இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 48

வியாதியாயிருந்த யாக்கோபை ஜோசேப்பு பார்க்க வந்ததும் - இவனுடைய இரண்டு குமாரர்களை மஞ்சள் நீர்ப் பிள்ளையாக யாக்கோபு சுவீகரித்துக் கொண்டதும் - இளையவனை முந்தினவனைப் பார்க்கிலும் சிலாக்கியப்படுத்தினதும் - மற்றுமுள்ள தன் குமாரர்களுக்குக் கொடுத்த ஆஸ்தியை விட ஜோசேப்புக்கு ஒரு பங்கு அதிகமாய்க் கொடுத்ததும்.

1. அவைகள் அவ்வாறு நடந்தேறிய பின் னர், உன் தகப்பனாருக்கு வருத்தமா யிருக்கிற தென்று ஜோசேப்புக்குச் சொல்லப்பட்டது, அப்பொழுது அவன் தன் இரண்டு புத்திரர்க ளாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் அழைத்துக்கொண்டு பிரயாணமானான்.

2. இதோ உம்முடைய புத்திரனாகிய ஜோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று பெரியவருக்குச் சொல்லவே, யாக்கோபு திடங்கொண்டெழுந்து தன் கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.

3. பிறகு தன் கிட்டவந்த (ஜோசேப்பை) நோக்கி: சர்வத்துக்கும் வல்லவராகிய தேவன் கானான் நாட்டிலுள்ள லூசாவிலே எனக்குத் தரிசனையாகி, என்னை ஆசீர்வதித்து:

4. நாம் உன்னைப் பலுகிப் பெருகச் செய் வோம்; உன்னை மகா பிரஜா கூட்டமாகச் செய்வோம், இப்பூமியையும் உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததியாருக்கும் நித்திய சுதந்தரமாகத் தருவோம் என்றருளினாரே.

5. ஆகையால் நான் எஜிப்த்துக்கு வந்து உன்னிடம் சேருவதற்கு முன்னே உனக்கு இத்தேசத்திலே பிறந்த இரண்டு மக்களும் எனக்குப் புத்திரராயிருப்பார்கள். ரூபன், சீமையோன் என்பவர்களைப் போல் எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்க ளென்று எண்ணப்படுவார்கள்.

* 5-ம் வசனம். யாக்கோபு தன் குமாரனாகிய ஜோசேப்பின் இரண்டு புத்திரர் களையும் தனக்குச் சொந்தப் புத்திரர்களாகச் சுவீகரித்துக்கொண்ட முகாந்தரமேதெனில்: இராக்கேல் என்னுந் தன் பிரிய மனைவியின் மேல் தான் வைத்திருந்த விசேஷ பட்சத்தைக் காட்டவேண்டி அவளுக்குப் பேரப்பிள்ளைகளான எப்பிராயீமையும், மனாசேயையும் பிரஜாத் தலைவர்களாயிருக்கும்படி அவர்களை மஞ்சள் நீர்ப் பிள்ளைகளாகச் சுவீகரித்துக்கொண்டார். ஆனால் வேறு பிள்ளைகள் ஜோசேப்புக்குப் பிறந்தார்கள் என்பதற்குத் திருஷ்டாந்தமில்லை.

6. இவர்களுக்குப் பின் நீ பெறும் மற்றக் குமாரர்களோ உன்னுடையவர்களாயிருப் பார்கள். இவர்கள் தங்கள் தங்கள் சகோதர ருடைய பேரால் அழைக்கப்பட்டு, அவர்களுக் குரிய சுதந்தரத்தில் பங்கு பெறுவார்கள்.

7. ஏனென்றால் நான் மெசொப்பொத் தா மியாவை விட்டு வருகையில் வழியிலே எனது இராக்கேல் கானான் நாட்டில் மரணம் அடைந்தனள்; அப்போது வசந்த காலம், எப்பிராத் தாவுக்குச் சமீபித்திருந்தேன். பெத்திலேம் என்று அழைக்கப்படுகிற எப்பிராத்தா ஊருக் குப் போகும் பாதையோரத்திலே அவளை அடக்கம் பண்ணினேன் என்றான்.

8. பிறகு ஜோசேப்புடைய குமாரர்களைக் கண்டு: இவர்கள் யார் என்று கேட்டதற்கு,

9. ஜோசேப்பு: இவர்கள் இந்தத் தேசத்தி லே தேவன் எனக்குத் தந்தருளிய குமாரர் என, அவன்: அவர்களை என் அருகில் கொண்டு வா அவர்களை ஆசீர்வதிப்பேன் என்றான்.

10. உள்ளபடி முதிர் வயதினாலே இஸ்றா யேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதவனா யிருந்தான்; அவர்களைத் தன் அண்டையிலே சேரப் பண்ணினபோது அவன் அவர்களை முத்தஞ் செய்து அரவணைத்துக்கொண் டான்.

11. அப்புறம் தன் மகனை நோக்கி: நான் உன்னையும் காணப்பெற்றேன். உன் புத்திரர் களையும் காணும்படி தேவன் அருள் செய்தா ரே என்றான்.

12. ஜோசேப்பு யாக்கோபுடைய மடியிலே இருந்த தன் பிள்ளைகளைப் பின்னிடச் செய்து தானே தரைமட்டுங் குனிந்து வணங்கி னான்.

13. பின்பு ஜோசேப்பு எப்பிராயீமைத் தன் வலது பக்கத்திலே வைத்து இஸ்றாயே லுடைய இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது பக்கத்திலே வைத்து இஸ் றாயேலுடைய வலது கைக்கு நேராகவும் விட்டான்.

14. இவனோவெனில் தன் இரு கரங்களை யும் குறுக்கீடாகப் போட்டு வலது கையைக் கனிஷ்டனான எப்பிராயீமுடைய தலையின் மேலும், இடது கையை ஜேஸ்டனான மனா சேயுடைய தலையின்மேலும் வேணுமென்று வைத்து,

* 14-ம் வசனம். யாக்கோபு தேவனால் ஏவப்பட்டு எப்பிராயீமை மேன்மைப்படுத்தினார். அதினால் எப்பிராயீமுக்கு உண்டான பெருமைகள் மூன்று: 1-வது. அவனுடைய கோத்திரத் திலே இஸ்றாயேலுக்குப் பல அரசர்கள் பிறந்தனர்; 2-வது, அவனுடைய சந்ததி மனாசேயின் சந்ததியிலும் அதி மிகுதியாய்ப் பலுகினது, 3-வது, தேவ பிரஜையை வாக்குத்தத்தப் பூமியில் கொண்டுபோன மகாப் பிரபு ஜோசுயே அவனுடைய கோத்திரத்திலே பிறந்தான்.

15.ஜோசேப்பின் புத்திரர்களை ஆசீர் வதித்தான். எப்படியென்றால்: என் பிதாக்க ளான அபிரகாம் இசாக் என்பவர்கள் எவரு டைய சந்நிதானத்தில் நடந்தொழுகி வந்த னரோ, யவ்வன முதல் இந்நாள் வரையிலும் எவர் என்னைப் போஷித்துச் சம்ரட்சித்து வருகின்றாரோ, அந்தத் தேவனும்,

16. என்னைச் சகல தீமைகளினின்று மீட்ட (தேவ) தூதனும் இச்சிறுவர்களை ஆசீர்வதிப் பாராக! மீளவும் என் பேரும் என் பிதாக்க ளாகிய அபிரகாம் இசாக்கென்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவதாக! பூமியில் அவர்கள் மிகுதியாகப் பெருகக்கட வார்கள் என்றான்.

17. தகப்பன் தன் வலது கையை எப்பி ராயீமுடைய தலைமேலே வைத்திருந்தது கண்டு, ஜோசேப்பு மனவிதனப்பட்டு எப்பி ராயீமுடைய தலைமேலிருந்த தன் தந்தை யின் கையை மனாசேயுடைய தலையின் மேல் வைக்கும்படி எடுக்க எத்தனித்து:

18. என் தந்தையே, இது தகுதியான தல்ல வே, இவன்தான் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலது கையை வைக்கவேணும் என்றான்.

19. அவன் சம்மதியாமல்: தெரியும் மக னே! எனக்குத் தெரியும். இவன் பிரஜா கூட்டமாகப் பலுகுவான் மெய்யே. ஆனால் இவனுடைய தம்பி இவனிலும் பெரியவனா வான், அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாகப் பெருகுவார்கள் என்று சொல்லி,

20. அவர்களை அச்க்ஷணமே ஆசீர்வதித்து: உன்னிடத்திலே இஸ்றாயேல் ஆசீர்வதிக்கப் படுமேயன்றித் தேவன் எப்பிராயீமுக்கும் மனாசேயுக்கும் செய்ததுபோல் உனக்கும் செய்யக்கடவாராக என்று சொல்லப்படும் என்றான்; அவ்விதமே எப்பிராயீமை மனா சேயுக்கு முன்னே வைத்தான்.

21. பிறகு அவன் தன் குமாரனாகிய ஜோ சேப்பை நோக்கி: இதோ நான் மரணமடை யப் போகிறேன்; சுவாமி உங்களோடே இரு ப்பார், அவர் உங்கள் பிதாப்பிதாக்களுடைய தேசத்திற்கு உங்களைத் திரும்பவும் போகப் பண்ணுவார்.

22. உன் சகோதரருக்குக் கொடுத்ததைப் பார்க்கிலும் உனக்கு நான் ஒரு பாகம் அதிக மாய்க் கொடுக்கிறேன். அதை நான் என் பட்டயத்தினாலும், என் வில்லினாலும் அமோறையர் கையிலிருந்து சம்பாதித்தேன் என் றான்.