3 ஏப்ரல் 1944.
சமாதானமான இந்தக் காட்சி மோட்சத்திலிருந்து இறங்குகிறது. இந்நாட்களில் உலகம் நமக்குத் தருகிற அருவெறுப்புக்குரிய காரியங்களின் நடுவே அது வருகிறது. இது எப்படியென்றே எனக்கு விளங்கவில்லை. ஏனென்றால் எனக்குள் வாழ்கிற ஒன்றிற்கு நேர் எதிராக இருக்கிற மனித துர்க்குணத்தோடு எனக்கு ஏற்படுகிற இடைவிடாத போராட்டப் புயலில் சிக்கிய ஒரு சிறு துரும்பைப் போல் நான் இருக்கிறேன்.
நாங்கள் இன்னும் எலிசபெத்தின் வீட்டில்தான் இருக்கிறோம். கடைசி சூரியக் கதிர்களில் தெளிவாக இருக்கும் அழகிய கோடைகால மாலை வேளை. ஆயினும் அதற்குள் பெரிய ஒரு நீலத் துணியில் குத்தப்பட்ட, வெள்ளியால் செய்த கொக்கி போல் காற்புள்ளி அடையாளத்தில் பிறைச் சந்திரனும் காணப்படுகிறது.
ரோஜாச் செடிகள் கூர்மையான வாசனை வீசுகின்றன. ரீங்காரம் செய்கிற பொன்துளிகளைப் போல் தேனீக்கள், வெப்பமாயிருக்கிற அமைதியான மாலை ஆகாயத்தில் கடைசித் தடவையாகப் பறந்து செல்கின்றன. மேட்டு நிலங்களிலிருந்து வெயிலில் உலர்த்தப்பட்ட வைக்கோலின் பலத்த வாசனை பரவுகிறது. இப்போது தான் அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட உரொட்டியைப் போல் அந்த வாசனை இருக்கின்றது. எங்கும் உலரப் போடப்பட்டுள்ள விரிப்புகளிலிருந்து இந்த வாசனை வருவதாகவும் இருக்கக் கூடும். அந்த விரிப்புகளை சாரா மடிக்கிறாள்.
கைகளைக் கோர்த்தபடி எலிசபெத்தும் மாதாவும் வெளிச்சம் மங்கிய கொடிப் பந்தலின் கீழ் மிக மெதுவாய் அங்கும் இங்கும் நடக்கின்றனர்.
மரியா எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். எலிசபெத் தம்மாளுக்கு உதவி செய்கிற போதே, சாரா ஒரு பெரிய விரிப்பை வேலியிலிருந்து எடுத்து அதை மடிப்பதற்கு கஷ்டப்படுவதைக் கவனித்து விடுகிறார்கள். எலிசபெத்திடம்: “இதிலே கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அந்த வயதான ஸ்திரீக்கு உதவ வருகிறார்கள். அந்த விரிப்பை நீட்டி வந்து பின் கரிசனையுடன் நன்றாக மடிக்கிறார்கள். “இந்த விரிப்புகளில் இன்னும் வெப்பமும் வெயிலின் வாசமும் இருக்கிறதே” என்று புன்னகையோடு கூறுகிறார்கள். பின்னும் அந்த மூதாட்டியைப் பார்த்து: “இந்த விரிப்பு உங்கள் சலவைக்குப் பின் ரொம்ப அழகாயிருக்கிறது. இவ்வளவு நன்றாகச் செய்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் தெரிகிறது” என்று கூறி அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள்.
சாரா அதிக மகிழ்ச்சியோடு வாசனையூட்டப்பட்ட விரிப்புகளை எடுத்துச் செல்கிறாள்.
மரியா எலிசபெத்திடம் திரும்பிப் போய்: “நாம் இன்னும் கொஞ்ச நேரம் நடப்போம். அது உங்களுக்கு நல்லது” என்கிறார்கள். ஆனால் எலிசபெத் களைப்பாகி அதற்கு மேல் நடக்க விரும்பாததால், மாதா அவளிடம்: “உங்கள் புறாக்கள் எல்லாம் கூட்டில் இருக்கின்றனவா, அவற்றிற்கு தொட்டித் தண்ணீர் சுத்தமாயிருக்கிறதா என்று பார்த்துவிட்டு பின் வீட்டிற்குத் திரும்பி விடலாம்” என்று சொல்லுகிறார்கள்.
எலிசபெத்தம்மாளுக்கு புறாக்கள் விருப்பப் பிராணிகளாயிருக்க வேண்டும். அவர்கள் புறாக் கூட்டின் முன்பாக வரவும் எலிசபெத் மனம் நெகிழ்கிறாள். ஏனென்றால் அவர்கள் இருவரும் அங்கு வரவும், பெண் புறாக்களெல்லாம் கூடுகளில் இருக்க, ஆண் புறாக்கள் வெளியில் நின்றபடி அங்குமிங்கும் அசையாதபடி எல்லாப் புறாக்களும் கூவுகின்றன. இது அவை இதமாக வரவேற்கும் முறை. எலிசபெத்தம்மாள் தன் பலவீனத்தால் மேற்கொள்ளப்பட்டு பயந்து அழுகிறாள். அவள் மாதாவிடம் “நான் இறந்து போனால்... என் சின்னப் புறாக்கள் என்ன செய்யும்? நீரும் இங்கு தங்க மாட்டீர். நீர் என் வீட்டில் தங்குவதாயிருந்தால் நான் இறந்துவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஸ்திரீ அடையக் கூடிய மிகப் பெரிய ஆனந்தத்தை நான் பெற்றுள்ளேன் - இனிமேல் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திராத ஆனந்தம் அது. என் மரணத்தைப் பற்றிக் கூட நான் ஆண்டவரிடம் முறைப்பாடு சொல்ல முடியாது. ஏனென்றால் அவருடைய தயாளம் என்மீது நிரம்பி வழிகின்றது. அவர் வாழ்த்தப்படுவாராக! ஆனால் சக்கரியாஸ் இருக்கிறார்... அதன்பின் குழந்தையும் இருப்பான். அவர் தன் ஸ்திரீ இல்லாமல் ஒரு காட்டில் இழக்கப்பட்டவரைப் போலிருப்பார். குழந்தை எவ்வளவு சிறியவனென்றால், அவன் தன் தாய் இல்லாதிருப்பதால் குளிரால் மடிய நியமிக்கப்பட்ட பூவைப் போலிருப்பான். பாவம் தாயின் சீராட்டல் இல்லாத பிள்ளையாயிருப்பானே...”
“எலிசபெத், ஏன் நீங்கள் இவ்வளவு கவலையடைகிறீர்கள்? ஒரு தாயாகும் மகிழ்ச்சியைக் கடவுள் உங்களுக்குத் தந்திருக்கிறார். அம்மகிழ்ச்சி பூரணமாகும் தருணத்தில் அதை அவர் எடுத்துவிட மாட்டார். சின்ன அருளப்பன் தன் தாயின் அன்பையெல்லாம் பெறுவான். சக்கரியாஸின் நீண்ட வாழ்நாளின் இறுதி வரையிலும் அவருடைய பிரமாணிக்கமுள்ள மனைவியின் முழுப் பராமரிப்பும் அவருக்குக் கிடைக்கும். நீங்கள் இருவரும் ஒரே மரத்தின் இரு கிளைகள். ஒன்றைத் தனியே விட்டுவிட்டு மற்றது மடியாது.”
“நீர் நல்லவர் மரியா. எனக்கு ஆறுதலாயிருக்கிறீர். ஆயினும் ஒரு மகனைப் பெற்றெடுப்பதற்கு என் வயது மிக அதிகம். இப்போது அது நடைபெறப் போவதால் எனக்குப் பயமாயிருக்கிறது.”
“இல்லை. அப்படியில்லை! இங்கே சேசு இருக்கிறார். சேசு இருக்கிற இடத்தில் நாம் பயப்படக் கூடாது. என் குமாரன் புதிதாய் உருவான மொட்டாயிருக்கையிலேயே உங்கள் வேதனையை மாற்றியிருக்கிறார். இதை நீங்களே கூறினீர்களே. இப்போது அவர் மேலும் மேலும் வளர்ந்து வருகிறார். என் குழந்தையாக உயிர் வாழ்கிறார். அவருடைய சின்ன இருதயம் துடிப்பதை என் தொண்டையில் நான் உணருகிறேன். அங்கே ஒரு பறவைக் குஞ்சு மெல்லத் துடிக்கும் இருதயத்துடன் இளைப்பாறுவதையும் உணருகிறேன். எல்லா ஆபத்தையும் அவர் அகற்றுவார். நம்பிக்கையுடன் இருங்கள்.”
“எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனாலும் நான் இறக்க நேர்ந்து விட்டால்... நீர் சக்கரியாஸை விட்டுவிட்டு உடனே போய்விடக் கூடாது. உமது இல்லத்தைப் பற்றி உமக்கு அக்கறை உள்ளதை அறிவேன். ஆனால் அவருடைய துயரத்தின் முதல் நாட்களில் அவருக்கு உதவி செய்ய, கூடக் கொஞ்சக் காலம் தயவு செய்து இங்கே நீர் இருக்க வேண்டும்.”
“நான் உங்களுடையவும் சக்கரியாசுடையவும் மகிழ்ச்சியில் சந்தோஷப்படுவதற்காக இங்கு தங்குவேன். நீங்கள் பலத்தோடும், மகிழ்ச்சியோடும் இருக்க வந்தபின்தான் இங்கிருந்து போவேன். இப்போது அமைதியாயிருங்கள். எல்லாம் சரியாக இருக்கும். நீங்கள் துன்பப்படும்போது உங்கள் குடும்பத்திற்கு எதுவும் நடந்து விடாது. மிக அன்புள்ள ஊழியக்காரி சக்கரியாசுக்குப் பணிவிடை செய்வாள். உங்கள் மலர்ச் செடிகள் கவனிக்கப்படும். உங்கள் புறாக்களும் அப்படியே. அவற்றின் பாசமுள்ள எஜமானி திரும்ப வரும்போது அவை எல்லாம் அழகாயும், மகிழ்ச்சியாகவுமிருக்கும். நீங்கள் அவற்றோடு மகிழலாம். நாம் இப்போது போவோம். நீங்கள் வெளிறிப் போகிறீர்கள்.”
“ஆம். மீண்டும் வேதனை உண்டாகிறது. என் நேரம் வந்துள்ளது போலும். மரியா எனக்காக வேண்டிக் கொள்ளும்.”
“உங்கள் வேதனை மகிழ்ச்சியில் வந்து முடியும் வரை உங்களை என் ஜெபத்தால் தாங்கிக் கொள்வேன்.”
இரு ஸ்திரீகளும் மெல்ல வீட்டிற்குள் செல்கிறார்கள். எலிசபெத்தம்மாள் தன் அறைக்குள் போகிறாள். திறமையும் பராமரிக்கும் பான்மையுமுள்ள மரியா தேவையான எல்லா ஏற்பாடுகளைப் பற்றியும் சொல்லி, தேவைப்படும் அனைத்தையும் தயாரிக்கிறார்கள். கவலையோடிருக்கிற சக்கரியாசையும் தேற்றுகிறார்கள்.
அன்று ஒருவரும் உறங்கவில்லை. உதவிக்கென அழைக்கப்பட்ட பெண்களின் பேச்சுக் குரல் கேட்கிறது. மாதா புயலடிக்கும் இரவில் ஒளிவீசும் கலங்கரை விளக்குப் போல் எல்லாவற்றையும் ஒரு புன்னகையோடு கவனித்துக் கொள்கிறார்கள். முழு வீடும் மாதாவைச் சுற்றி இயங்குகிறது. மாதா ஜெபிக்கிறார்கள். எதற்காவது தேவைப்பட்டு அழைக்கப்படாதிருக்கும்போது ஜெபத்தில் ஊன்றுகிறார்கள். அவர்கள் உணவருந்தவும் வேலை செய்யவும் கூடி வரும் அறையில் இப்போது மரியா இருக்கிறார்கள். சக்கரியாஸும் அங்கு இருக்கிறார். பெருமூச்சு விட்டபடி சஞ்சலத்தோடு அங்குமிங்கும் நடக்கிறார். அவர்கள் ஏற்கெனவே கூடி ஜெபித்தாயிற்று. மரியா தொடர்ந்து ஜெபிக்கிறார்கள். சக்கரியாஸ் களைப்படைந்து மேசையருகில் கிடந்த பெரிய நாற்காலியில் அமர்ந்து அமைதியாகி உறங்கும் இந்நேரத்திலும் மாதா ஜெபிக்கிறார்கள். மேசையின் குறுக்காக கையை வைத்து தலையை அதில் சாய்த்து அவர் உறங்குகிறார். சத்தம் ஏற்படாதபடி மரியா தன் காலணிகளை அகற்றி வெறுங்காலாய் நடக்கிறார்கள். ஒரு வண்ணத்துப்பூச்சி அறையில் பறப்பதை விட குறைந்த சத்தமே அவர்கள் நடப்பதால் ஏற்படுகிறது. கதவு அடிக்கடி திறக்கப்படுவதால் உள்ளே வருகிற இரவின் குளிர் காற்றுப்படாமல் சக்கரியாசை ஒரு கம்பளித் துணியால் எவ்வளவு மெல்லப் போர்த்துகிறார்களென்றால் அவர் தொடர்ந்து உறங்குகிறார். மரியா மீண்டும் ஜெபிக்கிறார்கள். அதிக உருக்கத்தோடு, முழங்காலிட்டு, கரங்களை மேலே உயர்த்தி மன்றாடுகிறார்கள். அப்போது எலிசபெத்தின் வேதனைக் கதறல் பரிதாபமாகக் கேட்கிறது.
சாரா வருகிறாள். மாதாவை வெளியே வரும்படி கூப்பிடுகிறாள். அவர்கள் வெறுங்காலாய் தோட்டத்திற்குட் செல்ல, “எஜமானி உங்களைத் தேடுகிறார்கள்” என்று சொல்கிறாள்.
“வருகிறேன்” என்று கூறிய மரியா வீட்டின் பக்கமாய் நடந்து மெத்தைப் படிகளில் ஏறுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் அமைதியான வெள்ளி பூத்த இரவில் நடமாடும் வெண்மையான சம்மனசைப் போலிருக்கிறது - அவர்கள் எலிசபெத்தின் அறைக்குப் போகிறார்கள்.
“ஓ மரியா, மரியா, என்ன வேதனை! இனி இதைத் என்னால் தாங்க முடியாது. ஒரு தாய் ஆவதற்கு எவ்வளவு வேதனைப்பட வேண்டியிருக்கிறது!” என்கிறாள் எலிசபெத். மாதா அவளை அன்போடு தடவி முத்தமிட எலிசபெத் தொடர்ந்து: “மரியா என் கைகளை உம் வயிற்றிலே நான் வைக்க விடும்” என்கிறாள். உடனே மாதா எலிசபெத்தின் கைகளைத் தன் திருவயிற்றோடு சேர்த்து வைத்துக் கூறுகிறார்கள்: “இங்கே சேசு இருக்கிறார். உங்களைப் பார்க்கிறார். கேட்கிறார். எலிசபெத், நம்பிக்கையோடிருங்கள். அவர் உங்கள் நன்மைக்காக செயலாற்றுவதால் அவருடைய இருதயம் அதிக பலமாக துடிக்கிறது - அதை என் கையில் பிடித்திருப்பது போல் அதன் துடிப்பைக் கேட்கிறேன். அவர் சொல்லும் வார்த்தைகளும் எனக்குத் தெரிகின்றன. அவர் சொல்கிறார்: “அவளை பயப்படாமல் இருக்கும்படி சொல்லுங்கள். இன்னும் கொஞ்ச வேதனை மட்டுமே. அதன்பின் சூரியனின் முதல் கதிர்கள்வரவும் தங்கள் இதழ்களைத் திறக்கும்படி காத்திருக்கும் அநேக ரோஜாக்களின் நடுவே, எலிசபெத்தின் இல்லம் மிக அழகிய ரோஜா மலரைப் பெற்றிருக்கும். அதுவே அருளப்பன், என் முன்னோடி.”
எலிசபெத்தம்மாள் மவுனமாய்க் கண்ணீர் சிந்துகிறாள். அந்நிலையில் மாதா சறறு நேரம் நிற்க,எலிசபெத்தின் வேதனை தணிகிறது. மற்றவர்கள் எல்லாரும் அமைதியாயிருக்கும்படி மாதா சைகை காண்பிக்கிறார்கள். துன்புறும் ஓர் ஆளின் அருகில் இருக்கும் அழகிய வெண் தூதனைப் போலிருக்கிறார்கள் மாதா. எண்ணெய் விளக்கின் வெளிச்சம் மங்கலாக உள்ளது. மாதா ஜெபிக்கிறார்கள். அவர்களின் உதடுகள் அசைவதைக் காண்கிறேன். அதை நான் காணாவிட்டாலும் அவர்கள் முகத்தின் பரவசத்திலிருந்து அவர்கள் ஜெபிக்கிறதாகக் கண்டுபிடித்துக் கொள்வேன்.
சற்று நேரத்திற்குப் பின் மறுபடியும் எலிசபெத்தின் வேதனை கூடுகிறது. எலிசபெத்தை அன்பு பாராட்டி விட்டு மரியா வெளியே வந்து துரிதமாக நிலா வெளிச்சத்தில் படிக்கட்டில் இறங்கி சக்கரியாஸ் உறங்குகிறாரா என்று வந்து பார்க்கிறார்கள். அவர் உறக்கத்தில் ஏதோ முனகுகிறார். மரியா இரக்கமாகப் பார்த்து மீண்டும் ஜெபிக்கிறார்கள்.
மேலும் சற்று நேரம் கடருகிறது. சக்கரியாஸ் விழித்து தலையை உயர்த்திப் பார்க்கிறார். அவர் குழம்பிப் போயிருக்கிறார். ஏனென்றால் அந்த இடத்தில் தாம் எதற்காக இருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை. பின் அதைப் புரிந்து கொண்டு ஒரு சயிக்கினை செய்து சத்தங் கொடுக்கிறார். “குழந்தை இன்னும் பிறக்கவில்லையா?” என்று எழுதிக் கேட்கிறார். இல்லையென்று மாதா தலையசைக்கிறார்கள். “என்ன வேதனை! எலிசபெத் பாவம். சாகாமல் இதை சமாளித்து விடுவாளா?” என்று எழுதுகிறார்.
மாதா அவருடைய கையைப் பிடித்து:
“உதயத்தில், இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்து விடுவான். எல்லாம் நலமே இருக்கும். எலிசபெத் வலிமையுடன் இருக்கிறார்கள். இந்த நாள் மிக அழகியதாக இருக்கும். சீக்கிரம் விடிந்து விடும். குழந்தை பகல் ஒளியைக் காணும் இந்த நாள் எவ்வளவு அழகாக இருக்கும்! உங்கள் வாழ்விலேயே மிகச் சிறந்த நாளாக இருக்கும். ஆண்டவர் பெரிய வரங்களை உங்களுக்கென வைத்திருக்கிறார். உங்கள் பிள்ளை அவற்றை அறிவிப்பவனாக இருப்பான்” என்கிறார்கள்.
சக்கரியாஸ் தலையை அசைத்து தம் ஊமை வாயைக் காட்டுகிறார். பல காரியங்களைச் சொல்ல விரும்புகிறார். ஆனால் அவரால் கூடவில்லை.
மாதா அதைப் புரிந்து கொண்டு கூறுகிறார்கள்: “ஆண்டவர் உங்கள் மகிழ்ச்சியைப் பூர்த்தியாக்குவார். அவரை முழுவதுமாக விசுவசியுங்கள். அளவில்லா நம்பிக்கையுடன் அவரை நம்புங்கள். அவரை முழுமையாக நேசியுங்கள். நீங்கள் எதிர்பார்க்கத் துணிவதற்கும் அதிகமாக ஆண்டவர் உங்களுக்கு அருள்வார். உங்களுடைய முந்தின நம்பிக்கைக் கேட்டைத் துடைப்பதற்காக இந்த முழு விசுவாசத்தை ஆண்டவர் கேட்கிறார். “நான் விசுவசிக்கிறேன்” என்று என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள். உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்புடனும் அப்படிச் சொல்லுங்கள். ஆண்டவர் மீதும் அவருடைய வலிமையுள்ள தயாளத்தின் மீதும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவருடைய பொக்கிஷங்கள் திறக்கப்படுகின்றன.”
பாதி திறந்திருக்கிற கதவின் வழியாக மங்கலான உதய வெளிச்சம் தெரிகிறது. மாதா அதைத் திறந்து வைக்கிறார்கள். பனி பெய்த பூமியை உதய காலை முழு வெண்மையாக்குகிறது. ஈரமான மண்ணின் வாசனையும் பச்சை மூலிகைகளின் வாசமும் வருகின்றன. பறவைகள் கிளைக்குக் கிளை கூப்பிடும் முதல் சத்தம் கேட்கிறது.
சக்கரியாசும் மரியாயும் கதவின் பக்கம் வருகிறார்கள். இரவு உறக்கமின்மையால் அவர்கள் வெளிறிக் காணப்படுகிறார்கள். காலையின் ஒளி அவர்களை மேலும் மேலும் வெளிறிக் காட்டுகிறது. மரியா தன் காலணிகளைப் போட்டுக்கொண்டு படிக்கட்டின் அடியில் போய் நின்று உற்றுக் கேட்கிறார்கள். ஒரு ஸ்திரீ வெளியில் எட்டிப் பார்க்கிறாள். தலையசைக்கிறாள். உள்ளே சென்று விடுகிறாள். இன்னும் எதுவுமில்லை.
மரியா அறைக்குட் சென்று கொஞ்சம் சூடான பால் கொண்டு வந்து சக்கரியாசுக்குக் கொடுக்கிறார்கள். பின் புறாக்களிடம் சென்று திரும்புகிறார்கள். மறுபடியும் அறைக்குள்ளே போகிறார்கள். அது ஒருவேளை சமையல் கூடமாயிருக்கலாம். அங்குமிங்கும் நடமாடி கவனித்துக்கொண்டு வருகிறார்கள். மிக நன்றாக உறங்கி எழுந்ததுபோல் காணப்படுகிறார்கள். அவ்வளவு துரிதமாயும் அமைதியோடும் காணப்படுகிறார்கள்.
சக்கரியாஸ் பதறியபடி தோட்டத்தில் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறார். மாதா அவரை அனுதாபத்துடன் நோக்குகிறார்கள். பின் அவர்கள் தன் அறைக்குட் சென்று தறியின் பக்கத்தில் முழங்காலிட்டு உருக்கமாக மன்றாடுகிறார்கள். காரணம் எலிசபெத்தின் கூக்குரல் அதிக கூர்மையாகிறது. நித்திய பிதாவைப் பார்த்து தரைவரை தாழ்ந்து வேண்டிக் கொள்கிறார்கள். சக்கரியாஸ் உள்ளே வருகிறார். மாதாவை இந்த நிலையில் கண்ட அவர் அழுது விட்டார். மாதா எழுந்து அவருடைய கரத்தைப் பிடிக்கிறார்கள். அவர்கள் அவரைவிட மிக இளமையாயிருந்தாலும், அவருடைய தாய் போல் காணப்பட்டு அவரைத் தேற்றுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அப்படியே மெல்லச் சிவந்த காலையின் சூரிய ஒளியில் நிற்கையில் நல்ல செய்தி அவர்களை எட்டுகிறது: “குழந்தை பிறந்து விட்டது! குழந்தை பிறந்து விட்டது! ஆண் குழந்தை! பாக்கியம் பெற்ற தந்தை! ரோஜாவைப் போலும், சூரியனைப் போலும் அழகிய மகன். தன் தாயைப்போல் வலிமையுள்ள பிள்ளை! அவன் தந்தைக்கோ மகிழ்ச்சி! நீர் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பெற்றவர். தேவாலயத்திற்கு அர்ப்பணிக்கும்படி அவர் உமக்கோர் மகனைத் தந்தார்! இந்த இல்லத்திற்கு வாரிசைக் கொடுத்த சர்வேசுரனுக்கு மகிமை யுண்டாவதாக! நீரும் உம்முடைய குமாரனும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவனுடைய சந்ததி நூற்றாண்டுகளாய் தலைமுறை தலைமுறையாக உம்முடைய பெயரை விளங்கச் செய்யட்டும். அவனுடைய சந்ததியார் நித்தியரான ஆண்டவருடன் எப்பொழுதும் ஐக்கியப்பட்டிருப்பார்களாக!” துயரத்தையும் வேதனையையும் அறிய வேண்டியிருந்தது. ஏனென்றால் நான் இணை-மீட்பராயிருந்தேன். ஆனால் பிள்ளைப் பேற்றின் வேதனையை நான் அறியவில்லை. அந்த வாதையை நான் அடையவில்லை.
ஆனால் மகளே, ஞான மகப்பேற்றின் வேதசாட்சியான என் மிகக் கடினமான படுக்கையாகிய என் சிலுவையில், சாகிற என் குமாரனின் கழுமரத்தினடியில், நான் அனுபவித்த பேறுகால வேதனையைப் போல் கொடூரமான வேதனை இதுவரை இருந்ததுமில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. எந்தத் தாய் இப்படிப் பிரசவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டாள்? செத்துக் கொண்டிருக்கும் தன் பிள்ளையின் மரண மூச்சின் கரகரப்பைக் கேட்கிற தாயினுடைய துடித்துச் சுருங்கிப் போகிற குடல்களின் சித்திர வேதனையையும், ஒரு ஸ்திரீயின் உதரத்தை இறைவனின் தங்குமிடமாக ஆக்கிய குமாரனைக் கொலை செய்கிறவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து: “உன்னை நேசிக்கிறேன், உன் தாயாகிய என்னிடம் வா” என்று சொல்ல வேண்டிய குரூரத்தை மேற்கொள்ளுகிற சிரமத்தையும், அத்தாயின் குடல்களைப் பிய்த்து எறிகிற குரூரத்துடன் இணைக்க வேண்டியிருந்ததே! மோட்சத்தின் சிறந்த உந்நத அன்பினாலும், ஒரு கடவுள் ஒரு கன்னியிடம் கொண்ட அன்பினாலும், நெருப்பின் அன்புத் தீண்டுதலாலும், மாமிசமான ஒளியின் அரவணைப்பாலுமே அப்படிச் செய்ய வேண்டியிருந்தது.
“ஒரு தாய் ஆவதற்கு எவ்வளவு வேதனைப்பட வேண்டும்?” என்கிறாள் எலிசபெத்தம்மாள். மிகுதியாகத்தான். ஆனால் என் வேதனைக்கு முன் அது ஒன்றுமில்லை!
“என் கைகளை உம் வயிற்றிலே நான் வைக்க விடும்.” ஓ, நீ துன்பப் படும் போதெல்லாம் அப்படிச் செய்யும்படி கேட்டாலல்லோ தாவிளை!
நித்தியமாக சேசுவைச் சுமந்திருப்பவள் நான். சென்ற வருஷம் நீ கண்ணுற்றாயே, கதிர்ப் பாத்திரத்தில் நற்கருணை இருப்பது போல், அதுமாதிரி என் உதரத்தில் அவர் இருக்கிறார். என்னிடம் வருகிறவன் அவரைக் கண்டடைகிறான். என்மீது சாய்ந்திருப்பவன் அவரை ஸ்பரிசிக்கிறான். என்னிடம் பேசுகிறவன் அவரிடம் துயரத்தையும் வேதனையையும் அறிய வேண்டியிருந்தது. ஏனென்றால் நான் இணை-மீட்பராயிருந்தேன். ஆனால் பிள்ளைப் பேற்றின் வேதனையை நான் அறியவில்லை. அந்த வாதையை நான் அடையவில்லை.
ஆனால் மகளே, ஞான மகப்பேற்றின் வேதசாட்சியான என் மிகக் கடினமான படுக்கையாகிய என் சிலுவையில், சாகிற என் குமாரனின் கழுமரத்தினடியில், நான் அனுபவித்த பேறுகால வேதனையைப் போல் கொடூரமான வேதனை இதுவரை இருந்ததுமில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. எந்தத் தாய் இப்படிப் பிரசவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டாள்? செத்துக் கொண்டிருக்கும் தன் பிள்ளையின் மரண மூச்சின் கரகரப்பைக் கேட்கிற தாயினுடைய துடித்துச் சுருங்கிப் போகிற குடல்களின் சித்திர வேதனையையும், ஒரு ஸ்திரீயின் உதரத்தை இறைவனின் தங்குமிடமாக ஆக்கிய குமாரனைக் கொலை செய்கிறவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து: “உன்னை நேசிக்கிறேன், உன் தாயாகிய என்னிடம் வா” என்று சொல்ல வேண்டிய குரூரத்தை மேற்கொள்ளுகிற சிரமத்தையும், அத்தாயின் குடல்களைப் பிய்த்து எறிகிற குரூரத்துடன் இணைக்க வேண்டியிருந்ததே! மோட்சத்தின் சிறந்த உந்நத அன்பினாலும், ஒரு கடவுள் ஒரு கன்னியிடம் கொண்ட அன்பினாலும், நெருப்பின் அன்புத் தீண்டுதலாலும், மாமிசமான ஒளியின் அரவணைப்பாலுமே அப்படிச் செய்ய வேண்டியிருந்தது.
“ஒரு தாய் ஆவதற்கு எவ்வளவு வேதனைப்பட வேண்டும்?” என்கிறாள் எலிசபெத்தம்மாள். மிகுதியாகத்தான். ஆனால் என் வேதனைக்கு முன் அது ஒன்றுமில்லை!
“என் கைகளை உம் வயிற்றிலே நான் வைக்க விடும்.” ஓ, நீ துன்பப் படும் போதெல்லாம் அப்படிச் செய்யும்படி கேட்டாலல்லோ தாவிளை!
நித்தியமாக சேசுவைச் சுமந்திருப்பவள் நான். சென்ற வருஷம் நீ கண்ணுற்றாயே, கதிர்ப் பாத்திரத்தில் நற்கருணை இருப்பது போல், அதுமாதிரி என் உதரத்தில் அவர் இருக்கிறார். என்னிடம் வருகிறவன் அவரைக் கண்டடைகிறான். என்மீது சாய்ந்திருப்பவன் அவரை ஸ்பரிசிக்கிறான். என்னிடம் பேசுகிறவன் அவரிடம் பேசுகிறான். அவருடைய வஸ்திரம் நான். என்னுடைய ஆன்மா அவர். என் குமாரன் என் உதரத்தில் ஒன்பது மாதம் இருந்ததை விட அதிகமாக, மிக அதிகமாக இப்பொழுது என்னுடன் ஐக்கியப்பட்டிருக்கிறார். அதனால் என்னிடம் வந்து என் நெஞ்சிலே தங்கள் சிரசைச் சாய்த்து ஓய்வு கொள்ளுகிறவர்களுடைய எல்லா வேதனையும் ஆற்றப்படுகிறது; எல்லா நம்பிக்கையும் வளருகிறது; எல்லா வரப்பிரசாதமும் பொழியப்படுகிறது.
உங்களுக்காக நான் மன்றாடுகிறேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மோட்சத்தில் நான் இருப்பதால் எனக்கிருக்கிற பாக்கியமும், கடவுளின் கதிரிலே நான் வாழ்ந்திருப்பதும், பூமியில் வேதனைப்படுகிற என் பிள்ளைகளை நான் மறக்க வைக்கவில்லை. நான் மன்றாடுகிறேன். மோட்சம் முழுவதுமே மன்றாடுகிறது. ஏனென்றால் மோட்சம் சிநேகிக்கிறது. மோட்சம் என்பது உயிருள்ள சிநேகமாகும். சிநேகம் உங்கள்மேல் இரக்கங் கொள்கிறது. ஆனால் நான் மட்டுமே இருந்தாலும்கூட, கடவுளை நம்பியிருக்கிறவர்களுடைய தேவைகளுக்கு என் மன்றாட்டு போதுமானது. ஏனெனில் நான் மன்றாடுவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. உங்கள் அனைவருக்காகவும் நல்லவர்களுக்காகவும், கெட்டவர்களுக்காகவும், நல்லவர்களுக்கு மகிழ்ச்சியையும், கெட்டவர்களுக்கு மனஸ்தாபத்தையும் கொடுத்து அவர்கள் இரட்சிக்கப்படும்படியாக மன்றாடுகிறேன்.
என் துயரத்தின் பிள்ளைகளே வாருங்கள்! உங்களுக்கு வரப்பிரசாதங்களைத் தரும்படியாக சிலுவையடியில் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.