இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 30. ஜெபமாலைப் பக்தி சபையின் சிறப்புரிமைகள்

ஒரு பக்தி சபைக்கு (திருச்சபையால்) அளிக்கப்பட்டுள்ள பலன்களைக் கொண்டு இது சிறப்புடைய தென்றும் அதில் சேருவது நல்லது என்றும் தீர்மானிப்பதாயிருந்தால், நிச்சயமாக அத்தகைய சிறந்த ஒன்று ஜெபமாலைப் பக்தி சபையே. அதில் விசுவாசிகள் சேரும்படி நன்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருச்சபையில் வேறு எந்த சபைக்கும் அளிக்கப்படாத பலன்கள் இதற்கு அளிக்கப்பட்டுள்ளன. இச்சபையின் ஆரம்பத்திலிருந்தே ஏறக்குறைய எல்லா பாப்புமார்களும் திருச்சடையின் ஞானக்கருவூலத்திலிந்து மேலும் மேலும் பலன்களை இதற்கு அளித்து வந்துள்ளார்கள். சிறந்த சொற்களைவிட சொந்த முன் மாதிரிகை அதிக வலிமையுடையதென அறிந்த அவர்கள் ஜெபமாலை மீது தங்களுக்குள்ள உயர்மதிப்பைக் காட்ட, தாங்களே அச்சடையில் சேருவதைவிட சிறந்த வழி வேறில்லை எனக் கண்ட னர்.

திருச்சபையின் பாப்புமார்கள் ஜெபமாலைப் பக்தி சபைக்கு முழு மனமாய் அளித்துள்ள பலன்கள் சுருக்கமாக இங்கு குறிக்கப்படுகின்றன. அவை மீண்டும் 11-ம் இன்னொசென்ட் என்ற பாப்புவால் 1679-ல் ஜூலை மாதம் 31-ம் தேதி உறுதி செய்யப்பட்டன.

ஜெபமாலைப் பக்தி சபைப் பலன்கள் 1. ஜெபமாலைப் பக்தி சபையில் சேரும் தினத்தில் ஒரு

பரிபூரணப் பலன், மரண சமயத்தில் ஒரு பரிபூரணப் பலன். ஒவ்வொரு 53 மணி ஜெபமாலைக்கும் பத்து வருட பத்து மண்டலப் பலன். உறுப்பினர்கள் சேசு' 'மரியே என்னும் நாமங்களைப் பக்தியுடன் உச்சரிக்கும் ஒவ்வொரு தடவையும் ஏழு நாள் பலன். ஜெபமாலைப் பவனிகளில் பக்தியுடன் கலந்து கொண்டால் ஏழு வருட ஏழு மண்டலப் பலன். ஜெபமாலைப் பக்தி சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேவாலயங்களில் இருக்கிற ஜெபமாலைச் சிற்றாலயத்தில், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து உத்தம மனஸ்தாபமாயிருக்கிற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறன்றும் நமதாண்டவருடையவும், மாதாவுடையவும் திருநாட்களிலும் ஒரு பரிபூரணப் பலன் அடையலாம். அர்ச். சாமிநாதர் சபை சகோதரர்களின் மடங்களிலும் கன்னியர் மடங்களிலும் தினமும் சயன ஆராதனை பவனியில் பாடப்படும் 'கிருபைதயாபத்து' மந்திரத்தில் கலந்து கொள்கிற உறுப்பினர்கள் 100 நாட் பலன் அடைவார்கள். பக்திக்காகவும் முன்மாதிரிகை காண்பிக்கும் பொருட்டும் ஜெபமாலையை வெளிப்படையாக அணிகிற உறுப்பினர்கள் 100 நாட் பலன் அடைவார்கள். நோயால் கோவிலுக்குப் போக முடியாமலிருக்கிற உறுப்பினர்கள் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை வாங்குகிற நாளில் ஒரு முழு ஜெபமாலை, முடியாவிட்டால் 53 மணி ஜெபமாலை செய்து வேண்டிக் கொண்டால் ஒரு பரிபூரணப் பலனை அடையலாம். உரோமை திருத்தலங்களைச் சந்தித்து ஜெபித்தால் அடையக்கூடிய பலன்களை, ஜெபமாலைப் பக்தி சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஒரு தேவாலயத்திலிருக்கும் ஐந்து பீடங்களின் முன்பாக. திருச்சபையின் நலனுக்காக 5 பர. 5 அரு. 5 திரி. சொல்லி ஜெபிக்கிற உறுப்பினர்கள் அடையலாம். அத்தனை படங்கள் இல்லாத ஆலயங்களில் ஏதாவது ஒரு பீடத்தில் 25 பர, அரு. திரி. சொல்லி ஜெபிப்பதால் அடையலாம். 10-ம் சிங்கராயர் பாப்புவின் விசேஷ உத்தரவுப்படி ஜெபமாலைப் பக்தி சபை ஸ்தாபிக்கப்படாத ஆலயங்களிலும் உறுப்பினர்கள் மேற் சொல்லிய ஜெபங்களைச் சொல்லி அதே பலன்களை அடையலாம். இப்பலன்களால் பரிபூரணப் பலனையும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு விடுதலையையும் இன்னும் பல ஞான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஜெபமாலைப் பக்தி சபை உறுப்பினரே! மேலே கூறப்பட்டுள்ளவைகளோடு இன்னும் பல பலன்களை நீங்கள் அடையலாம். அவற்றை ஜெபமாலைப் பலன்கள் பற்றிய முழுப்பட்டியலில் கண்டு கொள்க, அதில் பலன்களை வழங்கிய பாப்புமார் பெயர்களும் வழங்கிய ஆண்டும் இன்னும் பல குறிப்புக்களும் காணப்படும். அவற்றையெல்லாம் இச்சிறு நூலில் என்னால் சேர்த்துக் கூற இயலவில்லை .