இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புனித ஞானஸ்நானத்தின் வாக்குறுதிகளின் உத்தமமான புதுப்பித்தல்

126. ஞானஸ்நான வார்த்தைப்பாடுகள் அல்லது வாக்குறுதிகளின் உத்தமமான புதுப்பித்தல் என இப்பக்தி முயற்சி பொருத்தமுடன் அழைக்கப்படலாம் எனக் கூறியுள்ளேன். (எண் 120), ஒவ்வொரு கிறீஸ்தவனும் ஞானஸ்நானம் பெறுமுன் பசாசின் அடிமையாயிருந்தான். ஏனென்றால் அவன் பசாசுக்குச் சொந்தமாயிருந்தான். ஞானஸ்நானம் பெற்றபோது அவன் சொந்த வாயினால் அல்லது தன் ஞானப் பெற்றோர் மூலமாய் பசாசையும் அதன் கிரியைகளையும் ஆரவாரங்களையும் பகிரங்கமாய்த் துறந்துவிட்டு, சேசு கிறீஸ்துவை "அன்பின் அடிமையாகச்" சார்ந்திருக்கும்படி அவரைத் தன் எஜமானாகவும் முழு உரிமையுள்ள ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறான். இதையே நாம் இப்பக்தி முயற்சியிலும் செய்கிறோம். 

ஒப்புக்கொடுக்கும் செபத்தில் கூறப்பட்டுள்ளபடி பசாசையும் உலகத்தையும், பாவத்தையும், நம்மையும் நாம் துறக்கிறோம். நம்மை முழுவதும் மரியாயின் கரங்களின் வழியாக சேசு கிறீஸ்துவுக்குக் கொடுக்கிறோம். இந்த ஒப்புக் கொடுத் தலில் நாம் ஞானஸ்நானத்தில் செய்ததை விடக்கூடுத லாகவே செய்கிறோம், ஏனென்றால் பொதுவாக நம் ஞானஸ்நானத்தில் நாம் நம் ஞானப்பெற்றோர் வாயால் பேசி, ஒரு பதிலாளின் மூலமாகவே நம்மை சேசு கிறீஸ்துவுக்குக் கொடுக்கிறோம். ஆனால் இதிலோ நாமே சுயமாக, இதில் என்னவெல்லாம் அடங்கியுள்ளது என்ற அறிவோடு கொடுக்கிறோம்.

புனித ஞானஸ்நானத்தில் நாம் மரியாயின் கரங்கள் வழியாக நம்மை சேசு கிறீஸ்துவுக்குக் கொடுப்பதில்லைஇப்படிக் குறிப்பிட்டுச் செய்வதில்லை தானே? அது மட்டு மல்ல, நம் செயல்களின் பலன்களையும் நாம் அவரிடம் ஒப்படைப்பதில்லை. ஞானஸ்நானம் பெற்ற பிறகும் அப்பலன்களை நமக்கு விருப்பமானவர்களுக்குக் கொடுக் கவோ அல்லது அவைகளை நமக்கெனவே வைத்துக் கொள்ளவோ நமக்கு உரிமை உள்ளது. ஆனால் இந்தப் பக்தி முயற்சியினால், நாம் மரியாயின் கரங்கள் வழியாக நம்மை சேசு கிறீஸ்துவுக்கென வெளிப்படையாகக் குறிப் பிட்டுக் கொடுத்து விடுகிறோம். நம் செயல்களின் நற் பயன்களையும் அவருக்கே அர்ப்பணித்து விடுகிறோம்.

127. பசாசையும் அதன் எல்லா எல்லா ஆரவாரங் களையும் விட்டு விடுவதாக ஒருவன் தன் ஞானஸ்நானத் தில் வாக்களிக்கிறான் என்று அர்ச். தாமஸ் அக்வினாஸ் உரைக்கின்றார். இந்த வாக்குறுதியே மிகப்பெரியது. மிக இனறியமையாதது என்கிறார் அர்ச். அகுஸ்தீன். திருச் சபை சட்ட நிபுணர்களும் ஞானஸ்நானத்தில் நாம் கொடுக்கும் வாக்குறுதியே முதன்மை வாய்ந்தது என்று கூறு கின்றனர். இத்தனை இருந்தும் இப்பெரிய வாக்குறுதி களை யார் காப்பாற்றுகிறார்கள்? புனித ஞானஸ்நானத் தின் வாக்குறுதிகளை உண்மையுடன் கடைபிடிக்கிறவர்கள் யார்? சேசு கிறீஸ்துவுக்குத் தாங்கள் பிரமாணிக்கமாயி ருப்பதாக ஞானஸ்நானத்தில் கொடுத்த வாக்கை ஏறக் குறைய எல்லாக் கிறீஸ்தவர்களுமே மீறுகிறார்கள் அல் லவா? பரவலான இப்பிரமாணிக்கக் கேடு எங்கிருந்து வருகிறது? கொடுத்த அந்த வாக்குறுதிகளையும் ஞானஸ்நானக் கடமைகளையும் வழக்கமாகவே மறந்து போவதா லும், நம் ஞானப்பெற்றோர் வழியாக நாம் கடவுளுடன் செய்த ஒப்பந்தத்தை யாரும் தன் சுயமாக ஆக்கிக்கொள் ளாததாலும் தானே இவ்வாறு ஆகிறது?

128. இது எவ்வளவு உண்மையென்றால், லூயிஸ் அரசனின் (Louis de Debonnaire) ஆணையால் கூட்ட ப் பெற்ற சென்ஸ் பொதுச் சங்கம், கிறீஸ்தவர்கள் மத்தி யில் காணப்பட்ட பெரிய தாறுமாறுகளுக்கு முக்கிய காரணம் என்ன - இந்த இருதயக்கேடு ஏன் வந்தது என் பதற்கு: ஞானஸ்நானக் கடமைகளைப் பற்றிய அறியாமை யும், வழக்கமாகிப் போன மறதியுமே காரணம் என்று கூறியது. மேலும், இத்தகைய ஒரு பெரும் நோயைக் குணப்படுத்த கிறீஸ்தவர்கள் தங்கள் ஞானஸ்நான வார்த் தைப் பாடுகளைப் புதுப்பிக்கும்படி தூண்டப்படுவதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்றும் சென்ஸ் சங்கம் கூறியது.

129. இதனையே செய்யுமாறு திரிதெந்தீன் பொதுச் சங்க ஞானோபதேசம் பங்குக் குருக்களுக்கு அறிவுறுத்து கிறது. அச்சங்கத்தின் பொருளை உண்மையுடன் விளக் கும் இந்த ஞானோபதேசம் கூறுவதென்ன? விசுவாசிகளின் தலைவரும் மீட்பருமாயிருப்பவர் நமதாண்டவராகிய சேசு கிறீஸ்துவே. இந்த முறையில் விசுவாசிகள் அவருக்கு அடிமைகளாக வசீகரிக்கப்பட்டு அவ்வாறே கடமையும் கொண்டிருக்கிறார்கள். இதை மக்களுக்கு நினைவூட்டி இதனை அவர்கள் விசுவசித்து ஏற்கும்படி பங்குக்குருக்கள் அவர்களைத் தூண்டவேண்டும் என்பதே. சங்கத்தின் வார்த்தைகள் இதோ: "விசுவாசிகள் தங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசு கிறிஸ்துவுக்கு தங்களை அவருடைய நிரந்தர அடிமைகளாக அர்ப்பணித்து ஒப்புக் கொடுக்கவேண்டும்...... இது மிக நியாயமான தென அவர்கள் அறிந்திருக்கவேண்டும் இதனைப் பங்குக் குருக்கள் விசுவாசிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.'' [Cat Conc. Trid. P. I., ch 3]

130. இவ்வாறு கிறீஸ்தவர்களுக்கு அவர்களுடைய ஞானஸ்நானக் கடமைகளை ஞாபகப்படுத்தி அதில் அவர்கள் செய்த வார்த்தைப்பாடுகளை புதுப்பிக்கும்படிச் செய்வதே அவர்களுடைய பிரமாணிக்கக் கேட்டை சீர்ப் படுத்தக் கூடிய மிகச் சிறந்த வழி என்று பொதுச் சங் கங்களும் பிதாக்களும் ஏன், அனுபவமும் கூட நமக்குக் காட்டுகின்றன. அப்படியானால் அதை நாம் மிக உதத மமான முறையில் செய்யவேண்டும் - தேவ அன்னையின் வழியாக நமதாண்டவருக்கு அர்ப்ப ணித்து ஒப்புக் கொடுத்து அதைச் செய்ய வேண்டும் என்பது நியாய மல்லவா? மிக உத்தமமான முறையில் என்று நான் கூறு கிறேன். ஏனென்றால், இதலே சேசு கிறீஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு மிக உத்தமமான வழியை நாம் கைக்கொளளுகிறோம் - அவ்வழி மிகப் பரிசுத்த கன்னிமாமரி அன்னையே!