இளவரசி

"மாஜி! மாஜி!" எனத் தாய் கத்திக்கொண்டிருந் தாள். சிறுமியை உணவருந்த அவள் அழைத்தாள். பதில் ஒன்றும் வரவில்லை. ''மாஜி, மாஜி; சீக்கிரம் வா. சாதம் குளிர்ந்து போகும்'' எனத் தாய் திரும்பவும் கூப்பிட்டாள். இப்பொழுதும் பதில் கிடையாது. ''என்ன, இது என்றுமில்லா நூதனமாயிருக்கிறதே. மாஜி எங்கு போய்விட்டாள்? நான் போய்ப் பார்த்து வருகிறேன்'' என தாய் தனக்குள் சொல்லிக்கொண்டு மகளைத் தேடிப் புறப்பட்டாள்.

மாஜி தோட்டத்தில் நின்றாள். குடிசைக்குப் பின் பக்கமாக நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். தனது பொம்மையை வண்டியில் வைத்து அங்குமிங் கும் உருட்டிக் கொண்டிருந்தாள். பெரிய மனுஷி போல் யாரையும் சட்டை பண்ணாதவளாய் நின்றாள்.

"மாஜி , நான் கூப்பிட்டது கேட்கவில்லையா?' எனத் தாய் சிறிது கோபத்துடன் கேட்டாள். மாஜி இன்னும் வண்டியை உருட்டிக்கொண்டே “கேட்க வில்லையென்று நினைக்கிறேன். கேட்டிருக்கலாம் ஆனால்......" என்றாள். A

“என்ன ஆனால்? உன்னைக் கூப்பிடும்போது நீ வரவேண்டியது தானே? உடனே வரவேண்டும்'' எனத் தாய் சொன்னதும், மாஜி “அம்மா. உங்க ளுக்குத் தெரியாதா? நான் இளவரசியல்லவா? என்ற னள்.

இதைக் கேட்டதும், தாய் சிரித்துக்கொண்டே “இளவரசியா? என்றிலிருந்து இளவரசி?” என்றாள்.

“நான், இன்றிலிருந்து இளவரசி" என அவள் பதிலளித்தாள்.

'நல்லது இளவரசி, அம்மா உன்னை உணவருந் தக்கூப்பிடுகிறார்கள். சாப்பிடவா'' என தாய் மொழிந்தாள்.

'வரமுடியாது. அம்மா, இளவரசிகள் தங்கள் பிரியம் போல் நடக்கிறார்கள்'' என அவள் கூறினாள்.

"அவர்கள் தங்கள் பிரியம் போல் நடக்கின்ற னரா? உண்மைதானா? என்றாலும் என் வீட்டு இள வரசி தன் பிரியம் போல் நடக்கப் போவதில்லை. வா, போவோம். உணவை முடித்த பின் நீ இளவரசியாக நடிக்கலாம். வா, புறப்படு," எனத் தாய் சொன்னாள்.

மாஜி தன் தாயின் முகத்தைப் பார்த்தாள். இளவரசியானாலும் இளவரசியில்லா விடினும் உடனே போவது நல்லது என நினைத்துத் தாயுடன் புறப்பட்டாள்.

அன்று தயாரித்திருந்த உணவு அவளுக்குப் பிடித்தமில்லாத உணவு. ஆதலின் சாப்பிடப் போவ தில்லை என்று தீர்மானித்தாள். ''கண்ணே , சாப்பிடு. சாப்பிடாவிட்டால் உடல் மெலியும், வியாதி வரும்.

இதற்கு முன் அவரைக் காய்க்குழம்பை பிரியமாய்ச் சாப்பிடுவாயே, சாப்பிடு " எனத்தாய் உத்தர விட்டாள்.

ம் ம் என் "என்றாலும் இன்று எனக்கு இது வேண்டாம்'' என்று சொல்லி, தலையை அசைத்துக் கொண்டு உணவுத் தட்டைத் தள்ளினாள். தாய்க்கு ஆச்சரிய மாயிருந்தது. விரைத்துப் பார்த்தாள். “என்ன ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்றாள்..

'நான் இப்பொழுது இளவரசி, சின்னராணி. உணவு பிரியமில்லையென்றால் சாப்பிடத் தேவை இல்லை" என மாஜி சொல்லக் கேட்ட தாய், "கண்ணே உடம்புக்கு நன்றாயில்லையா?' என்றாள். மாஜி தலையைப் பெரிய பெண் போல் அசைத்துக்கொண்டு "சுகமாகத்தான் இருக்கிறேன்" என்றாள்.

தாய்க்கு சிரிப்பு வந்து விட்டது. அதை அடக் கிக்கொண்டு, “மாஜி, சொல், நீ இளவரசி என ஏன் நினைக்கிறாய்? இந்த எண்ணத்தை உன்னிடம் புகுத் தியது யார்? என்றாள்.

"அம்மா , அது ஓர் இரகசியம்” எனச் சிறுமி கூறி யதும், "எந்த இரகசியத்தையும் அம்மாவிடம் சொல்லலாமல்லவா? அம்மாவிடம் மறைக்கலாமா?" எனத் தாய் மொழிந்தாள்.

“நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டீர்களே!' / “இல்லை, யாரிடமும் சொல்லமாட்டேன்.'' "நல்லது அப்படியானால் சொல்கிறேன். நான் இளவரசி என அடுத்த வீட்டுப் பெண் தெரிவித் தாள். மாஜி என்றால் மர்கரீத் இளவரசியின் பெயர். மர்கரீத் என்னும் பெயரை வைத்திருப்பவர்களெல் லாம் இளவரசிகளாம். ஆதலின் நானும் இளவரசியே. பிறர் சொல்வதை நான் செய்ய இனித் தேவை இல்லை. எனக்குப் பிரியமானதை நான் சாப்பிடலாம், நான் விரும்புவதைச் செய்யலாம் " எனச் சிறுமி சொன்னாள். aree

"மாஜி, நூதனமான எண்ணங்களெல்லாம் சிறுமி களுக்கு வருகின்றனவே. இளவரசிகள் எப்பொழு தும் தங்கள் பிரியம் போல் நடக்கலாம் என நீ உண்மையாகவே நினைக்கிறாய?''

“அப்படி அவர்கள் நடப்பதில்லையா? அவர்கள் தங்கள் பிரியம் போல் நடப்பதாக அடுத்த வீட்டுப் பெண் சொன்னாளே" என சிறுமி சிறிது கவலையுடன் பதிலளித்தாள்.

" அவளுக்கு என்ன தெரியும்? இளவரசிகள் சிறுமிகளாயிருக்கையில் வெகு கவனத்துடன் நடக்க வேண்டும். ஏனையோரைவிட அவர்கள் அதிக கவனத் துடன் இருக்க வேண்டும். மர்கரீத் இளவரசி சிறுமி யாயிருக்கையில் எப்பொழுதும் பிறருக்குக் கீழ்ப் படிந்து நடக்க வேண்டியிருந்ததே. சரியாய் ஆறு மணிக்கு அவளை எழுப்புவார்கள்.''

"அவள் உடனே எழுந்தாளா?"

“நல்ல பிள்ளைகள் செய்வது போல் அவள் உடனே எழுந்தாள். காலை உணவுக்குப் பின் சிறிது நேரம் உலாவப் போகவேண்டும். அவளுக்குப் பிரியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலாவப் போகவேண்டும். பின்னர் பாடம் படிக்க வேண்டும்''

இளவரசிகளும் பாடம் படிக்க வேண்டுமா?'' "ஆம், படிக்கவேண்டும். சிரமத்தைப்பாராமல் படிக்க வேண்டும். மர்கரீத் இளவரசி பள்ளிக்கூடம் போகாவிட்டாலும், வீட்டில் எல்லாப் பாடங்களும் அவளுக்குக் கற்பிக்கப்பட்டன. அவள் பாடங்களைச் சரியாகக் கற்கிறாளா எனப் பார்த்து வருவார்கள். பகல் உணவு ஒரு மணிக்கு. அதுவரை அவளுக்குப் பாடங்கள் நடக்கும். பரிமாறப்பட்ட உணவை அவள் சாப்பிடவேண்டும். இது எனக்குப் பிரியமில்லை. வேண்டாம் என்று சொல்லக் கூடாது. பகலுணவுக் குப்பின் சிறிது நேரம் உலாவுவாள். அதன் பின் நாலு மணி வரை பாடங்கள். பின்னர் சற்று விளை யாடுவாள். அதன் பின் இரவு உணவும் நித்தி ரையும்."

"அப்படியானால் மர்கரீத் இளவரசி தன் பிரியம் போல் நடக்க முடியாதா?" என மாஜி ஏமாந்தவளாய்க் கேட்டாள்.

"முடியாது. பிரியம் போல் நடத்தல் யாருக்கும் நல்லதல்ல: விசேஷமாக, நல்ல பதவியில் இருக்க வேண்டியவர்களுக்கு. அவள் நல்ல பிள்ளையாக, நல் லொழுக்கமுள்ளவளாக வளர வேண்டும் என அரச ரும் அரசியும் ஆசித்தார்கள். அவள் கீழ்ப்படியாத பிள்ளையாயிருந்திருந்தால் யாரும் அவளை விரும்பி ருக்கமாட்டார்கள்'' என அம்மா கூறியதும், மாஜி ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தாள். பின்னர் தாயைப் பார்த்து “அம்மா, எல்லா இளவரசிகளும் இவ்விதம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமா? தங்கள் பிரியம் போல் நடக்க முடியாதா?' என்றாள். நடக்க முடியாது எனத்தாய் சொன்னதும், அப்படியானால் நான் இளவரசியாய் இருக்க விரும்பவில்லை. சாதாரண சிறுமியாய் இருந்தாற் போதும் என மாஜி மொழிந்தாள்.