மரியாயின் மீது உண்மைப் பக்தி - முன்னுரை.

1. மிகவும் ஆசீர்வதிக்கப் பெற்ற கன்னிமாமரியாயின் வழியாகவே சேசு கிறீஸ்து உலகிற்கு வந்தார். அது போல் அக்கன்னிமரியாயின் வழியாகவே அவர் உலகில் அரசாளவும் வேண்டும்.

2. மாமரியன்னை தன் வாழ்வில் மிகவும் மறைந்திருந்தார்கள். இதனால் ''மறைந்த இரகசிய அன்னை" என்று பரிசுத்த ஆவியாலும் திருச்சபையாலும் அழைக்கப்பட்டார்கள். அவர்களின் தாழ்ச்சி எவ்வளவு ஆழமுடைய தாயிருந்ததென்றால், உலகில் அவர்களுடைய மிக வேகமுள்ள ஓயா விருப்பம்: சர்வேசுரன் ஒருவருக்கே காணப்படும்படியாக, தன்னிடமிருந்தும், எல்லா சிருஷ்டிகளிடமிருந்தும் தான் மறைந்திருக்க வேண்டும் என்பதே.

3. தான் மறைந்து, எளிமையாய், தாழ்மையாய் இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்த மன்றாட்டுக்களை சர்வேசுரன் கேட்டருளினார். மரியாயின் உற்பவம், பிறப்பு, வாழ்வு, வாழ்வின் திரு நிகழ்ச்சிகள், உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றில் ஏறக்குறைய எல்லா மனிதரிடமிருந்தும் மாமரியை சர்வேசுரன் மறைத்து வைக்கக் கிருபை கூர்ந்தார். மாமரியன்னையின் சொந்தப் பெற்றோரே அவர்களை அறியவில்லை. வானதூதர்கள் 'இவள் யார்?" (Quae est Ista) என்று அடிக்கடி தங்களுக்குள் பேசிக்கொள்வர். ஏனென்றால் உன்னத சர்வேசுரன் தூதர்களிடமிருந்து மாமரியை மறைத்து வைத்திருந்தார். அல்லது அவர்களிடம் மாமரி பற்றி ஏதாவது வெளிப்படுத்தியிருந்தால் அதைவிட எல்லையற்ற காரியங்களை மறைத்துக் கொண்டார்.

4. புதுமை செய்யும் ஆற்றலைப் பிதாவாகிய சர்வேசுரன் மாமரிக்கு வழங்கியிருந்தார். ஆயினும் மாமரி தன் வாழ்நாளின்போது அற்புதம் எதுவும் செய்யாமல் - பகிரங்க அற்புதங்களையாவது செய்யாமல் இருக்கும்படி அனுமதித்திருந்தார். தம்முடைய ஞானத்தை சுதனாகிய சர்வேசுரன் மாமரிக்குக் கொடுத்திருந்தார். ஆயினும் தம் அன்னை மிகக் கொஞ்சமாகவே பேசும்படி சம்மதித்திருந்தார். பரிசுத்த ஆவியின் உண்மைப் பத்தினியாக கன்னிமாமரி இருந்த போதிலும், அவர்களைப் பற்றி மிகக் கொஞ்சமாக அதுவும் சேசுகிறிஸ்துவை அறியப்படுத்த எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அப்போஸ்தலர்களும் சுவிசேஷகர்களும் கூறும்படி உத்தரவளித்தார்.

5. உந்நதரான சர்வேசுரன் தம் தலைசிறந்த, ஈடு இணையற்ற வேலைப்பாடாகிய மரியாயை அறிவதையும், சொந்த உடைமையாகக் கொண்டிருப்பதையும் தனக்கெனவே வைத்துக் கொண்டார். சுதனாகிய சர்வேசுரனின் வியக்கத்தக்க அன்னையாக இருக்கிறார்கள் கன்னி மாமரி. அவரோ தம் தாய் உலகில் வாழும் போது அவர்களை மறைத்தும் தாழ்த்தியும் வைத்திருந்தார். அவர்களின் தாழ்ச்சியை வளரச் செய்ய அவ்வாறு செய்தார். அவர்களை யாரோ தனக்கு அந்நியரைப் போல 'ஸ்திரீயே'' (அரு. 2:4: 19:26) என்று அழைத்தார் !

இவ்வளவிற்கும் எல்லா சம்மனசுக்களையும் மனிதர்களையும் விட அதிகமாக அவர்களை மதித்தார், நேசித்தார். கன்னிமாமரி பரிசுத்த ஆவியின் உண்மையுள்ள பத்தினி. அவர் ஒருவரே சென்றடையக் கூடிய முத்திரையிடப்பட்ட சுனை (உந், சங் 4:12). பரிசுத்த திரித்துவம் தங்கும் திரு இல்லம் - இளைப்பாறும் இடம் - மாமரியே. பிரபஞ்சத்தில் வேறு எங்குமே இல்லாத, கெரூபிம் செராபிம் என்னும் சம்மனசுக்களுக்கும் மேலாய்த் தாம் உறைவிடத்தையும் இடத்தையும் விட, அதிக மகிமையுடனும் தெய்வீகமுடனும் சர்வேசுரன் மாதாவிடத்தில் வாசம் செய்கின்றார்.

ஒரு சிருஷ்டி எவ்வளவு தூய்மையானதாயிருந்தாலும், ஒரு பெரும் சலுகையாலன்றி அங்கு செல்ல அனுமதிக்கப் வருவதில்லை .

6. அர்ச்சிஷ்டவர்களுடன் நானும் உரைக்கிறேன்: புதிய ஆதாமின் பூவுலக மோட்சம் தேவமாமரியே (மாமரி கடவுளின் தாய் என்பதால் அளவற்ற மதிப்புடையவர்கள் '. - அர்ச். தோமாஸ் அக். (10n. 25 art. 6). இதை விரிவுரை செய்த கயித்தான் என்பவர் : தன் சுய இயல்பில் கடவு ளைப் பயின்று அவருக்கு அமுதூட்டிய மாமரி . தெய்வாம்சத்தை எட்டுகின்றார்கள் என்கிறார்.) அங்கு தான் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர் மனிதனானார். அங்குதான் சிந்தனைக்குள் அடங்காத அற் புதங்களை நிகழ்த்தினார். கடவுளின் அகண்ட தெய்வீக உலகம் கன்னிமாமரி விவரிக்க இயலாத அழகும் செல் வமும் அங்கு உள்ளன. உன்னத சர்வேசுரனின் மகிமை - யலங்காரம் கன்னிமாமரியே. சர்வேசுரன் தம் ஏக சுத னைத் தம் நெஞ்சத்துட் கொண்டிருப்பதுபோல், மரியா யினுள்ளே அவரை மறைத்து வைத்துள்ளார். அத்திருச் சுதனிலோ மிகவும் உயர்ந்தனவும் மிக விலைமதிப்புள்ள வையுமான யாவற்றையும் வைத்துள்ளார். ஓ! வியப்புக் குரிய இச்சிருஷ்டியிடம், எல்லாம் வல்ல சர்வேசுரன் எத்துணை பெருங்காரியங்களைச் செய்துள்ளார்! மரியாயும் தன் ஆழ்ந்த தாழ்ச்சியிலும்கூட 'வல்லபமுள்ளவர் பெரு மையுள்ளவைகளை எனக்குச் செய்தருளினார்'' (லூக் 1:49) என்று சொல்லாமல் இருக்க முடியவில்லையே! அவ்வரிய காரியங்களை உலகம் அறியாது. ஏனென்றால், அத்தகைய அறிவைப் பெற உலகிற்கு இயலாது, அருகதையும் கிடையாது.

7. சர்வேசுரனின் திரு நகராகிய மரியாயைப் பற்றி. அற்புதமான விஷயங்களை அர்ச்சிஷ்டவர்கள் கூறியுள் ளார்கள். மாதாவைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் பெற்ற இன்பத்தையும் வாய்ச்சாலகத்தையும் போல் வேறு எதிலும் அவர்கள் கண்டதில்லை என்கிறார்கள். அப்படியிருந்தும் இவ்வன்னை சர்வேசுரனின் அரியாச னத்தின் முன் கொண்டு வரும் பேறுபலன்களின் உயர்வு எவ்வளவென்று கண்டுகொள்ள முடியவில்லை என்றே ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள். இத்தாயின் பரம அன் பின் விசாலம் பூமியை விட அகண்டதாயுள்ளது, அளக்க முடியாதது என்று சொல்கிறார்கள். சர்வேசுரன் மீதும் மாமரி கொண்டிருக்கும் வல்லமையின் அளவு அறிவால் கண்டுணர இயலாத ஒன்று என்கிறார்கள். மரியாயின் தாழ்ச்சியின் ஆழமும் எல்லாப் புண்ணியங்கள், வரங் களின் ஆழமும் ஒரு பெரும் பாதாளம், அளந்து காட்ட முடியாத ஆழம் என்று கூறுகிறார்கள். ஓ! உய்த்துணர இயலாத உயர்வே! ஓ! உரைக்க இயலாத விசாலமே! ஓ! அளப்பரிய பேர் பெருந் தன்மையே! ஓ! புக முடியாத பெரும் ஆழமே!!!

8. மிக உந்த விண்ணகத்திலும், மிகத் தாழ்ந்த பாதாளத்திலும், பூமியின் ஒரு முனை முதல் மறு முனை வரையிலுள்ள யாவும் ஒவ்வொரு நாளும் மரியாயைப் பிரசங்கிக்கின்றன. வியத்தகும் கன்னி மரியைப் பறை சாற்றுகின்றன. நவ விலாச சம்மனசுக்களும், மாந்தருள் எச்சமயத்தாரும் எந்நிலையிலுள்ளோரும், எந்த வயதினரும் எப்பாலினத்தோரும், நல்லோரும் தீயோரும், பசாசுக் களும் கூட தாங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட் டாலும் சரி, உண்மையின் வலிமையால் வலுக்கட்டாயமாக மாமரியை ஆசீர்வதிக்கப் பெற்றவர்கள்'' என்று அழைக் கிறார்கள். அர்ச். பொன வெந்தூர் சொல்வது போல பரலோகத்தில் சம்மனசுக்கள் எல்லாரும் இடைவிடாமல் பரிசுத்த , பரிசுத்த , பரிசுத்த மரியாயே! சர்வேசுரனின் கன்னித் தாயே!'' என்று வாழ்த்துகிறார்கள். தூதனின் மங்கள வாழ்த்தாகிய "மரியாயே வாழ்க!'' என்று தின மும் கோடிக்கணக்கான முறைகள் கூறித் துதிக்கிறார் கள். மாமரியின் முன் தெண்டனிட்டுப் பணிந்து அன் னையின் சலுகையெனச் சில பணிகளைத் தங்களுக்குக் கட்டளையிட்டு தங்களைக் கெளரவிக்குமாறு வேண்டுகி - றார்கள். அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர் கூட, வானுலக சேனைகளின் தலைவராயிருந்தபோதிலும், மாமரியை மகிமைப்படுத்த மிக ஆவலுள்ளவராயிருக் கிறார். அவ்வன்னையின் ஊழியரில் ஒருவருக்கு உதவியாகச் செல்லும் பாக்கியம் கிட்டும்படி அவர்களின் ஆணைக்கு எப்பொழுதும் தயாராகக் காத்து நிற்கின்றார்.

9. உலகமெல்லாம் மரியாயின் மகிமையால் நிறைந் துள்ளது. கிறிஸ்தவ நாடுகள் தேவ அன்னையைத் தங்கள் காவலியாகவும், அரசுகள், மாநிலங்கள், மேற்றிராசனங் கள், நகரங்கள் மாதாவைத் தங்கள் பாதுகாப்பாளராக வும் தெரிந்து கொண்டுள்ளன. அநேக அநேக மேற்றி ராசன ஆலயங்கள் அன்னையின் பெயரில் சர்வேசுர னுக்கு அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளன. அன்னைக்கொரு பீடம் இல்லாத ஆலயம் இல்லை. அவர்களின் அற்புத உருவம் இல்லாத ஒரு குறுநிலமோ மாநிலமோ இல்லை. அங்கே எல்லா துன்பங்களும் தீருகின்றன; எவ்வித வரங் களும் கிடைக்கப் பெறுகின்றன. மரியன்னையின் மகி மைக்கென நிறுவப்பட்ட மாதா சபைகளும் பக்தி சபை களும் பல. அவர்களின் பெயர் தாங்கி அவர்களுடைய பாதுகாப்பையுடைய துறவற சபைகள் பல உள்ளன. மாதா சபை அங்கத்தினரும் துறவிகளும் எண்ணற்ற தொகையினராய் அவர்களின் புகழ் பாடி அவர்களின் இரக்க வரங்களை வாழ்த்திப் போற்றுகின்றனர். அருள் நிறைந்த மரியாயே என்று வாழ்த்தினை மழலையாகச் சொல்லி இவ்வன்னையைப் புகழாத ஒரு குழந்தையில்லை. எவ்வளவு பெரிய பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் பாவியிடமும் இத்தாய் மீது ஒரு சிறு பொறியளவான நம்பிக்கையாவது இல்லாமல் இல்லை. மாமரிக்குப் பயந்தாலும் அவர்களை மதிக்காத ஒரு பசாசுகூட நரகத்தில் இல்லை .

10, இவை இங்ஙனமிருப்பதால், அர்ச்சிஷ்டவர்களுடன் நாமும் சேர்ந்து 'மரியாயைப் போதிய அளவு ஒருபோதும் புகழ முடியாது.'' (De Maria nunquam satis) என்று கூற வேண்டும் நாம் புகழ வேண்டிய அளவுக்கு மாதாவை இன்னும் புகழவில்லை. போதிய அளவு போற்றவில்லை, மகிமைப்படுத்தவில்லை. நேசிக்கவில்லை, ஊழியம் புரியவும் இல்லை. நாம் செய்துள்ளதற்கு மேலாகவே இன்னும் புகழப்படவும் போற்றப் படவும் மகிமைப்படுத்தப்படவும் நேசிக்கப்படவும் ஊழி யம் கொள்ளவும் மாதா தகுதி பெற்றுள்ளார்கள்.

11. மேலும் பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து நாமும் இவ்வாறு கூற வேண்டும்: அரச மகளின் மகிமையெல்லாம் அகத்திலேயே உள்ளது'' (சங். 44:14). இது எப்படி உள்ளதென்றால், புறத்திலே பரலோகமும் பூலோகமும் போட்டியிட்டுக் கொண்டு மாமரிக்குச் செலுத்துகின்ற மகிமையெல்லாம், சிருஷ்டிகரான சர்வேசுரனிடமிருந்து அகத்தில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் மகிமைக்கு முன் ஒன்றுமேயில்லை என்பதாக. அரசனுடைய இரகசியங்களின் எட்ட இயலாத மிகச்சிறிய சிருஷ்டிகளுக்கு இம் மகிமை என்னவென்றே தெரியாது,

12. கடைசியில் நாம் அப்போஸ்தலருடன் சேர்ந்து ஆச்சரியத்துடன் இவ்வாறுதான் உரைக்க வேண்டும்: வரப்பிரசாத முறையிலும் இயற்கையின் தன்மையிலும் மகிமையின் முறையிலும் அற்புதங்களின் அற்புதமாக (அர்ச். தமாசீன் அருளப்பர்) இருக்கும் அன்னை மரியாயின் அழகு என்னவென்றும் பெருமை என்னவென்றும் உயர்வுகள் என்னென்னவென்று ''கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனித இருதயத்திற்கு அது எட்டியதுமில்லை!'' ஒரு அர்ச்சிஷ்டவர் (அர்ச். யூகாரியுஸ்) கூறுகின்றார் : நீ தாயைக் கண்டுணர விரும்பினால் குமாரனைக் கண்டுணர்ந்து கொள் என்று. கன்னிமாமரி கடவுளின் தகுதியுள்ள தாய். இங்கு எல்லா நாவும் மெளனமாகக் கடவன! (Hic taceat omnis lingua).

13. நான் இத்தனை மகிழ்ச்சியோடு இங்கு எழுதியுள்ள எல்லாவற்றையும் என் இருதயம் எனக்குக் கூறியபடியே எழுதினேன். எதற்கென்றால், தேவ மாமரி இவ்வளவு நாளும் அறியப்படாமல் இருந்ததே சேசு கிறிஸ்து அறியப்பட வேண்டிய அளவு அறியப்படாமல் இருப்பதின் ஒரு காரணம் என்று காட்டவே. எனவே சேசு கிறீஸ்துவைப் பற்றிய அறிவும் அவருடைய அரசும் இவ்வுலகில் வருமானால் - அது நிச்சயமாக வரும் - அது பரிசுத்த கன்னிமரியாயைப் பற்றிய அறிவும் அவர்களது ஆட்சியும் உலகில் வருவதின் தவிர்க்க முடியாத விளை வாகவே வரும். சேசுவை முதலில் உலகில் கொண்டு அந்த மாமரியே அவர் உலகில் அறியப்படவும் செய்வார்கள்.

அர்ச்சிஷ்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.