நம்பிக்கை நாயகி

பிரான்ஸ், ஜெர்மனி இந்த இரு நாடுகளுக்குமிடையே கோர போர் நடந்து கொண்டிருந்தது. அது தொடங்கி அநேக மாதங்களாகியும் முடிந்த பாடில்லை. பிரான்ஸ் நாட்டுக்கு கனத்த சேதம். நாளாக ஆக நிலை மோசமாகிக் கொண்டே வந்தது ஜெர்மானியர் எல்லாப் பக்கங்களிலும் முன்னேறி வந்தனர். பாரீஸ் பட்டணத்தில் நுழைந்து விட்டார் கள்; லவால் நகரை அணுகிக் கொண்டிருந்தார்கள், போன்மேன் நகருக்கு இன்னும் முப்பது மைல் இருந்தது.

1871-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் மத்தியானத் துக்குப் பின், செசார் பார்பதெத் என்பவர், தம் மக்கள் பன்னிரண்டு வயதினனான யுஜீனுடனும், பத்து வயதினனான ஜோசப்புடனும், தம் மிருகங் களுக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். வானத்தைக் கவனிக்கும்படி யுஜீன் வெளியே வந் தான். நேரம் அப்பொழுது ஏறக்குறைய ஐந்தேகால் மணி. ஏற்கனவே இருள் பரவி விட்டது. ஆகாயம். தெளிவாயிருந்தது; நட்சத்திரங்கள் காணப்பட்டன. அடுத்த வீட்டின் மேற் காணப்பட்ட மேகம் அவனது கவனத்தைக் கவர்ந்தது.

''பார். பார், உனக்கு ஏதாவது தெரிகிறதா?'' என அவன் கூறினான். ஜோசப் உடனே ஓடிப்போய் பார்த்தான். அவளது உடை மங்கியநீல நிறமாயிருக் கிறது. அதில் நிறைய தங்க நட்சத்திரங்கள். பாதங் கள் வரை உடை தொங்குகிறது, சப்பாத்துகள் நீல நிறம். தலையில் கருப்பு முக்காடு. அதன் உச்சியில் ஒரு தங்கக் கிரீடம். அதைச் சுற்றிலும் மத்தியில் சிவப் புத்துணி கட்டப்பட்டிருக்கிறது. புன்சிரிப்புடனிருக் கிறாள். கரங்களை நம்மை நோக்கி நீட்டியிருக்கிறாள்'' என தான் கண்டதைப் பற்றி ஜோசப் விவரித்தான்.

சிறுவர்களது மூளையில் ஏதோ கோளாறு ஏற் பட்டதாக நினைத்த செசார் அவர்களை வேலைக்கு அனுப்பினார். ஏனினும் விநோதப் பிரியத்தால் தூண்டப்பட்டு, பார்க்கும்படி வெளியே சென்றார். ஒன்றையும் பார்க்கவில்லை; “யுஜீன், அந்தப் பெண் இன்னும் அங்கு இருக்கிறாளா? போய்ப்பார்!" என் றார். அவன் ஆம் என்றதும், "போய், அம்மாவை அழைத்து வா'' என்றார்.

அவள் வந்து பார்த்தாள். “இப்படி கதை கட்டி விட உங்களுக்கு எவ்விதம் துணிவு வந்தது? உண்மை பேசும் சிறுவர்களையே தேவதாய் நேசிக்கி றாள்'' என்று அவள் சொல்லி அவர்களைத் திட்டி, அவர்களது காதை நன்றாகத் திருகினாள்.

“அம்மா, நாங்கள் உண்மையே பேசுகிறோம். பிரகாசமுள்ள நட்சத்திரங்களாலான முக்கோணத் தினுள் அந்த அழகிய பெண்ணை நீங்கள் பார்ப்ப தில்லையா?'' என இருவரும் ஒருவாய்ப்படக் கூறினர்.

தாய் தன் மூக்குக்கண்ணாடியைப் போட்டுப் பார்த்தாள். நட்சத்திரங்களுடன் இருந்த வானம் மாத்திரமே காணப்பட்டது. தாங்கள் இன்னும் அந்த அழகிய பெண்ணைக் காண்பதாக சிறுவர் கூறினமை யால், மடத்திலிருந்து விற்றலின் சகோதரியை அழைத்து வரச்சொன்னாள்.

அவர்கள் வந்து பார்த்தார்கள். காட்சி ஒன்றும் தோன்றவில்லை. “காட்சி ஒரு வேளை சிறுவர்களுக்கு மாத்திரமே தோன்றும் போல் இருக்கிறது; நம் மடத்துப் பள்ளிக் கூடத்துச் சிறுமியர் சிலரை அழைப்போம்" என சகோதரி கூறினார்கள்.

மூன்று சிறுமியர் வந்தனர். பிரான் சுவா, ரிஷேர், ஜோன்மரி லெபோஸ் என்ற மூவரும் மாதாவைப் பார்த்தனர். யுஜீனும் ஜோசப்பும் சொன்னதையெல் லாம் அவர்கள் கண்டனர். இதற்குள் கிராமத்தின் மக்கள் பலர் அங்கு கூடி விட்டனர்: தாய்மார் கையிலிருந்த இரு குழந்தைகள் காட்சி தோன்றிய இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததுமன்றி, மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு காட்சி தோன்றிய இடத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, மாற்றி மாற்றிக் கைதட்டினார்கள்.

பங்குக் குருவான மிக்கேல் கெரின் சுவாமியார் வந்தார். நட்சத்திரங்களாலான முக்கோணத்தை எல்லோரும் பார்த்தார்கள். தேவதாயை நான்கு சிறு வர்கள் மாத்திரமே கண்டனர்.

பெரிய கூட்டம் திரண்டு விட்டது. அவர்கள் வரட்டுமென்றே தேவதாய் காத்திருந்தாள் போலும். தாங்கள் கண்டதைச் சிறுவர்கள் எடுத்துரைக்கை யில் எல்லோரும் கவனமாய்ச் செவி கொடுத்துக் கேட்டார்கள்.

அதுவரை புன்சிரிப்புடனிருந்த தேவதாய் இப் பொழுது துயரத்துடனிருந்தாள். நீலநிற வட்டம் அவளைச் சுற்றிலும் காணப்பட்டது. அவளது மார் பில் சிவப்புச் சிலுவை. ஜெபமாலையைச் ஜெபிப்போ மாக என பங்குக் குரு கூறினார்.

பக்தி உருக்கத்துடன் எல்லோரும் ஜெபமாலை ஜெபித்தனர். அதன் பின் தேவமாதா பிரார்த்தனைஜெபமாலையின்போது மாதாவின் காட்சி, உருவத்தில் பெரிதானதாகத் தோன்றிற்று. அவளது உடை மீதிருந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் ஜோதி யும் அதிகரித்தன. பிரார்த்தனைக்குப் பின் எல்லோ ரும் சேர்ந்து, ''என் ஆத்துமமானது ஆண்டவரை வணங்கித் தோத்திரம் பண்ணுகிறது'' என்னும் கீதத்தைப் பாடினர். அப்பொழுது மாதா தம் கரங் களால் தாளம் இசைத்தாற் போல் இருந்தது. கீதம் முடிந்ததும் மாதாவின் பாதத்தில் நீண்ட குறுகிய கொடி தோன்றியது. அது விரிந்து கொண்டே செல்கையில், பின்வரும் வார்த்தைகள் அதில் தோன்றின: “ஆனால் ஜெபியுங்கள் என் மக்களே; கடவுள் சீக்கிரம் உங்கள் மன்றாட்டைக் கேட்பார். என் மகன் எளிதில் மனம் இரங்குபவர்.''

சிறுவர் இந்தச் செய்தியை வாசித்து முடிந்ததும், எழுத்துக்கள் ஆகாயத்தில் மறைந்தன. தேவதாய் இரத்தம் போன்ற சிவந்த பாடுபட்ட சுரூபம் ஒன் றைத் தன் கரங்களில் எடுத்தாள். பாடுபட்ட சுரூ பத்தின் மேல் ஒரு குறுக்குக் கம்பி. அதில் “யேசுக் கிறிஸ்து'' என்னும் எழுத்துக்கள். சில நிமிடங்க ளில் பாடுபட்ட சுரூபம் மறைந்தது.

இதுவரை துயரத்துடன் இருந்த அன்னையின் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. புதுமைச் சுரூ பத்தில் இருப்பதுபோல் அவளது கரங்கள் கீழ் நோக்கி, அங்கிருப்பவர்களின் பக்கமாய் நீட்டப்பட் டன. சிறிது நேரம் தேவதாய் சிறுவர்களையும் பின் னர் கூட்டத்தையும் நோக்கி புன்னகைகாண்பித்தாள் சீக்கிரம் ஒரு வெள்ளை மேகம் தோன்றியது. அதை எல்லோரும் பார்த்தார்கள். அது பெரிதாகி நட்சத் திரங்களாலான முக்கோணத்தை நிரப்பியது. மேகம் பெரிதாக, மாதாவின் உருவம் மறைந்தது..

அன்று மத்தியானத்துக்குப் பின் லவால் நகரை நோக்கி ஜெர்மன் துருப்புகள் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர். திடீரென, யாரும் எதிர்பாராத விதமாய், லெமான் நகரிலிருந்த ஜெர்மன் தளபதி ஷ்மிட் கையில் ஓர் உத்தரவுக் கடிதம் கொடுக்கப்பட் டது. "லவாலைப் பிடிக்க வேண்டாம். பட்டாளம் பத்து மைல் பின் வாங்கட்டும்'' என அதில் எழுதியி ருந்தது பதினொரு நாட்களுக்குப் பின் சமாதான ஒப் பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். போர் முடிந்தது.

1871 ஜனவரி 17-ம் நாள் இரவில் லவாலுக்கு வெளியே இருந்த ஜெர்மன் வீரர்கள் “தேவதாய் இந் நாட்டுக்குக் காவல் புரிகிறாள், நாம் முன்னேறு வதைத் தடுக்கிறாள்'' என்று பேசிக் கொண்டார்கள் என்னும் செய்தி வெகு சீக்கிரம் அப்பக்கமெங்கும் பரவியது. மாதா ஆகாயத்தில் மறைந்த அதே தரு ணத்தில் தளபதி கையில் கடிதம் கிடைத்தது என பின்னர் அறிந்தனர். போன்மேன் நாயகியே தங்கள் நாட்டைக் காப்பாற்றியதாக பிரான்சின் மக்கள் கூறு கிறார்கள். "நிலை எவ்வளவு மோசமாயிருந்த போதி லும் பரலோக இராக்கினியை நோக்கி, விடாது பிர மாணிக்கமாய் உருக்கத்துடன் ஜெபித்தால், மிகப் பெரிய புதுமையும் நடைபெறும் " என அவர்கள் சொல்கிறார்கள்.

இந்தக் காட்சி உண்மையா என விசாரணை நடக் தது..' நெடு நாட்களுக்குப் பின் மேற்றிராணியார் உண்மையென அதை அங்கீகரித்து, “போன்மேனில் காட்சியளித்த நம்பிக்கையின் நாயகி” என அன்னையை அழைக்க அனுமதியளித்தார்.

செசார் பார்பதெத் என்பவரின் இல்லிடம் கோயி லாக்கப்பட்டது. அங்கு பல அதிசயங்கள் நடைபெற் றன. 1899-ம் ஆண்டு மாதாவின் பரலோக ஆரோப ணத் திருநாளன்று, முதுகெலும்பு நோயால் வருந்திய மரியா வோஜ்வா என்னும் பெண் அங்கு திடீர் சுகம் பெற்றதே மிகப் பெரிய புதுமை. மூன்று வைத்திய நிபுணர்கள் அவளைப் பரிசோதித்து அது புதுமையே என்றார்கள்.

ஆண்டுதோறும் அறுபதாயிரம் முதல் எண்பதா யிரம் மக்கள் போன்மேன் நாயகியின் க்ஷேத்திரத் தைத் தரிசித்து வருகின்றனர். அருகிலிருக்கும் மாவட்டங்களிலிருந்து மக்கள் நடந்தும் வெறுங்காலோடும் திருயாத்திரை செய்கிறார்கள். இரண்டா வது உலகப் போரின்போது அநேகர் அங்கு சென்று, தங்கள் நாட்டைக் காப்பாற்றும்படி மாதாவை மன்றா டினார்கள். அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது.

போன்மேன் நாயகிக்குத் தோத்திரமாக பூசைச் செபங்களும் கட்டளைச் செபங்களும் அமைக்க வேண் டும் என 1919-ம் ஆண்டில் கர்தினால் துபுவா, பாப்ப ரசருக்கு விண்ணப்பம் செய்தார். காட்சியைப் பற்றி விசாரிக்கும் படி பதினைந்தாம் ஆசீர்வாதப்பர் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அது முடிய நெடுநாள் பிடித் தது. அது முடிய இருக்கும் தருணத்தில் அவர் இறந் தார். பதினோராம் பத்திநாதர் குழுவின் முடிவை ஏற்று புதிய பூசை ஜெபங்களையும் கட்டளை ஜெபங் களையும் அங்கீகரித்தார்.

யுஜீன் மேற்றிராசனக் குருவாகி, 1927-ல் இறந் தார். ஜோசப் மரியாயின் ஊழியர் சபைக் குருவாகி 1930-ல் உயிர் விட்டார். ஜோன் மரி லெபோஸ் திருக் குடும்ப சபைக் கன்னியாகி 1933-ல் மரித்தாள்.

காட்சியின் 75-வது ஆண்டு விழா மிக்க ஆரவாரச் சிறப்புடன் 1946-ல் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்தனர்; பாப்பரசர் தம் பிரதிநிதியை கொண்டாட்டங்களுக்கு அனுப்பினார்.