இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 49

யாக்கோபு தன் குமாரர்களை ஆசீர்வதித்ததும் - அவர்களில் சிலர் தாங்கள் செய்த பாதகங்களைப்பற்றி ஆசீர்வாதத்திற்குப் பதிலாக சாபம் அடைந்ததும் - அவன் தன்னை அடக்கம் பண்ணவேண்டிய ஸ்தலத்தைக் குறித்ததும் - யாக்கோபு மரணம் அடைந்ததும்.

1. யாக்கோபோவென்றால், தன் குமார ரை வரவழைத்து: நீங்கள் கூடிவாருங்கள்; கடைசி நாட்களிலே உங்களுக்கு நேரிடுங் காரியங்களை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன்.

* 1-ம் வசனம். கடைசி நாட்கள் என்பது வெகு வெகு காலங் கடந்தான பின்பு வரும் நாட்களென்று பொருட்படும். திவ்விய இரட்சகர் எழுந்தருளி வருவதற்குள்ளாகத் தன் புத்திரரில் ஒவ்வொருவனுக்கும் சம்பவிக்கும் பிரதான விஷயங்களை யாக்கோபு தேவனால் ஏவப்பட்டுத் தீர்க்கத்தரிசனமாக வசனிக்கலானார். அதைப்பற்றிப் பழைய ஏற்பாட்டில் அவரை முதல் தீர்க்கத்தரிசியென்று சொன்னாலுஞ் சொல்லலாம்.

2. கூடி வந்து உற்றுக்கேளுங்கள் யாக்கோபின் புத்திரர்களே! உங்கள் தகப்பனாகிய இஸ்றாயேலுக்குச் செவி கொடுங்கள்.

3. என் சேஷ்ட புத்திரனாகிய ரூபனே! நீ என் சத்துவமும் என் துயரத்தின் ஆதி மூலமு மானவன். வரங்களில் முதல்வனும் நீ. அதிகா ரத்தில் பெரியவனும் நீயே.

4. தண்ணீரைப்போல் நீ வடிந்து போ னாய்! உள்ளபடி உன் தகப்பனுடைய மஞ்சத்தின் மேலேறி அவனுடைய படுக்கை யைத் தீட்டுப்படுத்தத் துணிந்தாய், ஆதலால் நீ மேன்மையடையாய் ஒருகாலும்.

* 4-ம் வசனம். முன்னமே (35:22-ம்) வசனத்தினால் இதனைக் கண்டுபிடிக்கக்கூடும்.

5. சீமையோனும் லேவியும் சகோதரர் களாம்; அக்கிரம போராட்டத்தின் கருவி களாம். 

6. என் ஆத்துமா அவர்களுடைய சதியா லோசனைக்கு உடன்படாதிருப்பதாக! அவர் களுடைய கூட்டத்தில் எனக்குப் பெருமை உண்டாகாதிருப்பதாக! ஏனெனில் அவர்கள் கோபவெறியாகி ஒரு புருஷனைக் கொன் றார்கள். வேண்டுமென்று அரண்களை நிர் மூலமாக்கினார்கள்.

7. மூர்க்கமான அவர்களுடைய கோபா வேசமும் கொடுமையான அவர்களுடைய எரிச்சலும் சபிக்கப்படக்கடவது! யாக்கோ பிலே அவர்களைப் பிரியவும், இஸ்றாயேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்!

8. யூதாவே! உன் சகோதரர்கள் உன்னைத் துதித்துப் புகழுவார்கள். உன் கரமானது உன் பகைவருடைய தலையின்மேலிருக்கும். உன் தந்தையின் புத்திரர்கள் உன்னை நமஸ்காரம் பண்ணுவார்கள். 

9. யூதா சிங்கக் குட்டியாம். இரையைக் கவர எழுந்தாய், என் மகனே! ஆண் சிங்கத் தைப் போலும், பெட்டைச் சிங்கத்தைப் போ லும் இளைப்பாற மடங்கிப் படுத்தாயே, அவ னைத் தட்டி எழுப்புகிறவன் யார்? 

10. அனுப்பப்பட இருக்கிறவர் வரும் பரி யந்தம் செங்கோல் யூதாவை விட்டு (நீங்கு வதுமில்லை). அவனுடைய சந்ததியில் இறைவன் ஒழிவதுமில்லை. (அனுப்பப்பட இருக்கிறவரோ) சர்வஜாதிஜனங்களும் அவருடைய ஆகமனத்திற்குக் காத்திருப்பார்களே!

* 10-ம் வசனம். இந்தத் தீர்க்கத்தரிசனம், சேசுகிறீஸ்துநாதரைக்குறித்தே சொல்லப்பட்டது என்பதற்குக் கொஞ்சமாவது சந்தேகமில்லை. ஈஈஅனுப்பப்படுகிறவர்டுடு என்ற திருநாமத்தால் இரட்சகரே அழைக்கப்பட்டிருக்கிறார். அவரல்லோ பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப் பட இருக்கிறவர். அவருடைய ஆகமனத்துக்கு அல்லோ பிதாப் பிதாக்களும், தேவப் பிரஜை யும், இன்னும் உலகத்திலுள்ள சகல ஜனங்களுமே ஆவலோடே எதிர்பார்த்துக்கொண்டிருந் தார்கள். யாக்கோபு சொன்னபடி யூதாவின் கோத்திரத்திலிருந்து செங்கோலரசு உரோமாபுரி இராயனான செசாரின் கைக்கு வந்தபோது தானே தேவ சுதனானவர் மனுஷ அவதாரம் பண்ணியருளினார்.

11. அவன்: ஓ மகனே! திராட்சச் செடியில் தன் (வேசரிக்) குட்டியையும், திராட்சக் கொ டியில் தன் கோளிகையையும் கட்டுவான். அவன் திராட்ச இரசத்தில் தன் மேற் சட்டை யையும், திராட்சச் சாரத்தில் தன் அங்கியை யும் தோய்ப்பான்.

* 11-ம் வசனம். இவ்வசனத்தில் முதல் வார்த்தைகளினால் சத்தியவேதத்தின் ஆரம்பமும், விருத்தியும், பரம்புதலும் குறிக்கப்பட்டன; அவைகளின் பொருளாவது: சேசுநாதர் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்கிற மும்மடங்கான கயிற்றினாலே கோளிகையாகிய யூதர்களில் அனேகரையும், அதன் குட்டியாகிய உலகத்தாரையும் திராட்சக் கொடி என்னும் திருச்சபை என்கிற மரத்திலே கட்டுவார் என்பதே. வசனத்தில் பின்வரும் வார்த்தைகளால் திருப்பாடு களும் இரத்தஞ் சிந்துதலும் உபமானமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

12. அவனுடைய கண்கள் திராட்ச இரசத்திலும் இலட்சணமுள்ளன, அவனுடைய பற்கள் பாலினும் வெண்மையுள்ளனவே.

13. ஜாபுலோன் கடற்கரையிலும், கப்பற்றுரை அருகிலும் வாசம் பண்ணுவான். சிதோன் வரைக்கும் பரம்புவான்.

14. இசாக்கார் தன் காணியாட்சியின் நடு வே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை யாம்.

15. அவன் இளைப்பாறுதல் நல்லதென் றும், நாடு அதி வசதியானதென்றுங் கண்டான். சுமைக்குத் தன் தோளைச் சாய்த்துக் கப்பங் கட்டுவதற்கு இணங்கினானே!

16. தான் இஸ்றாயேலின் வேறொரு கோத் திரம்போல் தன் ஜனத்தை நியாயம் விசாரிப் பான்.

17. தான் வழியில் கிடக்கிற சர்ப்பம் போ லவும், பாதையில் தென்படுகிற பாம்பு போல வுமாகிக் குதிரை மேல் ஏறியிருக்கிறவன் மல் லாந்து விழும்படியாய் அதின் குதிக்காலைக் கடிக்கக்கடவான்.

18. ஆண்டவரே, உம்முடைய (இரட்சிப்புக்கு) எதிர்பார்த்துக் கொண்டு இருப் பேன்.

* 18-ம் வசனம். இங்கே யாக்கோபு இனி வரப்போகிற கர்த்தரைக் கண்ணாலே கண்டாற் போல அத்தியந்த பக்தி வினயத்துடன் அவரைத் தொழுது மெய்யான இரட்சகரென்று கூறுகிறார்.

19. காத் ஆயுதங்களை அணிந்தவனாய் இஸ்றாயேல் முன்னிலையில் யுத்தம் பண்ணு வான். ஆயுதங்களை அணிந்தவனாய்த் திரும்புவான்.

20. ஆசேரோவெனில், அவனுடைய ஆகா ரங் கொழுத்ததாம்; அரசர்களுக்கும் இன்பம் கொடுக்குமாம்.

21. நேப்தாளியோ, விடுதலைப் பெற்ற மா னாமே; சிறப்பான வசனங்களையும் உரைப்பான்.

22. ஜோசேப்பு விருத்தி அடையும் புத்திர னாம். அவன் பலுகிப் பெருகுவான். அவனு டைய முகம் அழகானது. அவனைப் பார்க்க வேண்டிப் பெண்கள் மதில்மேல் ஏறுவார்கள்.

23. ஆனால் அஸ்திரங்களைக் கையிலேந் திய பகைவர் அவனை எரிவந்தமாக்கி வாதா டினார்கள். அவன்மேல் பொறாமை கொண் டார்கள்.

24. அவனுடைய வில்லோ உறுதியாய் நின்றது; யாக்கோபுடைய வல்ல (தேவனால்) அவனுடைய கையிலும் புஜத்திலும் இருந்த சங்கிலிகள் உடைக்கப்பட்டன. அதினால் அவன் இஸ்றாயேலின் மேய்ப்பனும் அரணு மானான்.

25. உன் தகப்பனுடைய தேவனே, உனக் குத் துணையாயிருப்பார். சர்வத்துக்கும் வல் லவரே, உனக்கு நானாவித ஆசீர்வாதந் தந்தருளுவார். உயர வானத்திலிருந்து உண் டாகும் ஆசீர்வாதங்களினாலும், தாழேயுள்ள ஆழத்திலிருந் வரும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்குமுரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

26. உன் தந்தையின் ஆசிகள் அவன் பிதா க்களின் ஆசிகளிலும் சிறந்தன. நித்திய பர்வ தங்களினால் ஆசிக்கப்பட்டிருக்கிறவர் வரும் பரியந்தமே அவைகள் விருத்தியாகவும், ஜோ சேப்பு சிரசின் மேலும் அவன் சகோதரரில் எவன் நசரேயனோ அவன் உச்சந்தலையின் மேலும் வரக்கடவதாக.

27. பெஞ்சமீனோ பறிக்குங் கோநாயாம்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையிலோ கொள்ளைப் பொருளைப் பங்கிடுவான் என்று யாக்கோபு வசனித்தான்.

* 27-ம் வசனம். இந்த வசனம் சவூல் என்னும் மகாராஜாவையும் (1 அரசர் 9:1-ம் வசனம்), அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரையும் குறித்துச் சொல்லியிருக்கின்றது. அர்ச். சின்னப்பர் முதன்முதல் திருச்சபையை உபத்திரியப்படுத்தினாரே. பிறகு திருச்சபையைத் தம் திவ்விய போதனையால் அலங்கரித்தார்.

28. இவர்கள் எல்லோரும் இஸ்றாயேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு இவற்றைக் கூறி அவன வனுக்குரிய ஆசீர்வாதஞ் சொல்லி அவனவ னை ஆசீர்வதித்தான்.

29. பின்னும் அவன் அவர்களை நோக்கி: இதோ நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப் படப்போகிறேன். என்னை என் பிதாக்கள் அண்டையிலே ஏத்தையனாகிய எப்பிறோ னின் நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் அடக்கம் செய்யக்கடவீர்கள்.

30. அது கானான் நாட்டிலே மம்பிறேயுக்கு எதிராக இருக்கின்றது. அபிரகாம் ஏத்தைய னாகிய எப்பிறோனின் கையிலே அதையும், அதற்குரிய நிலத்தையும் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி வாங்கினார்.

31. அங்கே அவரையும் அவருடைய மனை வியாகிய சாறாளையும் அடக்கம் பண்ணி னார்கள்; அங்கே இசாக்கையும் அவர் மனை வியாகிய இரெபெக்காளையும் சேமித்தார் கள். அங்கே லீயாளையும் அடக்கம்பண்ணி யிருக்கிறேன் என்றான்.

32. யாக்கோபு தன் குமாரரை எச்சரித்து வைப்பதற்கு மேற்படி கட்டளைகளைச் சொல்லி முடிந்தான பின் அவன் தன் கால்களைப் படுக்கையின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்விட்டான்; தன் ஜனத்தாருடன் சேர்க்கப்பட்டான்.