இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயும் அவர்களுடைய அன்பின் அடிமைகளும் - மாதா அவர்களை நேசிக்கிறார்கள்

201, எல்லா தாய்மாரிலும் சிறந்த தாயாகிய கன்னி மாமரி, நான் விவரித்துச் சொல்லியது போல் யாக்கோ பைப் போன்று தங்களை அவர்களுக்குக் கையளித்துள்ள பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுக்குச் செய்யும் அன்பான உதவிகளாவன:

(1) மாதா அவர்களை நேசிக்கிறார்கள்

''என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்" (பழ. 8, 17). மாதா தன் ஊழியரை நேசிக்கும் காரணம்:

[1] அவர்களுடைய உண்மையான தாயாக மாதா இருக்கிறார்கள். தன் உதரத்தின் கனியான தன் குழந்தையை ஒரு தாய் எப்போதும் நேசிப்பாளல்லவா?

[2] தன் பிள்ளைகள் தன்னை நேசிப்பதால் நன்றி யுள்ள அன்போடு மாதா அவர்களை நேசிக்கிறார்கள், இவ் வன்பு செயலூக்கம் உடையது.

[3] இவ்வூழியர் முன் குறிக்கப்பட்டவர்களாயிருப் பதால் கடவுள் அவர்களை நேசிக்கிறார் எனவே மரியா யும் அவர்களை நேசிக்கிறார்கள். யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தேன்” (உரோ, 9, 13).

[4] இவ்வூழியர் தங்களை மாதாவுக்கு முழுவதும் அர்ப்பணம் செய்துள்ளதாலும், மரியாயின் பாகமும் உரிமைச் சொத்துமாக அவர்கள் இருப்பதாலும் அவர்களை நேசிக்கிறார்கள். "யாக்கோபிடம் வாசஞ் செய்; இஸ்ரா யேலைச் சொந்தமாக்கிக் கொள். (சர்வ. 24, 13).

202 உலகத்திலுள்ள எல்லா தாய்மாரும் சேர்ந்து நேசிக்கும் அன்பை விட அதிக கனிவுள்ள அன்போடு மாதா நேசிக்கிறார்கள் உலகத்திலுள்ள எல்லா தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் மீது கொள்ளும் அன்பை ஒரு ஒற்றைக் குழந்தையினுடைய தாயின் இருதயத்தில் சேர்த்து வைப் போமானால், நிச்சயமாக அவளின் அன்பு பெரிதாக இருக் இகும். ஆயினும் இந்த அன்பை விட அதிகக் கனிவானது மாதா தன் பிள்ளைகளை நேசிக்கும் அன்பு.

மாதா தன் பிள்ளைகளை அன்புடன் நேசிக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களின் அன்பு செயலூக்கம் உடைய தாகவும் இருக்கிறது. ரபேக்காள் யாக்கோபு மீது கொண் டிருந்த அன்பைப் போல் - ஏன் அதைவிட அதிகமாகவே மரியாயின் அன்பு தீவிரமுடையதாகவும் செயலாற்றல் உள்ளதாகவும் இருக்கிறது. இவ்வன்புத் தாயின் அடை யாளமாகவே ரபேக்காள் இருந்தாள். தன் பிள்ளைகள் பர லோகத் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் படி இத்தாய் செய்கிறவைகளை இங்கே காண்போம்.

203. (1) ரபேக்காளைப் போல் தன் பிள்ளைகளுக்கு நன்மை செய்யவும் அவர்களை உயர்த்தி நிறைவிக்கவும் தக்க தருணத்தை மாதா எதிர்பார்த்து காத்துக் கொண் டிருக்கிறார்கள். எதெல்லாம் நலம் எதெல்லாம் தீமை என் பறும், நலம் பயப்பவை எவை கேடு விளைவிப்பவை எவை என்றும், இறைவனின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் தண்டனையையும் மாதா தெளிவாக இறைவனில் காண் கிறார்கள். எனவே, தன் ஊழியரைப் பல தீமைகளிலி ருந்து பாதுகாக்கவும் அவர்களுக்கு அநேக ஆசீர்வாதங் களை அருளவும் முன்னேற்பாடு செய்து கொள்ளுகிறார்கள். ஒரு பெரிய காரியத்தை பிரமாணிக்கமுடன் செய்வதால் கடவுளிடமிருந்து ஓர் உயர்ந்த நன்மையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்குமானால், மாதா தன் அன் பான பிள்ளைகள், ஊழியர்கள் இவர்களில் ஒருவனுக்கு அதைப் பெற்றுக் கொடுத்து. அதைப் பிரமாணிக்கத்துடன் நிறைவேற்றும் வரத்தையும் அருளுகிறார்கள் என்பது நிச்சயம். நம்முடைய காரியங்களை அவர்களே நடத்து கிறார்கள்'' என்று ஓர் அர்ச்சிஷ்டவர் உரைக்கிறார்.

பமம் 204. (2) ரபேக்காள் யாக்கோபுக்குச் செய்தது போல் மாதா தன் பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங் குகிறார்கள், “என் மகனே என் சொல்லைக் கேட்டுக் கொள்' (ஆதி. 27, 8] என்கிறார்கள். அநேக, காரியங்களைப் பற்றி ஆலோசனை கூறுகிறார்கள். அவற்றுடன் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வரும்படியும் சொல்லுகிறார்கள். சரீரத்தையும் ஆத்துமத்தையுமே அவ்வாறு குறிப்பிடுகி றார்கள். அவற்றைக் கடவுளுக்குப் பிரியமான பதார்த்த மாகத் தயாரித்து அளிக்கும்படி அவற்றைத் தன் வசம் ஒப்பிக்குமாறு கேட்கிறார்கள். அதோடு தன் திருக்குமாரன் சேசு கிறீஸ்து வார்த்தையாலும் முன் மாதிரிகையாலும் போதித்தவற்றை அனுசரிக்கும்படியும் கூறுகிறார்கள். தான் நேரடியாக இவ்வாலோசனைகளைக் கொடாதபோது சம்மன சுக்களின் உதவியுடன் செய்கிறார்கள். மரியாயின் கட்டளை பெற்று அவர்களின் பிரமாணிக்கமுள்ள ஊழியருக்கு உதவிட பூமிக்கு வருவது சம்மனசுக்களின் மிகப்பெரும் மகிமையும் மகிழ்ச்சியுமாயிருக்கிறது. 

205. (3) நாம் நம் ஆன்மாவையும் உடலையும் அவற்றைச் சார்ந்துள்ள எல்லாவற்றையும் ஒன்று கூட பாக்கி வைக்காமல் இந்நல்ல தாயிடம் கொண்டு வந்து அவற்றை அவர்களுக்கு ஒப்புக் கொடுக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்? ரபேக்காள் அந்நாளில் யாக்கோபு கொண்டு கொடுத்த இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் என்ன செய்தாளோ அப்படி யே மாதாவும் செய்கிறார்கள் 

(1) அவைகளைச் சாகடிக்கிறார்கள். அதாவது அவைகளில் பழைய ஆதாம் சாகும்படி செய்கிறார்கள். 

(2) அவைகளை உரித்து அவற்றின் சுபாவம் என்னும் தோலை அகற்று கிறார்கள். அதாவது அவற்றின் சுபாவமான ஆசைகள், சுயபற்று, சுய விருப்பம், சிருஷ்டிகள் மீது பற்று இவை களை அகற்றுகிறார்கள். 

(3) கறைகள், அசுத்தங்கள். பாவங்கள் இவற்றிலிருந்து சுத்தப் படுத்துகிறார்கள். 

(4) கடவுளுக்கு விருப்பமாகவும் அவருடைய அதி மிக மகிமைக்கு ஏதுவாகவும் அவைகளைத் தயாரிக்கிறார்கள். உந்நத கடவுளின் விருப்பம் எது, அவருடைய அதி மிக மகிமை எது என மாமரி மட்டுமே முற்றும் அறிந்திருப் பதால், அவர்கள் மட்டுமே, பிழை நேரிடும் பயமில்லாமல், நம்முடைய உடலையும் ஆன்மாவையும் கடவுளின் அளவில்லாது உயர்ந்த விருப்பத்திற்கும், எல்லையில்லாமல் மறைந்துள்ள மகிமைக்கும் தயாரிக்கக் கூடியவர்களாயிருக் கிறர்கள்

10 206. [4] நான் கூறிய பக்தி முயற்சியின் மூலம் நம்மை முழுவதுமாக நாம் ஒப்புக் கொடுத்த அர்ப்பணத்தையும், நம்முடைய பேறுபலன்கள், பரிகாரங்கள் முதலிய யாவற்றையும் பெற்றுக் கொண்- கனனிமாமரி அன்னை. நம் முடைய பழைய ஆடைகளையெல்லாம் நம்மிடமிருந்து அகற்றி நம்மைத் துப்புரவாக்கி பரலோக பிதாவின் முன் செல்வதற்குத் தகுதியுடையவர்களாக ஆக்குகிறாகள். 

[1] மாமரி தலைச்சனான ஏசாவுடைய - அதாவது தன் மைந் தனான சேசு கிறீஸ்துவின் தூய்மையான புதிய விலையேறப் பெற்ற, வாசனை கமழும் ஆடைகளால் தன் ஊழியரை உடுத்துகிறார்கள். இவற்றை மாதா தன் இல்லத்தில் வைத் திருக்கிறார்கள் - அதாவது, தன் குமாரனின் பேறு பலன் களையும் புண்ணியங்களையும் உலகெங்கும் விநியோகிக்கும் பொக்கிஷதாரியும் பகிர்ந்தளிப்பவளுமாக அவர்கள் இருப் பதால் அவை அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட வையாக இருக்கின்றன. அவற்றை மாதா நாம் முன்பு கூறியது போல் (எண். 25, 141] தான் விரும்பியவர்களுக்கு, விரும்பியபோது, விரும்பியபடி, எந்த அளவு கொடுக்க விருப்பமோ, அந்த அளவுப்படி வழங்குகிறார்கள். 

[2] தான் கொன்று தோலகற்றிய ஆட்டுக் குட்டிகளின் தோல்களைக் கொண்டு தன் ஊழியரின் கழுத்தையும் கரங்களையும் மூடு கிறார்கள் - அதாவது, தன் ஊழியரின சொந்த பேறுபலன் கள், அவர்களின் செயல்களின் விலை இவற்றைக் கொண்டே அவர்களை அலங்கரிக்கிறார்கள். அவர்களிடம் அசுத்தமாக வும் குறைபாடாகவும் இருந்த எல்லாவற்றையும் நிச்சய மாகக் கொன்று மடியச் செய்கிறார்கள். ஆனால் தேவ வரப்பிரசாதம் அவர்களிடம் ஆற்றியுள்ள நன்மைகள் கழரவோ சிதறவோ விட மாட்டார்கள். அவற்றைப் பாது காத்து அதிகரித்து அவர்களுடைய கழுத்தையும் கரங்க ளையும் அலங்கரிக்கிறார்கள். அதாவது ஆண்டவருடைய நுகத்தைச் சுமப்பதற்கும் (நுகம் கழுத்தில்தானே வைக்கப் படும்!) கடவுளின் மகிமைக்காகவும் தங்கள் எளிய சகோ தரரின் இரட்சண்யத்திற்காகவும் ஆச்சரியங்களைச் செய்யும்படி அவர்களைப் பலப்படுத்துகிறார்கள். 

[3] மேலும் அந்த ஆடை ஆபரணங்களுடன் - தன் சொந்த ஆடைகளான தன் பேறுபலன்களையும் புண்ணியங்களையும் சேர்த்து அவற் றிறகுப் புதிய மணத்தையும் புதிய அழகையும் தருகிறார் கள். தன் பேறுபலன்களையும் புண்ணியங்களையும் மாமரி தன் மரண சமயத்தில் தன் ஊழியர்களுக்கென விட்டுச் சென்றுள்ளார்கள். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து அர்ச் சிஷ்டவளாய் மரித்த ஒரு கன்னிகை தனக்கு வெளிப் படுத்தப்பட்டுள்ளதாக இதனைக் கூறியுள்ளாள். இங்ஙனம், மரியாயின் வீட்டார் அனைவரும் அதாவது அவர்களுடைய ஊழியரும் அடிமைகளும், சேசுவினுடையவும் மரியாயினு டையவும் இரட்டை ஆடைகளால் உடுத்தப்பட்டிருக் கிறார்கள். ''அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை ஆடைகளால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள்'' [பழ. 31, 21] இதனிமித்தம் - அவர்கள் வெண் பூம்பனியைப் போன்றதா கிய சேசு கிறீஸ்துவின் குளிரைக் கண்டு பயப்பட எதுவுமில்லை. தீர்பபிடப் பட்டவர்களோ, சேசு கிறீஸ்துவினுடைய வும் மரியாயினுடையவும் பேறு பலன் எதுவுமில்லாமல் உரியப் பட்டு வெறுக்கப் பட்டுள்ளதால் இந்தக் குளிரை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

207 (5) இறுதியாய் மாதா தன் ஊழியர்களுக்கு பரலோக தந்தையின் ஆசீரைப் பெற்றுக் கொடுக்கிறார்கள் பிந்திப் பிறந்தவர்களும் சுவிகாரப் பிள்ளைகளுமாக இருக்கும் அவர்களுக்கு நியாயப்படி இந்த ஆசீர்வாதம் உரியதாகாது. ஆனால், மிகப் புதியதும் விலையுயர்ந்ததும் மிக இனிய வாசனை பொருந்தியதுமான ஆடைகளை அணிந்து, சரீரத் திலும் ஆன்மாவிலும் நன்கு தயாரிக்கப்பட்டு அணிசெய் யப்பட்டுள்ள அவர்கள் தங்கள் பரலோகத் தந்தையின் கட்டிலருகே நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அவரோ அவர்களுடைய குரலைக் கேட்டு அது ஒரு பாவியின் குர லாயிருப்பதை அறிகிறார். தோல்களால் மூடப்பட்ட அவர்கள் கரங்களைத் தொட்டுப் பார்க்கிறார். அவர்கள் ஆடையின் நறுமணத்தை முகருகிறார். அவர்களுடைய அன்னையாகிய மாதா அவருக்காக தயாரித்துள்ளதை மகிழ்ச் சியுடன் உண்கிறார். அதிலே தன் திருக்குமாரனுடையவும் அவரின் திரு அன்னையுடையவும் பேறுபலன்களையும் அவர் களின் நறுமணத்தையும் கண்டு கொள்கிறார். 

(1) அவர் களுக்கு இரட்டை ஆசீர்வாதம் வழங்குகிறார் : ஒன்று வானத்துப் பனியின் ஆசீர் (ஆதி. 27, 28). அதாவது மகிமையின் வித்தான தேவ வரப்பிரசாதம். "அவர் கிறீஸ் துநாதரில் நம்மை எல்லா ஞான ஆசீராலும் ஆசீர்வதிக் கிறார்'' (எபே. 1, 3). இன்னொன்று, பூமியின் கொழுமை (ஆதி. 27, 28). அதாவது இந்நல்ல தந்தை அவர்களுக்கு அனுதின உணவையும் போதிய அளவு இவ்வுலக நலன் களையும் அளிக்கிறார். 

(2) அடுத்து, தீர்ப்பிடப்பட்டவர் களான அவர்களுடைய சகோதரர் மேல் அவர்களை அதி காரியாக்குகிறார். இந்த உயர்வு, நிலையற்ற இவ்வுலகில் எப்போதும் காணப்படுவதில்லை. இங்கு தீர்ப்பிடப்பட்ட வர்கள் அடிக்கடி அதிகாரம் வகிக்கிறார்கள். "பாவிகள் மகிமை பாராட்டுவார்கள்....... அநீதங்களைச் செய்கிறவர் கள் வீண் பேச்சுக்களைப் பேசுவார்கள்'' (சங். 93, 3-4). "துஷ்டன் வெகுவாய்ப் பெருமையடைந்து லீபானின் கேதுரு மரத்துக்கொப்ப உயர்த்தப்பட்டதைக் கண்டேன்'' (சங். 36, 35). ஆனால் மரியாயின் ஊழியர் அடையும் உயர்வு உண்மையானது. அது மறு உலகில் நித்தியமாக தெளிவாய்த் துலங்கும். அங்கு, பரிசுத்த ஆவி நமக்குக் கூறுகிறபடி நீதிமான்கள் ஜனங்கள் மீது ஆட்சி செய்து அவர்களை ஆளுவார்கள். ''சனங்களுக்குள் அதிகாரம் செலுத்துவார்கள்” (ஞானா. 3, 8). (3) இறைவன் மரியா யின் ஊழியரையும் அவர்களுடைய உடமைகளையும் ஆசீர் வதிப்பதுடன் திருப்தியடையாமல் அவர்களை ஆசீர்வதிப் பவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களைச் சபித்து துன்புறுத் துகிறவர்களைச் சபிக்கிறார்.