இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

துணிந்த பக்தர்கள்

97. துணிந்த பக்தர்கள் யாரென்றால் தங்கள் ஆசா பாசங்களுக்குத் தங்களையே கையளித்துவிட்ட பாவிகள் அல்லது உலகத்தை நேசிக்கிறவர்கள். இவர்கள், ''கிறீஸ் தவர்கள்'' 'மரியாயின் பக்தர்கள்'' என்ற அழகிய பெயருக்கடியில் தங்கள் ஆங்காரம், பொருளாசை, அசுத்தம் குடிப்பழக்கம், கோபம், தூஷணித்தல், புறங்கூறுதல், அநீதி செய்தல் இவை போன்றவற்றை மறைத்து வைத் திருப்பார்கள், இவர்கள் தங்கள் தீய பழக்கங்களை வைத்துக்கொண்டே அமைதியாக உறங்குவார்கள், தங் களைத் திருத்திக்கொள்ள அதிக முயற்சி செய்யமாட்டார் கள். இதற்கு தாங்கள் மாதா மீது பக்தி கொண்டி ருப்பதைக் காரணம் காட்டுவார்கள். நாங்கள் ஜெப மாலை சொல்கிறோம், சனிக்கிழமைகளில் உபவாசம் இருக்கிறோம், ஜெபமாலைப் பக்தி சபையில் - உத்தரிய சபையில் சேர்ந்திருக்கிறோம், மாதா சபை உறுப்பினராயிருக்கிறோம், மாதாவின் நாடாவை அவ்லது சங்கிலியை அணிந்திருக்கிறோம், ஆதலால் கடவுள் எங்களை மன்னிப்பார். பாவசங்கீர்த்தனமிலலாமல் நாங்கள் இறக்க மாட்டோம். நாங்கள் தண்டனைத் தீர்ப்புப் பெறமாட் டோம் என்று தங்களுக்குத் தாங்களே உறுதி கூறிக் கொள்வார்கள்,

இத்தகைய பக்தி பசாசின் மாயம் என்றும் மிகவும் கெடுதியுள்ள வீண் துணிச்சல் என்றும் அவர்களை இது அழித்துவிடும் என்றும் சொன்னால் அதை நம்பமாட் டார்கள். அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்றால்: கடவுள் நல்லவர், இரக்கமுள்ளவர், நம்மை தண்டிப்பதற்காக அவர் உண்டாக்கவில்லை. பாவமில்லாத மனிதன் கிடையாது. நாங்கள் பாவசங்கீர்த்தனம் இல்லாமல் சாகமாட்டோம். 'நான் பாவி' என்று மரண சமயத்தில் ஒரு தடவை நன்றாகச் சொல்வதே போதும் என்பார்கள். அது மட்டுமல்ல, நாங்கள் மாதா மேல் பக்தி கொண்டுள் ளோம். மாதாவின் உத்தரியம் அணிந்திருக்கிறோம். அவர்கள் மகிமைக்காக தினமும் தாழ்ச்சியுடன் ஏழு பரலோக மந் திரமும் ஏழு அருள் நிறை மந்திரமும் சொல்லி வரு கிறோம். சில சமயங்களில் மாதாவின் ஜெபமாலை, மந் திரமாலை கூடச் சொல்கிறோம். இவை போக ஓருசந்தி முதலியவற்றையும் கைக்கொண்டு வருகிறோம் என்றும் கூறுவார்கள். இவற்றிற்கெல்லாம் சான்றுகாட்டி, தங்க ளையே எப்படி அவர்கள் மேலும் குருடாக்கிக் கொள் கிறார்களென்றால், தாங்கள் கேள்விப்பட்ட அல்லது வாசித்த கதைகளைச் சொல்வார்கள். அவை மெய்யோ பொய்யோ அதுபற்றி அவர்களுக்குக் கவலையில்லை. பாவ சங்கீர்த்தனம் இல்லாமல் சாவான பாவத்தில் செத்தவர் கள் பாவசங்கீர்த்தனம் செய்யும்படியாக உயிருடன் எழுப்பப்பட்டார்கள் என்றும் அல்லது பாவசங்கீர்த்தனம் செய்யும் வரை அவர்கள் ஆன்மா எப்படி புதுமையாக அவர்கள் உடலில் தங்கியிருக்கும்படி செய்யப்பட்டது என்றும் மேலும் தங்கள் வாழ் நாளில் சில செபங்களைச் சொன்னவர்களும் மரியாயின் மீது சில பக்தி முயற்சிகளைச் செய்தவர்களும் மரண நேரத்தில் மரியாயின் இரக்கத்தால் மனஸ்தாபத்தையும் பாவமன்னிப்பையும் கடவுளிடம் பெற்று எவ்வாறு ஈடேற்றமடைந்தார்கள் என்றும் கூறுவார்கள். இதே காரியம் தங்களுக்கும் நடக்கும் என நம்புகிறார்கள். 

98. இந்த சாத்தானுக்குரிய துணிச்சலைப்போல் கண் டிக்கப்பட வேண்டியது நம் கிறீஸ்தவ மதத்தில் வேறு எதுவுமில்லை. ஏன்? நம் பாவங்களால் மரியாயின் திரு மைந்தனான சேசு கிறீஸ்துவை இரக்கமின்றி காயப்படுத்தி குத்தி சிலுவையில் அறைந்து பங்கப்படுத்திக் கொண்டே மாதாவை நேசித்து மகிமைப்படுத்துவதாக உண்மையு டன் நாம் எப்படிச் சொல்ல முடியும்? இம்மாதிரி ஆட்களை மாதா தன் இரக்கத்தால் காப்பாற்றுவதாயி ருந்தால், அவர்களுடைய பழி பாவங்களை ஆதரித்து தன் திருமகனை சிலுவையில் அறைய உதவியல்லவா செய்வார்கள்! இதை யார் நினைக்கத் துணிவது?

99. திவ்விய நற்கருணையிலிருக்கும் நம் ஆண்டவர் மீதுள்ள பக்திக்குப் பிறகு மிகச் சிறந்ததும் மிகப் புனி தமானதும் நம் தேவ அன்னையின் பக்தியேயாகும். இப் பக்தியை தவறான முறையில் கடைபிடிப்பது தேவ துரோகமாக நன்மை உட்கொள்வதற்கு அடுத்தபடியில் வைக்கவேண்டிய மிகக் கொடூர தேவ துரோகம். மிகப் பெரிய மன்னிக்க மிக அரிதான துரோகம் என நான் கூறுவேன்.

தேவ அன்னையிடம் உண்மையுடன் பக்திகொண்டி ருக்க வேண்டுமானால் ஒரு பாவமும் இல்லாத அள வுக்கு நாம் தூயவர்களாயிருத்தல் இன்றியமையாத தேவை யல்ல என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் - அவ் வாறு பாவமில்லாதிருந்தால் விரும்பப்பட வேண்டியதேஆயினும் குறைந்த பட்சம், (நான் சொல்லப்போவதை நன்கு கவனியுங்கள்) பின்வருபவை அவசியமாகின்றன.

(1) மாதாவையும் மைந்தனையும் பங்கமுறச் செய்யும் எல்லா சாவான பாவங்களையுமாவது விலக்கி விட உண்மையான மனதோடு தீர்மானித்திருப்பது

(2) பாவத்தை விலக்கி நடக்கும்படி தனக்குத் தானே வலுவந்தம் செய்வது

(3) மாதாவின் பக்தி சபைகளில் சேர்வது: ஜெபமாலை மற்றும் செபங்களையும் சொல்வது; சனிக்கிழமைகளின் உபவாசமிருப்பது ... போன்றவைகள்.

100. மேற்கூறிய காரியங்கள் மிக ஆச்சரியமான முறையில் பலனளிக்கின்றன. பாவிகளை - அவர்கள் கடினப்பட்டிருந்தாலும் கூட - இவை மனந்திருப்புகின்றன. இதனை வாசிப்பவரே அந்நிலையிவிருந்தால், அதுவும் அவர் ஏற்கெனவே ஒரு காலைப் பாதாளத் துள்ளேயே வைத்திருந்தாலும் கூட நான் மேலே கூறியவற்றைச் செய்யும்படியே அவரிடம் நான் கூறுவேன். ஆனால் ஒரு நிபந்தனை: அவர் கடவுளிடமிருந்து மனஸ்தாபம். பாவ மன்னிப்பு, தீயபழக்கங்களை வெல்வதற்கு உதவி இவற்றை மாதாவின் மன்றாட்டின் மூலமாக அடைந்து கொள்ளும்படியாகவே இக்காரியங்களைச் செய்யவேண்டும். மனச்சாட்சியின் எச்சரிப்பைக் கவனியாமலும் சேசுவடை யவும் அர்ச்சிஷ்டவர்களுடையவும் முன்மாதிரிகை சுவிசேஷம் கூறும் நியதி, இவற்றைச் சட்டைபண்ணாமலும் தன் பாவத்திலேயே அமைதியுடன் வாழும்படியாக இந்நற்காரியங்களை அவர் செய்யக்கூடாது