த்து அழுதார் (மத். 21, லூக். 19: 41)

பிரியமான கிறீஸ் தவர்களே, இந்தத் திவ்வியமா ன சம்பவத் தி ல ஒரு ஞான இரகசியம் அடங்கி யிருக்கிறது. அவருடைய பூலோக சஞ்சாரத்தில் விளங்கின சகல சீவிய வரலாறுகளும் இப்படியே நமக்கு அருமையான போதனைக்குரிய வைகள் என் பது உங்களுக்குத் தெரியும். இப்போது இன்றைச் சம்பவத்திலே மறைந்து கிடக்கிற படிப்பனை களில் ஒன்றை உங்கள் பத் தி நிறைந்த கண்களின் முன் பாக விரி த்துக்காட்ட விரும்புகிறேன். சீயோன் குமாரத்தி என்று வேத ஆகமங்க ளிலே அ ழைக்கப்பட்டது யூதருடைய தலைநகரி யாகிய எருசலேம் பட்டினம். எருசலேம் பட்டினத் தைச் சருவேசுரன் பூலோகத்தின் மற்றெல்லாப்பட்டி னங்களையும் விட அதிகமாய் நேசித்து, தம்முடைய அ திக தெரிவான வரங்களால் அலங்கரித்து, அதைத் தம்முடைய சொந்தப் பட்டின மென்று அழைத்து வந்தது உண்டு. இந்த நகரம், கிறீஸ்தவர்களே, உங் களுடைய ஆத்துமங்களுக்குக் குறிப்பு. உங்களு - டைய ஆத்துமமாகிய பட்டினத்தையே சருவேசுரன் அநாதிகாலந்தொட்டு நேசித்து, தம்முடைய பரம் வரப்பிரசாதங்களால் சோடித்து, என்றென்றைக்கும் தம்முடைய இருப்பிடம் ஆக்கப் பிரியங்கொள்ளு கிறார். தேவ குமாரனாகிய யேசுநாதசுவாமி தாம் அன்றொருநாள் எருசலேம்பட்டினப் பிரவேசம் செய் ததுபோல, உங்கள் ஆத்துமமாகிய இந்த உயிருள்ள பட்டினத்திலேயும் பிரவேசஞ்செய்கிறார். முன்னாள் அவர் நீச வாகனமான கழுதையின் மேல் ஏறிவந் தா ரே, இப்போ து அ திலும் நிசிதமான அப்பக்குணங் கள் என்கிற வாகனத்தில் எழுந்தருளி கிறீஸ்த ஆத் துமமாகிய நகரத்திற் பிரவேசிக்கிறார். தம்முடைய குருமாரைநோக்கி: இதோ உன் இராசா சாந்தமுள் எவராய் அப்பத்தின் குணங்களிலே எழுந்தருளிவரு கிறார் என்று சீயோன் குமாரத்தியாகிய ஆத்துமத்துக்குச் சொல்லுங்கள் என்று திருவுளம்பற்றுகிறார் நம் முடைய அரிய கர்த்தர்.

ஆனால் சமா தான த்தின் இராசாவும் தயவு தாட்சிணியங்களின் பிதாவுமான எங்கள் ஆண்டவரை எல்லா ஆத்துமங்களும் பரிசுத்தமான மனங்களோடு வரவேற்றுக்கொள்ளுவதில்லை. மனோரூபிகள் புடை சூழ எழுந்தருளிவருகிற அவருடைய பிரவேசமும் இரண்டு வகையாயிருக்கிறது. சில ஆத்துமங்களுள் ளே அவர் ஆனந்தப் பூரிப் போடு எழுந்தருளுகிறார். சில ஆத்துமங்களுள்ளே பிரலாப அழுகையோடு பிர வேசிக்கிறார். ஒரு சாரார் சற்பிரசாதம் வாங்குவதி னால் இணை யில்லா ஆசீர்வாத நன்மைகளை அடைகி றார்கள். ஒரு சாரார் அள வில்லாப் பழிநிறைந்த கேட் டுக்கு உட்படுகிறார்கள். முந்தினவர்களுக்குச் சற்பிர சாதம் வாங்குவது இன்பமும் பாக்கியமுமாகிற து. பிந் தின வர் களுக்கு அது துன்பமும் நிர்ப்பாக்கியமும் மாகிறது. ஆ! எவ்வளவு தூர வித்தியாசம்! சிலருக் கு அமிர்த அவுஷதமா யிருக்கிற இந்தத் திவ்விய போசனம் வேறு சிலருக்குக் கொடிய நஞ்சாய்ப் போகிறதே! கிறீஸ்தவர்களே, நீங்கள் எவ்விதமாய் எங்கள் ஆண்டவரை உட்கொள்ளப் போகிறீர்கள்? அவருடைய வரவுக்கு எவ்வித ஆயத்தஞ்செய்யப் போகிறீர் கள்? இதோ சுத்தமாகச் சற்பிரசாதம் வாங்குகிறவர்களின் தன்மையையும், அ வர் களுக்குக் கிடைக்கிற நன்மைகளையும் ஒருபக்கத் திலேயும், அபாத்திரமாய் வாங்குகிறவர்களின் துரோ கத்தையும் அவர்கள் மேல் இறங்குகிற சாபத்தையும் மற்றப் பக்கத்திலேயும் வைத்து உங்களுக்குக் காட் டச் சற்றே இடங்கொடுங்கள். இரண்டு பகுதியான ஆத்துமங்களையும் கண்டு, நீங்கள் எவர்களோடு நிற் கப்போகிறீர்களென்று தீர்மானம் பண்ணிக்கொள் ளுங்கள்.