இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஒரு மகா பெருங் குருட்டாட்டம்

பிள்ளைகளைப் படைத்துப் பெற்றோரிடம் ஒப்படைத்த கடவுள் அவர்கள் சிலகாலம் வியாதியாய்க் கிடக்கும்படி விடச் சித்தமாகும்போது அவ்வியாதியைத் தீர்க்கப் பிரயோகிக்கும் வழிபாடுகள் சித்தியாமற்போனால் சில அன்னை பிதாக்கள் அங்கலாய்ப்புக்கொண்டு பேய்க்கிருத்தியங்களைச் செய்து அல்லது செய்வித்து அதினால் தேவ பழியைத் தேடிக்கொள்ளுகிறார்கள்.

இது பிள்ளைகளை நேசிக்க வேண்டிய சரியான முறைக்கு முழு மாறு. சபிக்கப்பட்ட இச்செய்கைக்குக் காரணர் பெரும்பாலும் போலிவைத்தியர்களாம். அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பிசாசு என்றவாறு அறிவிற் குறைந்த பேதைப்பரிகாரிகளுக்குப் பிணியெல்லாம் பேயாகும். திறமானவைத்தியர்கள் இவ்வெளிய பேய்த்தொழிலைப்பற்றி வெட்கப்படுவார்கள். ஆனால், மூடவைத்தியர்கள் நோயாளிக்குக் கைநாடி பார்ப்போர் போல் பாசாங்குபண்ணி விட்டு அனுங்கிப் பதுங்கி காற்று அணுகி நிற்குது, ஓதிப் பார்க்கவேணும், நூல்கட்டவேணும், மடைபோடவேணும், அதற்கு இன்னின்ன சாமான் தேவையென்பார்கள்.

இதெல்லாம் அவகடமாயுந் தங்கள் வயிறு வளர் க்கவுமென்று செய்யும் பாசாங்கேயல்லாமல் நோய்தீரும் வழியல்ல. இச்சால் மாலங்களை நம்பி வேண்டியவை த்தியஞ்செய்வியாமல் மக்களை மாளவிடும் அன்னை பிதாக்களும் ஐயையோ பலருண்டே. அவிசுவாசிகள் பெரும்பாலும் பேய்க்காரியங்களைச் செய்விக்கிறார்களே, செய்விப்பதினால் அவர்கள் மக்கள் எல்லாரும் மாளாமற் தப்பி விடுகிறார்களா? தேவபழிக்குப் பயந்து இப்படிச் செய்வி யாமல் விடுகிறவர்கள் அனைவரும் மாண்டுபோகிறார்களா?

இதையிட்டு ஒருசங்கதி சொல்லுவோம் : சத்தியவேதத் தைக் கைக்கொண்ட ஒரு சைவருக்கு ஒரேயொருமகன் இருந்தான். இம்மகனுக்கு ஏறக்குறைய பன்னிரண்டு வயது நடக்கையில் வியாதியில் விழுந்து ஈரொட்டான நிலையிலிருந்தமையால் அவனுடைய பிறசமய இனபந்து க்கள் ஏதோ சில பேய்க்கிருத்தியங்களைச் செய்விக்கும்ப டி தகப்பனை வெகுவாய் நெருக்கினார்கள். சொல்லொ "ண்ணாத துயர் நிறைந்த இந்தத் தந்தை அவர்களுக்கு ம றுமொழியாக : என் பிள்ளை யைப் படைத்தவர் அதை இவ்வளவு சீக்கிரத்தில் அழைத்துக்கொள்ளச் சித்தமா யிருந்தால் அழைத்துக்கொள்ளட்டும். ஆனால் இவ்வித துரோகத்தைச் செய்து நானும் என் குடும்பமும் அவரு க்குச் சத்துராதிகளாய்ப்போக நான் ஒருபோதும் உடன் படேனென்று உறுதியாய்ச் சொன்னார். அன்றிரவு வியா தியின் உக்கிரத்தால் பையன் பேச்சு மூச்சற்று மூர்ச் சையாய்ப்போக அக்கம்பக்கமிருந்தவர் ளெல்லாரும் இனி முடிந்ததென்றெண்ணி வழமைப்படி ஓலமிட்டழுதார் கள். ஆனால், விடியுமுன்னே பையன் மூர்ச்சை தெளிந் து படிப்படியாய்ச் சுகப்படத் தொடங்கிக் கொஞ்ச நாட்களுள் பூரண சௌக்கியமடைந்தானன்றி பின்பு தேவபத்தியும் செல்வாக்குமுடைய ஓர் குடும்பத்துக் குப் பிதாவாயிருந்தான்.

தாய் தந்தையரே உங்கள் பிள்ளைகளை நேசியுங்களென்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், நீங்கள் அவர்களை இயல்பாய் நேசிக்கிறீர்களென்பது மெய். ஆனால் நிலையற்றதும் மேலான நோக்கமில்லாத துமான ஒரு சுபாவமான அன்பு போதாது. அது சருவேசுரனுடைய பரிபூரண சம்பாவனைக் கேற்றதல்ல. ஆகையால், மேலே விளக்கியவண்ணம் இரக்கமற்ற குரூர செயல்களையும் முறைகேடான அன்பையும் முற்றாய் விலக்கித் தேவனுக்கேற்றவிதமாய் மக்களுடைய இகபர நன்மையை நாடி அவர்கள்மேல் சுபாவத்துக்கு மேலான, தேவசித்தத்துக்குக் கீழ்ப்படிந்த அன்புடையவர்களாயி ருங்கள்.

மெய்யான அன்பின் அறிகுறிகள் சோராமுயற்சி, சுறுசுறுப்பு, சகிப்பு, உதாரம் முதலியவைகளாம். பெற்றோருக்குப் பிள்ளைகள் மேலுள்ள நேசத்தில் இவ்வறிகுறிகள் விளங்குவது அகத்தியம். இவ்வறிகுறிகளைத் தாய் தந்தையர் காட்டவேண்டியது முதல் உழைப்பினாலும் கட்டுமட்டான நடையினாலுமாம். ஆகையால், அடுத்த அதிகாரத்தில் பிதாமாதாக்கள் உழைக்கவும் ஒறுப்பனவாய் நடக்கவும் வேண்டிய வகையை விபரிப்போம்.