முகத்தாட்சிணியம் 3

ஆகையாலே தான், கிறீஸ்தவர்களே, முகத்தாட்சிணியமானது சருவேசுரனுக்கு மகா அவமான மென்றதை மூன்றாம் நியாயமாகச் சொன்னேன். மனிதர் முகத்துக்கு அஞ்சுகிறவன் என்ன சொல்லுகிறவனாகிறான்? சருவேசுரன் பிரியப்படாவிட்டாற் போகட்டும். நான் மனுஷரையே பிரியப்படுத்தத் தேடுவேன் என்று துணிந்து சொல்லுகிறவன் போல் ஆகிறான். சகல சீவ அசீவ பொருட்களுக்கும் ஏகாதி கர்த்தர் சருவேசுரனே. படைக்கப்பட்டவைகள் எல்லாவற்றிற்கும் அவரே நாயகர். அவருக்கே சகல உலகமும் அடங்கி நடக்கவேண்டிய து. '' தளங்களுக்குக் கர்த்தாவான இராசாதி இராசேஸ்வரன் நாமே ; சமஸ்த சாதிசனங்களிடத்தும் நமது நாமம் அஞ்சப் படத்தக்க நாமமே'' என்று அவருடைய வாக்கியமா க வேத நூல் முழங்குகிறது. (மலக், 1 ; 11 முதலியன).

அவருக்கு முன்பாக இராச்சியங்கள் எல்லாம் தூசி போல் இருக்கின் றன. இராசாக்கள் இல்லாதவர்கள் போலாகிறார்கள். அவ ருடைய மோட்ச பொற் சிங்காசனத்துக்கு முன்பாக நிற்கிற தூ தர்கள், அ தி தூ தர்கள், பெலவத்தர்கள் முதலான வானோர் கணமெல்லாம் அவரை நடுக்கத் தோடு நமஸ்கரித்துக்கொண்டிருக்கின்றன. முகத் தாட்சிணியம் எனும் துர்க் குணத்தில் அகப்பட்டவன் இப்படிப்பட்ட சர்வலோக நாயகருடைய கர்த்தத்து வத்தை அசட்டை பண்ணிக்கொண்டு அல்லவோ மனிதருடைய சித்தத்தை நிறைவேற்றத் தீவிரப்படு கிறான்! சருவேசுரன் நீசச் சுருட்டிகளோடு ஒரு நிரை யிலே வைக்கப்படுவது அவருக்கு ஒரு அவமா னம். அந்தச் சிருட்டிகளுக்கே முதலிடங்கொடுத்து அவரை ஓர் மூலை யில் ஒதுக்கிவிடுவது, ஐயையோ, வேறொரு சொல்லொணாத அவமான மாகிறதே. - இன் னும் பாருங்கள்! சருவேசுரன் தாமே தம் மை நேசிக்கிறவர்களுக்குச் சம்பாவனை யாகிறார். ''நானே உனது மகா பெரிய சம்பாவனை ” (ஆதி 15; 1 1 1) அளவில்லாத சருவேசுரன் தாமே-- சக ல நன்மையும் நிறைந்து தேங்கி வழிகிற இன்ப சாகரமாகிய அவர் தாமே எமது சம்பாவனை. இப்படி இருக்கிறபோது, அவரை நாம் அனுபவிக்கும் தலமாகிய மோட்ச பாக்கியத்தின் சுகங்களை எடுத்துச் சொல்லப் பிரயாசப்படுவான் ஏன் ? அவைகளைச் சரியாய் எடுத்துச்சொல்ல எவராலுங் கூடாது. மோட்ச பர மானந்தத்தை மனித கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, இருதயம் உணர்ந்ததுமில்லை.(1 கொரி, 2; 9) அந்தத் தலத்தின் பாக்கியம் நித்தியமான பாக்கியம். அந்தப் பாக்கியம் எல்லாம் நமக்கு வாக்குப்பண்ணி யிருக்கிறது. இருக்கும்போது, இவ்வளவு மகத்தான, மனோவாக்குக்கு எட்டாத நன்மைகள் சொற்பம் என் றாற்போலவும், தன்னைச் சற்று வேளை மெய்ச்சிக் கொள்ளுகிறவர்களுடைய புகழ்ச்சிதான் பெரிதென் றாற்போலவுமே முகத்தாட்சிணியம் பார்க்கிறவன் நடந்துகொள்ளுகிறான். ''நல்லது பிரமாணிக்கமுள் ள ஊழியனே, உன்னுடைய கர்த்தரின் ஆனந்தத்தி லே பிரவேசிக்கக்கடவாய்'' (மத். 25; 21) என்று தன் சிருட்டிகர் சொல்லக் கேட்பதல்ல, நல்லது நீ எங்களைப்போ லொத்த ஒரு வீணன் தான், தன் நிச்சய உணர்வின் படி நடக்கத் துணியாத ஒரு பெண்ணன் தான், எங் களுக்காக உன் கடவுளையும் மறுக்க நீ துணிந்தபடி யால் கெட்டிக்காரன் என்று மனுஷர் சொல்லக் கேட் பதே அவனுக்குப் பெரிதாகிறது! அம்மட்டா! சரு வேசுரன் ஆத்துமத்தையும் சரீரத்தையும் நரகத்திற் தள்ளத்தக்கவராயிருக்க, (மத். 10;23) அந்தத் தண்டனைக்கும் அஞ்சாமல், ஆகக்கூடிச் சரீரத்தை மாத்திரம் ஒருவே ளை கொல்லத்தக்க மனுஷருக்கே அஞ்சுகிறான். அது வும் மனுஷர் தன் சரீரத்தைக் கொல்லுவார்கள் என் றுமல்ல, சற்றே புன்சிரிப்புக்கொண்டுவிடுவார்கள், சற் றே தலை அசைப்பார்கள் என்று பயந்தல்லவோ தன் தேவனின் கட்டளையைக் கைக்கொள்ளாமலிருக்கி றான். ஆ! கிறீஸ்தவர்களே, மட்டிலடங்காத மகிமைப்பிரதாபம் உள்ள வரும், தயைச் சுரூபியும், பரம் உபகாரியும், நீதிபரருமாகிய சருவேசுரனை முதல் சங் கியாமல், தெரிந்தெடுத்துக்கொள்ளாமல், அவருக்கு அஞ்சாமல் மனுஷருக்கு அஞ்சி, அவர்கள் முகஸ்துதி யையே தேடி மதிப்பது என்பது, நீங்கள் மன தினால் ஒருபோதும் கருதிக் கொள்ளக்கூடாத ஒருபா ர தூர த் துரோகம். இதை நீங்கள் இன்னும் கண்டுகொள்ள வில்லையா?

இந்த நீச ஒழுக்கத்தினால், இந்த அக்கிரமத் தேவ அவமான நடக்கையினால், நமது இரட்சணியமாகிய யேசுநாதருக்கு உண்டாகுந் துயர் எவ்வ ள வு ! அவர் நம்மை மகிமைப்படுத்தும் வண்ணம் தம்மைச் சொல்லிமுடியாத அவமான ஈங்கிஷைகளுக்கு உள்ளாக்கினார். - நாம் தம்முடையவர்களாய் இருப் போமென்று நம்பி, தம்மில் அன்புகூர்ந் து தமக்கா கவே சீவிப்போமென்று நம்பி, தம்மைச் சகலத்திலும் மேலாக மதித்துத் தமக்கே பிரியப்பட வருந்துவோ மென்று நம்பி, தமது உண்மையுள்ள சீஷரா யிருந்து தமது மகிமையைக் காப்போம் என்று நம்பி நமக்காக மனோவாக்குக்கு எட்டாத நிந்தைகளைச் சகிக்கலா னார். மாடு அடையுங் குடிலிலே பரம ஏழையாகப் பிறந்தார். தச்சனின் மகனென்று அழைக்கப்பட்டு, முப்பத்து மூன்று வருஷம் அறியப்படாமல், விளக்க மில்லாமல் சீவியம்பண்ணினார். நீச சேவகர்கள் கை யிற் தம்மை ஒப்பித்து, அவர்களால் அடிகளோ, மிதி களோ, தூஷணங்களோ, கோரணிகளோ எல்லாஞ் சகித்தார். சனே த்திரன் என்னும் யூத குருமார் சபை யிலே நாணித் தலை கவிழும்படியாகக் குற்றஞ்சாட்ட வும், ஓர் ஊழியக்காரனால் திருக்கன்னத்தில் அறையவும் பட்டார். முற்றவெளியிலே வஸ்திரம் உரியப் பட்டு, ஓர் பெரும் சன சமுகத்திலே கற்றா ணிலே கட் டி அடிக்கப்பட்டார். பைத்திய காரருக்குத் தரிக்கும் வெள் ளை அங்கியோடு தெருத்தெருவாக இழுத்துக் கொண்டு போகப்பட்டார். எண்ணிக்கையில்லாத சனக்கூட்டத்தின் நடுவே, சுயஞ் சோதியான சருவே சுரனின் ஏக ச மாரராகிய இவர், கொலைபாதகனான வறவாஸ் கள்ளனிலும் பெரிய குற்றவாளியாகத் தெரி யப்பட்டு, மரணத் தீர்வை அடைந்தார். கடைசியாக ஊரெல்லாங்காண, சத்துருக்கள் தலையசைக்க, சன மெல்லாங் கேலிபண் ண, இருகள் வரின் நடுவே சிலு வையில் அறைந்து உயர்த்தப்பட்டார். இத்தனை மான் பங்கங்களை யெல்லாம், மரியாதையீனங்களை யெல் லாம், பரிசுகேடுகளை யெல்லாம் நமது தேசத்தினாற் பட்டவருக்காக, நாம் ஒரு புன்னகையை ஒருசரசத் தைப் பொறுக்கமாட்டாமற் போவோமானால், கிறீஸ் தவர்களே, அவருடைய திருவிருதயம் எவ்வள வாகக் காயப்படும்! நமக்காக இத்தனை நிக் தாட்சணை களைப் பட்டவருக்காக நாம் ஒரு குறு நகைப்பைப் பொறுக் கமாட்டோமானால், அவருடைய நேசம் நம்மால் எவ் வள வாக நிந்திக்கப்படுவதாகும்! ஆ! ஆ! ஆண்டவரு டைய அளவில்லா இரக்கமுள்ள, அன்புமயமான இரு தயமும் இந்த நன்றிகேட்டைக்கண் டு கடினப்பட்டுப் போய்விடும். அவர் இதைச் சகிக்கவே மாட்டார். இது எனது வாக்கல்ல. திவ்வியநாதர் தாமே துயரத தோடு சொல்லிய வாக்கு; நமக்கெல்லாம் பயங்கரமா ன வாக்கு! அ வர் திருவுளம் பற்று வது: என் னைக்குறி த்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட் கப்படுவானோ அவனை க்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமை போடும் வரும் போ து வெட்கப்படுவார். (லூக். 9; 26) ஐயையோ நிர்ப்பாக்கியமே ! கடைசிநாளிலே என் னு டைய மீட்பர் என்னைக் குறித் தி வெட்கப்படுவாரானால், நான் எங்கே போவேன் ! எனக்காக அவர் மனுஷ குமாரனாய் வந்தார். அதாவ து : மனுஷனுக்குரிய எளிமையையும் அவமான த்தை யும் ஏற்றுக் கொண்டார். நானும் அவருக்காக வேண் டிய வேண்டியபோது? அவ மானத்தை ஏற்றுக் கொள் ள ஆயத்தமா யிராவிட்டால், அ வர் பிதாவின் மகிமை யில் வரும் போது எனக்கு, என் இரட்சணிய மாகிய அவருடைய மகிமை யிலே பங்கிரா து. என் னு டைய நன்றி கேட்டினால் கோபம் மூட்டப்பட்டவராகிய என் நேசமீட்பர் என்னை பார்த்து: சபிக்கப்பட்டவனே, என்னை விட்டு அகன்று போ என்ற கோடையிடிக்குச் சமானமாய்க் கர்ச்சிப்பார். (மத். 25; 41) - ஆ மாற்றக்கூடாத தீர் வையே ! ஆ நித்திய கேடே! மனிதருடைய வெகு மானப் பிரியமான து அனந்த மகிமைச் சோ பனம் உடையவராகிய சருவேசுரனுக்கு எவ்வளவு அள வி டக்கூடாத அவமானமாகிற து என்று இப்போது தான் வெட்டவெளிச்சமாய்த் தெரிகிறதே.

பிரியமான வர்களே, நமது நித்தியகேட்டையே வ ருவிக்கக்கூடிய அவ்வளவு பெரியவொரு விக்கினமும் ம தி மோசமும் தேவ துரோகமுமாக ய இத் தீப மனச்சார்பை நாம் எப்படியோ களைந்தெறிந்து போட வேண்டியது. மனி தர் நன்மையாய்ச் சொல்லியென்ன? தின் மையாயச் சொல்லியென்ன ? நம்மை ஒருநாள் நடுத் தீர்க்கப் போகிறவருடைய திருமுகத்தையே பிரியப்படுத்தத் தேடுவோமாக. " நமது திருவேதத்தின் கடமைகளை எல்லாம் சகல மனிதருக்கும் முன்பாக அச்சமில்லா மல், கூச்சமில்லாமல் நிறைவேற்றுவோமாக. கோ ழை நெஞ்சுள்ள சில கிறீஸ்தவர்களைப்போல: நாங் கள் சருவேசுரனை மனதினுள் ளே வணங்கிவருகிறோம் மன திலேதானே எல்லாம் அடங்கியிருக்கிறது. அப் படியிருக்க வெளிப்பாவனை யிலே மனிதருக்கும் இட ங்கொடுத்து நடந்தாலென்ன? '' ஊருடன் பகைக் கின் வேருடன் கெடும்'' அல்லவா? என்று சொல்லா தபடி கவனஞ்செலுத்துவோமாக. மன து மாத்திரம் சருவேசுரனுக்கு உரியதல்ல. வெளிப்பாவனைகளும் அவருக்கே முற்றாகக் கீழ்ப்பட்டவைகள். மன தினால் வணங்குகிறோமென்று சொல்லிக்கொண்டு வெளி நடத்தையாற் சருவேசுரனை' மறுதலிக்கிறவர்களைப் பார்த்தல்லவோ யேசு நாதசுவாமி: நான் உங்களை அறி யேன் என்பேன் என்றார். (மத். 25; 12) அப்போஸ்தலரும் '' நீதி யைய டைய இருதயத்திலே விசுவசிக்கப்படும் இரட் சணியத்தை அடையவோ வாயினால் வெளியாய் அறிக்கை பண்ணப்படும்'' என்று வசனித்தார். (ரோமர் 10; 10) உள் ளொன்று புறம்பொன்றாய் நடக்கிறவர்களுக்கு அல்ல மோட்ச இராச்சியம். இதை நான் இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை.

ஆம், கிறிஸ்தவர்களே, நம்மைப் படைத்தவருக்கு, நமக்கு மோட்ச சம்பாவனையை அளிக்கப்போகிறவருக்கு, நமக்காக நிந்தை அவமானங்களினாலே பூரிக்கப்பட்டவருக்குத் தெட்டத்தெளிவாய், பிரசித்தமாய் ஊழியஞ்செய்வ து நமக்கு வெட்கமாகவல்ல, பெருஞ் சிலாக்கியமாக இருக்கவேண்டியது. பெரிய பெரிய பிரபுக்களும் இராசாவுக்குப் பணிவிடை செய்வதிலே மகிமைபாரா ட்டுவார்கள். நாமோ சருவேசுரனுக்குப் பணிவிடை செய்வது, ஒரு அர்ச்சியசிட்டர் சொல்லியிருக்கிற படி, அரசாளுவதற்குச் சரியாகுமே. ஆகையால், கோழைத்தன மான, சிறைக்கோலமான வெட்கத்தை யும், நியாயமில்லாத ஈனப்பயத்தையும் விட்டு, வெளி வெளியாகவும், முழு உலகத்துக்கும் முன்பாகவும் நம் முடைய கர்த்தருக்கு ஊழியம்பண்ணுவோமாக. நம் மை மீட்டவர் எருசலேம் நகர் முழுதும் காண ஒரு அவமானக் கழுமரத்திலே நமக்காகத் தொங்க வெட் கப்படவில்லை. நன்றிகெட்ட பாவிகளாயிருக்கிற நம் மைத் தம்முடைய சகோ தரரென் று அழைக்கவும், உரிமை பாராட்டவும் கூசவில்லை. நாமும் அவரை நம்முடைய நாயகரும் மீட்பரும் தேவனுமென்று உலக முழுதுக்குங்காட்டக் கூசா திருப்போமாக. அ வருக்காகக் கொடிய மானபங்கங்களை அடையவேண் டிவந் தாலும் அடைய ஆயத்தமா யிருப்போமாக.

கிறீஸ்தவர்களே , முற்றாக மனந்திரும்பிவிட வெட் கப்படாதிருங்கள். உலகத்தோடு முற்றாகப் பிணங் கிக்கொள்ள வேண்டிய நேரிட்டாலும், அது அவ்வள வுக்கும் நன்மையே. இவ்வுலகும் அதின் சாயலும் கடந்துபோகின் றன. (1 கொரிந். 7; 31) ஆகையால் கடந்துபோகிற இந்தப் பேய்த்தேரை நம்பி ஊழியஞ்செய்வதைவிட் டு நித்தியரும், அழிவில்லாதவரும், அள வில்லா தவரு மாகிய அவர் ஒருவருக்கே ஊழியஞ் செய்யத் தொடங் குங்கள். உங்களை அவருடைய ஊழியரென்று காட்ட அஞ்சவேண்டாம், அஞ்சவேண்டாம். சிலுவையில் அறையுண்ட உங்கள் அன்பர் ஒருவரைப் பிரியப்படு த்திக்கொண்டாற் போதும். அவரே உங்கள் நித்திய புகழ்ச்சியும் அளவில்லாத மகா சம்பாவனை யுமாவார். ஆமென்.