பெற்றோரானபின் உழைப்பு

ஆடவரும் மங்கையரும் மணம் புரிந்து பெற்றோரா ன பின்னும் வயோதிகமாகும்வரையும் தங்கள் அந் தஸ்துக்கேற்ற வேலைகளை இயன்றளவு செய்வது குடும் பசேமத்துக்கு அவசியமென்பது யாவரும் நன்றாயறிந் த விஷயம். பிள்ளைகள் சற்றுப் பிராயமானவுடனே சில தாய் தந்தையர் தாம் வேலை செய்யக் கூடுமாயிருந் தும், செய்யாமற் சும்மா விருந்து வீண்பொழுது போக் கிக்கொண்டு மக்களைக் கொண்டு மாத்திரம் வேலை செய் விக்கவும் உழைப்பிக்கவும் பார்த்தல் தகுதியுமல்ல, நீதி யுமல்ல. இது அவர்களின் இகபர நன்மைக் குதவுவ துமல்ல. ஒரு சமுசாரத்தின் சவரட்சணைக்கு வேண்டிய காரியங்களைக் கணக்கிடுவது இலேசல்ல. கணக்கிடுவது கடினமென்றால் அவைகளைச் சேகரிப்பது எவ்வளவு பிர யாசமென்பதை எடுத்துச்சொல்லவேண்டியதில்லை. இவ் வளவு பிரயாசமான அலுவலைப் பிறர் உதவி இல்லாமற் செய்யப் பிள்ளைகளால் ஒருபோதும் இயலாது. பிறரால் பிள்ளைகளுக்குப் பலவித ஊழியமுஞ் செய்யப்பட்டுவர, பெற்றோர் பார்த்துக்கொண்டு சும்மா விருப்பது நீதியா? இந்த ஊழியங்களெவையென்பதைப் பெற்றோர் சுருக் கமாயறிந்திருப்பது நலமென்றெண்ணுகின்றேம். - 2 ( தாய் தந்தையரே, மனுக்குலமுழுதும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமாக எவ்வளவு வேலை செய்கின் றதென்பதை எப்போதாகுதல் யோசித்திருக்கிறீர்கள் ளா? உங்களுக்கு எத்தனை பணம்பண்டமிருந்தாலும் பிறமனுஷர் உங்களுக்காக வேலைசெய்யச் சம்மதியாதி ருந்தால் நீங்கள் பூமியிற் சீவிக்கவே முடியாது. ப ணவலிமையையும் சொல்வலிமையையும் பூரணமாய்க் கொண்டிருக்கிறதாகிய அரசாட்சியின் கீழேதானே கூ லிச்சனங்கள் காலத்துக்குக்காலம் ஒன்றாய்த்திரண்டு ('' கூலிக்குழப்பம் ' செய்யும்போது, அரசாட்சியாரும் குடிசனங்களும் படுந்தொல்லையும் மாய்ச்சலும் நஷ்ட மும் எவ்வளவென்றும், ஈற்றில் வழக்கமாய்க் கூலிக்காரரின் போக்குக்கே அரசாட்சியார் இளகவேண்டிய தாய்ப் போகின்றதென்றும், உலகம் நன்றாய்க் கண்டுவரு கின்றது. அப்படியிருக்கப் பெற்றோரே, மனுஷர் எல்லா ரும் உங்களைக் கைநெகிழ நேரிட்டால் உங்கள் குடும்பம் திடீரென முற்றாய் அலைந்து மறைந்துபோமென்பதற்கு ஐயமுண்டா ? உங்கள் சவரட்சணைக்கு அவசியமான கா ரியங்கள் அநேகமுண்டு. ஆகவே அநேகருடைய ஊழி யமும் உங்களுக்குத் தேவை. ஆகையாலன்றோ , உலகத் தில் ஊழியஞ்செய்து ஒருவருக்கொருவர் உதவத்தக்க வழிவகைகளைச் சருவேசுரன் சுபாவமுறையில் அமைத் திருக்கிறார். அதன்பயனாகவே சிற்பருந் தச்சரும் கொல் லரும் கூலியாட்களும் நீங்கள் வசிக்கிறதற்கு வீட்டைக் கட்டுகிறார்கள். இன்னும் உங்கள் வீட்டுப் பாவிப்புக்கு வேண்டிய பெட்டி மேசை கட்டில் கதிரை உரல் உலக் கை முதலிய மரச்சாமான்களையும், கத்தி பூட்டு சருவம் வட்டில் விளக்கு கிண்ணம் கரண்டி மணி முதலிய பஞ் சலோகச் சாமான்களையும், பலவகைக்கண்ணாடிச் சாமான் களையும், பீங்கான் கோப்பை ஆதிய சீனப்பாத்திரங்க ளையும், பானை சட்டி முதலிய மட்பாண்டங்களையும், பாய் கடகம் முதலிய பன்னச்சாமான்களையும், மற்றும் கணக் கற்ற பண்டம்பாடிகளையும், உங்கள் உபயோகத்துக்காகச் செய்வோர் பத்தெட்டுப்பேரல்ல, பல்லாயிரம் பேரே யாம். உங்கள் போசனத்துக்கு வேண்டிய பலவகைத் தானியம் காய்கனி சரக்கு முதலிய தாவரவர்க்கங்களைக் கமக்காரர் பயிரிடுகிறார்கள். வேட்டைக்காரர் காட்டிலே திரிந்து மாமிசத்தையும், மீன்பிடிகாரர் கடலிற் தாழ்ந் து மிதந்து மச்சத்தையுங் கொண்டுவர, வேறு சிலர் எண்ணெய் விறகு நெருப்பு தண்ணீர் முதலியவைக ளுக்கு வழிபண் ணுகிறார்கள். நீங்கள் உடுக்கிறதற்கு வேண்டிய விதம்விதமான வஸ்திரங்களையும், தொப்பி சப்பாத்துக்களையும், காது கழுத்திலணிய நானாவித நகை களையும், வெயில் மழை தாங்கக் குடைகளையும், நேரம் றியக் கடிகாரங்களையும், வேறு பலர் செய்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு வேண்டிய புத்தகம் கற்பலகை, கடுதாசி, மை, எழுதுகோல் ஆகியவைகளை ஆக்குவது இரண்டொருவரல்ல. நீங்கள் பயணம்பண்ணுவதற்குத் தேவையான வண்டி, புகையிரதம், தோணி, கப்பல் முதலானவைகளைச் செய்வதிலும் ஒட்டுவதிலும் எத்தனையோ பேர் முயற்சியாயிருக்கிறார்கள். அந்தந்தத் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்களைத் தயா ராக்க ஒருவராற் தனியே யியலுமா? மேலே சொல்லப் பட்டவைகள் எங்கெங்கேயிருந்தாலும் வியாபாரிகள் அ வைகளையெல்லாம் உங்கள் கைக்கெட்டக் கொண்டுவந் து சேர்க்கிறார்கள். பண்டுதொட்டுத் தலைமுறை தலைமு றையாகக் குடிமக்கள் செய்யும் தொழும்புகள் நீங்க கள் அறியாத விஷயமல்லவே. நீங்கள் அல்லது பிள் ளைகள் நோயுறும்போது வைத்தியர் இரவும் பகலும் உங்களுக்குச் செய்யும் உதவி சகாயங்களையும் நன்றாயறி வீர்கள். உபாத்திமார் உங்கள் பிள்ளைகளுக்கு வருஷக் கணக்காய் உலக அறிவூட்ட, குருமார் வேதசத்தியங்கள் ளைப் படிப்பித்து, அவர்களைச் சன்மார்க்கராக்குவதற்கு வேண்டிய பிரயாசப்படுகிறார்கள். உங்கள் உயிருக்கும் பொருளுக்கும் பிறரால் தீங்கு நேரிடாதபடி காப்பதி லும், உங்களுக்கு வேண்டிய வேறுபல லெளகீக நன் மைகளைக் கவனிப்பதிலும், அரசாட்சியார் என்றுங் கண் ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். நீங்கள் அரசாட்சியார் மூலமாய்ச் சிற்பசல்லிக்கனுப்புந் தந்தி தபால்களுக்குக் கூலியாட் பிடித்தனுப்பவேண்டுமாகில் இருக்கவேண்டிய ரூபாய் எத்தனையாயிருக்கும்! தாய்தந்தையரே, இப்படிச் சகலராலும் சருவேசுரன் உங்களுக்குக் கணக்கற்ற பணி விடைகளைச் செய்வித்துவர, நீங்கள் உங்கள் பிள்ளை களுக்காகக் கூடிய பிரயாசப்பட்டு உழைக்கவும் ஒறுப் பனவாய் நடந்து மிச்சம் பிடிக்கவும் அவர்களைச் சன்மார்க் கராய் வளர்க்கவும் அசட்டைபண்ணினால், அது நீதிநி யாயத்துக்கு ஒக்குமா? அல்லது கடவுளுக்கு ஏற்குமா? கடைசிநாளில் அவருக்கு எப்படிக் கணக்குக் கொடுப்பீர்கள்?

சில பெரியோர்கள் செல்வம் நிறைந்த பெரும் ஊரதிகாரிகளாயிருந்தாலும், அல்லது கோடு கச்சேரி களில் உத்தியோகம் பண்ணி நல்ல சம்பளம் பெற்றுவந் தாலும், ஈவான நேரங்களில் தனியே அல்லது தங் கள் வேலைகாரரோடு பெருமை சிறுமை பாராமல் தோட் டத்திலும் வயலிலும் வீடுவளவிலும் பற்பல வேலைகளைச் செய்து வருவதைச் சந்தோஷத்தோடு கண்டிருக்கி றோம். எல்லாரும் இப்படிச் செய்துவருவார்களானால் அவர்களுக்கும் பிறருக்கும் பெரும் நன்மையாயிருக் குமே. ஆனால், சிலருக்கு ஏதும் உத்தியோகம் அல் லது நிலைவரங் கிடைத்துவிட்டால் இனி வேலை செய்வது தங்களுக்கு மரியாதைக்குறைவென்றெண்ணுவதுமன்றி, தங்கள் பெற்றோர் முன் நடத்திவந்த தொழிலைப் பிறகு நடத்தாதபடி தடுக்கவும் பார்க்கிறார்கள். ஆனால் சில பெற் றோர் '' தன் தொழில் விட்டவன் சாதியிற் கெட்ட வன்'' என்றபடி அதையே விடாமல் நடத்தி வருகி றார்கள். நெடுங்காலந்தொட்டு சீன சக்கிரவர்த்திகள் தங்கள் குடிசனங்களுக்கு முன்மாதிரியாக வருஷத்தில் இரண்டொருதரம் கலப்பை பிடித்து உழுவது வழக்க மாம். இங்கிலாந்தில் மிகப்பெயர்பெற்றிலங்கிய கிளாஸ்ற் றன் மந்திரியாரும் தாம் சிறுப்பத்தில் நடத்திவந்த கைத் தொழிலைப்பற்றி வெட்கப்படாமல் எப்போதும் பெரு மைபாராட்டி வந்தார்.