இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதாவின் மீது உண்மைப் பக்தி

105. கன்னி மாமரி மீது கொள்ளப்படும் தவறான பக்திகளை விவரித்துக் கண்டித்த பின் இனி மாதா மீது உண்மைப் பக்தி எதுவென சுருக்கமாக விவரிக்கிறேன்: 

உண்மைப் பக்தி 

(1) உள்ளரங்கமானது: 

(2) கனிவுள்ளது; 

(3) புனிதமானது; 

(4) நிலைத்தது; 

(5) சுயநலமற்றது.


(1) உண்மைப் பக்தி உள்ளரங்கமானது

106. முதலாவதாக, மாதா மீது உண்மைப் பக்தி உள்ளரங்கமாயிருக்கிறது. அதாவது அது உள்ளுணர்விலி ருந்தும் இருதயத்திலிருந்தும் வருகிறது மாதா மேல் நாம் கொள்ளும் மதிப்பிலிருந்தும் அவர்களின் உயர்வைப் பற்றி நமக்கிருக்கும் மேலான எண்ணத்திலிருந்தும் அவர்களிடம் நமக்கிருக்கும் அன்பிலிருந்தும் இப்பக்தி உற்பத்தியாகிறது.

(2) உண்மைப் பக்தி கனிவுள்ளது

107. இரண்டாவதாக, மரியாயின் மீது உண்மை ப்பக்தி கனிவுடையதாயிருக்கிறது அதாவது, ஒரு அன்புத் தாயிடம் குழந்தைக்கு இருக்கும் நம்பிக்கையைப் போல் கன்னிமரியிடம் நம்பிக்கை நிறைந்ததாக அது இருக்கிறது. நம்முடைய எல்லா விதமான சரீர ஆன்ம தேவைகளிலும் மிக எளிமையுடனும் நம்பிக்கை கனிவு டனும் அவ் வன்னையை அது நாடச் செய்கிறது. நம் தாயின் உதவியை எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் எல்லாவற் றிலும் நாம் கேட்கிறோம். சந்தேகங்களில் தெளிவு தரும் படியும், வழி தவறி அலையும் போது நேர்வழியில் நிறுத்தும்படியும், சோதனைகளில் தாங்கிக் கொள்ளும் படியும், பலவீனத்தில் திடப்படுத்தும்படியும், தவறி விழும் போது கைதூக்கி விடும்படியும், மனந் தளரும் போது ஊக்கப்படுத்தும்படியும், தத்தளிப்பிலிருந்து விடுதலை தரும்படியும், துன்பம், சோதனை, வாழ்வின் ஏமாற்றங் களில் ஆறுதலளிக்கும்படியும் மன்றாடுகிறோம். நம் எல்லா வகையான சரீர ஆன்மீக நோய்களிலும் நமக்கு எப்போதும் அடைக்கலமாயிருப்பது மாமரியே. அவர்களைக் கேட்டுக் கேட்டு உபத்திரவப்படுத்திவிடுவோம் என்ற பயம் நமக் கில்லை. சேசு கிறிஸ்துவுக்குப் பிரியமற்றுப் போய் விடுவோம் என்ற பயமும் இல்லை.

(3) உண்மைப் பக்தி புனிதமானது

108. மூன்றாவதாக, நமதன்னை மீது உண்மைப்பக்தி புனிதமாயிருக்கிறது. அதாவது, பாவத்தை நாம் விலக்கி நடக்கச் செய்கிறது. கன்னித்தாயின் புண்ணியங்களைக் கண்டு பாவிக்கச் செய்கிறது. குறிப்பாக, அவர்களுடைய ஆழ்ந்த தாழ்ச்சியையும், உயிருள்ள விசுவாசத்தையும் கேள்வியின்றி அவர்கள் கீழ்ப்படிந்ததையும், இடைவிடாத செபத்தையும், யாவற்றிலும் அவர்கள் பரித்தியாகமுடன் இருந்ததையும், அவர்களின் தெய்வீகத் தூய்மையையும் பற்றியெரியும் நேசத்தையும், இறுதி எல்லைக்கும் சென்ற பொறுமையையும், சம்மனசுக்களுக்குரிய சாந்த குணத் சையும், தெய்வீக ஞானத்தையும் நாமும் கண்டு நடக்கச் செய்கிறது. மிகப் புனித திருக் கன்னிகையின் முதன்மை யான பத்துப் புண்ணியங்களும் இவைகளாம்.

(4) உண்மைப் பக்தி நிலைத்தது

109. நாலாவது, மரியாயின் மீது உண்மைப்பக்தி நிலையுள்ளதாக இருக்கிறது. நல்லவை செய்வதில் அது நமக்குப் பலமளிக்கிறது நம் பக்தி முயற்சிகளை நாம் எளிதில் கைவிட்டு விடாதபடி நம்மை அது தடுத்துக் காக்கின்றது. உலகத்தையும் அதன் நாகரீக பாணிகளையும் அதன் கொள்கைகளையும், மாம்சத்தையும் அதன் ஆசா பாசங்களையும் கொந்தளிப்புகளையும், பசாசையும் அதன் சோதனைகளையும் எதிர்த்து நிற்க நமக்குத் திடனைத் தருகின்றது. எங்ஙனமெனில், கன்னிமாமரி மீது உண்மைப் பக்தியுடைய ஒருவன் நிலைமாற மாட்டான், பதறமாட் டான், தத்தளிக்கமாட்டான், அஞ்சவுமாட்டான். இதனால் அவன் தவறிவிழ மாட்டான் என்பதல்ல, அவனுடைய பக்தி உணர்ச்சி ஒரு போதும் மாறாது என்பதுமலல. அவன் தவறி விழுந்தால் தன் நல்ல தாயை நோக்கித் தன் கரததை நீட்டிக் கொண்டே எழுந்து விடுவான் அவன் தன் பக்திச் சுவை, பக்தியுணர்ச்சியெலலாம இழந்து விட்டாலும் துயரப்படுவதில்ல. ஏனெனில் பிரமாணிக் கமும், நேர்மையுமுள்ள மாயாயின் பகதன சேசுமரியின விசுவாசததாலே வாழ்கிறான் : இயறகையுணர்வினால் அல்ல.

(5) உண்மைப் பக்தி சுயநலமற்றது

110. ஐந்தாவதாக மாதா மீது உண்மைப்பக்தி சுயநல மற்றதாயிருக்கிறது. அதாவது, கடவுளின் அன்னையிடம் கடவுளயே - நமமையல்ல -- தேடும்படி நம்மை அது தூண்டுகிறது. உண்மையிலே மரியாயின் மீது புக்க கொணடிருப்பவர்கள் லாபததைக் கருதயோ சுயநலங் கருதியோ இமமகத்வக கன னிகைககு ஊழியம் பாவதில்ல. இவ்வுலக நன்மையயோ, நித்தய மனமை யையோ, லௌக்க நண்மையையோ ஆன்மீக நலனையோ கருதி அல்ல. மாமரி ஊழியஞ செய்யப்படத் தகுதி பெற்றவர்கள் என்பதற்காகவே அவர்களுக்கு ஊழியஞ் செய்கிறார்கள். இறைவன் ஒருவருக்மக மாயாயிடமாய் அவாகள் ஊழியம் புரிகிறார்கள. மாதா தங்களுக்கு நன்மைகள் செய்வதாலோ அலலது அவர்களிடமிருந்து எதையும் எதாபாாப்பதாலோ அவர்களை இவாகள நேசிக்கவில்லை, ஆல மாதா நேசிக்கப்படத் தக்கவர்களாயிருப்பதபோலயே அவர்களை நேசிக்கிறார்கள். இதனாலேயே மரியாயை இவர்கள், ஞான இனமை நிறைந திருக்கும்போதும் பக்தி உணரப்படும் போதும் எவவளவு உணமையுடன் நேசத்து ஊழியஞ செய்கிறார்களோ அவ்வாறே ஆனம வறட்சியிலும் ஆனம் சோர்விலும் நேசத்து ஊழியஞ் செய்கிறார்கள், காமவூர்த திருமண விழாவில் எந்த அளவுக்கு நேசிக்கறாாகளோ அதே அளவுக்கு கல்வாரியிலும் நேசிக்கிறார்கள். மரியாயின் ஊழியத்தல் தங்கள் சுயநலனைத் தேடாத இததகைய பக்தர்கள் சர்வே சுரனுடையவும் மரியாயுடையவும் பார்வையில் எவ்வளவு விருப்பமும் விலைமதிப்பும் உள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இக்காலத்தில் எவ்வளவு அபூர்வம்! இவர்கள் தொகை இவ்வளவு அபூர்வமாயி ராதபடி, பல ஆண்டுகளாக தனிமையிலும் பொதுவிலும் என் ஞான போதனைகளின் பலனோடு நான் போதித்து வந்தவைகளை காகிதத்தில் எழுத என் எழுதுகோலை எடுத்துள்ளேன்,

111. கன்னிமரியாயைப் பற்றி ஏற்கனவே அநேகக் காரியங்களைக் கூறியுள்ளேன். ஆயினும் நான் எடுத்துக் கொண்ட குறிக்கோளின்படி அதாவது மரியாயின் உண்மை பக்தனை - சேசு கிறீஸ்துவின் உண்மைச் சீடன் ஒருவனை உருவாக்குவதற்கு நான் இன்னும் கூற வேண்டியவை உள்ளன. அதிலும் என் அறியாமை, இயலாமை போதிய நேரமில்லாமை இவற்றால் எண்ணற்ற காரியங்களைக் கூறாமல் விட வேண்டிய துமிருக்கும்.

112. இரத்தத்தினால் அல்ல மாம்ச விருப்பத்தாலு மல்ல மனித சித்தத்தாலுமல்ல ஆனால் சர்வேசுரனாலும் மாமரியாலும் பிறப்பு அடைந்த ஒரு கண்ணியம் வாய்ந்த ஆன்மாவின் கரங்களில் இச்சிறு புத்தகம சோந்து பரிசுத்த ஆவியின் அருளினால் மாதா மீது இப்போது நான் கூறப்போகும் உண்மையான திடமுள்ள பக்தியின் உயர்வையும் மதிப்பையும் அவ்வான்மாவிற்குத் திறந்து காட்டி, அதைத் தூண்டி எழுப்புமானால், என் உழைப்பு எவ்வளவோ நன்றாக செலவிடப்பட்டதாக இருக்கும்! என் அன்புக்குரிய தாயும் முழு அரசுரிமை பூண்ட தலைவியுமான மரியாயின் பிள்ளைகளுக்குள்ளும் அடிமை களுக்குள்ளும் மிகச் சிறியவன் நான்தான். இம்மாமரியின் மகிமைக்காக நான் எழுதும் உண்மைகளை வாசிப்பவரின் இருதயத்தில் பதியச் செய்வதற்கு, குற்றம் சுமந்த என் இரத்தத்தால் அவற்றை எழுதுவது நலம் என நான் அறிவேனாகில், இவ்வார்த்தைகளை எழுத மையை உப யோகிப்பதற்குப் பதிலாக என் இரத்தத்தையே உபயோ கிப்பேன். நான் கூறும் பக்தி முயற்சிகளுக்கு உண்மை யுடையவர்களாயிருந்து என் அன்பு அன்னையும் தலைவியு மான தேவ மாமரிக்கு என் நன்றிகெட்ட தனத்தாலும் பிரமாணிக்கமின்மையாலும் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடு செய்யக்கூடிய உயர்ந்த ஆன்மாக்களைக் கண்டு கொள் வேன் என்ற நம்பிக்கையால் நான் அவ்வாறு செய்வேன்.

113. விரைவிலோ அல்லது பிந்தியோ, மிகப்புனித கன்னி மாமரிக்கு, முன் எக்காலத்தையும் விட அதிக மான பிள்ளைகளும் ஊழியர்களும் அன்பின் அடிமை களும் இருப்பார்கள் என்றும் இதனால் என் அன்புக் குரிய தலைவரான சேசுகிறீஸ்து மானிட இருதயங்களில் முன் எக்காலத்தையும் விட அதிகம் ஆட்சி செய்வார் என்றும் என் உள்ளத்திலே ஆழமாய் எழுதப்பட்டுள்ளது எத்தனையோ ஆண்டுகளாக இதற்காக நான் இறைவனிடம் மன்றாடி வந்திருக்கிறேன். இதை விசுவசிக்குமாறும் நம் புமாறும் நான் அதிகமதிகமாக தூண்டப்படுவதை உண ருகிறேன்.

114. இச்சிறு புத்தகத்தையும், இதை எழுத பரிசுத்த ஆவி உபயோகித்த மனிதனையும் பசாசுக்குரிய தங்கள் பற்களால் துண்டு துண்டாய்க் கிழித்தெறியும்படி மூர்க்கமுள்ள மிருகங்கள் கோபத்துடன் வரும் என நான் தெளிவாக முன் கூட்டியே காண்கிறேன். குறைந்த பட்சம் இந்நூல் வெளிவராதபடி இதை ஒரு கிடங்கின் ஒதுக்கிலும் இருட்டிலும் புதைத்துவிட அவை வரும். (இந்தத் தீர்க்கத்தரிசனம் முற்றுமாக நிறைவேறியது. அர்ச். லூயிஸ் இறந்த பின் அவருடைய சபைக்குருக்கள் இப் பக்தியைப் பரப்பியதற்காக ஜான்ஸ்னியரால் தொடர்ந்து இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள், பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் இந்நூலின் கைப்பிரதி ஒரு ஒதுக்கிடத்தில் ஒளித்து வைக்கப்பட்டது. அப்படியே அது மறைந்தும் விட்டது அர்ச் லூயிஸ் 1716-ல் இறந்தார். 1842-ம் ஆண்டு (126 வரு டங்களுக்குப் பின்) அக் கைப்பிரதி அக்குருக்களின் தலைமை இல்லத்தின் நூல் நிலையத்தில் பழைய புத்தகங்களுக்கு நடுவே கண்டுபிடிக்கப்பட்டது,) இந்நூலை வாசித்து அதன்படி நடப்பவர்களைக்கூட அவை தாக்கித் துன்புறுத்தும். அதனால் என்ன? அதுவே அதிக நல்லதாகும். இக்காட்சி எனக்கு ஊக்கமளிக்கிறது.

பெரிய வெற்றி கிடைக்குமென நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது. அதாவது வரப்போகிற எல்லா ஆபத்து நிறைந்த காலங்களிலும், சேசுவினுடையவும் மரியாயுடையவும் தைாயமும் வீரமும் கொண்ட இருபாலரும் ஆன போர் வீராகளைக கொண்ட பலம் வாய்ந்த படையணி ஒன்று புறப்பட்டு பசாசையும் உலகத்தையும் கெட்டுப்போன மனித சுபாவத்தையும் எதார்த்து போராட வரும் எனக 5 T 600 5) 660, Qui legit intelligat. Qui potest capere capiat.

'வாசிக்கிறவன் கண்டுணர்வானாக!'' (மத். 24, 15)

“கண்டுபிடிக்க வல்லவன் கண்டுபிடிக்கட்டும்!" (மத். 19, 12.)