இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தன்னை நம்பாமை என்னும் புண்ணியத்தின் பேரில்

தன்னை நம்பாமை என்னும் புண்ணியம், ஞான யுத்தத்தில் மிகவும் அவசியமானது. அந்தப் புண்ணியம் உன்னிடத்தில் இல்லா விட்டால், நீ உன் சத்துருக்களை வெல்லவும், உன்னிடத்திலுள்ள ஒரு அற்ப துர்நடத்தை முதலாய் அடக்கவும் உன்னாற்கூடாது. இந்தச் சத்தியம் உன் இருதயத்தில் ஸ்திரமாய்ப் பதிந்திருக்கவேண். டும். ஏனெனில், நாம் ஏதுமற்ற நிர்பாக்கியரானாலும், நமது பேரில் நாமே நல்ல எண்ணமுள்ளவர்களாய், நம்மால் எதுவும் கூட்டு மென்று எந்த முகாந்தாரமுமின்றி எண்ணுகிறோம்.

இந்த எண்ணமானது நமது துர்ச் சுபாவத்தினாலேயே உண்டாகிறது. இது நமது துர்ச் சுபாவத்தோடு ஒன்றித்திருப்பதால், இதைப் பிரித்தறிவது முதல் பிரயாசை. சகலத்தையும் அறியுஞ் சர்வேசுரனுக்கு இது மகா அரோசிகமானது. ஏனெனில், சர்வ சற்குணத்திற்கும் ஊறணி யான சர்வேசுரனிடத்தினின்று மாத்திரம் நாம் சகல உதவி, சகாயம், சற்குணமடையலாமாகையால், அந்த உதவியின்றிச் சர்வேசுரனுக்குப் பிரியமான ஒரு அற்ப நினைவு முதலாய் நினைக்க நம்மால் கூடாதென்பதை நாம் ஸ்திரமாய்க் கண்டுணரும்படிச் சர்வேசுரன் சித்தமாயிருக்கிறார்.

தன்னை நம்பாமை என்னும் புண்ணியமானது, சர்வேசுரன் தமக்குப் பிரியமானவர்களுக்குத் தமது ஏவுதல், பல சஞ்சலம், இன் னுஞ் சொல்லவேண்டுமானால், ஜெயிக்கமுடியாத தந்திரம் முதலிய நமது புத்திக்கெட்டாத பல மார்க்கமாய் அளிக்கும் வரமானாலும், நாம் இந்தப் புண்ணியத்தை அடைவதற்கு நம்மாலான முயற்சியெல் லாஞ் செய்ய வேண்டுமென்று அவர் ஆசிக்கிறார். நான் சொல்லிக் காட்டப்போகிற நாலு வழிபாடுகளின் முறையாய் நடந்தால், நீயுந் தப்பாமல் அந்தப் புண்ணியத்தை அடைவாய். அவையாவன :

1-வது. - உன் அற்பத்தனம், நீசத்தனத்தை அடிக்கடி நினைத்து, மோக்ஷத்திற்கு யோக்கியமான ஒரு அற்ப கிரியை முத லாய்ச் செய்ய உன்னால் ஆகாதென்பதை நீ ஏற்றுக்கொள்வது.

2- வது. - சர்வேசுரனிடத்தினின்று மாத்திரம் வரக்கூடுமான அந்த மேலான புண்ணியத்தை, அவரிடத்தில் மகா தாழ்ச்சி உருக்க மான பக்தியோடு மன்றாடிக் கேட்கிறது. அதாவது, அந்தப் புண் ணியம் உன்னிடத்தில் இல்லை; அதை அடைய உன்னால் ஒருக்கா லுங் கூடாதென்று சர்வேசுரனுடைய சந்நதியில் சாஷ்டாங்கமாய் விழுந்து ஏற்றுக்கொண்டு, அவர் உன் மன்றாட்டைக் கேட்டருள் வாரென்று முழு நம்பிக்கை வைத்து, அவர் உனக்கு அதைக் கொடுக் கும் பரியந்தம் பொறுமையாய், மனந்தளராமல் மன்றாடுகிறதாம்.

3-வது - உன்னை நம்பாமலிருக்க நீ நாளாவட்டத்தில் கற் றுக்கொள்ளவேண்டும். எப்படியென்றால், உன் சுய புத்தியின் வீண் எண்ணத்திற்கும், பாவத்தின் மட்டில் உனக்குள்ள நாட்டத்திற்கும், உன்னை எப்படியாவது கொடுக்க வேண்டுமென்று நிற்கும் எண்ணி றந்த சத்துருக்களுக்கும் பயந்து நடக்கிறது. அதாவது : இந்தச் சத் துருக்கள் தங்கள் உபாயத் தந்திரத்தினாலும், யுத்தப் பரீட்சையினா லும், பலம், திறம், தைரிய முதலியவைகளினாலும் உன்னைவிட மே லாய் இருப்பதுமல்லாமல், வேண்டுமான சமயங்களில் சம்மனசு வேஷந்தரித்து, எப்பக்கத்திலும் மோக்ஷ நெறியில் முதலாய்க் கண் ணிகளை வைத்து, பதிவிருந்து உன்னைத் தாக்குகிறார்களென்பதை நீ எப்போதும் நினைத்துப் பயந்து நடக்க வேண்டியதாமே.

4-வது - நீ ஒரு குற்றத்தில் விழுங்காலத்தில், உடனே உன் உள்ளத்தில் புகுந்து, உன் பலவீனத்தை ஏற்றுக்கொள்ளுகி றது. ஏனென்றால் நாம் நம்மை நிந்திக்கவும், பிறரும் நம்மை நிந்திக் கும்படி எதார்த்தமாய் ஆசிக்கவுமே சர்வேசுரன் நம்மைத் தந்திரங்க ளில் விழவிடுகிறார். ஆனால் நாம் ஒரு குற்றத்தில் விழுந்த பிறகு நமது பலவீனத்தை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், தாழ்ச்சியிலும், நமது குறைகளை அறிவதிலும் அடங்கியிருக்கிற , நம்மை நம்பாமை என்னும் புண்ணியத்தை நாம் அடையப்போவதே இல்லை. உள்ளபடி யே அநாதி சத்தியமும் அளவில்லாப் பிரகாசத்திற்கு ஊறணியு மான கடவுளை அண்டிப் போக ஆசிக்கிறவன், எல்லாத்திற்கு முன் தன்னைத்தானே அறியவேண்டும். தவறி விழுந்து, அல்லது திடீ ரென மோகமயக்கடியில் விழுந்த பிறகு மாத்திரம் கண் திறந்து பார்க்கிற ஆங்காரிகளைப்போல் நடப்பது தகாது. சர்வேசுரனும், தமது மட்டில்லாத இரக்கப் பெருக்கத்தைப் பாராட்டி, அவர்களும் டைய ஆங்காரப் பிணியைப் போக்குவதற்குப் பலமுறையாய் இன் பமான அவுஷதங்களை உதவிக் கொண்ட பிறகு மாத்திரம், இவ்வித மாய் என்கிலும் அவர்கள் தங்கள் பலவீனத்தைக் கண்டுணர்வார்கள், தங்கள் ஆங்காரத்தை அடக்கச் சுய அநுபவத்தால் கற்றுக்கொள் வார்களென்று, அவர்களை இந்த நிர்பாக்கியச் சேற்றில் விழவிடு கிறார்.

ஆயினும் அவனவனுடைய ஆங்காரத்தின் ஏற்றக் குறைக்குத் தக்கதுபோலவே அவனவனும் பலமுறை அல்லது சில முறை பாவத்தில் விழுகிறான். அர்ச். கன்னிமரியாயைப்போல ஆங்காரத் தை அறியாதவன் எவனாகிலும் இருப்பானாகில் அவன் ஒருக்காலும் எந்த பாவத்திலும் விழான் . நீ ஒரு பாவத்தில் விழுந்தால், உடனே உன்னை அறிய நினை. உன் பலவீனத்தைக் கண்டறிந்து, உன்னை நம்பாமலிருப்பதற்கு வேண்டிய திவ்விய பிரகாசத்தை நமதாண்டவர் உனக்குத் தந்தருளும்படி அவரை - இரந்து மன்றாடு. இல்லாவிட் டால் இன்னும் பலமுறை அதே குற்றங்களில் அபலமாய் விழுவாய். சில சமயங்களில் அவைகளிலும் பெரிய குற்றங்களிலும் விழுவாய். இதினால் உன் ஆத்துமத்தை நித்திய கேட்டுக்குத் தப்பாமல் உள்ளாக்குவாய்.