இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 47

ஜெசேன் பூமி இஸ்றாயேலினத்தாருக்குச் சொந்தமாய்க் கொடுக்கப்பட்டதும் - ஜோசேப்பு எஜிப்த்தியர்களுடைய மிருக ஜீவன்களையும், பிறகு அவர்களுடைய நிலங்களையும் பரவோனுக்கு வாங்கிக் கொடுத்ததும் - யாக்கோபு தன் பிதிர்கடனே தன்னை அடக்கம் பண்ணும்படி ஜோசேப்புக்குக் கட்டளையிட்டதும்.

1. அப்புறம் ஜோசேப்பு பரவோனிடத்திற் போய், என் தந்தையும், என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடு முதலியவைகளோடும், தாங்கள் கொண்டிருக்கிற எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள்; இதோ அவர்கள் ஜேசேன் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் என்றறிவித்தான்.

2. பிறகு கடைசியில் பிறந்த தன் சகோதர ரில் ஐந்து பேரையும் அரசன் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினான்.

3. அவன் அவர்களை நோக்கி: உங்கள் தொழில் என்ன என, அவர்கள்: தங்கள் அடிமைகளாகிய நாங்கள் எங்கள் பிதாக் களைப்போலே ஆடு மேய்ப்பவர்களாம்.

4. தேவரீருடைய இராச்சியத்திலே சஞ் சரிக்க வந்தோம். ஏனென்றால், கானான் நாட்டிலே பஞ்சம் அதி கொடியதாயினதால், அடியார்களின் மந்தைகளுக்கு மேய்ச்ச லில்லாமல் போயிற்று. தேவரீரும் அடியார் களை ஜேசேன் நாட்டில் தங்கியிருக்கும்படி உத்திரவளிக்க வேண்டுமென்று மன்றாடு கிறோம் என்றார்கள்.

5. அப்பொழுது அரசன் ஜோசேப்பை நோக்கி: உமது பிதாவும், உமது சகோதரர் களும் உம்மிடத்தில் வந்திருக்கிறார்களே;

6. எஜிப்த்து தேசம் உமது பார்வைக்கு முன்பாக இருக்கிறது; உத்தமமான இடத்தி லே அவர்களைக் குடியேறும்படி செய்யும். ஜெசேன் நாட்டையே அவர்களுக்குச் சொந்த மாகக் கொடும். அவர்களில் சாமர்த்தியமுள்ள வர்கள் உண்டென்று நீர் அறிவீராகில் அவர் களை என் மந்தைகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக நியமிக்கலாம் என்றான்.

7. அதன்பின் ஜோசேப்பு தன் தகப்பனை அழைத்துக் கொண்டு வந்து, அரசன் முன்பாக முன்பாக அவனை நிறுத்தினான்; யாக்கோபு அரசனுக்கு ஆசீர் வசனங் கூறின பிற்பாடு,

8. பரவோன் அவனை நோக்கி: உமது வயதென்ன என்று வினாவினான்.

9. அதற்கு அவன்: என் பரதேசத்தின் நாட்கள் நூற்று முப்பது வருஷம்; அவைகள் கொஞ்சமும் நிர்ப்பாக்கியமுள்ளதாயிருக்கிற தன்றி, என் முன்னோர்கள் பரதேசியாய்ச் சஞ்சரித்த ஆயுள் நாட்களுக்கு வந்து எட்டவில்லை எனப் பதில் கூறிய பின்பு,

* 9-ம் வசனம். பரதேசம் என்கிற வாக்கியமானது இரு பொருட்படும். யாக்கோபு தேவ கட்டளையால் தன் பிதாக்களைப்போல ஓர் பரதேசியாகிப் பற்பல நாடுகளில் சஞ்சரித் தான்; ஆதலால் தன்னை ஓர் பரதேசி என்று சொன்னான். அல்லாமலும் அவன் இவ்வுலகின் வாழ்வு நிலையாததென்று அறிந்து நிலைமை ஸ்தானமாகிய மோட்சக் கரை அடையும் பரியந் தம் தன்னை இம்மையில் பரதேசியென்று எண்ணிக்கொண்டு வந்தான்.

10. அரசனை ஆசீர்வதித்து வெளியே போனான்.

11. பிறகு ஜோசேப்பு பரவோன் கற்பித்தி ருந்தபடி, தன் தகப்பனுக்கும் சகோதரர்களுக்கும் எஜிப்த்து தேசத்திலே வளமான நாடாகிய இறாமசேஸைச் சுதந்திரமாகக் கொடுத்தான்.

12. மேலும் அவர்களையும், அவனுடைய தகப்பன் வீட்டார் அனைவோரையும் சம்ர க்ஷித்து, அவரவர்களுக்கு ஆகாரங் கொடுத்து வந்தான்.

13. ஏனெனில் பூமியெங்கும் ஆகாரங் கிடையாமலிருந்தது. பஞ்சம் மிகவும் அகோரம். விசேஷமாய் எஜிப்த்திலும் கானான் நாட்டிலும் அது கொடிதாயிருந்தது.

14. ஜோசேப்பு அவ்வூராருக்குத் தானியம் விற்று அதினால் வந்த பணமெல்லாம் சேர்த்து அரசனுடைய பொக்கிஷச் சாலையில் வைப்பான்.

15. தானியங் கொள்வதற்கு அவகாச மில்லாமல் போனபோதோ எஜிப்த்தியர் எல்லோரும் ஜோசேப்பிடம் வந்து: எங்களுக்கு ஆகாரந் தாரும்! பணமில்லையென்று உமது சமூகத்திலே நாங்கள் சாகவேண்டுமோ என்றார்கள்.

16. அதற்கவன்: உங்களுக்குப் பணம் இல்லாவிட்டாலும், உங்கள் ஆடு மாடு முத லியவற்றைக் கொண்டுவாருங்கள். அவை களுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியங் களைத் தருவேன் என்று பிரதி சொல்லக் கேட்டு,

17. அவர்கள் போய் மந்தைகளைக் கொ ண்டுவந்த போது, ஜோசேப்பு குதிரைகளை யும், ஆடு மாடுகளையும். வேசரிகளையும் வாங்கி அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தானியங்களைக் கொடுப்பான். இப்படி மிருகங்களுக்குக் கைம்மாறாக வாங்கி அவர் களை அந்த வருஷத்திற்குக் காப்பாற்றிக் கொண்டு வந்தான்.

18. மறு வருஷத்திலே அவர்கள் மறுபடி யும் வந்து அவனை நோக்கி: பணமும் செலவழிந்து போயிற்று; ஆடு மாடு முதலிய வைகளும் இனிமேலில்லை. இதை எங்கள் ஆண்டவனுக்கு நாங்கள் சொல்லாமல் போ வது சரியல்ல. இனி என்ன? சரீரமும் எங்கள் நிலங்களும் ஒழிய எங்களுக்கு மீதியானது வேறொன்றுமில்லை என்று தேவரீருக்குத் தெரியும்;

19. உமது கண்களுக்கு முன்பாக நாங்கள் ஏன் சாக வேண்டும்? நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடையதாயிருப்போம். இராஜாவுக்கு அடிமைகளாக எங்களை வாங்கிக் கொண்டு எங்களுக்கு விதைமணியைக் கொடும். கொடாவிட்டால் நாங்கள் சாகப் பூமியும் பாழாய்ப் போகுமென்றார்கள்.

20. அப்படியே ஜோசேப்பு எஜிப்த்தியரு டைய நிலங்களையெல்லாம் கொண்டான். ஏனெனில் பசியைப் பொறுக்கமாட்டாமல் அவர்கள் தங்கள் காணி பூமி யாவையும் விற்றுப்போட்டார்கள். அது பரவோனுக்குச் சொந்தமாய்ப் போயிற்று.

21. (பூமி மாத்திரமல்ல) ஓர் எல்லையிலி ருந்து மற்றெல்லை மட்டிலுமுள்ள பிரஜைக ளெல்லாம் (இராஜாவுக்கு அடிமையானார்கள்.)

22. குருக்களுடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை. ஏனென்றால் அது இராஜாவினாலே (மானியமாக) அவர்களுக் குக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும் அவர் களுக்குச் சர்க்கார் தானியங்களைக் கொடுத்து வருகிறதினாலும் அவர்கள் தங்கள் நிலங்களை விற்க வேண்டியவர்களல்ல.

* 22-ம் வசனம். குருக்கள் தேவ ஊழியம் செய்வதற்கு நியமிக்கப்பட்டவர்களாகையால், அவர்கள் ஜீவனம்பண்ணி வருவதற்குச் சர்க்கார் சில காணி பூமியை மானியமாகக் கொடுக்கிறது எல்லாத் தேசங்களிலும், எல்லாக் காலத்திலும் வழக்கமென்றறிக.

23. பின்னும் ஜோசேப்பு ஜனங்களை நோக்கி: இன்று முதல் பரவோன் உங்களை யும் உங்கள் நிலங்களையும் சுதந்தரித்துக் கொண்டிருக்கிறார்; அது உங்களுக்குத் தெரி யும். இப்போது உங்களுக்கு விதைத் தானியம் கொடுக்கிறேன். வாங்கி நிலத்தில் விதையுங்கள்.

24. அது விளைந்தால் விளைவிலே ஐந்தில் ஒரு பாகம் இராஜாவுக்குச் செலுத்துவீர்கள், மற்ற நாலு பங்கு விதையாகவும் உங்களுக்கும், உங்கள் வீட்டாருக்கும், உங்கள் பிள்ளைகளுக் கும் உணவாகவும் உங்களுடையதாயிருக் கட்டுமென்று சொன்னான்.

25. அதற்கு அவர்கள்: எங்கள் உயிரே தேவ ரீருடைய கரங்களில் இருக்கின்றது; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் போதும். நாங்கள் சந்தோ ஷமாய் இராஜாவுக்குப் பணிவிடை செய் வோம் எனப் பதில் கூறினார்கள்.

26. அந்தக்காலம் முதற்கொண்டு இந்நாள் வரையிலும் எஜிப்த்து தேசமெங்கும் ஐந்தில் ஒரு பாகம் இராஜாக்களுக்குச் செலுத்துவது வழக்கம்: இது தேச சட்டம்போலாயிற்று. குருக்களுடைய நிலங்களுக்கு மாத்திரம் அப் படிப்பட்ட வரியில்லை.

27. இஸ்றாயேல் எஜிப்த்திலே, அதாவது: ஜெசேன் நாட்டிலே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக் கொண்டு அங்கே மிகவும் பலுகிப் பெருகி வந்தான்:

28. யாக்கோபு பதினேழு வருஷம் எஜிப்த் திலிருந்தான்; அவனுடைய ஆயுள் நாட்கள் எல்லாம் நூற்று நாற்பத்தேழு வருஷம்.

29. அவன் தன் மரண நாள் சமீபித்திருப்ப தைக் கண்டு, தன் குமாரனாகிய ஜோசேப்பை வரவழைத்து அவனை நோக்கி: என் மேல் உ னக்குத் தயவுண்டாகில், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து என்னை எஜிப்த் தில் அடக்கஞ் செய்வதில்லை என்று சத்திய மாய்ச் சொல்லிக் கிருபை செய்தருளுவாயாக.

30. நான் என் பிதாக்களோடு (மரண) நித்திரை செய்ய இச்சிக்கிறேனாதலால், நீ என்னை இத்தேசத்திலிருந்து கொண்டுபோய் என் முன்னோர்களின் சமாதியிலே என்னைச் சேமிப்பாயாக என்றான். அதற்கு ஜோசேப்பு: தாங்கள் கற்பித்தபடியே செய்வேன் என்று சொன்னான்.

31. அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிடு என்றான். அவன் ஆணையிட்டுக் கொடுக்கவே, இஸ்றாயேல் படுக்கையின் தலை மாட்டிலே திரும்பிக் கடவுளைத் தொழுது கொண்டான்.