சேசு கூறுகிறார்

21 மார்ச்  1944.

அன்புள்ள ஆத்துமமே, என் குழந்தைப் பருவத்தின் ஒரு காட்சியினால் உனக்கு ஆறுதல் வருவித்தேன்.  அதன் வறுமையில் அது மகிழ்ச்சிகரமாயிருந்தது.  ஏனென்றால் உலகம் கண்டுள்ள மகா பெரிய அர்ச்சிஷ்டவர்கள் இருவரின் அன்பினால் என் குழந்தைப் பருவம் சூழப்பட்டிருந்தது.

சூசையப்பர் என்னை வளர்த்த தந்தை என்கிறார்கள்.  ஓ! அவர் ஒரு மனிதனாயிருந்ததால் என் தாயைப் போல் அவர் எனக்கு அமுதுணவு கொடுக்க முடியாவிட்டாலும், எனக்கு ஆகாரமும் வசதிகளையும் தருவதற்காக உண்மையிலே மிகவும் கடினமாக உழைத்தார்.  அவரிடம் ஓர் உண்மையான தாயின் அன்பான காருண்யம் இருந்தது.  அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.  எந்த ஒரு மாணவனுக்கும் என் ஆசிரியரைப் போல் அன்புள்ளவர் இருந்ததில்லை.  ஒரு குழந்தை ஒரு மனிதனாவதற்கும் தன் கையால் சம்பாதிப்பதற்கும் தேவையானதையெல்லாம் அவரிடம் நான் கற்றேன்.

தேவ சுதனான என்னுடைய அறிவு பரிபூரணமாயிருந்தது.  ஆயினும் இதை நீங்கள் சிந்தியுங்கள்; நம்புங்கள்;  நான் என் வயதிற்குரிய குணங்களிலும், முயற்சியால் பெற்றுக் கொண்டவை களிலும் வெளிப்படையாய் வேறுபட்டிருக்க விரும்பவில்லை.  ஆதலால், என்னுடைய தெய்வீக அறிவின் பூரணத்தை மனித அறிவின் பூரணத்திற்கு தாழ்த்தியதால் ஒரு மனிதனை எனக்கு ஆசிரியராக வைத்துக் கொள்வதற்கும் ஓர் உபாத்தியாயருடைய தேவைக்கும் என்னை நான் உட்படுத்தினேன்.  நான் துரிதமாகவும் விரும்பியும் கற்றுக் கொண்டேனென்றால், அதனால் என்னை மனிதனுக்குக் கீழ்ப்படுத்திய பேறுபலனை நான் இழந்து    விடவில்லை.  மேலும் வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை என்னுடைய இளம் மனதிற்கு ஊட்டிய பேறுபலனை அந்த நீதிமானும் இழக்கவில்லை.

இப்பொழுது நான் மோட்சத்தில் இருக்கிற போதும் சூசையப்பரின் பக்கத்தில் நான் கழித்த மகிழ்ச்சிகரமான நேரங்களை என்னால் மறக்க முடியவில்லை.  அவர் நான் உழைக்கக்கூடிய அளவிற்கு விளையாட்டுப் போல் என்னை வழிநடத்தினார்.  நான் என்னை வளர்த்த தகப்பனைப் பார்க்கும்போது, அந்தச் சிறு காய்கனித் தோட்டத்தையும் புகை மண்டும் தச்சுப் பட்டரையையும் மறுபடியும் காண்கிறேன். தன் அழகிய புன்முறுவலோடு என் அன்னை அங்கு எட்டிப் பார்த்து அவ்விடத்தை ஒரு மோட்சமாக மாற்றி எங்களை மிக சந்தோஷப்படுத்தியதையும் காண்கிறேன்.

வேறு எவரும் நேசியாத அளவிற்கு ஒருவரையயாருவர் நேசித்த இவ்விருவரின் உத்தமதனத்திலிருந்து குடும்பங்கள் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது!

சூசையப்பர் குடும்பத்தின் தலைவர்.  அவருடைய அதிகாரம் கேள்விக்குரியதல்ல - கேள்வி கேட்கப்படவுமில்லை.  அவருடைய அதிகாரத்திற்கு கடவுளின் தாயும் பதியுமான மாதா வணக்கத்துடன் பணிந்தார்கள்.  தேவ குமாரனும் விருப்பத்தோடு அதற்குக் கீழ்ப்படிந்தார்.  சூசையப்பர் எதைச் செய்ய தீர்மானித்தாரோ அது செவ்வனே செய்யப்பட்டது.  வாதங்களும் நுணுகிப் பார்ப்பதும் எதிர்ப்பும் அங்கு கிடையாது.  அவருடைய சொல் எங்களுக்கு சின்னக் கட்டளை.  ஆயினும் அவரிடம் எவ்வளவு தாழ்ச்சி இருந்தது!  அதிகார துஷ்பிரயோகம் ஒருபோதும் அங்கு இருந்ததில்லை.  அவர் தலைவர் என்பதற்காக புத்திக்கெதிரான தீர்ப்பு எதுவுமே செய்ததில்லை.  அவருடைய மணவாளி அவருக்கு  இனிய ஆலோசகர்.  அவர்களின் ஆழ்ந்த தாழ்ச்சியினால் அவர்கள் சூசையப்பரின் ஊழியக்காரியாக தன்னைக் கருதினாலும், அவர் அவர்களின் நிறை வரப்பிரசாத ஞானத்திலிருந்து எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னை வழிநடத்தும் ஒளியைப் பெற்றுக் கொண்டார்.

அந்த இரு அன்புகளும் என்னைக் காக்கவும் நேசிக்கவும், எனக்கு மேலே ஒன்றுடன் ஒன்று பின்னிப் படர்ந்திருக்க, பலத்த மரங்களால் பாதுகாக்கப்பட்ட மலரைப்போல் நான் வளர்ந்து வந்தேன்.

என்னுடைய வயதினிமித்தம் இந்த உலகத்தை நான் கவனிக்காமல் இருந்த முடிந்த காலம் வரையிலும் மோட்சத்தில் நான் இல்லாததைப் பற்றி எனக்கு வருத்தம் ஏற்படவில்லை.  பிதாவும் இஸ்பிரீத்துசாந்துவும் இல்லாமலில்லை.  ஏனெனில் மாமரி அவர்களால் நிறைந்திருந்தார்கள்.  சம்மனசுக்கள் அங்கே குடியிருந்தார்கள்.  ஏனெனில் அவ்வில்லத்திலிருந்து எதுவும் அவர்களை விரட்டவில்லை.  அந்த சம்மனசுக்களில் ஒருவர் மாம்சமெடுத்திருந்தார் என்று நான் கூறுவேன்.  அது சூசையப்பரே.  அவர் மாம்சத்தின் பளுவிலிருந்து விடுபட்ட சம்மனசு ஆன்மாவாக இருந்தார். அவருடைய கவனமெல்லாம் கடவுளுக்கும் அவருடைய காரியங்களுக்கும் ஊழியம் புரிவதுதான்.  செராபின் தூதர் கடவுளை நேசிப்பதுபோலவே அவரும் நேசித்தார்.  சூசையப்பருடைய பார்வை எப்படியிருந்தது!  உலக ஆசாபாசம் அறியாத ஒரு நட்சத்திரத்தின் பிரகாசத்தைப்போல் அமைதியாயும் தூய்மையாயும் இருந்தது.  அது எங்கள் சமாதானமும் பலமுமாயிருந்தது.

எங்கள் இல்லத்தின் காப்பாளருடைய விழிகள் மரணத்தால் மூடப்பட்டபோது, ஒரு மனிதனாக நான் வேதனைப்படவில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.  நான் கடவுளாயிருப்பதால் சூசையப்பருடைய பாக்கியமான கதி எனக்குத் தெரிந்திருந்தது.  அந்த முறையில் நான் அவருடைய மரணத்தைப் பற்றி வருத்தப்படவில்லை.  ஏனென்றால் பாதாளத்தில் கொஞ்சக்காலம் இருந்தபின் அவருக்கு நான் மோட்சத்தைத் திறந்து கொடுப்பேன்.  ஆனால் மனிதன் என்ற முறையில் நான் அவர் இல்லாத வெறும் வீட்டில் கசந்து அழுதேன்.  இறந்துபோன என் நண்பருக்காக அழுதேன்.  என் புனித சிநேகிதரின் பிரிவு பற்றி நான் ஏன் அழக்கூடாது?  நான் சிறுவனாயிருந்தபோது அவருடைய மார்பில் உறங்கினேன்.  அத்தனை ஆண்டுகளிலும் அவருடைய அன்பை எவ்வளவு பெற்றிருந்தேன்! 

இறுதியாக, பாடபோதனை இல்லாமலே அர்ச்.  சூசையப்பர் என்னை ஒரு திறமையான தொழிலாளி ஆக்கினார் என்பதை பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.  ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு நான் வளர்ந்ததிலிருந்தே நான் சோம்பலாயிருக்க அவர் விடவில்லை.  என் வேலையை அவர் ஆரம்பித்து வைத்தார்.  எனக்கு என் தாயின் மீதிருந்த அன்பைப் பயன்படுத்தி என்னை உழைக்கத் தூண்டினார்.  அவர்களுக்கு நான் உபயோகத்திற்குரிய ஜாமான்களைச் செய்து கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு மகனும் தன் தாயின்மீது கொள்ள வேண்டிய மரியாதையை இவ்வாறு அவர் எனக்குப் புகட்டினார்.  வருங்கால தச்சுத் தொழிலாளிக்கு அவர் போதித்தவை இந்த அன்பும் மரியாதையுமான ஊக்குதலிலே அடிப்படை கொண்டதாகும்.

தங்கள் பெற்றோருக்குப் பிரியப்படும்படியாக உழைப்பை விரும்பும்படி சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிற குடும்பங்கள் இன்று எங்கே உள்ளன?  இக்காலங்களில் குழந்தைகள் குடும்பங்களின் சர்வாதிகாரியாக இருக்கிறார்கள்.  குழந்தைகள் பெற்றோர் மட்டில் கடினப்பட்டவர்களாயும், நிர்க்கவலையாயும், மரியாதையற்றவர்களாயும் வளருகிறார்கள்.  பெற்றோர்கள் தங்களின் வேலைக்காரர்கள் அடிமைகள் என்று கருதுகிறார்கள்.  குழந்தைகள் பெற்றோரை நேசிப்பதில்லை, அவர்களால் நேசிக்கப்படுவதுமில்லை.  காரணம் என்னவென்றால், குழந்தைகள் நியாயமற்ற முறையில் ஆதிக்கஞ் செலுத்துகிறவர்களாயிருப்பதற்கு பெற்றோர் விட்டு விட்டு, பின் அவர்களைப் பற்றி வெட்கத்துக்குரிய நிர்க்கவலையால் அவர்களிடமிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு பெற்றோரே!  உங்கள் பிள்ளைகள் உங்களுக்குத் தவிர மற்ற எல்லாருக்கும் பிள்ளைகளாயிருக்கிறார்கள்.  நீங்கள் வசதி படைத்தவர்களாயிருந்தால் உங்கள் பிள்ளைகள் செவிலித்தாய்க்கும் தாதிப் பெண்ணுக்கும் கல்விச் சாலைக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.  நீங்கள் ஏழைகளாயிருந்தால் அவர்களுடைய தோழர்களுக்கு அவர்கள் சொந்தமாயிருக்கிறார்கள்;  தெருவீதியின்  பிள்ளைகளாயும் பள்ளிக்கூடத்தின் பிள்ளைகளாயு மிருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமாயிருப்பதில்லை.  தாய்மாரே, குழந்தைகளை நீங்கள் பெற்றெடுக்கிறீர்கள்.  அவ்வளவே.  தந்தைமாரும் அப்படியே.  ஆனால் ஒரு மகன் என்பவன் மாம்சம் மட்டுமல்ல.  அவனுக்கொரு மனம், ஒரு இருதயம், ஒரு ஆன்மா உள்ளது.  அந்த மனதையும் இருதயத்தையும் ஆன்மாவையும் உருவாக்குவதற்கு ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் இருக்கிற உரிமையும் கடமையும்போல வேறு யாருக்கும் இல்லை என்கிறேன் - என்னை நம்புங்கள்.

குடும்பம் என்பது தேவையானது.  குடும்பம் இருக்கிறது.  அது இருக்கவே வேண்டும்.  அழிவை ஏற்படுத்தாமல் இந்த உண்மையை உடைக்கக்கூடிய எந்த சித்தாந்தமும் முன்னேற்றமும்