அசட்டைத்தனம்

தாய் தந்தையர் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தின்மை விளைக்கக்கூடியயாவையும் கவனமாய்விலக்கி குடும்ப நன்மையில்எந்நாளுங் கண் ணுங்கருத்துமாயிருக்கவேண் டியது. ஒருதலையைப்பார்க்கிலும் இருதலைவாசியென க் கருத்துள்ள ஒரு பழமொழி அங்கிலேயபாஷையிலுண்டு. அதின்படி கணவனும் மனைவியும் தலைக்கொரு எண்ணங்கொண்டு நடவாமல் இருவரும் ஒத்துமேவி யோசனை பண்ணிச் சகலகருமங்களையும் நடப்பிப்பதே உத்தமம். அன்னியோன்னியமும் அறிவுமுள்ள ஸ்திரீ புருஷர்கள் அப்படியே எந்நாளும் செய்துவருகிறார்கள். அப்ப டிச் செய்யாது ஒவ்வொருவரும் தன் தன்னிஷ்டமாய் ந டக்குங் குடும்பங்களில் சமாதானவீனமுஞ் சச்சரவும் பொருளழிவும் பெருவாரியாய் நடக்கின்றன. சிலர்கிர மமாய்க் கணக்குவையாமல் கொடுக்கல் வாங்கல் செய்து வருகையில் நோய்வாய்ப்பட நேரிட்டால் அந்நேரமா குதல் தங்கள் கணக்குகளையும் மற்றுங்கருமங்களையும் ஒழுங்குபண்ணுவதுண்டு. ஆனால், வேறனேக பெற் றார் இதைத் தாங்களாகவுங்கவனியார்கள்; பிள்ளைகளும் பயத்தினால் அல்லது வெட்கத்தினால் இதைப்பற்றிக் கேட்கத் துணியார்கள். கேட்டாலும், பெற்றார் '' என்ன! நானிப்போது செத்துப்போவேனா, என்னுயிருக்கு மு டிவுகட்டிப்போட்டீர்களா '' என்று சீறிச்சினப்பார்கள். தங்கள் கருமங்களை ஒழுங்குபடுத்தாமல் சாகச் சம்பா வித்தால் கடன்காரர் தாங்கள் கொடுத்ததை அறவிடத் தவறார்கள். ஆனால், கடன்வாங்கினவர்கள் தங்களிடத் திற்கேட்குமட்டும் மௌனமாய் எட்டத்திலிருப்பார் கள். கேட்டாலுங் கண்டதார் கேட்டதாரென்று கை கழுவுவாருமுண்டு. ஆகையால் வேதவாக்கியப்படி '' கொ டுத்தது வாங்கினதெல்லாம் குறித்துவை'' (சர்வபிர சங்கி 42.7) என்றதை அனுசரித்துக்கொள்ளவேண்டும்.

சிலர் இலகுவாய் மாதந்தோறும் அல்லது வருஷா வருஷம் இறுக்கக்கூடிய கடன், வட்டி, வாடகை, கோ விற்கடமை முதலியவைகளை மரணபரியந்தம் நிலுவை' யாய் விட்டுவிடுவதினாலே அவர்கள் செத்தபின் சாவீட்டில் பெண்சாதிபிள்ளைகள் காது கழுத்திலுள்ளவைகளைக் கழற்றி ஈடுவைத்து முழுத்தொகையையும் ஒரே தடவையில் இருக்கநேரிடுகின்றது. மரணசாதனம் எழுத வேண்டியவர்களிலுஞ் சிலர் நெடுகப்பின் போட்டு ஒன்றில் எழுதாமல் அல்லது போதிய அறிவில்லாத அந்தியதேரத்தில் சாதனம் பெறாதவிதமாய் எழுதிவிட்டுச்சாகிற தினால் குடும்பத்துக்கு நேரிடுஞ் செலவுக்கும் தொல்லை களுக்கும் ஒரு அளவில்லை. இவர்கள் புத்தியாய் நடக் கவேண்டுமானால் மறுபேர் தூண்டிவிடுமட்டுந் தாமதித் திராமல் தாங்களாகவே நேரகாலத்தோடு இக்கருமங்களை முடிக்கவேண்டியது. முடியாமல் விடுவதினால் மனைவிமக் கள் உரிமைத்தத்துவம் பெறுவதற்குச் செய்யவேண்டிய செலவும் படவேண்டிய சங்கடங்களும் எவ்வளவென்று பணக்காரரான சிலகைம்பெண்கள் அனுபவத்திலறிவார் கள். சில புத்திசாலிகள் தளர்ந்தவயதில் தாங்களாகவே இக்கருமங்களை ஒழுங்குபடுத்திவைத்துக்கொள்ளுகிறார் கள். எசேக்கியாஸ் என்னும் எபிரேய அரசன் வியா தியாய் விழுந்தபொழுது '' உன் வீட்டுக்காரியங்களை ஒழுங் குபடுத்திப்போடு ?' என்று அறிவிக்கச் சருவேசுரன் தாமே இசையாஸ் என்னுந்தீர்க்க தரிசியை அவ்வரச னிடம் அனுப்பினாரென்று வேதாகமத்தில் வாசிக்கி றோம் (4. அரசர் 20.1) "
இவ்வதிகாரத்தின் முதற்பகுதியில் காட்டியவண் ணம் பெற்றார் சாக்கிரதையா யுழைத்து மட்டுத்திட்ட மாய்ச் செலவழித்துச் சுத்தகருத்தோடு பிள்ளைகளைத் தாபரித்துக் காப்பாற்றி வருவார்களானால் அவர்கள் தங் கள் பிள்ளைகளுக்குச் செய்ததெல்லாவற்றையுந் தமக்கே செய்ததாக உலகரட்சகர்மதித்து அவர்களுக்கு முடி வற்றசம்பாவனையை அளிப்பார். ''என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே உலகமுண்டான துமுதல் உங் களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கும் இராச்சியத் தைச் சுதந்தரித்துக்கொள்ள வாருங்கள், ஏனெனில் நான்பசியாயிருக்கையில் போசனங்கொடுத்தீர்கள், நான் தாகமாயிருக்கையில் பானங் கொடுத்தீர்கள், பரதேசியா யிருக்கையில் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள், நான் வஸ்திரமில்லா திருக்கையில் வஸ்திரங் கொடுத்தீர்கள்'' என்பார். நீதிமான்கள் பிரத்தியுத்தர மாக அவரை நோக்கி: ஆண்டவரே! எப்போது தேவரீர் பசியாயிருக்கக்கண்டு தேவரீருக்குப் போசனம் தந்தோம்? தாகமாயிருக்கக் கண்டு பானந்தந்தோம்? எப்போது தேவரீர் பரதேசியாயும் வஸ்திரமில்லாமலும் இருக்கக்கண்டு நாங்களும்மைச் சேர்த்து வஸ்திரந்தந்தோம்.... என்று கேட்க, அவர் மறு மொழியாக மிகவுஞ்சிறியரான என் சகோதரராகிய இவர்களிலொருவனுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே அதைச் செய்தீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்பார் ( அர்ச்.மத்தே 25.34-40) ஆனால், பிற்பகுதியில் விவரித்தவண்ணம் பிள்ளைகளைக் கெட்டலைந்து கேவலப்பட விடுகிறவர்களுக்கு அவரிடம் விருக்கும் தீர்வை திகிலுக்குரியதாம். '' சபிக்கப்பட் டவர்களே பிசாசுக்கும் அவன் தூதர்களுக்கும் ஆயத் தம்பண்ணப்பட்ட நித்திய ஆக்கினைக்குப் போங்கள்; ஏ னெனில், நான் பசியாயிருந்தேன், நீங்களெனக்குப் போ சனங்கொடுக்கவில்லை ; தாகமாயிருந்தேன், நீங்களெனக் குப் பானங்கொடுக்கவில்லை; பரதேசியாயிருந்தேன், நீங்களென்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை ; வஸ்திரமில் லாதிருந்தேன், நீங்களெனக்குவஸ்திரங்கொடுக்கவில்லை'' என்பார். அப்போது அவர்கள் மாறுத்தரமாக ''ஆண் டவரே தேவரீர் எப்போது பசியாயிருக்கவும், தாகமா யிருக்கவும், பரதேசியாய்த் திரியவும், வஸ்திரமில்லாம் லிருக்கவுங்கண்டு உமக்கு ஊழியஞ்செய்யாமற் போ னோம்'' என்று வினாவ அவர் விடையாக " மிகவுஞ் சிறி யரான இவர்களுக்குள்ளே ஒருவனுக்கு எப்போது செய் யாதுபோனீர்களோ எனக்குஞ் செய்யாது போனீர்க ளென்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்பார். அப்படியே '' இவர்கள் நித்திய ஆக்கினைக்கும் நீதிமான்கள் நித்திய சீவியத்துக்கும் போவார்கள்'' என்று வசனித்தார் (அர்ச், மத்தேயு 25.41-46)

பெற்றாரே உங்களுக்குப் பிரியமான தீர்வையைத் தெரிந்துகொண்டு காலமிருக்கும்போதே அதற்கு வழி பண்ணிக்கொள்ளுங்கள். நித்திய சம்பாவனையை அடையவிரும்பினால் பிள்ளைகளுக்காகச் செய்கிறவைகளுக்கு அவர்களிடத்தில் மாத்திரம் கைம்மாறைக் காத்திராமல் கடவுளுக்காகவே செய்து அவரிடத்திலேயே சம்பாவனையைக் காத்திருங்கள்.