இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பசிலிக்கா எனும் பேராலயம்

கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குக் கிட்டக்கூடிய மிகச் சிறந்த பெருமை 'பசிலிக்கா' என்னும் பேராலயத் தகுதிக்கு அது உயர்த்தப்படுவதேயாகும்.

பசிலிக்கா (Basilike) எனும் புராதனக் கிரேக்கச் சொல்லுக்கு அரச மண்டபம் என்றும், அழகிய மண்டபம் என்றும் பொருள் கொள்ளப்பட்டது. ஏதென்ஸ் நகரில் தான் முதன் முதல் இப்பெயரில் பெரியதொரு மன்றம் கட்டப்பட்டது. கிரேக்கம் வீழ்ந்து, உரோமைப் பேரரசு எழுந்த பின்னர், இந்தக் கட்டிடக் கலையும் அங்கே சென்றது. ஜுலியஸ் சீசர் Basilica Julia எனும் பெயரில் அரசவை மன்றம் ஒன்றை அழகுற எழுப்பினான். அந்த மரபு நெடுங்காலம் தொடர்ந்தது.

பிற்காலத்தே பசிலிக்கா எனும் சொல் பெரிய கிறிஸ்தவக் கோயில்களைக் குறிக்கலாயிற்று. கான்ஸ்டன்டைன் பேரரசன் இதில் முன்னோடியானான். லாட்டரன் எனுமிடத்தில் பாப்பரசர் தம் மாளிகையையும், ஆலயத்தையும் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தான். உரோமையில் புனித இராயப்பர் கல்லறை மீது அவனே பெரியதொரு ஆலயம் கட்டினான். அதைத் தொடர்ந்து கிறிஸ்து பிறந்த பெத்லகேம், நசரேத்து, வேத சாட்சிகள் மரித்த காபுவா, அந்தியோக், நேப்பில்ஸ் முதலான இடங்களில் எல்லாம் பேராலயங்களைக் கட்டிவைத்தான். அன்று முதல் அரசவை மண்டபங்களைப் போல ஆலயங்களையும் அழகுறப் பெரிதாகக் கட்டும் வழக்கம் நிலை பெற்றது.

இப்பேராலயங்கள் அமைப்பிலும், அழகிலும் தனிச்சிறப்பு உடையவை. புராதனச் சிற்பக் கலை மரபும், பொலிவு மிகு தோற்றமும் கொண்டமைந்தவை. கிழக்குத் திசையை நோக்கிய முகப்பும் நீண்ட நீள அகலங்களும் இறுதியில் கூண்டு போன்ற வில் மண்டபமும் (Dome] பொருந்தி அமைந்தவை.

இவற்றிற்கு வரலாற்றுப் பின்னணியும் இருத்தல் வேண்டும். புனிதர்களின் திருச்சடலங்கள், அல்லது பூசனைக்குரிய சுரூபம் என்பன இடம் பெறுதல் வேண்டும். புதுமை விளங்கும் புண்ணியத்தலமாக அது பொலிய வேண்டும். உயர் நிலைப் பேராலயங்கள் என்றும் (Major Basilicas] சிறுதரப் பேராலயங்கள் [Minor Basilicas] என்றும் இவை இருவகைப்படும். கத்தோலிக்கத் திருமறையின் தலைமைத் தளமாகிய உரோமையில் மட்டும் 13 பசிலிக்காக்கள் உள்ளன. இவற்றுள் ஐந்து உயர் நிலையின. எட்டு சிறு தரத்தன. லாட்டரன், புனித சின்னப்பர், வத்திக்கான், லிபேரியன் (மரியன்னை ) என்பன உயர் நிலை வகையின. புனித அருளப்பர் லாட்டரன் பேராலயம் பாப்பரசர்க்கு இரண்டு ஆண்டுகளே பங்குத் தந்தையாக பணி யாற்றிய போதிலும் மோன்'. தாமஸ்வாஸ் அடிகள், அரிய பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் செய்துள்ளார், 

மாதாகுளத்தில் மணிக் கூண்டும் திருநீர் தொட்டியும் அமைத்தார். மாதாகுளத்திலிருந்து பேராலயத்துக்குத் திரும்பிவரும்பொழுது திருப் பயணிகள், செபமாலை செய்வதற்கு ஏற்ற வகையில் பதினைந்து மாடங்களை அமைத்துள்ளார். மேலும் மாதா குளத்தில் சிற்றாலயமும் ஒன்று எழுப்ப திட்ட மிட்டு அடிக்கல் நாட்டினார். திருமண மண்டபத்திற்கும் காவல்துறை அவுட் போஸ்ட்டுக்கும் அடிக்கல் நாட்டினார். பேராலயத்தின் சிலுவைத்தாக்கிற்கு காங்கிரீட்டில் கூரை அமைத்தார். திருவழிபாடு சிறப்புற நடைபெற, பேராலயம் அழகுற காட்சியளிக்க அரும் பாடுபட்டார். அவருடைய சேவை தஞ்சைக்குத் தேவை யாக இருந்ததால் அங்கு மாற்றலாகிச் செல்லும் பொழுது தமது பணியை அருள் திரு . எஸ். எல். கபிரியேல் அடிகளிடம், 1982 செய் டம்பர் 15-ஆம் நாள் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

அன்னையின் புகழை வேளாங்கண்ணி குரலொலி வழியாக பார் புகழச் செய்த அருட்பெருந்திரு. எஸ். எல். கபிரியேல் அடிகளார் அவரின் முன்னவர் தொடங்கி வைத்த புனித லூக்காஸ் தங்கும் விடுதியைக் கட்டி முடித்து தன்னிறைவு அறை களாகவும் மாற்றியமைத்தார். காவல்துறை அவுட்போஸ்ட், திருக்குடும்ப சமூகக்கூடம், பயணிகள் தங்கும் பெரிய கூடம், புனித ஆரோக்கிய அன்னை மருத்துவமனை, புனித ஜான் போஸ்கோ மாணவியர் விடுதி முதலியவற்றை சிறப்பாககட்டி நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளார். புனித எண்ணெய் கொடுக்கவும் வேளாங் கண்ணி குரலொலிக்கும் தனி இடங்கள் அமைத்துள்ளார்.

ஏழை, எளியவர்கள் தங்க அசீசியார் குடில் 369 அறைகள் அழகுடனே அமைத்துள்ளார். புனிதவியாகுல அன்னையின் கோயிலை காங்கிரிட் தல கட்டிடமாக புதுப்பித்து அழ குற. அமைத்துள்ளார். திருப்பயணிகள் வசதியை பெரிதென மதித்த தந்தை பகலில் உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் ஒரு கூடம் அமைத்து சிற்றுண்டி விடுதியை அழகுபடுத்தி விரிவுபடுத்தினார். புனித வளனார் பயணிகள் இல்லத்தின் மாடி கட்டிடத்தில் 20 அறை களையும், கட்டணக் கழிவறைகளையும், குளியல் அறைகளையும் கட்டி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தார். 

பேராலயத்தைச் சுற்றி சதுர கருங்கற்களை அமைத்து ஆலயத்துக்கு அழகூட்டினார். முதன்முதலில் மாதா காட்சி தந்த ''மாதா குளம்' என்னும் இடத்தில் அழகிய சிற்றாலயம் அமைத்துள்ளார். திடலில் சாதாரண காலங்களில் பயணிகள் தங்கும் பத்து கூடங்களாகவும் திருவிழாக் காலங்களில் 42 கடைகளாகவும் ஏற்பாடு செய்துள்ளார். கோவிலுக்குச் சொந்தமான இடங்களை பிறர் ஆக்கிரமிக்காவண்ணம் தடுப்புச்சுவர், இரும்பு கம்பி வேலி வைத்து பாதுகாத்துள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருப்பயணிகள் ஆன்மீக மீட்புக் காக குருக்கள் இருவரை ஆயரிடம் மன்றாடி பெற்றுள்ளார். ஆலயத்தை அழகுபடுத்தி அன்னையின் புகழ் தரணி எங்கும் பரவிட வழிபாடுகளிலும், மக்கள் தொடர்பிலும் மிகவும் கவனம் செலுத்தி பல வழிகளில் முயன்று வருகின்றார்.

உரிய மரபு வழிப் பேராலயம். அவருடைய ஆளுமை இருக்கைக்கு உரிய பேராலயம் இது தான். புனித இராயப்பர் பேராலயத்தை விட இது தொன்மையானது. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இராயப்பர் பேராலயம் இத்தகுதி பெறத் தொடங்கியது. பாப்பரசரின் அலுவல் முறைப் பேராலயமாகவும், நாளடைவில் இடம் பெற்றுவிட்டது. கிறிஸ்தவ உலகில் உள்ள பேராலயங்களில் எல்லாம் மிகப் பெரியது என்னும் பெருமைக்குரியதும் இதுவே.

உயர் நிலைப் பேராலயங்கள் பெரும்பாலும் கர்தினால்களின் கண்காணிப்பில் இருக்கும். அவற்றிற்கெனச் சில தனிச் சலுகைகளும் வசதிகளும் உண்டு. பாவ மன்னிப்புப் பெற விழைவோர்க்குச் சிறப்பான பலன்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

சிறுதரப் பேராலயங்கள், பாப்பரசரால் வழங்கப்படும் சில சில சிறப்புக்களைக் கொண்டிலங்கும். பாப்பரசரின் ஞான ஆட்சி அடையாளமான மஞ்சளும், உரோமைப் பேரரசின் மாட்சி வண்ணமாகிய சிவப்பு கலந்தமைந்த கட்டுக்கோப்பாயிருக்கும்.

இந்தியாவில் ஐந்து சிறுதரப் பசிலிக்காக்கள் உள்ளன. பம்பாய், பாந்த்ராவில் உள்ள மலை மாதா பேராலயம், கோவாவில் உள்ள போம் சேசு பேராலயம், மைலாப்பூரில் உள்ள புனித தோமையார் பேராலயம், வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை பேராலயம், பெங்களூரில் உள்ள ஆரோக்கியமாதா ஆலயம்.