இரட்சிக்கப்பட விரும்பினால், நாம் விசுவசிக்கவும், கடைப்பிடிக்கவும் வேண்டிய நித்திய ஞானமானவரின் முக்கியமான வார்த்தைகள்!

133. 1. யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால் தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அநுதின மும் சுமந்து கொண்டு, என்னைப் பின் செல்லக் கடவான் (லூக் 9:23).

2. ஒருவன் என்னைச் சிநேகித்தால், என் வாக்கியத்தை அநுசரிப்பான்; என் பிதாவும் அவனைச் சிநேகிப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுக்குள் வாசம்பண்ணுவோம் (அரு. 14:23).

3. நீ பீடத்தண்டையில் உன் காணிக்கையைச் செலுத்தும் பொழுது உன் சகோதரன் உன்மேல் ஏதோ மனத்தாங்கலாயிருக் கிறானென்று அங்கே நினைவு கூர்வாயாகில், உன் காணிக்கையை அங்கே பீடத்தின் முன்பாக வைத்துவிட்டு, முந்த உன் சகோதர னோடு உறவாடப் போ; பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்துவாயாக (மத். 5.23,24). 134. 

4. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனை யும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதர ரையும், சகோதரிகளையும், இன்னும் தன் உயிரையும் முதலாய்ப் பகைக்காவிட்டால், என் சீஷனாயிருக்கக்கூடாது (லூக் 14:26).

5. என் நாமத்தைப் பற்றி வீட்டையாவது, சகோதரரை யாவது, சகோதரிகளையாவது, தந்தையையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது. நிலங்களையாவது. விட்டுவிட்ட எவனும், நூறுமடங்கு பெறுவான், நித்திய சீவியத் தையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் (மத் 19. 29).

6. நீ உத்தமனாயிருக்க விரும்பினால், போய், உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷமுண்டாயிருக்கும். பின்னும் வந்து என்னைப் பின்செல் (மத் 19:21). 135. 

7. என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுகிறவர்கள் எல்லாரும் மோட்ச இராச்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஆனால் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவனே மோட்ச இராச்சியத் தில் பிரவேசிப்பான் (மத். 7.21).

8. என்னுடைய இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவை எகளை அனுசரிக்கிற எவனும் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டி எழுப்பின விவேகமுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான் (மத் 7.24).

9. நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட் டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 183).

10. என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கிறேனென்று என் னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் ஆத்துமங் களுக்கு இளைப்பாற்றியைக்கண்டடைவீர்கள் (மத் 11 29). 136. 

11. நீங்கள் ஜெபம் செய்யும் போது மனிதரால் காணப்படும் பொருட்டு ஜெப ஆலயங்களிலும், சந்திக்கோடிகளிலும் நின்று கொண்டு ஜெபம்பண்ணப் பிரியப்படுகிற கள்ளஞானிகளைப் போலிருக்க வேண்டாம். அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 65)

12. நீங்கள் ஜெபம் செய்யும் போது அஞ்ஞானிகளைப் போல வளர்த்துச் சொல்லாதேயுங்கள். ஏனென்றால் தங்க ளுடைய சொல் மிகுதியினால் தங்கள் மன்றாட்டுக் கேட்டருளப்படுமென்று நினைக்கிறார்கள் (மத். 6.7).

13. நீங்கள் ஜெபம் பண்ண நிற்கும்போது, யாதொருவன் மேல் உங்களுக்கு ஏதேனும் மனத்தாங்கலிருந்தால், பரலோகத் திலிருக்கிற உங்கள் பிதாவானவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, நீங்களும் அவனுக்கு மன்னியுங்கள் (மாற்கு. 11 25).

14. நீங்கள் ஜெபம் பண்ணும்போது கேட்கிறதையெல் லாம் பெற்றுக்கொள்வீர்களென்று விசுவாசியுங்கள். அவைகள் உங்களுக்குச் சம்பவிக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 11 24). 137. 

15. நீங்கள் உபவாசமாயிருக்கும் போது கள்ள ஞானி களைப் போல வாடின முகமாய் இருக்கவேண்டாம். ஏனெனில் அவர்கள் உபவாசமாயிருக்கிறதாக மனிதருக்குத் தோன்றும்படி தங்கள் முகங்களைச் சுண்டிக்கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 616) 138. 

16. தவஞ் செய்ய அவசியமில்லாத தொண்ணுாற் றொன்பது நீதிமான்களைப்பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் மோட்சத்திலே அதிக சந்தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 157).

17. நீதிமான்களையல்ல, பாவிகளையே பச்சாத்தாபத்துக்கு அழைக்க வந்தேன் (லூக். 5. 32). 139. 

18. நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கிய வான்கள் : ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது (மத். 5.10).

19. மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகாதென்று தள்ளும் போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள் (லூக். 6:22)

20. உலகம் உங்களைப் பகைத்தால், உங்களைப் பகைக்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறிந்து கொள்ளுங்கள் (அரு. 15:18) 140. 

21. வருந்திச் சுமை சுமந்திருக்கிறவர்களாகிய நீங்களெல்லோரும் என் அண்டையில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன் (மத் 11:28).

22. நானே பரலோகத்திலிருந்து இறங்கின ஜீவிய அப்பம் (அரு. 6:51).

23. என் மாம்சம் மெய்யாகவே போஜனமும், என் இரத்தம் மெய்யாகவே பானமுமாயிருக்கின்றது. என் மாம்சத்தைப் புசித்து. என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் எவனும் என்னில் ஜீவிக் கிறான், நானும் அவனில் ஜீவிக்கிறேன் (அரு. 6:55,56). 

141. 24. என் நாமத்தினிமித்தம் எல்லாராலேயும் பகைக்கப்படு வீர்கள். ஆகிலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் சேதமாகாது (லூக். 21:17,18). 

142. 25. எவனானாலும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது. ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற்றொரு வனை நேசிப்பான், அல்லது ஒருவனைச் சார்ந்து கொண்டு மற்றொருவனைப் புறக்கணிப்பான். சர்வேசுரனுக்கும் திரவியத் திற்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது (மத். 6:24). 

143. 26. மனிதனுடைய இருதயத்தினின்று துர்ச்சிந்தனைகளும் கொலைபாதகங்களும் விபசாரங்களும் காமங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும் தேவதூஷணங்களும் புறப்படுகின்றன (மத் 15:19).

27. நல்ல மனுஷன் நல்லவைகளை நல்ல பொக்கிஷத் திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். கெட்ட மனுஷன் கெட்டவை களைக் கெட்ட பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான் (மத்.12:35) 

144. 28. கலப்பையின் மேல் கையை வைத்துக்கொண்டு, பின்னிட்டு திரும்பிப் பார்க்கிற எவனும் சர்வேசுரனுடைய இராச்சியத்துக்குத் தகுந்தவனல்ல (லூக். 9:62)

29. உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட் டிருக்கின்றன; ஆகையால் நீங்கள் அஞ்ச வேண்டாம்; அநேகம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் அதிக விலையுள்ளவர்களா யிருக்கிறீர்கள் (லூக் 12:7).

30. உலகத்துக்கு ஆக்கினைத் தீர்வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (அரு.3:17). 

145. 31. தின்மையைச் செய்கிற எவனும் ஒளியைப் பகைக் கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்திலும் வராதிருக்கிறான் (அரு. 3: 20).

32. சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். ஆதலால் அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்க வேண்டும் (அரு.4:24)

33. மனுமகன் தான் முன்னிருந்த இடத்துக்கு ஆரோகண மாகிறதை நீங்கள் கண்டால் என்ன நினைப்பீர்கள்? (அரு. 6:63)

34. மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன்: பாவத்தைச் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமைப் பட்டவனாய் இருக்கிறான். அடிமையானவன் என்றென்றைக்கும் வீட்டில் நிலைகொள்ளான், குமாரனோ என்றென்றைக்கும் நிலைகொள்ளுகிறான் (அரு. 8:34, 35)

35. அற்பக்காரியத்திலே பிரமாணிக்கனாயிருக்கிறவன் பெரிய காரியத்திலும் பிரமாணிக்கனாயிருக்கிறான். அற்பக் காரியத்திலே அநீதனாயிருக்கிறவன் பெரிய காரியத்திலும் அநீதனாயிருக்கிறான் (லூக் 16: 10).

36. வேதப் பிரமாணத்தில் ஒரு எழுத்தின் அணுப்பிரமாண மும் (நிறைவேறாமல் போவதைவிட வானமும் பூமியும் ஒழிந்து போவது அதிக எளிதாயிருக்கும் (லூக் 16:17).

37. மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங் களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5. 16). 

146. 38. வேதபாரகர் பரிசேயர், இவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகப்பட்டிராவிட்டால் மோட்ச இராச்சியத் திற்குள் பிரவேசிக்க மாட்டீர்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன் (மத். 5. 20).

39. உன் வலது கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி அதைத் தூர எறிந்து போடு. ஏனெனில் உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் அவயவங்களில் ஒன்று சேதமாய்ப் போவது உனக்கு நலமாம் (மத். 529).

40. ஸ்நாபக அருளப்பருடைய நாள் முதல் இதுவரையில் பரலோக இராச்சியம் பலவந்தப்படுகின்றது. பலவந்தம் பண்ணு கிறவர்களே அதைப் பறித்துக்கொள்ளுகிறார்கள் (மத் 11:12).

41. பூலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அந்தும் துருவும் அரிக் கின்றது, திருடரும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள் (மத். 619)

42. நீங்கள் தீர்க்கப்படாதபடி ஒருவருக்கும் நீங்கள் தீர்ப் பிடாதேயுங்கள் (மத் 7. 1). 

147. 43. ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உள்ளத்திலே பறிக்கிற ஓநாய்களாக உங்களிடத்தில் வருகிற கள்ளத் தீர்க்க தரிசிகள் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள் (மத் 7:15). 

44. இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமூகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:10).

45. விழிப்பாயிருங்கள். ஏனெனில் (ஆண்டவர் வரும் ) நாளும் நாழிகையும் உங்களுக்குத் தெரியாது (மத் 25:13). 

148. 46. என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லு கிறேன்: சரீரத்தைக் கொலை செய்து, அதற்கு மேல் ஒன்றும் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்; உயிரைப் பறித்த பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங் களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 12:5,6).

47. எதை உண்போமென்று உங்கள் ஜீவனுக்காகவும், எதை உடுத்திக்கொள்வோமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் இவையெல்லாம் உலகத்தார் (விசாரப்பட்டுத்) தேடு கிறார்கள்; உங்கள் பிதாவோ, இவைகள் உங்களுக்கு வேண்டிய தென்று அறிந்திருக்கிறார் (லூக். 12:22, 30)

48. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை ; அறியப் பட்டு வெளிக்கு வராதபடி மறைக்கப்பட்டதுமில்லை (லூக். 8:17). 

149. 49. உங்களில் எவனாவது பெரியவனாயிருக்க விரும்பி னால் அவன், உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவான். உங்களில் முதன்மையாயிருக்க விரும்புகிறவன் உங்களுக்கு ஊழியனாயிருப்பானாக (மத் 20:26, 27).

50. பணக்காரர் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவோ அரிதாயிருக்கிறது (மாற்கு 10:23).

51. திரவியவான் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பதை விட ஒட்டகம் ஊசித் துவாரத்தின் வழியாய் நுழைந்து போவது எளிதாயிருக்கும் (லூக் 18: 25).

52. உங்கள் சத்துராதிகளைச் சிநேகியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்காகவும், உங்கள் பேரில் அபாண்டம் சொல் கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (மத். 5.44).

53. ஐசுவரியவான்களே, உங்களுக்கு ஐயோ கேடு; ஏனெனில் நீங்கள் உங்கள் ஆறுதலையடைந்திருக்கிறீர்கள் (லூக். 6.24).

54. நெருக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். ஏனென்றால் கேட்டுக்குச் செல்லும் வாசல் அகன்றதும் அதன்வழி விசாலமுமாயிருக்கின்றது. அதில் பிரவேசிக்கிறவர்களும் அநேகர். சீவியத்துக்குச் செல்லும் வாசல் எவ்வளவோ நெருக்க மும் அதன் வழி எவ்வளவோ ஒடுக்கமுமாயிருக்கின்றது! அதைக் கண்டுபிடிக்கிறவர்களும் சொற்பப்பேர் (மத் 713,14).

55. கடைசியானவர்கள் முதல்வர்களாகவும், முதல்வர்கள் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள். ஏனெனில் அழைக்கப் பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சொற்பப்போர் (மத். 2016).

56. நானோ தின்மைக்கு எதிர்த்து நிற்கவேண்டாமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னுடன் வழக்காடி உன் அங்கியைப் பறிக்க விரும்பு கிறவனுக்கு உன் போர்வையையும் விட்டுவிடு (மத். 5.39, 40).

57. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள். மனமானது வேகமுள்ளதுதான், மாம்சமோ துர்ப்ப லமுள்ளது (மத் 26:41).

58. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்படுவான் (லூக் 14:11).

59. பிச்சை கொடுங்கள்; அப்போது இதோ, உங்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும் (லூக். 11:41).

60. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்துபோடு . நீ இரு கைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக் கும். உன் கண்ணானது உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்து போடு. இரு கண்ணுள்ளவ னாய் அக்கினிச்சூளையில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ண னாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் (மத்.18.8, 9). 

151. எட்டுப்பாக்கியங்கள்

1. மனத்தரித்திரர் பாக்கியவான்கள் : ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

2. சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

3. அழுகிறவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.

4. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.

5. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்.

6. தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் சர்வேசுரனைத் தரிசிப்பார்கள்.

7. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் என்னப்படுவார்கள்.

8. நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கிய வான்கள்; ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது (மத். 5.3-10). 152. 62. பிதாவே, பரலோகத்துக்கும், பூலோகத்துக்கும் ஆண்டவரே! உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஏனெனில் நீர் இவைகளை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துச் சிறியோர் களுக்கு வெளிப்படுத்தினீர் (மத் 11:25). 153. நித்திய ஞானமானவர் தாமே கடைப்பிடித்து வாழ்ந்த பிறகு நாம் கடைப்பிடிக்கும்படி கற்பிப்பதற்காக பூமிக்கு வந்த மாபெரும், முக்கியமான சத்தியங்களின் சுருக்கம் இதுவே. நம் பாவங்களால் விளையும் குருட்டுத்தனத்தையும், தாறுமாறான நடத்தையையும் நம்மிடமிருந்து அகற்றுவதே அவரது நோக்க மாக இருந்தது.

இந்த நித்திய சத்தியங்களைப் புரிந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள்.

அவற்றை விசுவசிப்பவர்கள் அவர்களிலும் அதிக பாக்கியவான்கள்.

அவற்றை விசுவாசித்து, வாழ்வில் அனுசரித்து, மற்றவர் களுக்கும் அவற்றைப் போதிப்பவர்கள் அனைவரிலும் அதிக பாக்கியவன்கள். ஏனெனில் அவர்கள் நித்தியத்திற்கும் பரலோகத் தில் நட்சத்திரங்களைப் போல் ஒளிவீசுவார்கள் (தானி.12 13).