அழைப்பு

யேசு பிறப்பதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது. நவம்பர் மாதம் அவ்வாண்டு வெகு குளிராயிருந்தது. மாதத்தின் மத்தியில் ஒரு நாள் தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் குருக்கள் யாவரும் யாரையோ எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். இசையாஸ் தீர்க்கத்தரிசி எழுதிய புத்தகத்தை அவர்கள் வாசித்தார்கள். வர இருக்கும் உலக இரட்சகரைப் பற்றியும் அவருடைய கன்னித் தாயைப் பற்றியும் இசையாஸ் வெகு அழகாக முன்னறிவித்திருக்கிறார்.

திடீரென ஒரு சிறு குழந்தைப் பெண் வந்தாள். அவள் பெயர் மரியம்மாள், வயது மூன்று. அவளுடைய தந்தையாகிய சுவக்கீனும், தாயாகிய அன்னம்மாளும் அவளைக் கைபிடித்து நடத்தி வந்தார்கள். மரியம்மாள் அழகான சிறுமி. தேவ வரப் பிரசாதத்தின் பார்க்க முடியாத கதிர்கள் அவளைச் சுற்றிலும் பிரகாசித்தன. சம்மனசு போன்ற அவளது முகத்தில் அவற்றின் பிரதி பிம்பத்தைப் பார்க்கலாம். அவளே கடவுளுடைய தாயாராகப் போகிறாள் என்பதைக் குருக்கள் அறிய மாட்டார்கள். ஆனால் அங்கிருந்த ஒருவருக்கு அது தெரியும். அவரே பரிசுத்தவானான சிமியோன். ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே ஆலயத்தில் மரியம்மாளின் மைந்தனை, குழந்தை யேசுவை, தம் கரங்களில் ஏந்தி வாழ்த்திய சிமியோன் அவரே. பரிசுத்த ஆவியே இந்த இரகசியத்தை சிமியோ னுக்கு அறிவித்திருந்தார். சிறுமி முன்னேறி வருவதைப் பார்த்ததும் அவர் மகிழ்ந்தார்.

தேவாலயத்தின் சேவைக்காக இந்தக் குழந்தையைக் கடவுளுக்குக் கொடுப்பதாக சுவக்கீனும் அன்னம்மாளும் நேர்ச்சை செய்து கடவுளுக்கு வாக்களித்திருந்தார்கள். இப்பொழுது அந்தப் பெரும் தியாகத்தைச் செய்யவே கோவிலுக்கு வந்திருந்தார்கள். சுவக்கீன் வாய் திறந்து பேசினார். அவர் பயந்தது போல் அவரது குரல் நடுங்கியது, உள்ளத்தின் துயரத்தையும் அவர் குரல் வெளிக்காட்டியது. அன்னம்மாள் அழுவதைப் பார்த்ததும் அவர் தன் துயரத்தை அடக்கிக் கொண்டு, "பரிசுத்த ஆலயத்தின் குருக்களே, நீங்கள் எங்கள் குழந்தையை உங்கள் பாதுகாப்பில் ஏற்றுக்கொண்டு, மிக உந்நதரான கடவுளின் சேவையில் அவளை வளர்ப்பீர்களா?" என்றார். பரிசுத்தவானான சிமியோன் மகிழ்ந்தார். மரியம்மாள் தம் சொந்த வீடாகிய தேவாலயத்தில் வளர வேண்டுமென கடவுள் விரும்பியதன் காரணம் அவருக்குத் தெரியும்.

பின் சிறிது நேரமாக ஒருவரும் பேசவில்லை, சிறுமியின் அதிசய அழகைப் பார்த்து குருக்கள் பிர மித்துப் போனார்கள். "குழந்தாய், கடவுள் உன்னை அழைக்கிறாரா?" என சிமியோன் கேட்டார். பரிசுத் தரில் பரிசுத்தரை மக்களிடமிருந்து மறைத்த திரையை சிறுமி உற்று நோக்கினாள். குருக்களும் திரையை உற்று நோக்கினார்கள். "ஆம், கடவுளே என்னை இங்கு அனுப்பினார். ஓ கடவுளின் குருக்களே, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். இங்கு அவரது பரி சுத்த வீட்டில் நான் வசிக்க அனுமதியளியுங்கள். இங்கு எப்பொழுதும் அவருக்குச் சேவை செய்து அவரை வாழ்த்திக் கொண்டிருப்பேன்'' என மரியம் மாள் மொழிந்ததுடன், "இல்லை, நான் கண்டது கனவல்ல, பாவம் நிறைந்த இந்த உலகத்தை விட்டு விலகும் படி ஒரு குரல் என்னை அழைத்தது. ஒரு சம்மனசு என்னை நோக்கி, கன்னியாகும்படி, கன்னி யாயிருந்து கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளும்படி, உன் தந்தையையும் தாயையும் விட்டு வா'' என்றார். என் சம்மனசை நான் பார்த்தாப் போல் இருந்தது நான் மூன்று வயதுக் குழந்தை'' என்றாள்.

அவள் சொல்வதை ஆலயத்தின் குருக்கள் அதிச யித்துக் கேட்டனர். “ஆம், பரிசுத்த குருக்களே, நம் மூதாதையரின் கடவுள் மா பெரியவர்; அவர் இரக்கம் நிறைந்தவர், என்னை இங்கு வரும்படி அழைத்தது, தேவாலயத்தின் வாசலுக்கு என்னை அழைத்து வந் தது, கடவுளுடைய சம்மனசானவரே. எனக்கு மூன்று வயதானதும், என் கன்னிமை வார்த்தைப் பாட்டை ஏற்றுக் கொள்ளும்படி கடவுள் தேவால யத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்; இந்த வார்த்தைப்பாடு கடவுளுக்கு மிகப் பிரியமானது எனத் தெரிவித்ததும் கடவுளுடைய சம்மனசான வரே'' என மரியம்மாள் கூறினாள். குருக்கள் அச்ச மரியாதையுடன் சிறுமியை அணுகி உற்று நோக்கி னர். அவள் முகத்தில் சம்மனசின் தோற்றம் காணப் பட்டது. சிமியோன் இதைக் கண்டு ஆச்சரியப்பட வில்லை ; ஏனெனில் அவர் உண்மையை அறிவார்.