உலகத்தைக் காப்பாற்ற நீ என்ன செய்யப் போசிறாய்?

இரண்டாவது உலக யுத்தத்தின் கோர விளைவு களை நாம் இன்னும் அனுபவிக்கிறோம். அந்த யுத் தத்தின் காரணம் எள்ன? மக்களின் வாழ்க்கையில் சீர்திருத்தம் ஏற்படாதது தான் காரணம். இதைத் தேவ அன்னை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறாள். பஞ்சம் படை கொள்ளை நோய் இவற்றால் உலகத் துக்கு ஆதியிலிருந்து பல ஆபத்துக்கள் ஏற்பட்டிருக் கின்றன. என்பதற்குச் சரித்திரம் சான்று. மனிதர் பாவம் செய்து கடவுளை மனநோகப் பண்ணியதே இந்தப் பேராபத்துக்களின் காரணம். 21 ஆண்டுக ளில் இரு கோர யுத்தங்கள் ! இதிலிருந்து ஒரு காரியம் நமக்குப் புலப்படுகிறது. மக்கள் வாழும் விதம் கடவு ளுக்குப் பிடித்தமானதாயில்லை.

உலகத்தைச் சீர்திருத்த உன்னால் முடியாதா? நீ முதலில் உன்னைச் சீர்திருத்து. ஒவ்வொரு கத்தோ லிக்கனும் தன்னைச் சீர்திருத்தட்டும். கடவுள் நீ வாழும் விதத்தை அலசி ஆராய்வது போல் உன் வாழ்க்கையை நீயும் அலசி ஆராய்ந்து பாவமானதை யெல்லாம் விட்டொழி.

எவனும் தன்னை உத்தமனாக மதிக்கக் கூடாது. எல்லோருமே வாழ்க்கையைத் திருத்தியமைத்து புண்ணிய பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான வழிகளையும் அன்னை காண்பித்திருக்கி றாள். ஜெபமாலையைத் தக்க விதமாக ஜெபிப்பது அதற்கான வழிகளில் ஒன்று. தேவ இரகசியங்களை வெறுமனே சொன்னாற் பற்றாது. தேவ இரகசியத் தைச் சொன்னதும், அதைப்பற்றிச் சற்றென்கிலும் சிந்தித்துப்பார். தேவதாய் எவ்விதம் நடந்துகொள் கிறாள்? யேசு எவ்விதம் நடந்து கொள்கிறார்? எனக் கேட்டு அவர்களுடைய வாழ்க்கையைப் போல் என் வாழ்க்கையை நான் எவ்விதம் திருத்தியமைக்கப் போகிறேன் எனத் தீர்மானி. இம்மாதம் இதற்கு ஏற்ற காலம். ஜெபமாலை ஜெபிக்கும் போது மாத்தி ரமல்ல, உனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் ஜெபமாலை தேவ இரகசியங்களைப் பற்றி சிந்தி. ஒவ் வொரு நாளும் ஒழிந்த நேரங்களில் ஒரு தேவ இரகசி யத்தைப் பற்றி நன்கு சிந்தித்து வந்தால், மாத இறு திக்குள் பதினைந்து தேவ இரகசியங்களைப் பற்றி இரு முறை சிந்தித்து விடலாம்.

உலகில் தற்சமயத்திலுள்ள பிரச்சனைகளில் பெரிது ருஷிய பிரச்சனை என பாத்திமாக் காட்சிகளி லிருந்து அறியலாம். யுத்தத்தினால், ருஷியாவைத் திட்டித் தூஷிப்பதனால் அந்தப் பிரச்சனை தீராது. ஜெபம், தவம், நிந்தைப் பரிகாரச் செய்கை இவை களே இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும். உலக சமாதானம் வேண்டுமானால் ருஷியா மனந்திரும்ப வேண்டும். ருஷியா மனந்திரும்ப வேண்டுமானால் நம்மில் ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டும்.