ஜென்மப் பாவமே நோய்களின் மூல காரணம்!

தேவ சுதனானவர் மனுக்குலத்தில் வந்து பிறக்கும்படியாக ஆதாம் படைக்கப் பட்டார். தேவ வல்லமையால் பூமியில் மனுக்குலம் பெருகும்படியாக ஏவாள் உண்டாக்கப் பட்டாள். ஏவாளின் சரீரத்தின் மூலப் பொருளாக இருந்ததன் மூலமாக ஆதாமும், சர்வேசுரனுடைய ஆதித் திட்டத்தின்படி கன்னித் தாயாயிருந்து சர்வேசுரனுக்குரிய குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலமாக ஏவாளும், மனுக்குலம் முழுவதினுடையவும் ஆதிப் பெற்றோராயிருக்க வேண்டியவர் களானார்கள்.

அர்ச். சூசையப்பரைப் போல, ஏவாளின் குழந்தைகளை நேசித்து வளர்ப்பது ஆதாமுக்குரிய தேவ அழைத்தலாயிருந்தது. அவ்வாறே, தன் கன்னிமையின் மகிமை குன்றாமல் தேவ வல்லமையின் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும், அவர்களை நேசித்து வளர்ப்பதும் ஏவாளுக்குரிய தேவ அழைத்தலாயிருந்தது.

மேலும், மனிதர்களாகிய இவ்விருவரும் சர்வ நன்மைத்தனமாகிய சர்வேசுரனை மட்டுமே அறிந்திருப்பதும், தீமையை  அறியாதிருப்பதும் தேவ சித்தமாக இருந்தது, என்றாலும் இந்தத் தம் தெய்வீக சித்தத்தை மீறப்பட முடியாத ஒரு கட்டளையாக அவர் ஆதிப் பெற்றோர் மீது சுமத்த விரும்பவில்லை. இக்காரியத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்க அவர் விரும்பவில்லை. ஏனெனில் நன்மை மட்டுமே மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் என்றால், அவர்களது நல்வாழ்வால் கடவுளுக்கு எந்த மகிமையுமில்லை. மாறாக, (நன்மை தீமை அறியும் மரம் உருவகமாகக் காட்டு கிறபடி) மனிதர்கள் தீமை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தும், அதை வெறுத்துத் தள்ளி, நன்மையை மட்டுமே தேர்ந்து கொண்டிருப்பார்கள் என்றால், அதுதான் கடவுளுக்கு மனிதர்கள் தரக்கூடிய உத்தமமான மகிமையாக இருந்திருக்கும்.

எனவே தேவ பிள்ளைகளைப் பெற்றெடுத்து, நேசித்து வளர்ப்பதும், நன்மையை மட்டுமே தேர்ந்துகொள்வதுமான தேவ அழைத்தலை அவர்கள் பிரமாணிக்கமாக நிறைவேற்றும்படியாக, சர்வேசுரன் அவர்களைப் படைக்கும்போதே பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்தில் படைத் தார். எல்லா வரப்பிரசாதங்களாலும், இஸ்பிரீத்துசாந்துவின் கொடைகளாலும், கனிகளாலும் அவர்களை நிரப்பினார். ஏனெனில் ஆதாம் ஏவாளிடம் தேவ வரப்பிரசாதங்களைத் தடுக்கக் கூடிய தீமை எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தேவ சாயலாகப் படைக்கப்பட்டிருந்     தார்கள். அதாவது மாசற்றதனத்தாலும், அழியாமையாலும் அவர்கள் அலங்கரிக்கப்பட்டிருந் தார்கள்.

சிலர் மகா பரிசுத்த கன்னிகைக்குச் சமமாக ஆதிப் பெற்றோரும் தேவ வரங்களால் நிரப்பப் பட்டிருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் மாமரிக்குத் தரப் பட்டிருந்த தேவ அழைத்தல் இணையற்றது; சர்வேசுரனும் மனிதனுமானவருக்குத் தாயாராயிருக்கும் புத்திக்கெட்டாத மாபெரும் அழைத்தல் அவர்களுடையது. எனவே, தம் சொந்த தேவ சுபாவத்திற்கு ஏறக்குறைய முழுமையான அளவில் மாமரியை தேவன் உயர்த்த வேண்டியிருந்தது.

நம் ஆதிப் பெற்றோரோ, தங்கள் அழைத்தலுக்கேற்ற வரங்களை முழுமையாகப் பெற்றுக் கொண்டார்கள். ஒரு மகா பரிசுத்த தெய்வீக உறவால் அவர்கள் கடவுளோடு இணைக்கப்பட் டிருந்தார்கள். அத்துடன் தீமையால் மறைக்கப்படாத முற்றிலும் தெளிந்ததாகிய ஓர் அறிவால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். மிகத் திடமான ஒரு சித்தம் அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. மேலும் அழிவின்மை, துன்பமின்மை, நோயின்மை என்னும் பெரும் பேறுகளாலும் அவர்கள் நிரப்பப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் தங்கள் சொந்த சுபாவத்தில் கடவுளை நேசிப்பதும், அவருக்குக் கீழ்ப்படிந் திருப்பதும் அவர்களுக்கு இலகுவான காரியமாக இருந்தது. இதற்கு மாறாக, தீமை செய்வது அவர்களுக்கு நிச்சயமாகக் கடினமானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் பூலோக மோட்சத்தில், பரலோகத்தின் ஒரு முன்சுவையை எப்போதும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் இந்நிலையில் பாவம் அவர்களுக்கு மிகவும் அருவருப்பான தாகத்தான் இருந்திருக்க முடியும். இந்தத் தெய்வீகப் பேரின்பத்திற்கு முன்பாக, சிற்றின்பம் தரக்கூடிய எந்த ஒரு பாவமும் அவர்களுக்கு வெறுப்புக்குரியதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இதன் காரணமாகவே பொய்க்குத் தகப்பனான சாத்தான் ஏவாளை வீழ்த்த ஒரு பெரும் பொய்யைப் பயன்படுத்துகிறான். ""நான் வானமண்டலம் ஏறுவேன், சர்வேசுரனின் நட்சத்திரங் களுக்கு மேலாக என் சிம்மாசனத்தை உயர்த்துவேன், வடபுறத்து உடன்படிக்கைப் பர்வதத்தின் மீது உட்காருவேன்'' என்று அகந்தையோடு கூறியவனும், ""உயர்ந்த மேகங்கள் மீது ஏறுவேன், உன்னத கடவுளுக்கும் சமமாவேன்'' எனச் சொல்லித் தன்னையே ஏமாற்றிக்கொண்டவனும், அதனால் ""நரகத்து அடிபாதாளத்தில் தள்ளப்பட்டவனுமான'' (இசை.14:13-15) அவன் அதே பொய்யை ஏவாளிடம் சொல்கிறான்: ""நீங்கள் கடவுளைப் போல் ஆவீர்கள்'' என்று (காண்க. ஆதி.3).

ஏவாள் செய்த முதல் தவறு கடவுளின் எச்சரிக்கையை மீறி, நன்மையோடு தீமையையும் அறிந்துகொள்ளும்படி ""நன்மை தீமை அறியும் மரத்தை'' அணுகிச் சென்றதாகும். இந்தத் தவறால்  இது வரை கடவுளில் ஊன்றியிருந்த அவளது சித்தம் இப்போது தடுமாறத் தொடங்கியது. அடுத்தது, பசாசின் ஆயுதமாகிய பேராசை: கடவுளைப் போல் ஆவது. ஒரே கணத்தில் அவள் கடவுளே தன்னைப் படைத்து நேசத்தோடு பராமரிக்கிறவர் என்பதை மறந்து போனாள். அவளது கண்களை மறைத்திருந்த மாசற்றதனத்தின் திரையை இந்தப் பொய்யைக் கொண்டு சாத்தான் விலக்கினான். இப்போது அவள் முதல் முறையாக இச்சையால் தீண்டப்பட்ட புதிய கண்களால் உலகத்தையும் தன் கணவனையும் காணத் தொடங்கினாள். இப்புதிய பார்வை தன் உள்ளரங்க அக்கினியை மறைத்து, தன்னை அவளுக்குக் குளிர்ச்சியாகக் காட்டியது. இக்கனியைப் பறித்து உண்பதற்காக, தேவசிநேக மாகிய உண்மையான பேரின்பத்தை இழக்கவும் அவள் துணிந்தாள். இவ்வாறு மேலாங்கிஷமான புத்தியை அவள் மனது, நினைவு, ரூபிகரம், சித்தம், ஐம்புலன்கள் என்னும் கீழாங்கிஷத்         திற்குக் கீழ்ப்படுத்தினாள். சரீரம் ஆத்துமத்தின் மீது வெற்றிகொள்ள அனுமதித்தாள்.  இந்தப் புதிய உணர்வில் உண்மையான இன்பம் மறைந்திருப்பதாக அவள் தவறாக எண்ணிக் கொண்டாள். இந்தப் பொய்யான இன்பத்தைத் தன் கணவனின் கண்களுக்கும் தந்தாள். தேவ கட்டளை மீறப் பட்டது, பாவம் கட்டிக்கொள்ளப்பட்டது. தேவ இரக்கத்தாலும், தங்கள் மாசற்றதனத்தாலும் தாங்கள் பெற்ற எல்லா தெய்வீகச் செல்வங்களையும் இந்த ஒரே பாவத்தால் அவர்கள் இழந்து போனார்கள்; கடவுளின் பயங்கர சாபங்களுக்கு ஆளானார்கள்; பசாசுக்கு அடிமை களானார்கள்; தேவ சாயலை இழந்து, நரகத்திற்குத் தகுதியுள்ளவர்கள் ஆனார்கள்.

அக்கணமே அவர்களது கண்கள் முதல் முறையாகத் தீமைக்குத் திறக்கப்பட்டன. தங்கள் ஞான குழந்தைத்துவத்தை இழந்து விட்ட அவர்கள் முதல் முறையாகத் தாங்கள் நிர்வாணமா யிருப்பதை உணர்ந்தார்கள். முன்பு தங்கள் திட சித்தத்தின் குதிமுள்ளின் கீழ் அடங்கி ஒடுங்கி யிருந்த சரீர இச்சை இப்போது தங்களை அடிமைப்படுத்தும் அரக்கனாக எழுந்து நிற்பதைக் கண்டு நடுங்கினார்கள். எந்தப் பாவம் முன்பு அருவருப்பாக இருந்ததோ, அது இப்போது மிகவும் இனிமையானதாகத் தோன்றியது. எந்த தேவசிநேகம் முன்பு தங்களுக்கு இயல்பாயிருந்ததோ, அது இப்போது போராடிப் பெற வேண்டியதாகவும், தேவ இரக்கத்தால் அன்றி, இனி பெறவே முடியாததாகவும் ஆகிவிட்டதை உணர்ந்து புலம்பியழுதார்கள்.

இது வரை கடவுள் நல்லதெனக் கண்ட அனைத்தும் தீமையாக மாறிப் போனது. முன்பு ஆகாய மண்டலத்தில் அலைந்து திரிந்தவனான சாத்தான் இப்போது பூமியை அடக்கியாள்பவன் ஆனான். இதனால்தான் நம் ஆண்டவரையே தான் சோதிக்கத் துணிந்தபோது, உலகம் முழுவதை யும் அவருக்குத் தந்து விடுவதாக அவன் ஆணவத்தோடு வாக்களித்தான். அவனது ஆட்சியின் கீழ் பூமி மனிதனுக்கு முட்களையும் முட்குருக்குகளையும் மட்டுமே விளைவித்தது. முதல் பாவத்தின் கருவியாக இருந்த சரீரம் முதன்முறையாக நோய், துன்பங்கள், வேதனை, வலிகளுக்கும், கடைசி யாக மண்ணுக்கே திரும்பும் அவலத்திற்கும் இலக்கானது. இவ்வாறு சரீரமும் தண்டிக்கப்படுவது நீதியாக இருந்தது. மனிதனின் ஆத்துமமோ நித்திய மரணமாகிய நரகத்திற்குத் தகுதியுள்ளதானது. அவனுடைய திட சித்தம் பலவீனமுற்றது. அறிவு இருண்டு போனது. நன்மைத்தனத்தின் மீது அவனுக்கிருந்த நாட்டம் முற்றிலுமாகத் தீமையை நோக்கித் திரும்பி விட்டது.

கடவுள் நல்லதெனக் கண்ட படைப்பாகிய அழகிய சித்திரம் இந்த ஒரே பாவத்தால் அலங் கோலமாக்கப்பட்டது. தேவ வல்லமையால் மாசற்றவர்களாகப் பிறக்க வேண்டியிருந்த ஏவாளின் மக்கள் இப்போது மனித இச்சையால் பசாசின் அடிமைகளாக ஜென்மப் பாவத்தோடு பிறக்கும் நிர்ப்பாக்கியத்திற்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வாறு மனிதனின் உற்பவத்தில் அவனைத் தீண்டி, அவனோடு கூடப் பிறப்பதாகிய இந்த ஆதாமின் பாவம் சரியான விதத்தில் ஜென்மப் பாவம் என்று அழைக்கப்படு கிறது. ஒருவேளை இந்தப் பாவம் கட்டிக்கொள்ளப்படாதிருந்தால், துன்பம், நோய், மரணம் ஆகியவற்றிற்கு மனித வாழ்க்கையில் இடமிருந்திருக்காது. மாறாக, இந்த எல்லா நிர்ப்பாக்கியங்களுக்கும் ஜென்மப் பாவமே அடிப்படைக் காரணமாக ஆகிப் போனது.

ஆனால் எப்பேர்ப்பட்ட பேரிரக்கத்தை மனிதர்களுக்குக் காட்ட தேவன் தயைகூர்ந்தார்! தாமே சாபமாகி நம்மை நரகத்திலிருந்து மீட்கத் திருவுளங்கொண்ட ஆண்டவர், இதன் அடை யாளமாகவே, தம் இவ்வுலக வாழ்வின்போது, மனிதர்களின் எல்லா வித நோய்களையும் குணப் படுத்தினார். நம் நோய்களைச் சுமந்துகொண்டு நம்மைக் குணப்படுத்திய நேச ஆண்டவருக்கு என்றென்றும் சதாகாலமும் நன்றியறிந்த தோத்திரம் செய்வது நம் கடமையாக இருக்கிறது.