என் மக்கள் ஜெபிப்பார்களானால்...

மனிதனை உண்டாக்கிய கடவுள் அவன் நடப்ப தற்கென ஒரு வழி வகுத்திருக்கிறார். அந்த வழி அவ ரிடமிருந்து தொடங்கி அவரிடமே திரும்புகிறது. அந்தப் பாதையில் தான் மனிதன் நடந்து செல்ல வேண்டும். உலக சரித்திரத்தை வாசிப்போமானால் பல முறை மக்கள் அந்தப் பாதையை விட்டு விலகி நடந்திருப்பதை அறியலாம். அவர்களைத் திரும்ப கடவுளிடம் கொண்டு சேர்க்க, தீர்க்கதரிசிகளும் அர்ச்சியசிஷ்டர்களும் அப்போஸ் தலர்களும் அவ்வப் போது தோன்றியிருக்கின்றனர். கடந்த ஆறாயிரம் ஆண்டுகளையும் அலசிப் பார்த்தால், மனிதன் நடந்து சென்ற ஆபத்து நிறை பாதைகளினின்று அவனைத் திருப்பக்கூடிய பரிசுத்தவான்களை கடவுள் அனுப்பி வந்திருக்கிறார். கடவுளுடைய தீர்க்கதரிசிகளை உல கம் புறக்கணித்தது; கடவுளோ மனந்தளரவில்லை தம் சொந்த குமாரனையே அனுப்பினார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரைச் சிலுவை யில் அறைந்து கொன்றது.

தன் மக்களுக்காக இதற்கு மேல் கடவுள் என்ன செய்ய முடியும்! கடவுள் அளவற்ற அன்பும் இரக்கமு முள்ளவர். தம் மக்களை அப்படியே இருளின் பாதை யில் நடந்து நாசமடைய விட்டுவிடவில்லை. தம் சிருஷ்டிகளிலேயே மிகப் பெரிதும் மிகத் தூய்மை யானதும், நேசம் நிறைந்ததும், நேசிக்கப்படப் பாத்திரமானதுமான சிருஷ்டியை கடந்த நூறு ஆண்டுகளில் பலமுறை கடவுள் அனுப்பியிருக்கிறார். அந்த சிருஷ்டி கடவுளுடைய மாதாவே.

அந்த அன்னை 1830-ம் ஆண்டில் கத்தரீன் லபூரே என்னும் பெண்ணுக்குத் தோன்றி, “ஒரு நாள் வரும், அப்பொழுது எங்கும் ஆபத்து சூழ்ந்தி ருக்கும். மீட்பின் நம்பிக்கையில்லை எனத் தோன் றும். ஆனால் நம்பிக்கையுடனிரு.......... அதைரியங் கொள்ளாதே; நான் உன்னுடனிருப்பேன்..... மகளே, சிலுவையை நிந்திப்பார்கள், காலால் மிதிப் பார்கள். நம் ஆண்டவருடைய விலா திரும்பவும் ஊடுருவப்படும். தெருக்களில் மானிட இரத்தம் ஓடும், அகில உலகும் துயரத்திலாழ்ந்திருக்கும் " என்றாள்.

வேதாகமத்தின் முதற் புத்தகத்தில் முன்னறி விக்கப்பட்டிருப்பது போல் பாம்பின் தலையை நசுக் கும்படி தான் வருவதாக மாமரி அறிவித்தாள். ஆனால் ஒரு நிபந்தனையை அந்த அன்னை விதித்தாள். “மக்கள் ஜெபிக்க வேண்டும். ஜெபிக்கும் யாவருக் கும் வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படும்.''

மாமரி விடுத்த செய்தியை மக்கள் மதிக்கவில்லை. அன்னை மனம் மடியவில்லை, திரும்பவும் வந்தாள். லாசலெத் என்னும் இடத்தில் கடவுளின் இரண்டா வது எச்சரிப்பைத் தெரிவித்தாள். கார்கா ஸ் மலை யில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இரு சிறுவர்களுக்கு 1846-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் நாள் அன்னை தோன்றி, ''நான் சொல்கிறபடி என் மக்கள் செய்யாவிட்டால், நான் பிடித்துத் தடுத்தி ருக்கும் என் மகனுடைய கையை விட்டு விட வேண்டி வரும் ” என்றாள்.

உலகத்தைத் தண்டிக்கும்படி தேவசு தன் தன் கரத்தை நீட்டியிருக்கிறார். இதுவரை அன்னை அதைப் பிடித்து, உலகைத் தண்டியாதபடி தடுத்து வந்திருக்கிறாள். ஆனால் மக்கள் இன்னும் தொடர்ந்து பாவம் செய்வார்களானால், அன்னையின் எச்சரிப்புகளுக்குச் செவிகொடாது போவார்களானால், தேவ தாய் தன் மகனுடைய கரத்தை விட்டு விடும்படி வற்புறுத்தப்படுவாள். பின் உலகின் கதி என்ன?

"மக்கள் திவ்விய பூசை காணவேண்டும், இரண் டாம் கற்பனையை அநுசரித்து கடவுளுடைய நாமத்தை வந்திக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை களில் பூசை காண வேண்டும், வேலை செய்யக் கூடாது.'' இவைகளை மக்கள் கவனிக்காவிடில் பெரும் ஆபத்துக்கள் ஏற்படும். “நன்றாக ஜெபியுங் கள்...... இதை என் மக்கள் யாவருக்கும் அறிவியுங் கள்'' என அன்னை மொழிந்தாள்.

மாமரி தன் மக்களுக்கு எச்சரிப்பு கொடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தன. அவளுடைய மக்கள் அதை சட்டை பண்ணவில்லை. ஆனால் அந்த அன்புள்ள அன்னை தன் பிரமாணிக்கமற்ற மக்களை அந்நிலையில் விட்டுவிடவில்லை. இன்னொரு முறை வந்தாள். அவர்களைக் காப்பாற்ற இன்னும் ஒரே ஒரு வழி தான் இருந்தது. “தவம் செய்யுங்கள், தவம் செய்யுங்கள், தவம் செய்யுங்கள்'' “தவம், ஜெபம்'' என்றாள்.

இந்தச் செய்தியை "என் மக்களுக்கு'' அறிவிக் கத் தெரிந்துகொள்ளப்பட்டவள் பெர்நதெத். தான் வந்ததன் ஞாபகார்த்தமாக வற்றாத ஒரு சுனையை அன்னை தந்து சென்றாள். அங்கு பக்தியுடன் ஜெப மாலை ஜெபிக்கும் அவளது மக்களில் அநேகர் சுகம் பெறுகின்றனர்.

நான்காம் முறையாக ஐயர்லாந்திலுள்ள ஒரு சிற்றூரில் (Knock) தேவதாய் காட்சியளித்தாள். காட்சியாகமத்தில் கூறப்பட்டிருக்கும் சூரியனை அணிந்த பெண் போல் அவள், மேற்றிராணியாருக் கும் அர்ச். அருளப்பருக்கும் திருக்குடும்பத் தலைவராகிய அர்ச். சூசையப்பருக்கும் மத்தியில் நின்றாள். வலது பக்கத்தில் ஒரு பீடம். அதில் செம்மறிப்புரு வையானவர் நின்றார். அதன் இருதயத்திலிருந்து இரத்தம் ஊற்றெடுத்துப் பாய்ந்து ஒரு தங்கப் பாத் திரத்தில் விழுந்தது. இம்முறையும் மாமரி தன் மக்களை எச்சரித்தாள்: “குருக்களின் சொல்லுக்குக் கீழ்ப்படியுங்கள் : பூசைக்குப் போங்கள்; கடவுள் விரும்புவது போல் குடும்ப வாழ்க்கை நடத்துங்கள்.''

பிரான்ஸ் நாட்டிலுள்ள போன்மேன் ஊரில் இரு சிறுவர்களுக்கு தேவதாய் காணப்பட்டாள். அவள் கொண்டு வந்த செய்தி வானத்தில் எழுதப் பட்டிருந்தது: “என் மக்களே, ஜெபியுங்கள். சீக்கி ரம் கடவுள் உங்கள் ஜெபத்துக்கு செவி சாய்ப்பார். என் மகன் எளிதில் மனம் இளகுகிறவர்.''

அதே நேரத்தில் ஜூவான் என்ற இடத்தில் இருந்த ஜெர்மன் தளபதி ஷ்மிட் போரை நிறுத்தும் படி துருப்புகளுக்கு உத்தரவிட்டு, பின் வாங்கிச் சென்றார். “தேவதாய் தோன்றி நம்மைப் பின்வாங் கச் சொல்லியிருக்க வேண்டும்'' என போர்வீரர்க ளும் அதிகாரிகளும் தங்களுக்குள் பேசிக்கொண்ட னர். ஆம், உண்மைதான். இன்னொரு முறை பிரான்ஸ் நாட்டை பகைவரிடமிருந்து தேவதாய் காப்பாற்றினாள்.

பெல்வாசின் ஊரில் ஒரு வேலைக்காரப் பெண் காச நோயினால் சாகக் கிடந்தாள். தேவ அன்னை அவளுக்குத் தோன்றி அவளைக் குணப்படுத்தியது டன், பின்னும் பல முறை அவளைப் பார்க்க வந்தாள். "பாவிகளின் மனந்திரும்புதலுக்காக நான் வருகி றேன்... என் இருதயத்தை அவருடைய இருதயம் எவ்வளவு நேசிக்கிறதென்றால், நான் கேட்கிறதை அவர் இல்லை என்று சொல்ல முடியாது. என் மூல மாக மிகக் கடின இருதயங்களையும் அவர் இளகச் செய்வார்.''

'எந்த அந்தஸ்தில் இருந்துகொண்டும் ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ளலாம். நீ இப்பொழுது இருக்கிற அந்தஸ்தில் இருந்துகொண்டே ஏராள மாக நன்மை செய்யலாம், என் மகிமையைப் பகிரங் கப்படுத்தலாம்.'' உலகத்தில் இருந்துகொண்டே கட வுளுடைய அலுவலையும் மாமரியின் வேலையையும் செய்ய வேண்டியிருக்கும் அநேகருக்கு இந்த வார்த் தைகள் வெகு ஆறுதல் தரும்.

தேவதாய் தன் விருப்பங்களையும் எச்சரிப்புகளையும் 1917-ம் ஆண்டு பாத்திமாவில் திரும்பவும் அறிவித் தாள். தவம் செய்யும்படி, ஜெபிக்கும்படி மூன்று சிறுவர்கள் மூலமாய் உலகுக்கு எடுத்துரைத்தாள். "பரித்தியாகங்கள் புரியுங்கள். கடவுள் உங்களுக்கு அனுப்பச் சித்தங்கொள்ளும் வேதனைகளையெல்லாம், கடவுளை மனநோகப்பண்ணும் கணக்கற்ற பாவங் களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்புவ தற்காகவும், என் மாசற்ற இருதயத்துக்கு விரோத மாகச் சொல்லப்படும் சகல தூஷணங்களுக்கும் மனி தர் கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கும் பரிகாரமாக வும் முழு மன துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.''

ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்கும்படி அவள் திரும்பத் திரும்ப உருக்கமாய்க் கேட்டுக் கொண்டாள்: அதைச் சரியாக ஜெபிக்கும்படி, அதா வது. தேவ இரகசியங்களைப்பற்றி சிந்தித்து ஜெபிக் கும்படி கேட்டாள்.

நம் மாசற்ற அன்னையின் வேண்டுகோளுக்கு மக்கள் செவி சாய்ப்பார்களானால், உலகில் சமாதான மும் சுபீட்சமும் ஏற்படும். அதைத் திண்ணமாய்க் அன்னை கூறியிருக்கிறார். அதற்கு அவள் விதித்திருக்கும் நிபந்தனைகள் ஜெபமும் தவமுமே. மிக வல்லமையுள்ள ஜெபமான ஜெபமாலை நாள்தோறும் ஒவ்வொரு குடும்பத்திலும் சொல்லப்பட வேண்டும். ஒவ்வொருவனும் தன் அந்தஸ்தின் கடமைகளை சரிவர நிறைவேற்ற விரும்பினால் பல பரித்தியாகங்கள் செய்ய வேண்டும், அவைகளைத் தபசாக ஏற்றுச் செய்ய வேண்டும். இவ்விரு நிபந்தனைகளும் கடினமல்லவே.

முதன் முறை மாதா வந்தபோது “உலகம் கெட்டுப்போயிருக்கிறது'' என எச்சரித்தாள். இரண்டாம் முறை வந்தபோது, “ஆனால் மக்கள் தபசு செய்வார்களானால்...'' என்றாள். “எல்லா ஜனங்க ளுக்கும் சொல்லுங்கள்'' என அன்னை திரும்பத் திரும்பச் சொன்னாள். 'போதுமான தொகையினர் என் வேண்டுகோளை நிறைவேற்றியதும் " ருஷியா மனந்திம்ருபும், உலகத்தில் சமாதானம் ஏற்படும் என்ற அன்னையின் கடைசி வாக்குறுதியை எவரும் சந்தேகிக்கலாகாது.

வெறுமனே, 'தாயே, தாயே' எனக் கூவியழைத் தால் பயனில்லை. உன் குடும்பத்தினர் மாமரியின் வேண்டுகோளுக்கு இணங்கி நடக்கின்றனரா என்று நேர்மையுடன் உன்னையே கேட்டு பதில் சொல். பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விடாதே. இன்றே தொடங்கு. உலகின் சமாதான மும் சுபீட்சமும் உன் கையில் இருக்கிறது. நீ தேவ தாயின் விருப்பங்களை நிறைவேற்றத் தொடங்கிய தும், “போதுமான தொகையினர் " ஒருவேளை சேர்ந் துவிடலாம்.