மறுதாரப் பிள்ளைகள்

புனர் விவாகஞ்செய்த அதாவது இரண்டாம் மூன்றாந்தாரம் முடித்த சில குடும்பங்களில் முற்தாரத்துப்பிள்ளைகள் பலமுறையும் அனுபவிக்கும் வறுமை, தனிமை, துயரம் முதலிய இடையூறுகள் பல. அன்றியும் அவர்களுக்குள்ளவைகளில் சிறியதாய் அல்லது சிறியதகப்பன் உறிஞ்சக்கூடியதெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாய் நாளிலும் பொழுதிலும் உறிஞ்சிக்கொள்வதும் அபூர்வமல்ல. நடபடித் தமிழில், சிறியதாய் சிறிய தகப்பனுக்கு வழங்கும் பெயர்களுக்குப் பதிலாய் நூலாசிரியர்கள் ''மாற்றாந் தாய்'' ''மாற்றாந் தகப்பன் " எனும் மொழிகளை வழங்குகிறார்கள்.

மாற்றானென்பது சத்துரு. ஆனாலவர்கள் பதிற்தாய் தந்தையென்னுங் கருத்தில் அம்மொழிகளை உபயோகிக்கிறார்கள். என்றாலுஞ் சில சிறியதாய் தகப்பன்மாரின் நடக்கை சத்துரு என்னுங் கருத்துக்கே இலக்காயிருக்கிறது. இவர்களுக்குத் தங்கள் வீடுவாசலில் முற்தாரத்து மக்களிருப்பது கூட ஏதோ பெரும் அலுப்பும் ஆக்கினையும் அரிகண்டமும் போலிருக்கிறதினால், அவர்களை வாக்கு மாறின பேரன் பேர்த்தியிடம் அனுப்பி, அங்கு தங்களெண்ணப்படி நடந்து கெட்டலைந்து போக விட்டுவிடுவார்கள். கூடுமானால் அவர்களைத் தரும சாலைகளுக்கு அல்லது கூலிப்பிழைப்புக்கு அனுப்பவும் பின்னிடார்கள். வீட்டிலிருந்தாலும் பிற்தாரத்துப்பிள் ளைகள் செல்வருக்கிருக்க, முற்தாரத்துப்பிள்ளைகளே வே லைகாரருக்குரிய வீட்டுவேலைகளெல்லாஞ் செய்யவேண் டியவர்களாகிறார்கள். .

இனி அவர்கள் கேட்கும் பேச்சும், படும் அடியாக்கி னையுங் கொஞ்சமல்ல. பலமுறையும் அவர்கள் இவைகளைத் தாங்கமாட்டாமல் வீட்டைவிட்டு அயலில் அலைந்து திரி வார்கள். இவ்விதசமயங்களில் சிறியதாய் தகப்பன் அய லாரின் பழிக்குத் தப்பும்படி தங்களில் யாதொரு குற்ற முமில்லையென்றும், தாங்கள் அவர்களுக்காகப்படும் பிர யாசம் கடவுளுக்கு மாத்திரந் தெரியுமென்றும், அந்தப் பிள்ளைகளின் நடை குணம் கூடாதென்றும் விதம் வித மான கதைகளையெல்லாம் முடிவார்கள். இவையெல்லாம் வற்றையும் உலகம் நம்புமென்று நினைக்கிறார்கள் போலும்!

அந்தப்பிள்ளை களிலுள்ள குறைகுற்றங்களைத் தயவாய்த் திருத்தி நல்வழியில் நடப்பிக்கவேண்டியவர்கள் இவர்க ளல்லவா?
அல்லாமலும், சிறியதாய்தந்தையர்கள் தாங்கள் தண்டித்தால் பிள்ளைகள் மனம் நோவார்களென்றும், அய லார் அநீதமாய்க் குற்றஞ்சொல்லுவார்கள் என்றும் எண் ணி, அவர்களைத் தங்கள் இட்டப்படி நடந்து கெட்டுப் போகவிடுவதும் தேவபழிக்குரியதாம். இவ்வித முறைகே டான இளக்காரத்துக்கு நேரெதிராய்ச் சிலர் செய்யும் அநியாயங்கள், குரூரங்களைச் சிலசமயங்களில் அரசாட் சியார் தாமும் தலையிட்டுத் தடுக்கவேண்டியதாகின்றது. ''தந்தையற்ற பிள்ளைகளுக்கு நீதி செலுத்துகையில் தகப் பனைப்போல் இரக்கங்காண்பி. அவர்களுடைய தாய்க் குக் காவலாளியைப்போலிரு. தேவன் தாயைவிட உன் "மட்டில் அதிக இரக்கங்கொள்வார்.'' (சர்வ பிரசங்கி 4, 10)

அப்பிள்ளைகளுக்கு இடையூறு பண் ணுகிறவன் அவர்களைத் தன்னிடம் ஒப்படைத்த தேவனுக்கே யூதாஸ்கரியோத்தைப்போல நம்பிக்கைத் துரோகஞ்செய் கிறான். அதன் பயனாக '' அவனுடைய நியாயம் விசாரிக் கப்படும்போது அவன் குற்றவாளியாகக் காணப்படுவான். அவனுடைய ஆயுசு குறைந்து போகக்கடவது. அவனுடைய பிள்ளைகள் தகப்பனில்லாதவர்களாகவும், அவன் மனைவி விதவையாகவும் ஆகக்கடவாள். அவன் பிள்ளைகள் ஆங்காங்கு அலைந்து திரிந்து பிச்சையெடுக் கக்கடவார்கள். அவர்கள் தங்கள் வாசஸ்தலங்களினின் று துரத்தப்படக்கடவார்கள்...... அவனுடைய சந்ததி நிர்மூலமாகக்கடவது. ஒரே தலைமுறையில் அவன் பேர் அற்றுப்போகக்கடவது... அவன் இரக்கங்கொள்ள நினை யாமல் போனபடியால் அவர்களுடைய (அவன் பிள் ளைகளுடைய) ஞாபகம் பூமியிலற்றுப்போகக்கடவது.'' (சங்கீதம் 108; 6-15)

இவ்வித தேவபழிக்குத் தப்பவேண்டுமாகில் பிற்தா சத்துப் பிள்ளைகளைப்போல் முற்தாரத்துப் பிள்ளைகளை யும் சமனாய் நேசித்துக் காப்பாற்றவேண்டும். ஆனால் முற்தாரத்துப் பிள்ளைகளும் தங்கள் சிறியதாய் தந்தை யர்கள் தங்களுடைய பெற்ற தாய் தந்தையரைப் போலத் தங்களுக்குத் தேவனுடைய ஸ்தானாதிபதிகளாயிருக்கிறார் களென்பதை மறந்து போகாமல் அவர்களை நேசித்துக் கனம்பண்ணி அவர்களுக்குப் பணிந்து தக்க உதவி செய்து வரவும், அவர்கள் கொடுக்கும் புத்திமதிகளையும் இடுந் தண்டனைகளையும் நல்ல மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் பெருங் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது நிச்சயம்.

சோரப்புருஷன் தன் விபசாரத்தின் பயனாகத் தனக் குப்பிறந்த பிள்ளைகளை வெட்கத்துக்கஞ்சித் தன்னுடையவர்களல்லவென்று மறுப்பதும், அவர்களைச் சரியாய் வளர்க்காமலும், படிப்பியாமலும் தரித்திரப்பட்டு அலைந்துலைந்து திரிய விடுவதும் பெரும் பாதகமாம். இவர்கள் சோரப்பிள்ளைகளானாலும், இவர்களை ஈன்ற தாய் தந்தையரே சுபாவ முறைப்படி இவர்களுக்கு மெய்யான பெற்றோரும், இவர்களைத் தங்கள் பிள்ளைகளாக நேசித்து வளர்க்கத் தேவநீதிப்படி பாரமான கடமையுள்ளவர்க ளுமாயிருக்கிறார்கள். அப்படி நடவாவிடில் அது சுபாவ முறைக்கும், மனுத்தன்மைக்கும் மாறாகி மிருகத்தன்மையிலும் மிகக் கீழாய்ப்போய்விடும். இவர்கள் சோரப்பிள்ளைகளானதற்கு இவர்களல்ல பெற்றோரே காரணர்கள். ஆகையால் குற்றவாளிகள் இப்பிள்ளைகளல்ல, பிதாமாதாக்களேயாம்.