இரவலாகக் கொடுத்திருக்கிறார்

ஒரு பட்டணத்தில் செல்வந்தனான மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தூரமான ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அவன் திரும்பிவர பல ஆண்டுகள் ஆகும். பணக்காரர் தங்கள் பணத்தை என்றும் அதிகரிக்க விரும்புகிறார்கள். அதை அப்படியே போட்டு வைக்க விரும்புவதில்லை. எனவே அவன் தன் பணத்தை சிலரிடம் ஒப்படைத் துச் செல்லவிரும்பி தன் வேலையாட்களில் சிலரைக் கூப்பிட்டான். “நான் தொலைவில் இருக்கும் ஒரு நகரத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. நான் திரும்பி வரும் வரை உங்களிடம் பெரிய தொகைகளை விட்டுச் செல்லப் போகிறேன். நீங்கள் பணத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். இலாபம் காட்டவேண்டும். நான் திரும்பி வந்ததும் உங்க ளிடம் கணக்குக் கேட்பேன்'' என்று அவர்களிடம் கூறி, ஒரு வேலைக்காரனுக்கு மூன்று இலட்சம் ரூபாயும், இன்னொருவனுக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், மூன்றாவது ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் கொடுத்தான்.

மறுநாளே செல்வந்தன் புறப்பட்டுப் போனான். முதல் வேலைக்காரன் ஓர் இடத்தில் அமர்ந்து தனக் குள் பின்வருமாறு சிந்திக்கலானான், ''என் எசமான் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் மூன்று இலட்சம் ரூபாயை ஒப்படைத்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி, நான் சிரமத்தைக் கவனியாமல் உழைத்து, இன்னும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். இதுவே அவருக்கு நான் செய்யக்கூடிய சேவை, அவர் மீது எனக்குள்ள மிகுந்த அன்பைக் காட்ட இது நல்ல வழி'' என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். சொன்னதுபோலவே சிரமத் தைப் பாராது உழைத்தான்.

இரண்டாவது வேலையாளும் அவ்விதமே சிந்திக் கலானாள். “என் எஜமான் மிக நல்லவர். என்னை நம்பு கிறார். அல்லாவிடில் இத்தனை பெரிய தொகையை என்னிடம் விட்டுப் போயிருக்கமாட்டார். அவருக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். அவருக்காக உழைத்து மிகுந்த இலாபம் சம்பாதித்துக் கொடுக்கப் போகிறேன். அவர்மீது எனக்கு அன்பு இருக்கிறது எனக் காட்டப்போகிறேன்'' என்றார்.

மூன்றாவது வேலையாளோ சோம்பேறி. எஜமான் அவன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப அவன் உழைக்கவில்லை அவர்மீது அவனுக்கு உண்மை அன்பு கிடையாது. எனவே அவருக்காக உழைக்க அவன் விரும்பவில்லை. அவர் கொடுத்த பணத்தை மறைவான ஓர் இடத்தில் அவன் புதைத்து வைத் தான்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செல்வந்தன் வந் தான். வேலையாட்கள் மூவரையும் அழைத்தான். பணத்தைக் கொண்டு என்ன செய்தார்கள் என்று விசாரித்தான். முதல் வேலையாள் வந்து, ''ஐயா, நீங் கள் மூன்று இலட்சம் ரூபாய் என்னிடம் ஒப்படைத் தீர்கள். நீங்கள் என்னை நம்பினீர்கள். அந்தப் பணத் தைக்கொண்டு இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண் டும் என்று விரும்பினீர்கள். மூன்று இலட்சம் ரூபாய் இலாபம் கிடைத்தது- இதோ ஆறு இலட்சம் ரூபா யையும் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றான். அவனது உழைப்பையும் பிரயாசையையும் அறிந்த செல்வந்தன் மிக மகிழ்ந்தான். வேலையாளை மிக பாராட்டினான். “நீ நல்லவன், திறமைசாலி. உன்னை நான் நம்பினேன். என் நம்பிக்கை வீணாகவில்லை. நீ இனி என்னுடன் என்றென்றும் வாழ்ந்து சன்மானம் அடைவாய், வா" என்றான்;

இரண்டாவது ஆள் வந்தான். "ஐயா, என்னிடம் நீங்கள் இரண்டு இலட்சம் ரூபாய் கொடுத்துப் போனீர்கள். அதைக்கொண்டு உழைத்து இன்னும் இரண்டு இலட்சம் சம்பாதித்தேன். இதோ நான்கு இலட்சத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றான். அவனது அன்பையும் உழைப்பையும் கண்ட செல் வந்தன் மகிழ்ந்தான். அவனை மிகவே பாராட்டினான், அவன் என்றென்றும் தன்னுடன் இருக்கும்படி தன் அரண்மனையில் அவனை வைத்து இவ்விதம் அவனுக் குச் சன்மானம் அளித்தான்.

சோம்பேறியான மூன்றாவது வேலையாள் அச்ச நடுக்கத்துடன் தன் எசமானை அணுகினான். ''ஐயா, நீங்கள் என்னிடம் இலட்சம் ரூபாய் கொடுத்துச் சென்றீர்கள். அதைப் பத்திரமாய் வைத்திருந்தேன். இதோ அந்தப் பணம்'' என்றான். இதைக் கேட்ட தும் செல்வந்தனுக்கு கடுங்கோபம் வந்தது. சோம் பேறியான ஊழியனைக் கடிந்து கொண்டான். “நீ நம் பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய். உன்னை நான் நம்பி பெருந்தொகையான பணத்தை உன்னிடம் விட்டுச் சென்றேன். அதைக் கொண்டு இன்னும் சம்பாதிக்கும்படி உன்னிடம் அதைக் கொடுத்தேன். நீயோ வேலை செய்யாமல் சோம்பேறியாயிருந்திருக் கிறாய். என்னை விட்டகன்று போ. இனி என் முகத் தில் விழியாதே. என்னுடன் நீ வாழவோ, இன்பம் அனுபவிக்கவோ முடியாது'' என்றான்.

மேலே நாம் பார்த்த செல்வந்தனைப்போல் கடவுள் நம்மில் ஒவ்வொருவரிடமும் ஏராளமாக கொடுத்திருக் கிறார். இரவலாகக் கொடுத்திருக்கிறார். ஆயுள் தந்து இருக்கிறார், உடல் கொடுத்திருக்கிறார். கண்பார்வை, கேட்கச் செவி, பேச நாக்கு, செல்வாக்கு, திறமைகள், பொருட்கள் இவையாவும் அவரது கொடைகள். இவற்றை அவர் விரும்பும் வழியில் நாம் பயன்படுத்த வேண்டும். அவற்றைக்கொண்டு அவரது சட்டங்களை மீறலாகாது. தவறான வழிகளில் அவறறைப் பயன் படுத்தக்கூடாது. அவரது அன்புக் கொடைகளைப் பழிக்கலாகாது.

அந்த செல்வந்தன் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்தான், தான் கொடுத்துப் போயி ருந்த பணத்தைப் பற்றிய கணக்கைக் கேட்டான். அதே போல் நாம் இறந்ததும் கடவுள் நம்மிடம் கணக்குக் கேட்பார். ''பூமியில் ஐம்பது லட்சம் பேர் களுக்கு நான் கண்பார்வை கொடுக்கவில்லை. உனக்கு கண்பார்வை கொடுத்தேன். இந்தக் கண்களைக் கொண்டு ஆபாச காட்சிகளைப் பார்த்திருக்கிறாய்; கெட்ட நூல்களைப் படித்திருக்கிறாப். பார்க்கத்தகாத பொருட்களைப் பார்த்தாய். உன்னை நான் குருடனாகப் பிறக்க வைத்திருந்தால் நலமாயிருக்கும். என்னை விட்டுப் போ" என்பார். “எத்தனையோ பேர் முழுச் செவிடர்கள். கேட்கச் செவியை உனக்குத் தந்தேன். அதை நீ தவறான வழிகளில் பயன்படுத்தி ஆபாசமான பேச்சுகளுக்கும் பாடல்களுக்கும் அவதூறுகளுக்கும் அபாண்டங்களுக்கும் செவி கொடுத்திருக்கிறாய், என் முன் நிற்காதே போ'' என்பார்.

"எத்தனையோ பேர் தாய் வயிற்றிலேயே இறந்த னர். அநேகர் குழந்தைப் பருவத்தில் உயிர் நீத்தார் கள். உனக்கு நான் ஆயுள் கொடுத்தேன். நான் கொடுத்த நேரத்தைப் பயன்படுத்தி, என் சட்டங்களை நிந்தித்து என்னை அவமதித்தாய்' என்பார்.

“உனக்கு செல்வாக்கு தந்தேன். அதைக்கொண்டு பிறரை நல்வழியில் நடத்துவதற்குப் பதிலாய் அவர் களைத் தீயோராக்கினாய் " என்பார். “உனக்கு செல்வக் தைக் கொடுத்தேன். ஏழைகளுடன் அதைப் பங்கிட் டுக் கொள்வதற்குப் பதிலாக, நீ சொகுசாக வாழ்ந்து, பிறரைக் கவனிக்கவில்லை'' என்பார்.

பேச நாக்கு கொடுத்தேன். அதைக்கொண்டு பிறரது பேர் கீர்த்தியைக் கொலை செய்தாய். நல்லவர் களை வாழ்த்துவதற்குப் பதிலாக தீயோரை வாழ்த்தி னாய்'' என்பார்.

இறந்த பின் நீ கொடுக்க வேண்டிய கணக்கைப் பற்றி ஒவ்வொரு நாளும், முக்கியமாக நித்திரைக்குச் செல்லுமுன், நினை. அன்று உன் நினைவுகள், ஆசை கள், சொற்கள், செயல்கள், செய்யாமல் விட்ட நலன் கள் இவற்றைப் பற்றிச் சோதித்துக் கடவுளிடம் கணக்கை ஒப்பித்து வா, தவறு செய்திருந்தால் கடவு ளிடம் மன்னிப்புக் கேள். அப்படியானால் அன்று இரவு நீ அமைதியாக நித்திரைக்குச் செல்லலாம். சிந்தித்துப் பார் :

உன் மகனுக்கு நீ ஓர் பேனா வாங்கிக் கொடுக்கிறாய். அவன் அதைக் கொண்டு தன் தங்கையைக் குத்துகிறான். தன் நகத்தைச் சுத்தம் செய்கிறான். பேனாவுக்கு என்ன நேரிடும்? என்ன நோக்கத்திற்காக பேனாவை அவனிடம் கொடுத்தாய்?

ஒரு பெண் வெகு புத்திசாலி. ஆனால் வகுப்பில் அவள் முழுச் சோம்பேறி. பாடங்களை ஒருபோதும் படிக்கமாட் டாள் அவளுக்கு என்ன நேரிடும்? எதற்காக அவளுக்கு புத்தி திறமை கொடுக்கப்பட்டது?

கடவுள் உனக்கு ஓர் உடலும் ஓர் ஆன்மாவும் தந்தி ருக்கிறார். கடவுளை ஒருபோதும் நினையாதிருந்தால், நீ செய்ய வேண்டும் என அவர் விரும்புவதை நீ செய்யாதி ருந்தால் என்ன நேரிடும்? கடவுள் எதற்காக உனக்கு உடலும் ஆன்மாவும் கொடுத்தார்?