இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயிக்காக

265. இறுதியாக நாம் நம் எல்லாச் செயல்களையும் மரியாயிக்காகச் செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் நம்மை முழுவதும் மரியன்னையின்க் ஊழியத்திற்கெனக் கொடுத்துள்ளதால் அவர்களிடம் ஒரு ஊழியனைப் போலும் அடிமையைப் போலும் நடந்து கொள்வது நியாயமே. இதனால் நம் ஊழியத்தின் கடைசி முடிவாக மாதாவைத் தான் நாம் கொண்டிருக்கிறோம் என்று ஆகாது. நம் கடைசி முடிவு சேசு கிறீஸ்து ஒருவரே. ஆனால் மரியாயை நாம் நம் அண்மை . முடிவாக ஏற்றுக் கொள்கிறோம். மறை பொருள் தன்மையான மத்தியஸ்தியாகவும் சேசு விடம் செல்ல எளிதான வழியாகவும் கொண்டிருக்கி றோம். எனவே, நல்ல ஊழியரைப் போல், நல்ல அடிமை களைப் போல் நாம் சோம்பலாயிராமல் மரியாயின் பாது காப்பை நம்பிக் கொண்டு இந்த மகத்துவமிக்க அரசிக் கென பெரிய காரியங்களை ஆரம்பித்து நடத்தி முடிக்க முன் வர வேண்டும். மரியாயின் சலுகைகள் கேள்விக்குரியதாக் கப்படும் போது நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும் மரியாயின் மகிமை தாக்கப்படும் போது நாம் அதை விடாது பற்றி நிற்க வேண்டும். கூடுமானால் எல்லாரை யும் மரியாயின் ஊழியத்திற்கும். இந்த உண்மையான திடமான பக்திக்கும் நாம் இழுக்க வேண்டும். மரியன் னையின் மைந்தனை அவமானப்படுத்தும்படி மரியாயின் பக்தி முயற்சிகளைத் தவறாகப் பிரயோகிப்பவர்களுக்கெதி ராக நாம் திறந்து இடி முழங்கப் பேசவேண்டும். அதே வேளை இந்த உண்மைப் பக்தியை நிலைநாட்டவும் வேண் டும். இந்த சிறு சிறு ஊழியங்களுக்குக் கைம்மாறாக, இத் தகைய அன்புள்ள் இளவரசியான மரியாயின் சொந்த மாய் நாம் இருக்கும் மதிப்பையும், அவர்கள் வழியாக அவர்கள் குமாரன் சேசுவுடன் காலத்திலும் நித்தியமா யும் அழியாத உறவைப் பெறும் மகிழ்ச்சியையும் தவிர வேறு எதையுமே நாம் எதிர்பார்க்கக்கூடாது. 

மரியாயிடத்தில் சேசுவுக்கு மகிமை!
சேசுவினிடத்தில் மாதாவுக்கு மகிமை!
கடவுள் ஒருவருக்கே மகிமை!