அசுத்தப் பாவிகளைக் கடவுள் தண்டிக்கிறார்

இந்த இயற்கையான விளைவுகள் பயங்கர முள்ளவையாக இருக்க, இவற்றையும் விட அதிக அச்சத்திற் குரியவை கடவுளுடைய தண்டனைகள் ஆகும்.

1. அசுத்தப் பாவங்களால், வெறும் அசுத்த எண்ணங்களாலும் கூட எண்ணற்ற ஆத்துமங்கள் ஒவ்வொரு நாளும் நரக பாதாளத்திற்குள் இறங்குகிறார்கள். மற்ற எல்லாப் பாவங்களும் ஒன்றுசேர்ந்து ஒரு பாவியை நரகத்தில் தள்ளுகின்றன என்றால், இந்த ஒரே ஒரு பாவம் தன்னந்தனியாக நூறு பேரை நரகத்தில் தள்ளுகிறது என்று சில பரிசுத்த நூலாசிரியர்கள் தயங்காமல் கூறுகிறார்கள்.

2. ஒவ்வொரு அசுத்தப் பாவமும் பயங்கரமான தண்டனையைத் தன்னோடு சுமக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரியின் கண்களுக்கு முன்பாகவே ஒரு திருடன் ஒரு பெரிய திருட்டைச் செய்து விட்டு ஒருவேளை எளிதாகத் தப்பி விடலாம், ஆனால் அசுத்தப் பாவத்தைக் கட்டிக் கொள்ளும் ஒருவன் தண்டிக்கப்படாமல் தப்புவது பெரும் பாலும் இயலாத காரியமாகவே இருக்கும். ஏனெனில் கடவுள் காண்கிறார், அவரே தண்டனை தருகிறார்.

3. இப்படிப்பட்ட பாவம் செய்பவர்களின் மீது மிக பயங்கரமான உலகத் தண்டனைகள் விழுகின்றன. 

இந்தப் பாவங்களைக் கட்டிக் கொள்கிற தனி மனிதனின் மீதும், சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் சாபம் வந்து விழுகிறது. இந்த அசுத்தப் பாவத்தின் காரணமாகவே, வெறும் எட்டுப் பேரைத் தவிர, ஒட்டுமொத்த மனித இனத்தையும் பெருவெள்ளம் வந்து அழித்தது.

இந்த அசுத்தப் பாவத்தின் காரணமாகவே கடவுள் வானத்தினின்று கந்தகமும், நெருப்பும் பொழியச் செய்து, சோதோம், கொமோரா என்னும் பட்டணங்களை நிர்மூல மாக்கினார்.

இந்தப் பாவம் இவ்வளவு பயங்கரமான தண்டனை களை அனுப்பும்படி இவ்வளவு நல்லவரும், இரக்க முள்ளவருமான கடவுளையே தூண்டுகிறது என்றால், அது எவ்வளவு பயங்கரமுள்ளதாக இருக்க வேண்டும்!

இந்த இரண்டு பயங்கர நிகழ்வுகளின் காலத் திலிருந்து இதுவரை, இந்த அசுத்தப் பாவம் கட்டிக் கொள்ளப்படுகிற நகரங்களையும், ஊர்களையும் மிக பயங்கரமான இயற்கைப் பேரழிவுகள் விழுங்கியிருக் கின்றன. பெரும் அர்ச்சியசிஷ்டவர்கள் மட்டுமின்றி, ஆத்துமங்களோடு நீண்ட கால அனுபவமுள்ள வேத போதகர்களும், மற்ற குருக்களும் கூட, அசுத்த பாவப் பழக்க முள்ளவர்களுக்கு நிகழ்ந்த எதிர்பாராத பயங்கரமான மரணங் களைப் பற்றி நமக்குச் சொல்லக்கூடியவர்களாக இருக் கிறார்கள். இந்தப் பாவத்தைச் செய்து கொண்டிருக்கையி லேயே, எத்தனை சிறுவர்களும், சிறுமியரும், ஆண்களும், பெண்களும் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இறந்திருக் கிறார்கள்!

அசுத்ததனமே உலகிலுள்ள துன்பங்களுக்குப் பெரும் காரணமாக இருக்கிறது. ஆனால் மக்கள் அதைக் கண்டும் காணாதவர்களைப் போலிருக்கிறார்கள்! இந்த உண்மை களை அறியாதிருப்பதும், அவற்றின் பேரில் மறதியுள்ளவர் களாயிருப்பதும் சொல்ல முடியாத துன்பங்களைக் கொண்டு வருகின்றன. அவை எண்ணற்ற ஆன்மாக்களின் நித்திய அழிவிற்கும் காரணமாக இருக்கின்றன.