உழைப்பும் ஒறுப்பான நடையும்

மனுஷன் வேலை செய்யவேண்டுமென்பது தேவ நியமம். இந்த நியமம் மனுச்சந்ததியைப்போலப் பூர்வமானது. ஆதியிற் கடவுள் ஆதாமைப் படைத்து அவனைச் சோம்பேறியாயிருக்க விடாமல் பரதீசு என்னும் நந்தனவனத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும்படி கற்பித்திருந்தாரென்று வேதாகமஞ் சொல்லுகின்றது. (ஆதியாகமம் 2. 15)

ஆதாம் பாவஞ்செய்யுமுன் அவருக்கு வேலை அலுப்பாயிராமல் இன்பமாயிருந்தது. அவர் பாவத்தினாற் சருவேசுரனுக்கு விரோதியாய்ப் போகவே படைப்புண்டயாவும் தேவசித்தப்படி அவருக்கும் அவர் சந்ததி முழுவதுக்கும் விரோதிகளாய்ப் போயின.

நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து புசிக்கவேண்டாமென்று நாம் விலக்கியிருந்த விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உன் வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டே அதன் பலன்களைச் சாப்பிடுவாய். அது உனக்கு முட்களையும் குருக் குத்திகளையும் முளைப்பிக்கும். பூமியின் பயிர்களை உண்பாய். உன் முகத்தின் பெயர்வையால் ஆகாரம் புசிப்பாய். கடைசியில் நீ எதினின்று எடுக்கப்பட்டாயோ அந்தப்பூமிக்குத் திரும்பிப்போவாய். ஏனெனில், மண்ணாயிருக்கிறாய் மண்ணாய் மாறுவாய் என்று தேவன் சாபமிட்டார். (ஆதியாகமம் 3. 17-19.)

அந்நேரந்தொட்டு மனுஷ சந்ததியார் அனைவரும் பிரயாசத்தோடு வேலை செய்ய வேண்டியவர்களானார்கள். ''மனுஷன் பிறந்தது வேலைசெய்யவும், பட்சி பிறந்தது பறக்கவுமே'' (யோபு.5; 7).

இப்படியே தனவான்களும் தரித்திரரும், பெரியோரும் சிறியோரும், ஆண்களும் பெண்களும், தங்கள் தங்கள் அந்தஸ்துக்கேற்க வேலை செய்வது தேவ நியமமாயிற்று.

தேவசித்தத்துக்கமைந்து சாக்கிரதையாய் வேலை செ ய்வதினால் விளையும் நன்மைகள் எண்ணிறந்தவை. கிரமமா னவேலையினாற் சரீரம் பல நோய்களுக்குத் தப்பிச் சுகத்தையும், பெலனையும், வளர்ச்சியையும், நீடிய ஆயுளையும் அடையும். வேலை முயற்சியுடையவர்களுக்குத் தீன் விருப்பம், நல்லுறக்கம், ஊக்கம், சுறுசுறுப்பு, மனக்களிப் பு, ஆதிய சுகானுபவங்களோடு செல்வஞ் சீர்சிறப்பு செல் வாக்கு முதலிய நன்மைகளுமுண்டுபடும்.

பிரயாசப்பட் டு உழைக்கிறவனுக்கு இடையூறு நேரிடும்போது அயலார் அவனுக்கு இலகுவாயிரங்கி உதவி புரிவார்கள். '' பாடின் றி பட்டமில்லை'' '' முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்'' என்பன முதுமொழிகளன்றோ. சோம்பலோ பற்பல பாவங்களுக்குக் காரணமாகிய தலையான பாவங்களிலொன்று.

சுறுசுறுப்புடையவர்கள் சோம்பலால் விளையுங் கணக்கற்ற பாவங்களுக்கு இலகுவாய்த் தப்பிக்கொள்வார் கள். அனுதினஞ் சாக்கிரதையாய் வேலை செய்கிறவர்களி டத்தில் பாவச்சோதனைகளும் துர்ச்செயல்களும் துர்ப் பழக்கங்களும் வழக்கமாய் மிகக் குறைவு. ஆகவே, வே லையினாற் சரீரத்துக்கும் ஆத்துமத்துக்கும் அநேக நன் மைகள் உண்டாகுமென்பது வெளிப்படை.

வேலை செய்து உழைப்பது மனுமக்களனைவருக்கும் தேவநியமமென்றால் பெற்றோருக்கு இது இருமடங்கான கடமையாகின்றது. ஏனெனில், இவர்கள் தங்களை மாத் திரமன்றி தங்கள் மக்களையுந் தக்கமேரையாய்த் தாபரிக் கவேண்டியவர்களாயிருக்கிறார்கள்.

பிள்ளைகளைத்தாபரித் தலானது பெற்றோர் நெடுங்காலம் அனுசரிக்கவேண்டிய பிரயாசமான பெருங் கடமைகளில் ஒன்று. சகல சீவ பிராணிகளிலும் மனுக்குழந்தைகளுக்கே பிறவிதொட்டு அதிக உதவியும் பராமரிப்புத் தேவை. அன்றியும், மறு பிராணிகளைப்பார்க்க இவைகளே மிக நெடுங்காலம் தங்கள் சீவனத்துக்குப் பெற்றோரில் முற்றாய்த் தங்கியிருக்கின் றன.

மறு செலவுகளை நீக்கி பிள்ளைகள் உண்ணவும் உடுக் கவும் படிக்கவும் மாத்திரம் பண்ணவேண்டிய செலவைப் பார்த்தாலும் அது சிறி தல்லவென்பதைப் பெற்றோர் அ னுபவத்தால் அறிவார்கள். இதற்கு பெற்றோர் பிரயா சப்பட்டு உழைப்பது மாத்திரம் போதாது. உழைப்பதில் நியாயமான செலவுகளைச் செய்து மீதியைப் பத்திரம்பண்ணுவதும் அவசியம்.

முறையாய் உழைக்கவும் மட்டாய்ச் செலவழிக்கவும் அறியாததினால் நிர்ப்பாக்கியப்படுங் கு டும்பங்களுக்குக் கணக்கில்லை. ஆகையால், ஆண்களும் பெண்களும் பெற்றோராகுமுன்னும் பெற்றோரானபின் னும் உழைக்கவும் ஒறுப்பனவாய் நடந்து மிச்சம் பிடிக்க வும் வேண்டிய அவசியத்தையும் அதற்குரிய முறையை யும் அப்படிச் செய்யாமல் விடுவதினால் விளையும் இடை யூறுகளையும் சுருக்கமாய்க் காட்டுவோம்.