இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசு கிறீஸ்துவிடம் மன்றாட்டு

66. ஓ! மிகவும் மதுரமுள்ள சேசுவே! புனித அடிமைத் தனமென்கிற பக்தி முயற்சி வழியாக உம்முடைய திரு மாதாவுக்கு என்னைக் கொடுத்து, அந்த அன்னை உமது மகத்துவத்தின் முன்பாக எனக்காகப் பரிந்து பேசுகிறவர் களாயிருக்கவும், என்னுடைய மிகப் பெரும் பரிதாபமான நிலையில் என்னிடம் குறையாயிருப்பதையெல்லாம் நிறைவு செய்யவும் எனக்கு நீர் அளித்த வரப்பிரசாதத்திற் காக என்னுடைய நன்றியுணர்வை உமது முன்னிலையில் தெரிவிக்க எனக்கு அருள்வீராக! அந்தோ என் ஆண்ட வரே! நான் எவ்வளவு சீர்கெட்ட நிலையில் இருக்கிறே னென்றால், இந்த அன்புள்ள தாய் இல்லாதிருந்தால் நான் சந்தேகமற இழக்கப்பட்டிருப்பேன். ஆம் ஆண்டவரே! உமக்கு முன்னதாக எங்கும் இத்தாய் மாமரி எனக்குத் தேவையாயிருக்கிறார்கள்.

உம்முடைய நீதியுள்ள கோபத்தை அமர்த்துவதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஏனென்றால் உம்மை நான் எவ்வளவோ அடிக்கடி நோகச் செய்திருக்கிறேன். இன்னும் ஒவ்வொரு நாளும் உம்மை நோகச் செய்து வருகிறேன்.

நான் அடையத் தகுதியுள்ளவனாயிருக்கிற உம்முடைய நீதியின் நித்திய தண்டனைகளிலிருந்து என்னைக் காப்பாற் றுவதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் உம்மை நோக்கிப் பார்ப்பதற்கும், உம்முடன் பேசுவதற்கும் உம்மி டம் மன்றாடுவதற்கும் உம்மை அணுகுவதற்கும், உம்மைப் பிரியப்படுத்துவதற்கும் அவர்கள் தேவைப் படுகிறார்கள்.

என்னுடைய ஆத்துமத்தையும் பிறருடைய ஆத்துமங் களையும் இரட்சிப்பதற்கு அவர்கள் தேவைப்படு கிறார்கள்.

சுருக்கத்தில் நான் எப்பொழுதும் உம்முடைய பரிசுத்த சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும் எல்லாவற்றிலும் உம்முடைய அதிமிக மகிமையைத் தேடுவதற்கும் அவர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆ! தேவரீர் எனக்குக் காட்டியருளிய இந்த இரக்கத்தை உலகமெங்கும் என்னால் பறைசாற்றக் கூடுமாயிராதா! மாமரி இல்லாதிருந்தால் நான் இதற்குள் தண்டனைத் தீர்ப்படைந்திருப்பேன் என்று இந்த உலகம் முழுவதும் அறிந்து விடாதா! இந்த உபகாரத்துக்குத் தகுந்த நன்றி யறிதலை என்னால் செலுத்தக் கூடுமாயிராதா!

மாமரி எனக்குள் இருக்கிறார்கள். எப்படிப்பட்ட பொக்கிஷம்! எத்தகைய ஆறுதல்! அப்படியானால் நான் அவர்களுடையவனாக இருக்க மாட்டேனோ? அது எப்பேர்ப்பட்ட நன்றிகெட்டதனம்! என் அன்புள்ள இரட்சகரே! இப்படி ஒரு துர்ப்பாக்கியம் எனக்கு நேரிடுவதைவிட எனக்கு மரணத்தை அனுப்பும். ஏனென் றால் மரியாயின் அடிமையாய் இல்லாதிருப்பதைவிட நான் இறந்து போகிறேன். சிலுவையடியில் நின்ற அருளப் பருடன் அத்தாயை என் எல்லாமாக ஆயிரந் தடவை எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆயிரந் தடவை என்னை அவர்களுக்குக் கொடுத்துள்ளேன். ஆனால் அன்புள்ள சேசுவே! இன்னும் நான் நீர் விரும்புகிறபடி இதைச் செய்யாதிருந்தால், இப்பொழுது தேவரீர் விரும்புகிறபடி நான் அதைச் செய்கிறேன். இந்த அரசுரிமை கொண்ட இராக்கினிக்கு என் ஆத்துமத்திலாவது, சரீரத்திலாவது எதுவும் இன்னும் சொந்தமாகாதிருக்க நீர் காண்பீரானால், அதை என்னிடமிருந்து எடுத்துத் தூரமாய்ப் போக்கிவிடும் படி உம்மை மன்றாடுகிறேன். ஏனென்றால் என்னிடத்தில் மரியாயிக்குச் சொந்தமில்லாத எதுவும் உமக்குத் தகுதியற்றதாயிருக்கிறது.

67. ஓ பரிசுத்த ஆவியே! இந்த வரப்பிரசாதங்களை யெல்லாம் எனக்குத் தாரும். உண்மையான சீவிய தருவாயிருக்கிற மாமரியை என் ஆன்மாவில் நடுவீராக. அது வளர்ந்து, பூத்து, ஜீவியத்தின் கனியை ஏராளமாய்க் கொடுக்கும்படி அதைப் பயிரிடும். பரிசுத்த ஆவியே! உமது மணவாளியான மாமரி மீது எனக்குப் பெரிய பக்தியையும் அவர்களை நோக்கி வலிமையான ஈர்ப்பையும் அருள்வீராக. அவர்களின் தாயிருதயத்தின் மேல் எனக்குப் பெரும் நம்பிக்கையையும் அவர்களின் இரக்கத்தில் நீங்காத அடைக்கலத்தையும் எனக்குத் தாரும். இதனால் அவ்வன்னை வழியாக சேசு கிறீஸ்துவை என்னில் முழு மனிதனாகவும் அவருடைய நிறைவயதின் அளவாகவும் உண்மையாகவே உருவாக்குவீராக. 

ஆமென்.