நவம்பர் மாதம்

கத்தோலிக்கு சபை உண்மையாகவே ஒரு தாய். தன் மக்களை, உயிரோடிருக்கும் மக்களை மாத்திர மல்ல, ஆனால் இறந்தவர்களையும் இந்தத்தாய் மறப்ப தில்லை. இறந்த மக்களுக்காக ஒவ்வொரு நாளும் திருச்சபை பிரார்த்திப்பதுடன், அவர்களுக்கென ஒரு மாதத்தையே ஒதுக்கி வைத்திருக்கிறது. திருச் சபையானது கிறிஸ்துநாதருடைய பத்தினி. இறந்த தன் மக்களைப் பற்றி தன் பத்தா கொண்டிருக்கும் ஆசையை அது அறிந்திருக்கிறது. அவர்களைத் தம் முடன் ஒன்றித்து, அவர்கள் மோட்சத்தில் நித்திய பேரின்பம் சீக்கிரம் அனுபவிக்கச் செய்ய அவர் ஆசிக்கிறார். தன் பத்தாவின் ஆசையையும், ஏக்கத் துடன் வேதனைப்படும் தன் மக்களின் ஆவலையும் அது பூர்த்தி செய்யத் தீவிரிக்கிறது.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப் படுகிறவர் களுக்கு உதவி செய்வது கிறிஸ்து நாதருக்கு மிகப் பிரியமான காரியம். ஏனெனில் அவர்கள் பரலோகத்தில் அவரது புகழை நித்தியத்துக்கும் பாடவேண்டி யவர்கள். இதை நினைவூட்டவே உத்தரிக்கிற ஆத்து மங்களின் திருநாளை நவம்பர் இரண்டாம் நாளன்று வைத்திருக்கிறது. நவம்பர் முதல் நாள் மோட்சவாசி களது திருநாள். மோட்சவாசிகள் போல் நாமும் வெற் றியும் ஒளியும் சமாதானமும் பெறவேண்டும். இவை இப்போதைய துன்பங்களின் சன்மானமாகும். இந்த சன்மானத்தை உத்தரிக்கிற ஆத்துமங்கள் அடைய வேண்டும். இதை அவர்கள் சீக்கிரம் அடையச்செய் வது நம் கையில் இருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்ய பல சாதனங்கள் நம்மிடம் உண்டு; அவர் களுக்கு உதவி செய்வது நமது கடமை; இதைத் திருச்சபை நமக்கு நினைப்பூட்டுகிறது.

சகல அர்ச்சியசிஷ்டர்களது திருநாளன்று குதூ கலங்கொண்டாடுவது நியாயமே; அவர்கள் திருச் சபையின் மகிமையாவார்கள்; இவ்வுலகில் வசிக்கும் மக்களால் திருச்சபை அநேக சந்தர்ப்பங்களில் ஏமாற் றமடைகிறது. அவர்கள் பிரமாணிக்கம் தவறுகிறார் கள்; இதுபற்றி திருச்சபை விசனிக்கிறது. மோட்சத் தில் இருக்கும் தன் மக்களை நினைக்கையில் திருச் சபைக்கு ஆறுதலாயிருக்கிறது. வேதனைப்படும் மக்கள் திருச்சபை தங்கள் மேல் இரக்கமாயிருக்க கூவியழைக்கிறார்கள். எந்த மனிதனும் வேலை செய்ய முடியாத இரவு நேரத்தில் அவர்கள் இருக்கின்றனர். கடவுளுக்கு விரோதமாக அவர்கள் எழும்புவதில்லை, எனினும் அவர்கள் பல குற்றங்குறைகளுடன் இருப்ப தால் கடவுளது சமூகத்தில் நுழைய முடியாது. அவர் கள் இப்பொழுது இருக்கும் நிலையில் நாமும் ஒரு நாள் இருப்போம். கடவுளது இரக்கத்தால் நாம் இப்பொ ழுது சாவான பாவமின்றி இருந்தாலும், குற்றம் குறைகள் நிரம்பக் கொண்டிருக்கிறோம். இவற்றிற் கெல்லாம் இவ்வுலகிலாவது மறு உலகிலாவது பரிகா ரம் செய்புமுன் நாம் மோட்சம் சேர முடியாது. உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுவோருக்கு நாம் உதவி செய்கை பில் இது நமது நினைவுக்கு வருகிறது. எந்த மனிதனும் வேலை செய்யக்கூடிய பகல் நேரத் தில் நாம் இருக்கிறோம். உத்தரிக்கிற ஸ்தல வேதனை யின் காரணமான நமது குற்றங்குறைகளை அகற்ற, அவற்றைக் குறைக்க, அவற்றிற்கு இவ்வுலகிலேயே பரிகாரம் செய்ய நாம் தூண்டப்படுகிறோம்.

மோட்சவாசிகளை நாம் நினைக்கையில் அவர்கள் இவ்வுலகில் இருக்கும் பொழுது பாவத்தை விலக்கி புண்ணியத்தை அனுசரித்தார்கள்; துன்ப துயர வேதனைகளைப் பொறுமையுடன் கடவுளுக்காகவும் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் சகித்தார் கள் என அறிகிறோம்; அவர்களைக் கண்டு பாவிக்கத் தூண்டப்படுகிறோம். அர்ச்சியசிஷ்டர்களை வந்திக்க சிறந்த வழி, அவர்கள் கடவுளது சிம்மாசனத்தை நோக்கி நடந்த பாதையில் நாம் அவர்களைப் பிரமா ணிக்கத்துடன் பின்பற்றுவதாகும்.

நமது ஜெபங்களையும் பரித்தியாகங்களையும் திவ் விய பூசையின் தேவ பலிப்பொருளான கிறிஸ்துநாத ரது ஜெபங்களுடனும் பரித்தியாகங்களுடனும் ஒன் றித்து, உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அவற்றைப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து இறந்த நம் நேசர்களை சமாதானமும் மகிழ்ச்சியும் பிரகாசமும் நிறை நம் தாய் நாட்டுக்கு, கிறிஸ்து நாதரில் நித்திய இளைப் பாற்றிபெற நாம் அனுப்பி வைப்போமாக. நாம் மோட்சம் சேரும் வரை கடவுளது சிம்மாசனத்தின் முன் அவர்கள் நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருப் பார்கள்.