இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இழக்கப்பட்ட மாசற்றதனம்

அவர் இன்னும் இந்த வேதனையை அனுபவித்துக் கொண் டிருந்த போதே, மற்றொரு துயரமான உண்மையையும் அவர் உணர லானார்: வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் படிப்படியாக வண்டியில் இருந்து விழுந்து போயிருந்தார்கள். இதனால் 150 பேர் மட்டுமே இன்னும் மாசற்றதனத்தின் கொடியின் கீழ் நின்றார்கள். இந்தத் தாங்க முடியாத துக்கத்தால் அவர் கடும் தலைவலியை அனுபவித்துக் கொண்டிருந்தார். இது வெறும் கனவுதான் என்று அவர் நம்பினார். விழித்தெழ எல்லா முயற்சிகளையும் அவர் செய்தார். ஆனால் துர்ப்பாக்கியமான விதத்தில் இதெல்லாமே மிகவும் நிஜமானது போல இருந்தது. அவர் தம் கைகளைத் தட்டி, அவற்றின் ஒலியைக் கேட்டார். அவர் முனகினார். தமது பெருமூச்சு களின் சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலிப்பதை அவர் கேட்டார்; இந்த பயங்கரத்துக்குரிய காட்சியைத் தம்மிடமிருந்து விலக்கி விட அவர் விரும்பினார், என்றாலும் அவரால் அது முடியவில்லை .

தம் கனவை விவரித்துக் கொண்டிருந்த டொன் போஸ்கோ இந்த இடத்தில் சிறுவர்களை நோக்கி, “என் அன்புக்குரிய சிறுவர்களே, உங்களில் பள்ளத்தாக்கிலேயே தங்கி விட்டவர் களையும், திரும்பிச் சென்ற, அல்லது வண்டியிலிருந்து விழுந்த சிறுவர்களையும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். நான் உங்கள் எல்லோரையும் கண்டேன். உங்களைக் காப்பாற்ற என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன் என்பதில் நீங்கள் உறுதியா யிருக்கலாம். பாவசங்கீர்த்தனம் செய்யும்படி உங்களில் பலரை நான் தூண்டியிருந்தும், அவர்கள் என் அழைப்பை ஏற்றுக் கொள்ள வில்லை. தயவு செய்து எப்படியாவது உங்கள் ஆன்மாக்களைக் காத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வண்டியிலிருந்து விழுந்தவர்கள் நடந்து கொண்டிருந்தவர் களோடு சேர்ந்து கொண்டார்கள். இதனிடையே வண்டியில் பாடல் தொடர்ந்தது. அது எவ்வளவு இனிமையானதாக இருந்தது என்றால் அது படிப்படியாக டொன் போஸ்கோவின் துயரத்தைத் தணித்தது. ஏழு குன்றுகளை ஏற்கனவே கடந்தாகி விட்டது. சிறுவர்கள் எட்டாவது குன்றை அடைந்தபோது, ஓர் அற்புதமான கிராமத்தில் தாங்கள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அங்கே சற்று ஓய்வெடுப் பதற்காக அவர்கள் தங்கள் பயணத்தை நிறுத்தினார்கள். அந்தக் கிராமத்தின் வீடுகள் வருணிக்க முடியாத அளவுக்கு அழகானவை யாகவும், சொகுசானவையாகவும் வசதிகள் நிறைந்தவையாகவும் இருந்தன.

இந்தக் கிராமத்தைப் பற்றி டொன் போஸ்கோ தம் சிறுவர்களிடம்: “அர்ச். தெரேசம்மாள் பரலோகக் காரியங்களைப் பற்றிச் சொன்ன அதே வார்த்தைகளை - “அவற்றைப் பற்றிப் பேசுவது அவற்றின் மதிப்பைக் குறைப்பதாகும்'' என்ற வார்த்தைகளை - இந்தக் கிராமத்து வீடுகளைப் பற்றி என்னாலும் சொல்ல முடியும். வார்த்தைகளில் அடங்காத அளவுக்கு அவை மிக அழகாக இருக்கின்றன. அந்த வீடுகளின் வாசல்நிலைகள் ஒரே சமயத்தில் பொன்னாலும், படிகத்தாலும், வைரத்தாலும் ஆனவையாகத் தோன்றின என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். அவை ஒரு மிக அற்புதமான, மனதிருப்தி தருகிற, மகிழ்ச்சி யூட்டுகிற காட்சியாக இருந்தன. வயல்களில் அங்காங்கே காணப்பட்ட மரங்களில் அடுத்தடுத்து மலர்களும், மொட்டுகளும், கனிகளும் நிறைந்திருந்தன. அது இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்ட தாக இருந்தது!” என்று குறிப்பிட்டார்.

சிறுவர்கள் எல்லாவற்றையும் பார்க்கும் ஆவலாலும், கனிகளைச் சுவைக்கும் ஆசையாலும் எல்லாப் பக்கமும் பிரிந்து சென்றனர். இங்கே டொன் போஸ்கோவுக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. அவருடைய சிறுவர்கள் திடீரென்று முதியவர்களைப் போலக் காட்சியளித்தனர்: பல் விழுந்தவர்களாகவும், தோல் சுருக்க மடைந்தவர்களாகவும், முடி நரைத்தவர்களாகவும், கூன் விழுந்தவர் களாகவும், முடவர்களாகவும், கைத்தடி ஊன்றியவர்களாகவும் அவர்கள் தோன்றினர். அவர் அதிர்ந்து போனார். ஆனால் அந்தக் குரல் அவரிடம்: “ஆச்சரியப்படாதீர். நீர் அந்தப் பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இசை உங்கள் பயணத்தை மிகக் குறுகியதாகத் தோன்றச் செய்தது. உமக்கு இது பற்றி சாட்சியம் வேண்டுமானால், கண்ணாடியில் உம்மையே பார்த்துக் கொள்ளும். அப்போது நான் உண்மைதான் கூறுகிறேன் என்பதை நீரே கண்டுகொள்வீர்'' என்று கூறியது. டொன் போஸ்கோவிடம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி தரப்பட்டது. அவருக்கும் கூட மிக அதிக வயதாகியிருந்தது. அவருடைய முகத்தில் ஆழமான கோடுகள் தோன்றியிருந்தன. மீதமிருந்த ஒரு சில பற்களும் தேய்ந்து போய்க் கொண்டிருந்தன.

பயணம் மீண்டும் தொடங்கியது. அவ்வப்போது சிறுவர்கள் நடையை நிறுத்தி, தங்களைச் சுற்றியிருக்கிற நவீனமான காரியங்களைப் பார்க்கத் தங்களை அனுமதிக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து நடக்கும்படி அவர்களை வற்புறுத்தினார். “நாம் பசியாகவோ, தாகமாகவோ இல்லை. ஆகவே நாம் பயணத்தை நிறுத்த வேண்டியதில்லை, நாம் தொடர்ந்து போய்க் கொண்டே இருப்போம்” என்றார் அவர்.

தொலைவில், பத்தாவது குன்றின் மீது ஓர் ஒளி எழுந்தது. அது மேலும் மேலும் பெரிதாகவும், அதிகப் பிரகாசமானதாகவும் வளர்ந்தது. அது ஒரு மிகப் பிரமாண்டமான வாசல் வழியாகப் பொழியப்படுவது போலத் தோன்றியது. பாடல் மீண்டும் தொடங்கியது. அது எவ்வளவுக்கு மனதை வசீரிப்பதாகத் தோன்றிது என்றால், அதைப் போன்றதொரு இசையை மோட்சத்தில் மட்டுமே அனுபவித்து மகிழ முடியும். அது முற்றிலும் விவரிக்கப்பட முடியாத தாக இருந்தது. ஏனெனில் அது இசைக்கருவிகளிலிருந்தோ , மனிதத் தொண்டைகளிலிருந்தோ வரவில்லை. டொன் போஸ்கோ எவ்வளவு அதிக மகிழ்ச்சியடைந்தார் என்றால், அவர் விழித் தெழுந்து, தம் படுக்கையிலேயே தாம் இருப்பதைக் கண்டு கொண்டார்.

அதன்பின் அவர் இந்தக் கனவைப் பின்வருமாறு விளக் கினார்: “அந்தப் பள்ளத்தாக்கு இந்த உலகம்தான்; அந்த உயர்ந்த கரை, உலகத்தினின்று நம்மைப் பிரித்துக் கொள்வதற்காக நாம் கடந்து செல்ல வேண்டிய தடைகளைக் குறித்துக் காட்டுகிறது; அந்த வண்டி பற்றி சொல்ல வேண்டியதில்லை. நடந்து சென்ற சிறுவர்கள் தங்கள் மாசற்றதனத்தை இழந்தாலும், தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டவர்கள் ஆவர்.” அந்தப் பத்துக் குன்றுகள் பத்துக் கட்டளைகளைக் குறிக்கின்றன என்றும், அவற்றைக் கடைப்பிடித்தல் நித்திய வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்றும் அவர் கூறினார். சில சிறுவர்கள் இந்தக் கனவில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்: அவர்கள் பள்ளத்தாக்கிலேயே இருந்து விட்டார்களா, அல்லது வண்டியிலிருந்து விழுந்தார்களா என்பதை அவர்களிடம் இரகசியமாகக் கூற தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.