இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஊழியனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாடு

33. மேலும், ஒரு ஊழியனுக்கும் அடிமைக்கும் ஒரு பெரும் வேறுபாடு இருப்பதையும் கவனியுங்கள்.

ஊழியன் தன் வேலைக்கான ஊதியத்தை உரிமைப்படி கேட்கிறான். அடிமைக்கு எந்த ஊதியத்திற்கும் உரிமையில்லை.

ஊழியக்காரன் விரும்பும்போது தன் எஜமானை விட்டுப் போக முடியும். ஒரு காலத்திற்கு மட்டும் தன் எஜமானுக்குப் பணி செய்கிறான். அடிமையோ ஆயுள் முழுவதும் எஜமானுக்குச் சொந்தமாயிருக்கிறான். எஜமானை விட்டுப் போக அவனுக்கு உரிமையில்லை.

ஊழியன் தன்னுடைய உயிர் மீதும், மரணத்தின் மீதும் உள்ள உரிமையைத் தன் எஜமானுக்கு விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் அடிமை தன்னை முழுவதும் எஜமானிடம் விட்டுக் கொடுத்து விடுகிறான். எஜமான் நீதிமன்றத்தால் உபத்திரவமடையாமலே தன் அடிமையை மரணத்துக்குள்ளாக்கலாம்.

இதிலிருந்து, கட்டாய அடிமையாயிருக்கிற ஒருவன், தன் எஜமானிடம் மிகவும் கட்டுப்பாடான முறையில் சார்ந்திருக்கிறான் என்பதை எளிதாக நாம் கண்டுகொள்ளலாம். நூல்படி பார்த்தால் இந்த முறையில் ஒரு மனிதன் தன் சிருஷ்டிகரிடம் மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். ஆதலால், இவ்வகையான அடிமைத்தனத்தை கிறீஸ்தவர் களிடையே நாம் காண்பதில்லை....

34. ஆனால் பசாசின் கொடுமையான அடிமைத்தனத்தை ஞானஸ்நானத்தினால் உதறிவிட்டபின் தன்னையே மாமரி வழியாக சேசுவுக்கு ஒரு அன்பின் அடிமையாக அர்ப்பணித்து விட்ட தாராளமுள்ள ஆன்மா பாக்கியம் பெற்றது-- ஆயிரம் தடவை பாக்கியம் பெற்றது!