இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நற்கருணை உட்கொள்ளுமுன்

266. (1) கடவுளின் முன் உன்னையே ஆழ்ந்த முறையில் தாழ்த்து. 

[2] உன்னுடைய கறைப்பட்ட சுபாவத்தையும் உன் சொந்த மன நிலைகளையும் ஓதுக்கி விடு. உன் சுயமதிப்பு அவைகளை எவ்வளவு நல்லதெனக் காட்டினாலும்அவற்றை ஓதுக்கு.

[3] நீ செய்துள்ள அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொள். "என் மிக அன்புள்ள தலைவியே நான் முழுவ தும் உங்களுடையவன். என்னிடம் உள்ளதெல்லாம் | உங்களுடையவை" என்று சொல். -

[4] இந்த அன்புள்ள தாயின் மன நிலை யோடு நீ அவர்களின் திருக்குமாரனை உட்கொள்ள ஏதுவாக, அவர் களுடைய இருதயத்தை உனக்குக் கொடுக்கும்படி மன் றாடு. உன்னுடைய இருதயத்தைப் போல் கறைபட்டு நிலையற்ற ஓரு இருதயத்துள் அவர் வருவது அவரது மகிமைக்குத் தகாது என்பதை மாதாவுக்கு ஞாபகமூட்டு. உன் இருதயம் அவருடைய மகிமையைக் குறைக்கும். ஒருவேளை அவரை இழந்து போகவும் கூடும். நம் இரு தயங்கள் மீது மாதாவுக்கு ஆளுமை உண்டு. எனவே அவர்கள் உன் இருதயத்தில் வந்து தங்க முடியும். அவ் வாறு உன் இருதயத்தில் அவர்கள் வந்து தங்கி தன் திருக்குமாரனை வரவேற்கும்படி கூறு. அப்படியானால் சேசு தகுந்த விதமாய் வரவேற்கப்படுவார். அவருக்கு அவமானமோ அவரை இழத்தலோ ஏற்படாது என்று சொல். நீ மாதாவுக்குக் கொடுத்துள்ள உன்னுடையவை எல்லாம் அவர்களுக்கு ஒரு மகிமையும் தராது; ஆனால் நீ உட்கொள்ளும் நற்கருணையில், நித்திய பிதா அவர் களுக்குக் கொடுத்த அதே பரிசை நீயும் கொடுக்க விரும்புவ தாகச் சொல். இந்தப் பரிசால் உலக செல்வம் யாவற்றையும் கொடுப்பதை விட அவர்களுக்கு அதிக மகிமை உண்டாகும் என்று நம்பிக்கையுடன் சொல். மேலும், அவர்களை தனிச் சிறந்த முறையில் நேசிக்கும் சேசு, இப்பொழுதும் தன் மகிழ்வையும் இளைப்பாற்றி யையும் மரியாயிடமே பெற்றுக் கொள்ள விரும்புகிறார். அதுவும் உன் உள்ளத்திலேயே. காரணம் என்னவென் றால் அவர் பிறந்த மாட்டுத் தொழு அசுத்தமாயும் வறு மையாயும் இருந்தாலும், மாதா அங்கு இருந்ததால் அவர் அங்கு பிரியமாய் வந்தது போல், இப்பொழுது உன்னிடம் அதே தாய் இருப்பதால் சேசு உன்னிடம் வர விரும்புவதாகச் சொல். இந்தக் கனிவான மொழி களைக் கூறி உனக்கு அவர்கள் தன் இருதயத்தைக் கொடுக்கும்படி கேள். "ஓ மரியாயே! என் எல்லாமாக உங்களைக் கொள்கிறேன். உங்கள் மாசற்ற இருதயத்தை எனக்குத் தாருங்கள்.”