இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் ஆன்மாவும் உணர்வும் நமக்கு ஊட்டப்படல்

217. ஆண்டவரை மாட்சிமைப் படுத்துவதற்காக மரியாயின் ஆன்மா தன்னையே உனக்கு ஊட்டும். நீ இந்தப் பக்தி முயற்சியில் பிரமாணிக்கமாயிருப்பாயானால் நீ உன் மீட்பரான இறைவனில் மகிழ்ச்சியடையுமாறு உன்னுடைய உணர்வுகளுக்குப் பதிலாக மரியாயின் உணர்வுகள் உன்னிடம் வரும். 'ஆண்டவரை வாழ்த் தும்படியாக ஒவ்வொருவரிடமும் மாதாவின் ஆன்மா இருப்பதாக! ஒவ்வொருவரிடத்திலும் மரியாயின் உணர்வு குடிகொள்வதாக!" (அர்ச். அம்புரோஸ் Exp. in Luc. Lib || No. 26). 'மானிடரின் இருதயங்களில் தேவ மாமரி தலைவியாகவும் அரசியாகவும் ஏற்படுத்தப் பட்டு அவைகளை மிக உந்நதரான சேசுவின் ஆளுகைக்கு முழுவதும் உட் படுத்தும் நேரம் எப்போது வரும்?' என்று மரியாயிட மாய் முழுவதும் ஆட் கொள்ளப்பட்ட புனித வாழ்வுடைய ஒருவர் கேட்கிறார். காற்றை உடல் சுவாசிப்பது போல் ஆன்மாக்கள் மரியாயை எப்போது சுவாசிப்பார்கள்? அந்த நேரம் வரும் போது ஆச்சரியமான காரியங்கள் இங்கு நிகழும். ஏனென்றால், பரிசுத்த ஆவியின் நேச பத்தினியான மாதா ஆன்மாக்களில் பிறப்பிக்கப்பட்டி ருப்பதை அவர் கண்டு, அவ்வான்மாக்கள் மீது மிகுதி யாய் இறங்கி வருவார். தன் வரங்களால அவர்களை நிரப்புவார். குறிப்பாக ஞானம் எனனும் வரத்தால் நிரப்பி வரப்பிரசாத அற்புதங்களை ஆற்றுவார். அன்" புள்ள சகோதரா! அந்த மகிழ்ச்சி நிறைந்த மரியாயின் காலம் எப்போது வரும்? மாதாவால் தெரிந்தெடுக்கப் பட்டு இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளப் பட்ட அநேக ஆன்மாக்கள், மரியாயின் உள்ளார்ந்த ஆழத் துள் தங்களை முழுவதும் மூழ்க விடுவதால், மரியாயின் உயிருள்ள மறு பிரதிகளாய் மாறி சேசு கிறீஸ்துவை நேசித்து மகிமைப் படுத்தும் அக்காலம் எப்போது வரும்? நான் கூறும் இப்பக்தி முயற்சி அறியப்பட்டு கைக் கொள்ளப்படும் போது தான் அது வரும். ''உம்முடைய இராச்சியம் வருமாறு மரியாயின் இராச்சியம் வருக!"