இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நற்கருணை உட் கொண்டபின்

270. நன்மை வாங்கிய பின் உன் உள்ளத்தில் சிந் தனையை ஓடுக்கி கண்களை மூடி சேசுவை மரியாயின் இருதயத்துள் கூட்டிச் செல்ல வேண்டும். அவரை அவர் தாயிடம் ஒப்புவி. அத்தாய் அவரை அன்புடன் ஏற்றுக் கொண்டு மதிப்பிற்குரிய அவரை அமர்த்தி ஆழ்ந்து ஆராதிப்பார்கள். முழுமையாக அவரை நேசிப்பார்கள். அந்நியோன்னியமாய் அவரை அரவணைப்பார்கள். நாம் இருக்கும் ஆழ்ந்த இருளில் நம்மால் அறியமுடியாத வணக்கத்தின் அடையாளங்களை ஞானத்திலும் உண்மை யிலும் அவருக்குச் சமர்ப்பிப்பார்கள்.

271. அல்லது இவ்வாறும் செய்யலாம்: நீ உன் இரு தயத்தில் ஆழ்ந்த தாழ்ச்சியுடன் மரியாயிடம் வாழும் சேசுவின் முன்பாக அப்படியே இருக்கலாம். அல்லது அரசன் அரசியுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது அரண்மனை வாசலில் காத்து நிற்கும் அடிமையைப் போல நீ நிற்கலாம். அவர்களுக்கு நீ அவசியமில்லாத போது நீ உன் உள்ளத்தில் பரலோகத்திற்கும் பூவுலகமெங்கும் பறந்து சென்று, எல்லா சிருஷ்டிகளையும் மரியாயிடம் வாழும் சேசுவை உனக்காக நன்றி கூறி ஆராதித்து நேசிக்கும்படி அழைக்கலாம். "வாருங்கள் ஆராதிப் போம்" (சங். 94, 6).

272. அல்லது இப்படியும் செய்யலாம்: மரியாயுடன் ஒன்றித்து சேசுவைப் பார்த்து, அவருடைய அரசு மாதா வழியாக உலகில் வரும்படி மன்றாடு. அல்லது தேவ ஞானம் என்ற வரத்தையும் தேவ சிநேகத்தையும் கேட் கலாம். உன் பாவங்களுக்கு மன்னிப்பை அல்லது வேறு ஏதாவது ஒரு வரப்பிரசாதத்தைக் கேள். ஆனால் எப்போதும் மாதா வழியாகவும் மாதாவிடத்திலும் அவ் வாறு கேள். உன்னையே தாழ்வாக நினைத்துக் கொண்டு என் பாவங்களைப் பாராதேயும் ஆண்டவரே” (பலி பூசைச் செபம்)-மரியாயின் புண்ணியங்களையும் பேறு பலன்களையும் மட்டுமே என்னில் பாரும் தேவனே''இதன் பின் பாவங்களை நினைத்துக் கொண்டு, 'இதை எதிரி செய்தான்'' (மத். 13, 28)- நான் போராட வேண் டிய பெரிய எதிரி நானே தான். நான் தான் இப்பா வங்களைச் செய்தேன் என்று சொல். அல்லது “தீயவனும் ஏமாற்றுக் காரனுமாகிய மனிதனிடமிருந்து என்னை விடு வித்தருளும்” (சங். 42, 1)- அல்லது 'நீர் வளரவும் நான் குறுகவும் வேண்டும்'' (அரு. 3, 30). ஓ சேசுவே! என் ஆன்மாவில் நீர் வளர வேண்டும். நான் குறுக வேண்டும்' ஓ மரியாயே! நீங்கள் என்னிடம் வளர வேண்டும். நான் இதுவரை இருந்ததை விடக் குறைவாக இருக்கவேண்டும். நீங்கள் பலுகிப் பெருகுங்கள்'' (ஆதி. 1, 28). ஓ சேசுவே! ஓ மாமரி அன்னையே! என்னிலும் என்னைச் சுற்றிலுமிருப் பவர்களிலும் நீங்கள் வளர்வீர்களாக!

273. நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ள இந்தப் பெரிய உந்நதமான பக்தி முயற்சியில் நீங்கள் பிரமாணிக் கமாயும் பரித்தியாகத்துடனும் முழுமன ஒடுக்கத்துடனும் இருப்பீர்களானால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் அநேக நற்சிந்தனைகளை உங்களுக்குத் தருவார். ஆனால் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் நற்கருணை உட்கொள்ளும் போது எந்த அளவுக்கு மரி யாயை உங்களில் செயல்பட விடுகிறீர்களோ அந்த அளவுக்கு சேசு மகிமை பெறுவார். எந்த அளவுக்கு நீங்கள் உங்களையே ஆழ்ந்த விதமாய்த் தாழ்த்தி, அமைதி யிலும் மவுனத்திலும் சேசுவும் மரியாயும் உங்களிடம் பேசுவதைக் கவனித்து, பார்க்கவும் சுவைக்கவும் உணர வும் முயற்சிக்காமல் இருப்பீர்களோ அந்த அளவுக்கு சேசுவுக்காக மாதா உங்களில் செயல்படவும், மரியா யிடம் சேசு செயல் புரியவும் செய்வார்கள். ஏனென்றால் நீதிமான் எல்லாவற்றிலும் விசுவாசத்தால் வாழ்கிறான். விசேஷமாக விசுவாசச் செயலான நற்கருணை உட்கொள் வதில்! "என்னுடைய நீதிமான் விசுவாசத்தால் வாழ் கிறான்'' (எபி. 10, 38).